சினிமா

கை குலுக்கி ஆட்டம் போட்ட சாக்ஷி அகர்வால்…..அட்ராசக்க !!

Quick Share

தமிழ் திரையுலகில் 2018-ம் ஆண்டில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் அறிமுகமானவர் சாக்ஷி. ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல ரசிகர்களை ஈர்த்தார். கவின் மீது காதலில் சிக்கி பின்பு தனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாட்டிற்கு ஆண் நண்பருடன் அசத்தலாக ஆடியுள்ளார் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

2019-ம் ஆண்டு தொடக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். கல்யாண் சில்க்ஸ், சக்தி மசாலா, மலபார் கோல்ட் போன்ற விளம்பரங்களிலும் மற்றும் திரையுலகின் விருது வழங்கும் விழாவில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

சாக்ஷி பட வாய்ப்புகளுக்காக கொஞ்சம் மாடலிங் போட்டோ ஷூட்களில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கிறார். அவ்வப்போது தாவணியில் தமிழ் ரசிகர்களை கவரும் விதத்தில் தோன்றுகிறார்.

குட்டை உடை கொக்கு நடை !! இப்படி போட்டா….! எப்படி மூச்சு விடுவீங்க..

Quick Share

ஹாலிவுட் நடிகை போல் இருக்கும் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி அடிக்கடி தனது கவர்ச்சியை அள்ளி தெளிப்பது வழக்கமாக ஆகிவிட்டது. சமீபத்தில் அவர் அணிந்த உடை பலரை வியக்கவைத்துள்ளது. இப்படி குடை உடை.. கொக்கு நடையுடன் போஸ் கொடுத்துள்ளார்.

இறுக்கமான ரெட் கலர் உடை அணிந்து அசத்தல் போஸ் கொடுத்துள்ளார் திஷா. அழகாக இருப்பது ஒரு விலையில் வருகிறது, சில நேரங்களில் அது சுவாசிக்கும் உங்கள் திறனைக் கூட பறிக்கிறது.

நடிகர் சமீபத்தில் தனது சமீபத்திய படமான மலாங்கின் வெற்றி விருந்துக்கு அதிர்ச்சி தரும் சிவப்பு ஆடை அணிந்திருந்தார். ஆடை, அழகாக இருந்தாலும், கொஞ்சம் இறுக்கமாகத் தெரிந்தது, இப்போது அவளும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

படத்தின் வெற்றி விருந்திற்கு வந்த திஷா தனது புகை படங்களை பகிர்ந்து கொண்டார் மற்றும் வதந்தியான காதலன் டைகர் ஷெராப்பின் சகோதரி கிருஷ்ணா அவரிடம் ஒரு கேள்வியை விட்டுவிட்டார். அதில், நீங்கள் போட்டுக்கொண்டிருக்கும் உடையின் சைஸ் என்ன என்று கேட்டார்.. அதற்கு திஷா XS என்று கூறி இதை அணிந்தால் மூச்சு மட்டும் விடுவதற்கு கஷ்டமாக இருக்கு என கூறினார்.

இப்படி ஒரு கடினமான ஆடையை அணிய அவசியம் என்ன என பல கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

🌸

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

அவர் கூட மட்டும் ஓகே…சல்மானுக்காக அதிரடி முடிவு எடுத்த தளபதி65 பட நாயகி

Quick Share

தமிழில் 2012 ஆண்டு முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகியவர் பூஜா ஹெகேடே. இவர் தற்போது தளபதி நடிக்கும் தளபதி65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹிந்தியில் ஹவுஸ்ஃபுல் 4 பிளாக்பஸ்டர் வெற்றியாக இருப்பதால், அவர் பாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார். மேலும், ஆலா வைகுந்தபுரம்ராம்லோவின் வெற்றி பூஜையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அவரது கவர்ச்சி மற்றும் நடிப்பால் இதயங்களை வென்றுள்ளார். தளபதி 65 வர தயாராகிவிட்டார். பூஜா ஹெகேடே இப்போது தெலுங்கு திரையுலகில் உள்ள அனைத்து பெரிய டிக்கெட் படங்களிலும் ஒரு பகுதியாக உள்ளது. அவர் இப்போது ராம் சரண் தேஜ், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு மற்றும் பிரபாஸ் ஆகியோருடன் நடிக்கிறார். பிரபாஸ் 20 படப்பிடிப்பில் தற்போது ஜார்ஜியாவில் பிஸியாக உள்ளார்.

பாலிவுட்டுக்கு கட், நடிகை சல்மான் கானின் வரவிருக்கும் “கபி ஈத் கபி தீபாவளியில்” நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதிக சம்பளம் கேட்கும் பூஜா ஹெகேடே, சல்மான் கானுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என அதிரடியாக சம்பளத்தை குறைத்துள்ளார். மேலும் அதிகமாக ஆசை படுகிறாரோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஹிந்தியில் பெரிய கவர்ச்சி மார்க்கெட் உள்ளதை உணர்ந்துவிட்டார் போல் தெரிகிறது.

சினிமாவுக்கு முன்னாடி என்ன செய்துகொண்டிருந்தார் தளபதி விஜய்யின் இயக்குனர்..? வியக்க வைக...

Quick Share

1986 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் லோகேஷ் கனகராஜ் பிறந்தார். சாதாரணமான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் முதலில் வேலை செய்தது ஒரு வங்கியில் தான். அப்படி இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவரது அலுவலகத்தில் நடந்த குறும்பட போட்டியில் இவர் கலந்துகொள்ள, இவரது படம் முதல் பரிசை வென்றார். அந்த ஊக்கத்தில் தான் அவருக்கு சினிமா ஆசை எட்டி பார்த்துள்ளது.

பேங்க் வேலையில் இருந்து கொண்டே வார இறுதிகளில் குறும்படம் எடுத்தார். அதில் ‘களம்’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்க, தன் குறும்பட நண்பர்கள் உதவியுடன் முழு நேர சினிமா வேளையில் இறங்கினார். திருமணமாகி, ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

உதவி இயக்குனராகவும் பணியாற்றிய போது அவர் அவமானங்களை சந்தித்ததாகவும் ஆனால் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டதே தனது வெற்றிக்கு காரணம் என்றும் கூறுகிறார். முதல் திரைப்படமான ‘ மாநகரம்’ படம் நடிகர்கள் ஸ்ரீ, சந்தீப் மற்றும் ரெஜினா ஆகியோரது வெளியாகி வெகுவாக பாராட்டப்பட்டது. உடனே அவசரத்தில் அடுத்த படத்தை இயக்காமல், பொறுமையாக ஒரு வருட டைம் எடுத்து தனது அடுத்த கதையை தயார் செய்தார் லோகேஷ். கைதி அனைவரையும் கட்டி போட்டது.

கமல் ஹாசனின் தீவிர ரசிகரான இவர் பிகில் படம் வெளியான அதே தேதியில் கைதியை வெளியிட்டார். கமல் ஹாசனின் ரசிகன் அல்லவா.. போட்டினு வந்தவுடன் களம் இறங்கிட்டார். இந்த தைரியம் தளபதிக்கு பிடித்ததோ என்னவோ மாஸ்டர் படம் இயக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. தளபதியின் பெருந்தன்மை அடக்கம் லோகேஷ் கனகராஜின் உழைப்பு “மாஸ்டர் கிளாஸ்” கூட்டணி.

நண்பர் அஜித் போல டிரஸ் பண்ணிட்டு வந்தேன் – அரங்கத்தை அலறவிட்ட தளபதி விஜய்

Quick Share

நேற்று மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய தளபதி விஜய் பொடியில் பேசியது வைரலானது.
என் ரசிகர்கள் இந்த விழாவிற்கு வரமுடியாமல் வருத்தப்படுற அதே வருத்தம் எனக்கும் இருக்கு. அதுக்கு முக்கிய காரணம், இதற்கு முன்பு நடந்த விழா மற்றும் ஆடிட்டோரியம் வெளியே நடந்த விஷயங்கள் தான். அதுனால தான் அரை மனசா தான் ஒத்துக்கிட்டேன்.”

“ஒவ்வொரு தடவையும் மோசமா டிரஸ் பன்றேன்னு இதை கொடுத்தார்கள். இன்று நம்ம நண்பர் அஜித் போல டிரஸ் பண்ணிட்டு போலாம்னு கோட் சூட் போட்டு வந்திருக்கேன்” என்று விஜய் பேசினார். தல அஜித் பற்றி கூறியதும் அரங்கமே அதிர்ந்தது.

தமிழ் சினிமால ஒரு தவிர்க்க முடியாத இடத்தில் விஜய் சேதுபதி உள்ளார். ஒரு நாள் கேட்டேன் அவர் இந்த படத்துல நடிக்க ஏன் ஒத்துக்கிட்டாருனு. ஸ்மைல் பண்ணிட்டு நாலு வார்த்தைல சொல்லிட்டார். ‘எனக்கு உங்கள் ரொம்ப புடிக்கும்’. அப்போது தான் தெரிந்தது அவர் எனக்கு பெயரில் மட்டும் இடம் கொடுக்கவில்லை, மனதிலும் இடம் கொடுத்துள்ளார் என்று. ரொம்ப நன்றி நண்பா.” இறுதியாக விழா நிறைவில் தளபதி விஜய் படக்குழுவினருடன் செலஃபீ எடுத்துக்கொண்டார்.

நான் சொன்னதை.. நீங்க டிரைலர்ல பார்ப்பீங்க !! ட்ரைலர் தேதி அறிவிப்பும் வெளியானது !!

Quick Share

நேற்று மாலை மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக அரங்கேறியது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, அனிருத், லோகேஷ், மாளவிகா மோகன் மற்றும் படத்தில் பணிபுரிந்தவர்கள் பங்கேற்றனர். மேடையில் இயக்குனர லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் ட்ரைலர் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளார்.

“இந்த படத்திற்கு முதலில் வாத்தி என்று தான் பெயர் வைக்க யோசித்தேன். ஆனால் அது பின்னர் மாஸ்டர் என மாற்றப்பட்டது. கதைக்கு இத்தனை பாடல்கள் தேவைப்பட்டது” எனவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் படம் விஜய்யை வேறு ஒரு கோணத்தில் காட்டும் என கூறியுள்ளார் லோகேஷ். மேலும் நான் கூறியதை படத்தின் ட்ரைலரில் பார்ப்பீங்க என இயக்குனர் கூறினார். மார்ச் 22ம் தேதி ட்ரைலர் வெளியாகும் என அறிவித்தார்,

தற்போது வெளிவந்துள்ள மூன்று போஸ்டர்கள் பற்றி பேசிய லோகேஷ், “முதல் போஸ்டர் ஹீரோ அறிமுக சீன், இரண்டாவது போஸ்டர் இடைவேளையில் வருவது, மூன்றாவது போஸ்டர் கிளைமாக்ஸில் வருவது” என கூறியுள்ளார். ஏப்ரல் மாதத்தில் பிளாக் புஸ்ட்டெர் நிச்சயம் என் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ரசிகர்களுக்காக வருத்தப்பட்ட தளபதி விஜய்… என்ன சொனார் தெரியுமா ?

Quick Share

நேற்று மாலை விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்தது. பொது இடங்களில் கூடினால் கொரோனா தாக்கும் என்பதால் ரசிகர்கள் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு வர வேண்டாம் என படக்குழு மற்றும் தளபதி விஜய் முடிவெடுத்ததாக செய்தி வெளியானது.

விஜய் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் இருந்தனர். தளபதி விஜய் நடனத்துடன் தனது உரையை கிக்ஸ்டார்ட் செய்தார். பின்னர் அவர் தனது புகழ்பெற்ற ஹூக் வரியான “என் நென்ஜில் குடி இரூக்கம் … (என் அன்பான ரசிகர்கள், என் இதயத்தில் வசிக்கிறார்கள்) ” எனது ரசிகர்கள் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ள முடியாதது குறித்து நான் வருத்தப்படுகிறேன். இதை நாங்கள் ஒரு தனிப்பட்ட முறையில் செய்தோம் கொரோனா வைரஸ் காரணமாக நிகழ்வு. நன்றி மற்றும் நான் வருந்துகிறேன்.”

ரசிகர்களின் நலனை மதிக்கும் தளபதியின் இந்த வார்த்தைகள் அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

குழந்தை இன்மை… காதல் பிரபுவின் சூப்பர் மெசேஜ் !!

Quick Share

இந்த வாரம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தாராள பிரபு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தில் கால்பந்து விளையாட்டு வீரராக நடிக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஒரு நல்ல வேலைக்குச் செல்லும் முயற்சியில் ஈடுபடுகிறார். அம்மா, பாட்டி ஆகியோர் நடத்தும் பாரம்பரியம் என்ற அழகுநிலையத்திலும் உதவியாக இருக்கிறார். அவருக்கு தன்யா ஹோப் மீது காதல். இதனிடையே, கருத்தரிப்பு மையம் நடத்தும் டாக்டர் விவேக், விந்து தானம் செய்ய நல்ல ஆரோக்கியமான, திடகாத்திரமான, கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒரு இளைஞரைத் தேடி வருகிறார்.

ஹரிஷ் கல்யாண் விந்து தானம் செய்வதை வீட்டுக்கும், காதலிக்கும் தெரியாமல் மறைத்து நிறைய பணம் சம்பாதிக்கிறார். ஹரிஷுக்கும், தன்யாவுக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால், தன்யாவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையில் அவருடைய கர்ப்பப்பை இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் ஹரிஷின் விந்து தானம் பற்றி அனைவருக்கும் தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
நகைச்சுவை கலந்து நாயகன் கதாபாத்திரம்.

பலருடைய வாழ்வில் குழந்தை ஆசையைத் தீர்த்தவருக்கு தன் வாழ்க்கையிலேயே பிரச்சினை வர கவலை கொள்கிறார். ஒரு பக்கம் மனைவி, மறுபக்கம் அம்மா, இன்னொரு பக்கம் டாக்டர் என சிக்கித் தவிக்கும் ஒரு கதாபாத்திரம். நடிப்பைப் பொறுத்தவரையில் ஹரிஷ் அசத்தியுள்ளார்

பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஹரிஷ் கல்யாண். கால்பந்து வீரராக ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்குச் செல்ல நினைப்பவருக்கு ஸ்பெர்ம் டொனேஷன் மூலமே லட்சம் லட்சமாக பணம் வருகிறது. காதலியைத் திருமணம் செய்து கொண்ட பின் தானம் செய்வதை விட்டுவிடுகிறார்.

ஹரிஷ் விந்து தானம் செய்ய முடிவெடுக்கும் காட்சியும், கிளைமாக்சில் அவர் செய்தது சரிதான் எனப் புரிய வைக்கும் காட்சியும் மிக மிக நெகிழ்ச்சியானவை. அதிலும் கிளைமாக்சில் அத்தனை குழந்தைகளைப் பார்த்து தன்யா சந்தோச படுவது படத்தின் ஹயிலைட். படம் முழுக்க முழுக்க அடல்ட் கன்டென்ட் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செம்ம மெசேஜ். முதல் நாளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இனிமே அந்தமாதிரி நடிக்க மாட்டேங்க !! – ஐஸ்வர்யா ராஜேஷ்

Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இனி அந்தமாதிரி வேடத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கதாநாயகியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார். தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து மலையாளம், தெலுங்கு என வெவ்வேறு மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: சாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா வேடத்தில் நடித்தால், பிரபல நாயகர்கள் என்னை தவிர்க்கிறார்கள். வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். எனவே அம்மாவாக இனிமேல் நடிப்பதில்ல என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகிறார்.

சென்னையில், டீ கடை ஆரம்பித்த தல படத்தின் நாயகி..

Quick Share

தமிழில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் தல அஜித் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். அதில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். மாதவன் ஜோடியாக விக்ரம் வேதா படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

நேர் கொண்ட பார்வை படத்தின் மூலம் இவருக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது ஹிந்தியில் டாப்ஸி நடிப்புக்கு ஈடு கொடுக்கும் வகையின் நடித்தார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழி படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிகை என்பதை தாண்டி தொழில் துறையில் இறங்கியுள்ளார். தற்போது சென்னை வேளச்சேரியில் உள்ள pheonix mall வளாகத்தில் ‘பெர்சி’ என்ற பெயரில் டீ கடை (Cafe) ஆரம்பித்துள்ளார். இந்த செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டீ கடை ஆரம்பித்ததற்கு பல சகா நடிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இனி பட டிஸ்கஷன் சூடான டீ-யோடு நடக்கலாமோ என்னவோ !!

‘மேலாடை இல்லாம காத்தோட்டமா..”ஒரு போஸ்” பூனம் பாண்டே’

Quick Share

சர்ச்சைக்குரிய பாலிவுட் நாயகி பூனம் பாண்டே அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.இதன் ஒரு படிமேலே சென்று, தனது ஆபாச வீடியோக்களுக்கென்றே தனி வெப்ஸைட் ஒன்றை இயக்கி வரும் இந்த கவர்ச்சி கன்னி அதில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு மேலும் முழு வீடியோவை பார்க்க என் வெப்சைட் பக்கத்துக்கு வாருங்கள் என அழைத்து அத்தனை ரசிகர்களையும் கிறங்கடித்து விடுவார்.

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மேலாடை எதுவும் போடாமல் கைவைத்து வைத்து மறைத்து கண்ணாடிமுன் செல்ஃபி எடுத்து பதிவிட்டுள்ளார். இதனாலே இவரது இன்ஸ்டாவை 3 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

“எனக்கு வேணாம்”…., சூப்பர் ஸ்டார் படத்தை தூக்கி வீசிய திரிஷா !!

Quick Share

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் 16 வருடமாக தமிழ் திரையுலகின் ரசிகர்கள் மனதில் நீங்கா இதன்பித்திருக்கிறார். இவர் கைவசம் வரிசையாக பல படங்கள் உள்ளன. பரமபதம் விளையாட்டு, பொன்னியின் செல்வன், ராக்கி, கர்ஜனை ஆகிய படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

த்ரிஷா தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சார்யா என்னும் படத்தில் நடிக்கவுள்ளதாக பேசப்பட்டது. கொரட்டல சிவா இதனை இயக்குகிறார். கடந்த வாரம் ஆச்சார்யா ஷூட்டிங்கிலும் திரிஷா பங்கேற்றார் என கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் இருந்து தற்போது திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

செம்ம கோபத்தில் இருக்கும் திரிஷா ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “சில சமயத்தில் ஆரம்பத்தில் சொல்வது ஒன்று பின்னர் நடப்பது வேறொன்று. படக்குழுவுடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக நான் சிரஞ்சீவி சார் படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.

மேலும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். என அன்பான தெலுங்கு ரசிகர்களுக்கு – உங்களை இன்னொரு படம் வாயிலாக சந்திக்கிறேன்” என திரிஷா ட்விட் செய்துள்ளார். இந்த சம்பவம் த்ரிஷாவை பெரிதும் பாதித்துள்ளது. சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் விலகி இவ்வளவு தைரியமாக தனது கருத்தை பதிவு செய்த திரிஷாவுக்கு பொன்னாயின் செல்வன் படம் அவர் சினிமா வாழ்க்கையில் ஒரு மையில்கல்ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




You cannot copy content of this Website