பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன் இவர் தமிழில் 8 தோட்டாகள் திரைப்படத்தில் ஒரு சிறிய கேரட்டரில் நடித்து அறிமுகமானார். அதன்பின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பலவிதமான சர்ச்சையில் சிக்கி கொண்டு, சர்ச்சை நாயகியாக தமிழகத்தில் வளம் வந்தார்.
தற்போது சமூக வலைத்தலைப்பக்கத்தில் சர்ச்சை நாயகன் நித்தியானந்தாவின் புத்தகத்தை குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுருந்தார், அதில் “இந்த புத்தகத்தை நான் சில நாட்களாக படித்து வருகிறேன். மிகவும் சிறந்த புத்தகம், வாழ்கை குறித்த பல விஷயங்கள் நமக்கு காத்துக்கொடுக்கிறது. மேலும் இந்த புத்தகத்தை நாம் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மாஞ்சா வேலு, பேராண்மை, அரவான், பரதேசி போன்ற பல்வேறு படங்களில் நடித்த நடிகை தான் தன்ஷிகா அதன் பின்னர் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்து பிரபலமானவர் தன்ஷிகா.
இதனையடுத்து தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வருகிறார்.அதனை தொடர்ந்து சோலோ, விழித்திரு, காலக்கூத்து போன்ற பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது தன்ஷிகா நடிப்பில் ‘சினம்’ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். அப்படம். உலகம் முழுவதும் சுமார் 36 இடங்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் சர்வதேச திரை விழாக்களிலும் இப்படம் இடம் பெற்றது. இந்த படத்தில் முழுக்க விபச்சார அழகியாக தன்ஷிகா நடித்து சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.
. சினம் குறும்படம் 20 நிமிடங்கள் கொண்ட இந்த குறும்படத்தில் தன்ஷிகா கவர்ச்சி, ஆபாசம் இல்லாம் நடித்துள்ளார். கருக்கதையை மையமாக வைத்து இப்படம் வெளிவந்துள்ளது. இந்தப்படம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் தன்ஷிகா நடித்துள்ளார்.
சந்தானத்துக்காக பெரிய பெரிய கதாநாயகர்கள் காத்திருந்தார்கள். `நம்பர் 1′ நகைச்சுவை நடிகராக இருந்தபோதே அவர் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இன்று பல நடிகர்கள் ஆச்சரியப்படும் இடத்தில் இருக்கிறார்” என்று அவரை வைத்து படம் தயாரிக்கும் ஒரு பட அதிபர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
“இந்த வருடம் சந்தானத்துக்கு அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான வருடமாக இருக்கும் என்பதை அவர் கதாநாயகனாக ஒப்புக்கொண்ட படங்களை பார்க்கும்போது தெரிகிறது. விஜய் சேதுபதிதான் அதிக படங்களில் நடித்து வரும் கதாநாயகன் என்று ஒரு பேச்சு, தமிழ் சினிமாவில் இருக்கிறது. அதை சந்தானம் முறியடித்து இருக்கிறார். விஜய் சேதுபதியை விட, சந்தானம் அதிக படங்களில் நடிக்கிறார். `டகால்டி’ படத்தை தொடர்ந்து, சர்வர் சுந்தரம், பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு-3 ஆகிய படங்கள் சந்தானம் நடிப்பில் வளர்ந்து வருகின்றன. இதையடுத்து, `ஏ 1′ படத்தை இயக்கிய ஜான்சன் டைரக்ஷனில் ஒரு படத்திலும், ராஜேஷ் எம். டைரக்ஷனில் ஒரு படத்திலும் `வஞ்சகர் உலகம்’ படத்தை தயாரித்த நிறுவனம் புதிதாக தயாரிக்கும் படத்திலும் சந்தானம் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.”
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான “தளபதி விஜய்” தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிவடைந்து விட்டது. டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் கதாபாத்திரங்கள் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. விஜய், விஜய் சேதுபதி முதல் முறையாக மோதுவதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடிய ஒரு குட்டி ஸ்டோரி பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக குட்டீஸ்களுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும் பாட்டு பிடித்துள்ளது.
பிகில் படத்திற்கு ரூ.50கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் 2 படங்களின் வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
நடிகர் விஜய் பிகில் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் வெற்றி பெற்று இந்திய அளவில் வசூல் வேட்டையில் முதல் 10 இடங்களை பிடித்தது. இந்தநிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் நடிகர் விஜய்க்கு கொடுத்த சம்பளம் குறித்து கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அந்த கணக்கும் நடிகர் விஜய் வருமான வரித்துறையிடம் கொடுத்த கணக்கும் முரண்பாடாக இருந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி அதிரடியாக நடிகர் விஜய்க்கு சொந்தமான பனையூர், சாலிகிராமத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பிகில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் குழுமம், சினிமா பைனான்சியர்அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அன்பு செழியன் வீட்டில் ரூ-.77 கோடி ரொக்கப்பணம் மற்றும் சோதனை நடந்த இடங்களில் ஏராளமான ஆவணங்களையும் எடுத்து சென்றார்கள். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி நடிகர் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். 3 வாகனங்களில் வந்த 8-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து ஆய்வில் ஈடுபட்டுனர். இந்நிலையில் நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாகவும் பிகில் படத்திற்கு ரூ.50கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் 2 படங்களின் வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் ஐஸ்வர்யா ராய் மீதும் கை வைக்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு கேட்டு வந்த நடிகைகளை பலாத்காரம் செய்தது, அவர்கள் கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்தது, அவர்களை கண்ட இடத்தில் தொட்டது என்று அட்டகாசம் செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் ஐஸ்வர்யா ராய் மீதும் கண் வைத்தது தெரிய வந்துள்ளது. ஐஸ்வர்யா ராயின் டேலன்ட் மேனேஜராக இருந்த சிமோன் ஷெப்ஃபீல்டு வெயின்ஸ்டீன் பற்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
சிமோன் நான் ஐஸ்வர்யா ராயின் மேனேஜராக இருந்தேன். வெயின்ஸ்டீன் ஐஸ்வர்யா ராயை தனியாக சந்திக்கத் துடித்தார். அதை அவர் என்னிடம் தெரிவித்தார்.
பெரிய பன்னி அந்த ஆள் ஒரு பன்னி, பெரிய பன்னி. ஐஸ்வர்யா ராயை தன்னுடன் தனியாக விட்டுவிட்டு போகுமாறு அவர் என்னிடம் பல முறை கூறியும் நான் கேட்கவில்லை.
ஆபீஸ் நானும், ஐஸ்வர்யா ராயும் வெயின்ஸ்டீனின் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றபோது அவர் என்னிடம் வந்து நான் ராயை தனியாக சந்திக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அது நடக்காது என்று நான் கூறினேன்.
பிசினஸ் நானும், ஐஸ்வர்யா ராயும் எங்களின் ஹோட்டலுக்கு திரும்பிய பிறகு ஒரு பன்னி பொம்மை வாங்கி அதில் டயட் கோக்கை நிறப்பி வெயின்ஸ்டீனுக்கு பரிசாக அனுப்பி வைத்தேன் என்றார் சிமோன்.
ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மீ டூவில் புகார் கூறப்பட்டது.
ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ராஸ் மெக்கோவன், அன்னபெல்லா, ஜேன் டோ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கூறினார்கள்.
இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹார்வி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது தற்போது ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. தண்டனை காலத்தை குறைக்கும்படி ஹார்வி தரப்பில் விடுத்த கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்து விட்டது. இந்த தீர்ப்பு ஹாலிவுட் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிகை பூர்ணாவும் வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடருக்கு கண்ணாமூச்சி என்று பெயர் வைத்துள்ளனர். விவேக் பிரசன்னா, அம்சாத் கான், ஆர்த்யா ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை அவினாஷ் ஹரிஹரன் இயக்கி உள்ளார். காதுகேளாத மகள் ஐஷூவுடன் பூர்ணா புதிய குடியிருப்பில் நுழைகிறார். அங்கு மகள் திடீரென்று காணாமல் போகிறாள். அவளை தேடி அலையும் பூர்ணா, கடந்த காலத்தில் அவள் தங்கி இருக்கும் அதே வீட்டில் ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியான சம்பவம் பற்றி கேள்விப்படுகிறார். அது என்ன? மகள் ஐஷூவை கண்டுபிடித்தாரா என்பது கதை என்றார் இயக்குனர். இந்த தொடர் ஜி5 வெப் தளத்தில் வெளியாகிறது.
கொரோனா வைரஸ் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. மம்முட்டி, மோகன்லால் படங்கள் தாமதம் ஆகின்றன. மோகன்லால் நடித்து திரைக்கு வருவதாக இருந்த மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய குஞ்சாலி மரைக்காயர் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இதில் குஞ்சாலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். பிரபு, சுனில் ஷெட்டி, சித்தார்த், அசோக் செல்வன், மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. யுத்த காட்சிகள் மிரட்சியாக இருந்ததாக இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டினார். இந்த படத்தை வருகிற 26-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் படம் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். இதுபோல் மம்முட்டி மஞ்சுவாரியர் நடிக்கும் த பிரீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கொச்சியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கவின். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். வெள்ளித்திரையில் சிறு கதாபாத்திரங்களில் நடித்த அவர் ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் படம் ஓரளவு ஓடியது மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்கிறார்,
கவினுக்கு தற்போது இரண்டாவது படம் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குநர் வினீத் இயக்குகிறார். ஏகா (Ekaa) எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக, பிகில் திரைப்படத்தில் நடித்து பலரின் அபிமானங்களை பெற்ற அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இவர் பிகில் படத்தில் கால்பந்து அணியின் கேப்டன் ஆக நடித்தது குறிப்பிடத்தக்கது. மலையாள வசம் வீசும் அமிதாவும் தமிழ் பையன் கவினும் ரொமான்ஸ் செய்ய உள்ளனர்.
இந்த படம் ஹார்ரோர் திரில்லர் வடிவில் இருக்கும் என படக்குழு தெரிவித்தது.
துப்பறிவாளன் 2 படம் பிரச்னை தொடர்பாக விஷால் – மிஷ்கின் தமிழ் திரையுலகில் பெரிய வார்த்தை போர் நடந்துவருகிறது.
மிஷ்கின் – விஷால் கூட்டணியில் வெளிவந்த ‘துப்பறிவாளன் படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தயாரானது. விஷாலே நடித்து, இதனை தயாரிக்கிறார். படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்த நிலையில் மிஷ்கினை நீக்கி, இயக்கம் பொறுப்பை விஷாலே ஏற்றார்.
நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிஷ்கின் பெயரே இல்லை, மாறாக விஷால் பெயர் இடம் பெற்று இருந்தது. மிஷ்கினால் தனக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார் விஷால். தனக்கு ஏற்பட்ட நிலைமை இனி எந்த தயாரிப்பாளருக்கும் ஏற்பட கூடாது, அவரை நம்பி யாரும் இரையாகி விடாதீர்கள் என கூறியிருந்தார். மேலும் விஷாலுக்கு மிஷ்கின் 15 கட்டளை விதித்ததாக கூறி ஒரு அறிக்கையும் வெளியானது. அதில் அவருக்கு பல கோடி சம்பளம், மெயிலில் தான் தொடர்பு கொள்வேன், ரீ-மேக் ரைட்ஸ் என ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. மேலும் மிஷ்கின் அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆதாரத்தோடு நிரூபிக்க சொன்னார்.
இன்று விழா ஒன்றில் பேசிய மிஷ்கின், விஷாலை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அவர் பேசுகையில், என் நிஜ சகோதரனை கூட அந்தளவுக்கு பார்த்தது இல்லை.
ஆனால் நான் தான் பண்ணுவேன் என்றான். அப்போது ஆரம்பித்தது எனக்கு தலைவலி. நான் திரைக்கதை எழுத ரூ.7.5 லட்சம் வாங்கினேன். ஆனால் பத்திரிக்கை செய்தியில் ரூ.35 லட்சம் வாங்கியதாக கூறினார் விஷால். இந்த பொய்யான செயலை அதை அவர் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும்.
8 மாதம் நான் எழுதிய கதைய வெறும் 38 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி விட்டு அவன் கையில் தூக்கி கொடுத்தேன். இப்போது என்னைப் பற்றி தவறாக பேசுகிறான். கதையை பற்றி உனக்கு எனக்கு தெரியும். நீ ஒரு பொறுக்கி பையன் டா. 9மணிக்கு தேர்தலில் நாமினேஷன் செய்த பொறுக்கிடா நீ. என்ன பெரிய எம்.ஜி.ஆர், கருணாநிதியா… இந்த சமூக உன்னை பார்த்து கொண்டிருக்கிறது.
என்ன செய்தாய் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு. நீ எப்படிப்பட்டவன் என்று எனக்கு தெரியும். நான் எப்படிப்பட்டவன் என்று உன் குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா, சகோதரனிடம் கேட்டுபார், அவர்கள் சொல்வார்கள் என்னைப்பற்றி. நான் இயக்கிய படங்களின் தயாரிப்பாளர்களிடம் கேள், அவர்கள் சொல்வார்கள்.
இயக்கம் பற்றி உனக்கு என்ன தெரியும். 38 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினேன். ரூ.13 கோடி செலவு செய்துள்ளனர். ரமணா, நந்தா உன்னை நடுரோட்டில் நிற்க வைப்பார்கள் என்றேன், நடந்துவிட்டது.
படம் நிற்க காரணமும் அது தான். என் தாயை பற்றி தவறாக பேசினான். மேலும் அப்படி தாயை தவறாக பேசியதற்காக மிஷ்கின் தம்பியையும் அடித்துள்ளார், இனி விஷாலை விட மாட்டேன். தமிழ்நாட்டில் நான் ஒருவன், அவனை பத்திரமாக பார்த்து கொண்டேன் என மிஷ்கின் கூறினார்.
தற்போது விஷால் மற்றும் மிஷ்கின் பிரசச்னை பூதாகரமாக வெடித்துள்ளது.
போ டா போ டி என்ற படத்தின் மூலம் 2012ஆம் வருடம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வரலக்ஷ்மி சரத்குமார். சிம்புவுடன் மிக நெருக்கமாக இந்த படத்தில் நடித்திருப்பார்.இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதற்குப்பின் நான்கு வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் மீண்டும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் கூட ச ரக்கும் த ம்மும் என்று சில வ தந்திகள் கிளம்பியது. பாலா கொடுத்த அந்த பட வாய்ப்பிற்கு பின் அடுத்தடுத்து முன்னணி நடிகருடன் நடிப்பதற்கான வாய்ப்பு குவிந்தது.விக்ரம் வேதா படத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்து இருந்த கதாபாத்திரம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. பின்பு சண்டக்கோழி 2, சர்க்கார், மாரி-2 என்று அ டுக் க டு க்காக படங்கள் வெளிவந்து அவரது மார்க்கெட் தமிழ்சினிமாவில் எ கிறி விட்டது என்றே கூறலாம்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் த ன்னுடன் ப டுக் கை யை பகிர்ந்து கொண்டால் வாய்ப்புகள் கொடுக்கிறோம் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் கூ றியதாக ப ர ப ரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில், இவரது பிறந்தநாளான மார்ச் 5-ம் தேதியன்று பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தனர். ஆனால், ஒரு நெட்டிசன் மட்டும் “ஆ ன்ட்டி” உங்களுக்கு 35 வயசா..? என அவரது வயதை கி ண்டல டித்தார்.நம்ம ஊ ரில் அ டி க் க டி ஒரு வி ஷயம் சொல்வார்கள். பெண்களிடம் அவர்களுடைய வயசை கேக்க கூடாது..! ஆண்களிடம் அவர்களுடைய சம்பளம் எவ்வளவு என்று கேட்க கூடாது..! என்று.இது தெரியாத அந்த நபர்வரலக்ஷ்மியின் வயதை கே லி செய்யும் படி கருத்து ப திவி ட்டதால் க டுப்பான வரலக்ஷ்மி, “யெஸ், அ ங்கிள் ஏ தாவது பி ரச்னையா..?” என்று அவரை திருப்பி கலாய்த்துள்ளார்.