சினிமா

இன்று மார்ச் 13 வெளியாகும் படங்களின் என்னென்ன

Quick Share

இந்த வாரம் தமிழ் திரையுலகில் மார்ச் 13ஆம் தேதி வெளியாகும் அசுரகுரு, தாராள பிரபு, வால்டர், கயிறு, எனக்கு ஒன்னு தெரிஞ்சு ஆகணும், தஞ்சமடா நீ எனக்கு, ரகசிய போலீஸ் ஆகிய படங்கள் வெளியாகிறது. இந்த வாரம் பெரிய முன்னணி நட்சத்தரங்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது நாளை வெளியாகும் படங்களில் பெருபாலான தியேட்டர்களில் திரைக்கு வருகிறது.

விக்ரம் பிரபு நடிப்பில் அசுரகுரு, சிபிராஜ் போலீசாக வால்டர் படத்தில் நடிக்கிறார், தாராள பிரபு படத்தில் ஹரிஷ் கல்யாண் துடிப்பான இளைஞராக நடிக்கிறார்.

ரயில் கொள்ளையை மையப்படுத்திய படம் என்பதால், இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படத்தில் விக்ரம் பிரபு, யோகி பாபு, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜதீப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கணேஷ் ராகவேந்திரா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வால்டர் படம் குழந்தைகள் கடத்தப்படும் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சிபி சத்யராஜ், ஷிரின் காஞ்வாலா, சமுத்திரக்கனி, நட்டி என்ற நடராஜ், சனம் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
அன்பரசன் வால்டர் படத்தை இயக்கியுள்ளார். சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

தாராள பிரபு படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக், தன்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ளனர். கிருஷ்ண மாரிமுத்து தாராள பிரபு படத்தை இயக்கியுள்ளார். விந்து தானம் செய்யபடுவதையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு, சிபிராஜ், ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்கு மட்டும் இன்றைய நாளில் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று படங்களுக்கு இடையே போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கயிறு, எனக்கு ஒன்னு தெரிஞ்சு ஆகணும், ரகசிய போலீஸ், தஞ்சமடா நீ எனக்கு ஆகிய படங்களும் ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவில் தவிக்கும் விக்ரம் “கோப்ரா” படக்குழு.. கொரோனா அச்சத்தால் ஷூட்டிங்க...

Quick Share

விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தில் முதல் போஸ்டர் சம்பத்தில் வெளியானது. தற்போது படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்துகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பரவும் கொரோனா பாதிப்பது ரஷ்யாவில் பெரும் அளவில் காணப்படுகிறது.

இதனால் கோப்ரா படப்பிடிப்பை உடனடியாக ரத்து செய்துள்ளார்கள். மேலும் ரஷ்யாவில் முடங்கி கொண்டிருக்கும் படக்குழுவினர் தங்கள் சந்திக்கும் இன்னல்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர், இன்று படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார், அதில், இந்திய இந்திய அரசர்கள் விதித்த பயண தடையினால் படக்குழு உடனடியாக அனைத்தையும் முடக்கிவிட்டுள்ளதாக கூறினார்.

இந்தியா வருவதை ரஷ்யாவில் உள்ள கோப்ரா படக்குழு ஆலோசனை நடத்திவருகிறது. மேலும் இவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்து தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட் லைட் ஏரியாவில் போலீஸ் ரைடு …. அரைகுறை ஆடையில் சிக்கிய தொலைக்காட்சி பிரபலம்.

Quick Share

டோரா பாபு மற்றும் அவரின் நண்பர் பரதேசி (அவரோட பெயரே பரதேசி தான் பாஸ்) என்பவரும் சிக்கியுள்ளனர்.
டோரா பாபு “ஜபர்தஸ்த்” என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான காமெடி நடிகர் ஆவர். இவர் அந்த மாதிரி படங்களிலும், போஜ்பூரி படங்களிலும் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில், விசாகபட்டினத்தில் விபச்சாரம் ஜரூராக நடப்பதாக போலீசுக்கு ரகசியமாக வந்த தகவலின் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விசாகப்பட்டினத்தில் ஸ்பெஷல் போலீஸ் படை ஒன்று லோக்கல் ஏரியாக்களில் அதிரடி சோதனை செய்தது.

இதில், காம்பிளக்ஸ் ஒன்றில் டோரா பாபுவை பிடித்துள்ளனர். அவர் போலிஸிடம் தன் மீது புகார் பதிவு செய்ய வேண்டாம் என்றும் என்னுடைய பெயர் கெட்டுப்போய்விடும் கெஞ்சியுள்ளார்.

இதனை தொடர்ந்து அரைகுறை ஆடையில் அங்கிருந்த அழகிகள் மற்றும் காமெடியன் டோரா, மற்றும் அவரது நண்பர் பரதேசி இருரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தான் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் கதைக்களம்.

Quick Share

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் செய்த சாதனையை பல வருடங்கள் கழித்து தற்போது தான் விஜய், அஜித் மெல்ல உடைத்து வருகின்றனர்.

ஆனால், 70 வயதிலும் ரஜினிகாந்த் இன்னும் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றார், ஆம், தற்போது கூட சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்டதாம், இதில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி நடித்து வருகின்றாராம்.

தற்போது இப்படத்தின் கதைக்களம் பொள்ளாச்சியில் நடப்பது போல் உள்ளதாக ஒரு பிரபலம் கூறியுள்ளார்.

கண்டிப்பாக படம் செம்ம செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்து குடும்ப ரசிகர்களை கவரும்படி இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யா அறுவா மீசையுடன்…..என்ன கதாபாத்திரம் தெரியுமா???

Quick Share

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு தற்போது முழு மூச்சாக நடித்து வரும் படம் மாநாடு. இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் காமாட்சி, எஸ்.ஜே. சூர்யா, மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சில புகைப்படங்கள் டுவிட்டரில் வெளிவந்துள்ளது.

இதில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, மனோஜ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிகின்றனர்.

மேலும் அப்புகைப்படத்தில் குறிப்பாக பார்த்தல் நடிகர் மனோஜ் காவல் துறை அதிகாரியின் உடையை அணிந்துள்ளார். ஆகவே அவர் இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் போலீஸ் அதிகாரியாக தான் நடித்து வருகிறார் என்று கிசுகிசுப்பட்டு வருகிறது. அதைபோல் அவரும் Shave செய்து போலீஸ் போலவே தெரிகிறார்.

மக்கள் செல்வன் என்று நிருபித்த விஜய் சேதுபதி- தங்கமான மனுஷன்பா .

Quick Share

தமிழ் சினிமாவில் நானும் ரவுடி தான் என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் காமெடி நடிகர் லோகேஷ் பாப். பின்னர் அதர்வாவின் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்றபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருப்பார்.

பின்னர் ஆத்தியா காமெடி நியூஸ் சேனனில் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் இவருக்கு சிறியவர்கள் முதல் , பெரியவர்கள் வரை அதிகம் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

சில நாட்களுக்கு முன்னர் இவருக்கு தீடிர் என்று தீடிர் என்று பக்கவாதம் ஏற்பட்டது அதில் ஒரு கை மற்றும் கால் செயலிழந்து போய்விட்டது. இதனை சரி செய்ய ருபாய் 7 லட்சம் மருத்துவ உதவி வேண்டும் என்று அவன் நபர் குட்டி கோபி தன் சமூக  வலைத்தளத்தில் பகிரப்பட்டது.

தற்போது இவருக்கு போதிய மருத்துவ கிடைத்ததால் அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் உள்ளார். இவரை பார்க்க நடிகர் விஜய் சேதுபதி சென்று நலம், விசாரித்துள்ளார். தற்போது இந்த தகவலை பார்த்தவர்கள் ஒரு சாதாரண துணை நடிகரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறிவருகிறாரார்கள்.

Sethu na Visited hospital After Adithya channel fame Lokesh Pop Addy brother's surgery ! ❤️🙏

Posted by Dinesh Kumar on Wednesday, March 11, 2020

அகரம் அறக்கட்டளையை நடத்துவதற்காக, நடிகர் சூர்யாவுக்கு சிறந்த மனிதருக்கான விருது !!

Quick Share

2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவால் அகரம் பவுண்டேசன் தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் பின்தங்கியிருக்கும் பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

விகடன் குழுமத்தினர் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த மனிதருக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த விருதை பெற்ற பிறகு சூர்யா தனது நன்றிகளை தெரிவித்தார். அதில் அவர், முதல் தலைமுறையினராக கல்வி வாய்ப்பு வேண்டி காத்திருக்கும் சாமானியர்களின் வீட்டுக் குழந்தைகள் கல்வி பெற அகரம் பவுண்டேஷன் செய்துவரும் பணிகளுக்கு உறுதுணையாய், விகடன் விருது அளித்திருப்பது உற்சாகம் தருகிறது.

சூர்யா மட்டுமல்லாமல் அவரது தந்தை நடிகர் சிவக்குமார் அவருடைய கல்வி அறக்கட்டளை மூலம், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெரும் மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிரார். 1979 ஆம் ஆண்டு முதல் இந்த சேவையை நடிகர் சிவக்குமார் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையோடு இளைய மகன் நடிகர் கார்த்திக்கும் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுக்குன்னு இப்படியா !!…7 முறை கன்னத்தில் நடிகை டாப்ஸி பன்னு-வை அறைந்த சம்பவம்..!

Quick Share

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இடத்தில நடிகை டாப்ஸி இருக்கிறார். அமிதாப்பச்சன் உடன் “பிங்க்” படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்-ல் மிக பிரபலமானார். தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக டாப்ஸி நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர் நடித்த தப்பட் என்னும் படம் வெளிவந்தது. இந்த படத்தின் ஒரு காட்சியில் அவருடன் நடித்த பாவெல் குலாட்டி என்னும் நடிகர் 7 முறை ஒரு சீனுக்காக அறைந்துள்ளாராம். இந்த கட்சி படத்தின் முக்கியாயமான கட்சியாக உள்ளதால். பயங்கர ஈடுபாடுடன் அடியை வாங்கியுள்ளார் நம்ம டாப்ஸி. இந்த சம்பவத்தை வெளிப்படையாக அந்த காட்சியில் நடித்த நடிகர் கூறியுள்ளார்.

முதல் படத்திலேயே பல ரசிகர்களை குவித்தார். பின்பு மளமளவென, தெலுகு, ஹிந்தி என பல மொழிகளில் நடிக துவங்கிவிட்டார். சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குறைகளுக்கு அடிக்கடி குரல் மட்டும் கொடுக்கிறார். அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பில் அதிரடியாக பேசி ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார்.

ஆத்தாடி என்ன அழகு!!!… இப்பொடி ஒரு அழகா அனு இம்மானுவேல்…இன்டர்நெட் சென்சேஷனல்..

Quick Share

மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இம்மானுவேல். இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உடன் சைக்கோ படத்திலும் முதலில் கமிட்டானார். இவரை தமிழ் சினிமா தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. நடிகை அனு இமானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சுக்கே டீஸர்… வாத்தியாரு வெறித்தனம் !

Quick Share

நடிகர் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை விழாவிற்கு படக்குழுவினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் ரசிகர்களுக்கு அனுமதி இல்லையா என ரசிகர்கள் புலம்பியுள்ளனர். தற்போது ரசிகர்கள் பார்வைக்காக இந்த இசை விழாவை நேரடியாக ஒளிபரப்ப சன்டிவி ஏற்பாடு செய்துள்ளது. ’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா டிரைலர் ஒன்றை சன் டிவி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இன்று படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகும் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. “வாத்தியாரு” வராரு என்ற ஹாஷ் டேக் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

சினிமா இவரை ஓரம்கட்டினாலும் அவங்க கவர்ச்சியை ஓரம்கட்டமுடியாது !!

Quick Share

பாலிவுட் சென்ற ராய் லக்‌ஷ்மி நடித்த ஜூலி படம் சரியாக போகவில்லை. அரண்மனை, காஞ்சனா படத்தில் நடித்து படம் வெற்றி பெற்றாலும் ராய் லக்ஷ்மிக்கு வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. தனது வாழ்க்கையில் வெற்றி, தோல்வி சகஜம் என ஈஸியாக எடுத்துக் கொண்டு பல நாடுகளை சுற்ற அடிக்கடி கிளம்பிவிடுகிறார்.

தோழிகளோடு நாட்களை கழிக்கும் அவர், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது கவர்ச்சி பிகினி புகைப்படத்தை பதிவிட்டு பல ரசிகர்களை உறைய வைத்துவிடுகிறார். சமீபத்தில் நீச்சல் உடையில் ஈரத்தோடு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ராய் லட்சுமி ஜீ நிறுவனம் தயாரிப்பில் பாய்சன் 2என்னும் சீரிஸ்ல் நடித்துவருகிறார். மேலும் 2 தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிகிறது. விடுமுறைக்கு பின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் பாடல் அப்டேட் இதோ!

Quick Share

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

ஏனெனில் விஜய் முதன் முறையாக சென்சேஷன் இயக்குனர் லோகேஷுடன் கைக்கோர்த்துள்ளது ஒரு காரணம் என்பதால்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் நாளை வெளிவரவுள்ளதாம், ஆம், நாளை மாலை 5 மணிக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பாடல் ‘வாத்தீகமிங்’ என்று தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.




You cannot copy content of this Website