அதிரடி காட்டும் தல ! அடங்கிப் போகும் ரஜினி வெளியான உண்மை தகவல் இதோ
கடந்த பொங்கலுக்கு தல அஜித் நடித்து வெளியான படம் விஸ்வாசம்.
இந்த படத்தில் அஜித், நயன்தாரா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது. தந்தை, மகள் பாசத்தையும், கணவன் மனைவி உறவையும், மிகத் தெள்ளத் தெளிவாக, உணர்வு பூர்வமாக சொல்லி இருந்தது விசுவாசம். இதனால் பிரமாண்டமாக பேசப்பட்டது. படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல், இன்றுவரை வெளியான, தமிழ் திரைப்பட பாடல்களில், அதிகம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் என்ற மிகப்பெரிய சாதனையை தன்னுள் வைத்துக் கொண்டு இருக்கிறது.
இதே தேதியில், பொங்கலன்று, தல அஜித்துடன் போட்டியிட்டு களமிறங்கிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்டை திரைப்படம் கலக்கலாக களமிறங்கியது, தல அஜித், சூப்பர் ஸ்டாரை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தைப் பெற்றார். இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 33 ஆண்டு சினிமா வாழ்வில், அவருடன் போட்டியிட்டு வெளிவந்த எந்த திரைப்படமும், அவரது வசூலை முடியவில்லை. ஆனால் விஸ்வாசம் திரைப்படம், அந்த 33 ஆண்டுகால சாதனையை முறியடித்து, புதிய சாதனையை படைத்தது. அதுமட்டுமின்றி, தல ரசிகர்கள் டிக் டாக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், என்று ஒட்டுமொத்தமாக கொண்டாட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் ,அடங்கிப்போக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள்.
அதிரடி காட்டிய தல ரசிகர்கள், இன்றுவரை அடங்காத காளைகளாக, வலம் வந்து கொண்டிருக்க, அவர்களுக்கு கடிவாளம் போடும் வேலையை, கணக்கு பண்ண தொடங்கியது சூப்பர் ஸ்டாரின் கைத்தடிகள். ஆனால் இன்றுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அஜித் ரசிகர்களை, ஆன்லைனில் ஒன்றும் செய்துவிட முடியாது, சோசியல் மீடியாக்களில் அவர்கள்தான் எப்போதும் நம்பர் ஒன். என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அஜித்தை மீறி, அஜித் ரசிகர்களை மீறி, ஆன்லைனில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று, கட்டுக்கோப்பாக, கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனால் யோசித்த ரஜினியின் திரைப்பட தயாரிப்பு குழு, தல அஜித்தை, தன்னுடைய படத்தில் நடிக்க வைத்து விட்டால், அஜித் ரசிகர்கள் கோபம் குறையும், படத்தை விமர்சிப்பது, குறைவாகும். ட்ரோல், பண்ணுவது என்று இல்லாமல் இருக்கும் என்று யோசித்தார்கள்.
அதன்படி, தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் அண்ணாத்தே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அஜீத்தை அணுகி உள்ளது. சிறுத்தை சிவா ஏற்கனவே நான்கு படங்களை வரிசையாக, வெற்றி படங்களை கொடுத்த சிவாவின், அன்புக்கு கட்டுப்பட்டு தல நடித்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. இருந்தாலும், தலைகாட்டிய அதிரடியில், அடங்கிப்போன அம்மாஞ்சி யாரென்று? ஊருக்கு தெரிந்து விட்டது இப்போது.