சினிமா

சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த்..

Quick Share

கவலை வேண்டாம் திரைப்படத்தில் கவலை இல்லாமல் கவர்ச்சி காட்டி நடித்துள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.

முரட்டு குத்து நடிகை யாஷிக்கா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார், பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார்.

பட வாய்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில்,காதலர் தினத்தை முன்னிட்டு சிகப்பு நிற கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை திக்கு முக்காக வைத்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சில்க் ஸ்மிதாவையே தோற்கடிச்சிடீங்க யாஷிகா என்று கூறி வருகிறார்கள்.

10 மாதங்களில் 8 கெட்டப்-குழம்பி வரும் ரசிகர்கள் எதுதான் உண்மையான ‘வலிமை’ கெட்டப் .

Quick Share

தல அஜித் கடந்த 8 மாதங்களாக நடித்து வரும் படம் வலிமை இப்படத்தை பற்றி அஜித் ரசிகர் மற்றும் இன்றி மற்ற ரசிகர் பிரபலங்கள் என்று அனைவரும் பரபரப்பாக பேசிவருகிறினார்கள் ஏன் என்றால் இப்படத்தை பற்றி எந்தவித அப்டேட்டும் பட குழுவினர்கள் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறினார்கள்.

இந்தநிலையில் அஜித் வெளியில் வரும் போது அவரின் தோற்றத்தை வைத்து இதுதான் வலிமை படத்தின் கெட்டப் என்று ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாகி விடுகிறார்கள்.

ஒரு முறை அஜித் மற்றும் அவரது மனைவி ஒரு நாள் ஹோட்டல் ஒன்று சென்று வந்தனர். அப்போது அஜித் இருக்கும் கெட்டப்பை பார்த்து இதுதான் வலிமை படத்தின் கெட்டப் என்று கூறினார்கள். அதன் பின்னர் சமீபத்தில் அவரது நெருங்கிய உதவியாளர் வீட்டின் திருமணத்தில் கலந்து கொண்ட அஜித் அப்போது வேற தோற்றத்தில் காணப்பட்டார் இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் வலிமை படத்தின் கெட்டப் என்று கூறினார்கள்.

மேலும் இதனை தொடர்ந்து கடந்த 8 மாதத்தில் மட்டும் 10 கெட்டப்பில் அஜித் வந்துள்ளார் இதில் எந்த கெட்டப் தான் வலிமை படத்தின் கெட்டப் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள். இந்த குழப்பத்திற்கு விரைவில் படக்குழு ஒரு தீர்வு கொடுக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

சொகுசு ஹோட்டல் பில்-ஐ தயாரிப்பாளர் தலையில் கட்டி எஸ்கேப் ஆன நடிகை !!

Quick Share

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “பட்டாஸ்” படத்தில் நடித்த நடிகை மெஹரீன் இவர் நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார். நோட்டா படத்திலும் நடித்து இருந்தார்.
இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் அஸ்வத்தம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார். தனக்கு சரும பிரச்சனை இருப்பதாக கூறி, வர முடியாது என போனில் கூறிவிட்டார்.

மெஹரீன் பேச்சை கேட்டு கோபமான தயாரிப்பாளர் ‘நீங்கள் இப்போது வரவில்லை என்றால் நான் உங்கள் ஹோட்டல் பில் செட்டில் பண்ண மாட்டேன்’ என எரிச்சலோடு கூறியுள்ளார். இதனால் மெஹரீன் எதுவும் சொல்லாமல் ஹோட்டலை விட்டு சென்று விட்டார். பிறகு தயாரிப்பாளரிடம் ஹோட்டல் நிர்வாகம் பணத்தை பெற்றுள்ளார்கள். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தை திரும்பி பார்கவைத்துள்ளது. இந்த நடிகைக்கு இவ்வளவு திமிரா.. என பலர் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ரஜினி படத்தை பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டது சன்பிக்சர்ஸ் !!

Quick Share

ரஜினி நடிக்கும் 168 படம் அண்ணாத்த என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த பெயரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் மாலை 6 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரஜினிக்கு முதல் முறையாக டி இமான் இசையமைக்கிறார்.

ரஜினி ஏற்கனவே மன்னன் எனும் பெயரில் படம் நடித்திருப்பதால், மன்னவன் பெயரை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. இது அன்னத்தை ஆடுறார் ஓத்துக்கோ என்ற கமல் பாட்டில் வந்த “அண்ணாத்தை” சொல்லை டைட்டிலாக வைத்துள்ளதற்காக ரசிகர்கள் குஷியில் உள்ளனர். எனவே இந்த படத்தின் பெயரான அண்ணாத்த’ வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இந்த படத்தின் டைட்டில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத், அப்துல் கலாம் நினைவு இடத்திற்கு சென்று வணங்கினார் !!

Quick Share

பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேடத்தில் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார், A.L விஜய் தலைவி என்கிற பெயரில் படமாக எடுத்து வருகிறார். தமிழகத்தில் உள்ள கங்கனா ரணாவத் மகா சிவராத்திரி அன்று கோவையில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்திற்கு சென்று வழிபட்டார். இதையடுத்து அவர் இன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் சிவனை தரிசனம் செய்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு சென்று கங்கனா ரணாவத் மரியாதை செய்தார். அங்கு எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தலைவி படத்திற்காக, உடல் எடையை அதிகரித்துள்ள கங்கனா பரதமும் கற்றுள்ளார். இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு எம்.ஜி.ஆர். கதாபாத்திரம் கட்சிதமாக உள்ளது. கங்கனாவின் போட்டோக்களை பார்த்தால் ஜெயலலிதா லுக்கை போன்று தோன்றவில்லை என பல கமெண்ட் செய்துவருகின்றனர், மறுபுறம் அரவிந்த் ஸ்வாமியை பாராட்டியுள்ளனர்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள் ஆனால் தொழிலாளர்களின் பாதுகாப்பு?

Quick Share

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று முன்தினம் இரவு லைட்டுகள் அமைக்கப்பட்டிருந்த கிரேன் சரிந்து விழுந்தது. இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா புரடெக்ஷன் உதவியாளர் மது, கலை உதவியாளர் சந்திரன் ஆகியோர் மரணமடைந்தனர்.

இந்த சம்பவம் தமிழ்த் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான விவகாரம்.. இயக்குநர் ஷங்கர், நடிகர் கமலுக்கு போலீஸ் சம்மன்!

ராதாரவி இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட தொழிலாளர் சம்மேளமான ஃபெப்சியில் இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் டப்பிங் யூனியன் தலைவரும் நடிகருமான ராதாரவி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இனிமையானவர் அப்போது பேசிய நடிகர் ராதாரவி, விபத்தில் மரணமடைந்த சந்திரனுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் சந்திரன் பார்ப்பதற்கு கரடு முரடாக இருப்பார். ஆனார் பழக மிகவும் இனிமையானவர். பலாப்பழத்தை போன்றவர் சந்திரன். அவரது இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது.

பாராட்டு இது சாதாரணமாக சொல்வதில்லை. மனதில் இருந்து சொல்கிறேன் என்றார். மேலும் மது, மற்றும் கிருஷ்ணாவின் மறைவுக்கும் ராதாரவி இரங்கல் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாய் நிதி அறிவித்ததற்கு நடிகர் ராதா ரவி பாராட்டு தெரிவித்தார்.

ஷங்கர் மீது சாடல்

மேலும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை என இயக்குநர் ஷங்கரை மறைமுகமாக சாடினார் ராதாரவி. பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரை நடிகர் ராதாரவி சாடியிருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரம் படத்தின் போஸ்டரை ஒட்டினார்-இயக்குனர் மிஷ்கின்

Quick Share

விருது பெற்ற பாரம் படத்தை பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கி இருக்கிறார். ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சுபா.முத்துக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆருத்ரா ஸ்வரூப் மற்றும் ப்ரியா கிருஷ்ணசுவாமி இணைந்து தயாரித்துள்ளனர். ஜெயந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். வேத் நாயர் இசை அமைத்திருந்தார்.

போஸ்டர் ஒட்டுவேன் இந்தப் படம் கடந்த 21 அன்று வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, நான் இயக்கிய சைக்கோ எல்லாம் ஒன்றுமில்லை. இதுதான் படம். படத்தை விளம்பரப்படுத்த போஸ்டர் அடிக்க பணம் இல்லை என்றார்கள். இந்த படம் வெளியாகும்போது தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் என கூறி இருந்தார். சொந்த செலவில் சொன்னபடியே, தற்போது அதை செய்து காட்டியுள்ளார். பாரம் படத்திற்காக அவர் தனது சொந்த செலவில் போஸ்டர் ஒட்டியுள்ளார். சென்னையின் சில பகுதிகளில் அவர் போஸ்டர் ஒட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இயக்குநர் மிஷ்கினின் செயலுக்கு பாரம் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

அன்பும் ஆதரவும்

இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி கூறும்போது, ‘பாரம் படம் மீது இயக்குநர் மிஷ்கின் காட்டிவரும் அன்புக்கு விலைமதிப்பு இல்லை. அவர் இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இவ்வளவு உயரத்தில் இருந்துகொண்டு புதுமுகங்களான எங்கள் மீது அவர் காட்டும் அன்பும் ஆதரவும் பிரமிப்பானது. பெருகியிருக்கிறது இந்த அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. பாரம் படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது அவர் பேசியதில் இருந்தே இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு பரவ ஆரம்பித்தது. தற்போது அவர் போஸ்டர் ஒட்டியதன் மூலம் படத்தின் மீதான கவனம் பன்மடங்கு பெருகியிருக்கிறது. இந்த அன்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்று கூறியுள்ளார்.FacebookTwitterShare

“அத்துமீறிய முத்தம்”… இப்படியா இந்த பொண்ணு கத்தும்…!!!

Quick Share

தெலுங்கு திரையுலகில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து, தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெருமளவில் நடிகை ராஷ்மிகா பிரபலமானார். இதனை தொடர்ந்து மீண்டும் ராஷ்மிக்கா விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே இங்கேம் இங்கேம் காவலே என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பெருமளவில் பிரபலமாகி இருந்தவர் தான் நடிகை ராஷ்மிகா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ராஷ்மிக்காவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது இதற்கிடையில் கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் என்ற படத்தில் ராஷ்மிகா நடித்து வருகின்றார். மேலும், தான் தமிழ் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக அவர் பல நிகழ்சிகளில் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ரசிகர் ஒருவர் அத்துமீறி முத்தம் கொடுத்ததாக வீடியோ ஒன்று பரபரப்பாக வைரல் ஆன நிலையில், அது சினிமாவுக்காக எடுக்கப்பட்ட காட்சி எனவும், அதில் உள்ள நடிகை ராஷ்மிகா இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு அங்கிருந்த ரசிகர் ஒருவர், அத்துமீறி முத்தம் கொடுத்துவிட்டு தப்பியோடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று உலா வந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரேய்மோ என்ற கன்னட படக்குழு, அந்த வீடியோவில் இருப்பது ரஷ்மிகா மந்தனாவே அல்ல எனவும், அது தங்களது பட நாயகியான ஆஷிகா ரங்கநாத் எனவும் தெரிவித்துள்ளது. அது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி எனவும் விளக்கமளித்துள்ளது.

சிக்கலில் திரிஷா, “இதே போல் செய்தால் சம்பளம் பறிக்கப்படும்”, தயாரிப்பாளர் ...

Quick Share

28ம் தேதி வெளிவர இருக்கும் பரமபதம் விளையாட்டு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால் நடிகை த்ரிஷா பங்கேற்கவில்லை. இது குறித்து பேசிய தயாரிப்பாளர் டி சிவா, அடுத்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் த்ரிஷா நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்று எச்சரித்து பேசினார்.

அவர் மேடையில் கூறியது, ‘இன்று சூழ்நிலை காரணமாக வராமால் போயிருக்கலாம். ஆனால் அடுத்த வாரம் படம் ரிலீஸ், இனி நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவில்லை என்றால் த்ரிஷா வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி தரவேண்டிவரும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பாக எச்சரிக்கிறேன்’ என கூறியுள்ளார் டி.சிவா.

45 வருடமாக பாடி வந்து…ஆடு மேய்த்த நங்கம்மாளுக்கு சினிமாவில் அடித்த ஜாக்போட் !! பா...

Quick Share

இணையத்தின் உதவியால் திறமையாளர்களின் கதவுகளை வாய்ப்பே தேடி வந்து தட்டுவது அதிகரித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி நங்கம்மா 45 வருடங்களுக்கு மேலாக தனது ஆழமான குரலால் மலையாள உலகம் முழுக்க இசை பிரியர்களை கட்டிப் போட்டிருக்கிறார் அவரின் வசீகரிக்கும் குரலுக்கு மயங்கிக் கிடக்கிறது மலையாள திரையுலகம்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அட்டப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் என்ற 60 வயது மூதாட்டியின் குரல் அந்தப் பகுதி முழுவதும் பிரபலம். மலைவாழ் இடத்தை சேர்ந்த மங்கம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டே பாடும் பாடலுக்கு அட்டப்பாடி கிராமமே மயங்கிக் கிடந்த நிலையில் அவரது குரல் தற்பொழுது ஒட்டுமொத்த கேரளத்தையும் கட்டிப்போட்டியுள்ளது.

நங்கம்மாள் குறித்து வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவ, இதனைப் பார்த்த மலையாள நடிகர் பிருத்விராஜ் அவரது இயக்கத்தில் தயாராகியுள்ள அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தில் கலக்காத என்ற பாடலை பாட வைத்துள்ளார்.

சென்னையில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டியோ ஒன்றில் நங்கம்மாள் பாடிய பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் சினிமாவைத் தேடிப் போகவில்லை என்றும் தன்னைத் தேடி சினிமா வந்துள்ளதாகவும் கூறுகிறார் நங்கம்மாள்.

அட இது நம்ம ஆலியா மானசாவா? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??

Quick Share

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா.

இவர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருந்தும் வருகிறார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட அது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த நடிகர் தனுஷ் !!

Quick Share

நடிகர் தனுஷ் படத்தின் D40 படத்தின் first look சமீபத்தில் வெளியானது. இந்த முதல் போஸ்டர் பல ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது மேலும் இந்த படத்தின் டைரக்டர் காத்திக் சுப்புராஜ் பட ப்ரோமோஷன்களில் இறங்கியுள்ளார். தற்போது மாரி செவ்ராஜ் இயக்கத்தின் காரணன் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இன்று தனுஷ் தந்து குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலுக்குசென்று தரிசனம் செய்தார். இருமகன்கள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தந்தை மற்றும் தாயாருடன் சென்றார். தனுஷ் கோவிலுக்கு வந்ததால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. தணுஷின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

D40 ஜகமே தந்திரம் படம் திரைக்கு வரவுள்ளதால் படக்குழு ப்ரோமோஷன் வேலைகளை மும்முரமாக செய்துவருகிறது. நேற்று மகா சிவராத்திரியையொட்டி தனது ரசிகர்களுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.




You cannot copy content of this Website