சினிமா

சென்னை விமான நிலையத்தில் தோளில் தன் பையை தூக்கி சென்ற சூப்பர் ஸ்டார் மகன் !!

Quick Share

மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவ் தந்தை போல் எளிமையாக உள்ளார். பிரணவ் தற்போது வினித் ஸ்ரீனிவாசன் இயக்கி வரும் ஹ்ரிதயம் மலையாள படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

மோகன்லால் மகன் பிரனவ் சமீபத்தில் விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கு தன்னை பிக்கப் செய்ய வந்த கார் டிரைவருக்கு பிரனவ் உதவியுள்ளார். அதாவது தான் கொண்டு வந்த பெரிய பெட்டியை டிரைவரை தூக்க விடாமல் தானே தன் தோளில் தோளில் வைத்து எடுத்துச் சென்றார்.

பெரிய ஸ்டாரின் மகன், நடிகர் என்கிற பந்தாவே இல்லாமல் பிரனவ் பெட்டியை தூக்கிச் சென்றதை பார்த்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை மோகன்லால் மற்றும் பிரனவின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். பிரனவுக்கு பயணம் செய்வதில் தான் ஆர்வம் அதிகம், பிரனவ் எப்பொழுதுமே மிக எளிமையாக தான் இருப்பார் இது அவருடைய நெருங்கிய வட்டாரகளுக்கு தெரியுமாம். படப்பிடிப்பில் அவர் இவளவு பெரிய நடிகரின் மகன் என்ற பந்தா இல்லாமல் சாதாரணமான இருப்பது பலரை வியப்படைய செய்துள்ளது.

അപ്പു

Posted by Pranav Mohanlal Addictz on Tuesday, February 18, 2020
https://www.facebook.com/PranavMohanlaladdictz/videos/857422138034277/

விஜய் சேதுபதியிடம் தளபதி விஜய் கேட்டு வாங்கிய முத்தம்.., எனக்கு கிடையாதா ? படப்பிடிப்பி...

Quick Share

மக்கள் செல்வன் என செல்லமனாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி என்ற பெயரை கேட்டதுமே பல ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவரின் செலஃபீ படங்கள் தான் ஞாபகம் வரும். எந்த ரசிகன் வந்து செல்ஃபி கேட்டாலும் நிராகரிக்காமல் முத்தத்தோடு போஸ் கொடுப்பார்.

சமீபத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் ஆர்ட் டைரக்டர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படக்குழு கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் சேதுபதி சதீஷை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார். இதை பார்த்த தளபதி விஜய் எனக்கெல்லாம் இல்லையா..? என்று கேட்டிருக்கிறார். உங்களுக்கு இல்லாமலா என்று கூறி விஜய் சேதுபதி விஜய்யை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை யாரும் புகைப்படம் எடுக்கவில்லை.

விஜய் சேதுபதி முத்தமிட்டதை யாராவது புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டிருந்தால் ரசிகர்களும் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்கள். இந்திய அளவில் இந்த புகைப்படம் ட்ரெண்ட் ஆகியிருக்கும் என ரசிகர்கள் தெரிவித்தனர்
இந்த புகைப்படம் எப்பொழுது வெளியாகும் என்பது தான் தெரியவில்லை. விஜய் ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்வதற்கு காத்திருக்கிறார்கள். ஏற்கனவே குட்டி ஸ்டோரி பாடல் பட்டிதொட்டி முழுவது பிரபலமாகிவிட்டது. படம் ஏப்ரல் மதம் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

தல அஜித்குமார் சென்னை படப்பிடிப்பில் பைக் ஸ்டண்ட்-ல் சறுக்கி காயம் !! #GetwellsoonTHALA

Quick Share

தல அஜித் குமார் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஒரு காட்சியில் இருசக்கர வாகனத்தில் உள்ள ஸ்டண்ட் காட்சியை தானாகவே முன்வந்து செய்துள்ளார். தல அஜித் ஒட்டிய சூப்பர் பைக் சறுக்கி கீழே விழுந்து கையில் சில சிராய்ப்புகள் ஏற்பட்டு காயம் அடைந்தார். காயம் அடைந்த பிறகு சுமார் 30 நிமிடம் இடைவேளைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று படத்தின் காட்சியை முடித்துக்கொடுத்தார்.

தற்போது சென்னையில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக ஹைதராபாதில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொண்டங்கவுள்ளது. தல அஜித் குமார் காயம் ஏற்பட்ட செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர், சமூக வலைத்தளங்களில் #GetwellsoonTHALA என்ற ஹாஷ்டகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வலிமை படத்தை H. வினோத் இயக்கிவருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாயகனின் ‘ஹே ராம்’ 20-வது ஆண்டு..!! சிறந்த காட்சிகளை கொண்டாடும் ரசிகர்க...

Quick Share

இதே நாளில் பிப்.,18 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கமல்ஹாசன் மற்றும் ஷாருக் கான் நடித்த ஹேராம் திரைப்படத்தினை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

பிப்ரவரி 18-ஆம் 2000 ஆம் ஆண்டில் உலக நாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ஹேராம்’. இதில் கமல் ஹாசனுடன் ஷாருக் கான், ராணி முக்கர்ஜி, வசுந்த்ரா தாஸ், ஹேமமாலினி, அதுல் குல்கர்னி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இந்தப்படத்திற்கு இசை அமைப்பதில் சில பிரச்சனைகள் எழுந்தது பின்பு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைத்தார். படத்தின் ரிலீஸ் போது பல சர்ச்சைகளைக், தடங்கல்கள் கிளம்பின, காலப்போக்கில் இதில் உள்ள கருத்துக்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது வரவேற்கப்பட்டது. வசூலில் பெரிய அளவு இல்லாவிட்டாலும் பலருடைய பாராட்டைப்பெற்றது. தமிழ் சினிமாவிலும், சமூகத்திலும் “ஹே ராம்” இந்து – முஸ்லிம் அரசியலை பேசும் படமாகவும், காந்தியை சுட்டுக் கொன்றவரின் பின்னணியைக் சொல்லும் படம் என இந்த படத்தின் மீதான கருத்துக்கள் ஏராளம்.

தற்போது நடைமுறையில் உள்ள சமூகப் பிரச்சினைகளுடன் ஒத்துப்போகும் கமல் ரசிகர்கள் #20YearsOfHeyRam என்ற ஹாஷ்டேகினைப் பயன்படுத்தி ட்விட்டரில் படத்தின் சில காட்சிகளைப் பதிவிட்டும் கொண்டாடிவருகின்றனர்.
கமல் ஹாஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஹே ராமின் 20 ஆண்டுகள். அந்த நேரத்தில் நாங்கள் இப்படத்தை செய்ததில் மகிழ்ச்சி. படம் பேசிய அச்சங்களும் எச்சரிக்கைகளும் தற்போது நிறைவேறிக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்த சவால்களை நாட்டின் நல்லிணக்கத்திற்காக் நாம் சமாளிக்க வேண்டும். நாளை நமதே” என பதிவிட்டுள்ளார். இந்த #20YearsOfHeyRam ஹாஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

SK B’day: சிவகாத்திகேயன் பிறந்தநாளான இன்று டாக்டர் படத்தின் Firstlook வெளியானது !!

Quick Share

முதல் போஸ்டரில் ஸ்டைலாக அமர்த்தபடி கிராபிக்சில் சர்ஜிக்கல் கத்திகளுக்கு நடுவில் மாஸாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

டாக்டர் படத்தை KJR ஸ்டுடியோஸுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இந்த படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் முக்கியமான படமாக அமையும் என்று நம்பப்படுகிறது. படம் வெளியாகும் போது ரசிகர்கள் சத்தம் ஆரவாரம் ஆர்ப்பரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலமாவு கோகிலா படத்தை வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்னும் படத்தை இயக்கி வருகிறார். நேற்று சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன் முதல் போஸ்டரில் அப்டேட்-ஐ வெளியிட்டது.

டாக்டர் படம் ஆக்ஷன் கலந்த காமெடியாக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது டாக்டர் படக்குழு சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு கோவா சென்றுள்ளது. வினய் வில்லனாக நடிக்கிறார். காமெடியனாக யோகி பாபு நடிக்கிறார். டாக்டர் படம் அடுத்து சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில் அயலான் படத்தில் நடித்து வருகிறார். அயலானில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதால் அந்த படமும் பெறும் எதிர்பார்ப்பில் உள்ளது.

நாளை பிப்.,17 ரசிகர்களுக்கு தனது பிறந்தநாளில் ட்ரீட் கொடுக்கும் சிவகார்த்திகேயன் !!

Quick Share

கோலமாவு கோகிலா படத்தை வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்னும் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பர்ஈஸ்ட் லுக்கை நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்.,17 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அவரின் பிறந்தநாள் ட்ரீட் ஆக இந்த முதல் போஸ்டரை காலை 11.03 மணிக்கு வெளியிடப்படும் என சிவகார்த்திகேயன் பிரோடுக்ஷன்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ஆக்ஷன் காமெடியாக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது டாக்டர் படக்குழு சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு கோவா சென்றுள்ளது. வினய் வில்லனாக நடிக்கிறார். காமெடியனாக யோகி பாபு நடிக்கிறார்.

டாக்டர் படத்தை KJR ஸ்டுடியோஸுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இந்த படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் முக்கியமான படமாக அமையும் என்று நம்பப்படுகிறது. படம் வெளியாகும் போது ரசிகர்கள் சத்தம் பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் படம் தவிர சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில் அயலான் படத்தில் நடித்து வருகிறார். அயலானில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதால் அந்த படமும் பெறும் எதிர்பார்ப்பில் உள்ளது.

விஜயின் மாஸ்டர் படத்தில், தமிழ்ல்ல ஒரு குட்டி கதைன்னு சொல்லி ஆங்கில பாடலா !! அடடா நல்லா...

Quick Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணையும் மாஸ்டர் படத்தின் முதல் பாடல், வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சமீபத்தில் பாடல் வரிகள் முழுக்க ஆங்கிலத்தில் இருப்பதால், தமிழ் வார்த்தைகளை கவனமாக தேட வேண்டியுள்ளது. இன்று பிப்.,14 ஆம் தேதி முதல் பாடல் வெளியாகும் உங்கள் ஹெட் போனஸ் மற்றும் ஸ்பீக்கர்களை வைத்து கொண்டு ரெடியாக இருங்கள் என படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அனிருத் இசையில், விஜய் பாடியிருக்கும் இந்த ஒரு குட்டி கதை பாடலை வெளியாகி பல லட்ச பார்வையாளர்களை கவர்ந்தது. விஜய்யின் ஒரு கார்ட்டூன் பொம்மை நடனம் ஆடுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பலரை கவர்ந்துள்ளது. படத்தின் பாடல் வரிகளை அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார். படத்தின் பாடல் வரிகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் கேட்பதற்கு நன்றாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தனுஷை அடுத்து ரஜினிக்கு இந்த படத்தில் ஜோடியா ? இது எனக்கே தெரியாதே என கூறும் மஞ்சு வாரி...

Quick Share

தர்பார் படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 168 வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். சமீபத்தில் படத்தின் ஷூட்டிங்-ல் ரஜினிகாந்த் புகைப்படங்கள் வெளியாகின. சிறுத்தை சிவா படத்தை அடுத்து ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் 169 படத்தை கமல் ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிப்பதுடன் கவுரவத் தோற்றத்திலும் வருகிறாராம்.

லோகேஷ் கனகராஜ் படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஜோடியாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி வெளியாகியுள்ளது. அசுரன் படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மஞ்சு வாரியார் தற்போது அவரின் மாமனார் ரஜினியுடன் இணையவுள்ள இந்த செய்தி மஞ்சு வாரியரை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தியை பற்றி மஞ்சு வாரியரிடம் கேட்கப்பட்டது அப்போது அவர் , ரஜினிகாந்த் படத்தில் நான் நடிக்கிறேன் என்று நானும் கேள்விப்பட்டேன். ஆனால் இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இது பொய்யான தகவல். இது போன்ற செய்திகள் எப்படித் தான் இணையதளத்தில் வருகிறது என்றே தெரியவில்லை. தலைவர் 169 படத்தை எடுப்பவர்கள் நிஜமாகவே என்னை நடிக்க வைக்க நினைக்கிறார்களா என்பது எனக்கு தெரியவில்லை என கூறினார்.

வரும் ஏப்ரல் மாதம் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேலையை ரஜினிகாந்த் மேற்கொள்ளவுள்ளார் என கூறப்படும் நிலையில் அவர் லோகேஷ் படத்தில் வேறு நடிப்பாரா என்கிற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

SPICE ஜெட் விமானத்தில் 100 அரசு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் சூர்யா !!

Quick Share

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படம் உருவாகி வருகிறது இந்த படத்தின் முதல் மாறா தீம் மியூசிக் பாடல் வெளியானது. தற்போது படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் துவங்கியுள்ள நிலையில், SPICE ஜெட் விமான நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இன்று 13 ஆம் தேதி 100 அரசு பள்ளி மாணவர்களை முதல் முறையாக இலவசமாக போயிங் 737 விமானத்தில் சூர்யா அழைத்துச்செல்கிறார்.

மேலும் படத்தின் பாடலை SPICE ஜெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அஜய் சிங் வெளியிடுகிறார். விமான நிறுவனம் தொடங்குவது தொடர்பான கதை களத்தில் சூர்யா நடிப்பதால் படக்குழு அது சம்பந்தமான ப்ரொமோஷன் வேளைகளில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் விமானத்தில் சூரரைப் போற்று படத்தின் போஸ்டரை விமானத்தில் வண்ணம் பூசி விளம்பரப்படுத்துகிறார்கள்.

“புட்டபொம்மா” “புட்டபொம்மா”, அல்லு அர்ஜுனின் பொங்கல் பிளாக்பஸ்ட...

Quick Share

ஷாஹித் கபூரின் கடைசி வெளியீடான ‘கபீர் சிங்’ தெலுங்கு ஹிட் ‘அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக்காக வெற்றி பெற்ற பிறகு, பல தயாரிப்பாளர்கள் இதுபோன்ற அடுத்த ரீமேக் வாய்ப்பைத் தேடத் தொடங்கியுள்ளனர்.

அல்லி அரவிந்த், நானி நடித்த ‘ஜெர்சி’ படத்தின் உரிமையைப் பெற்றார், இப்போது இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாஹித் நடிக்கிறார்.

தற்போது, பொங்கல் ஒட்டி வெளியான அல்லு அர்ஜுன் நடித்த ‘ஆலா வைகுந்தபுரமுலூ’ படத்திற்கு பாலிவுட் பெரிய தயாரிப்பாளர்கள் அனைவருமே ரீமேக் உரிமைகளுக்காக கடும் போட்டி போட்டுகொண்டுள்ளனர். இந்த படம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஸ்கோரைப் பெற்றது.

அல்லு நடித்த படத்தின் உரிமைகளுக்காக ‘கபீர் சிங்’ தயாரிப்பாளர் அஸ்வின் வர்தே ரூ .8 கோடி வழங்கியதாக செய்தி வெளியானது. ஆனால் சமீபத்திய தகவல்படி, அவரது சலுகை நிராகரிக்கப்பட்டது!.  ‘ஆலா வைகுந்தபுர்ரமுலூ’ தயாரிப்பாளர்களுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் கூறுவது , “இந்த படத்தை அல்லு அரவிந்த் மற்றும் எஸ். ராதா கிருஷ்ணா ஆகியோர் தயாரித்துள்ளனர், தற்போது  அல்லு அரவிந்த் ஏற்கனவே இந்தி மொழியில் ‘ஜெர்சி’ ரீமேக்கை தயாரிக்கிறார், இந்நிலையில் ஜெர்ஸி ஒரிஜினல்   படம் எஸ். ராதா கிருஷ்ணா சகோதரி நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது.

எனவே இருவரும் இந்த தற்போதைய பிளாக்பஸ்டர் படத்தை வேறு யாருக்கும் விற்க வேண்டாம் என்று முடிவெடுத்து, சொந்தமாக ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் தென் தயாரிப்பாளர்கள் பாலிவுட்டில் ரீமேக்குகளை மற்றவர்களுக்கு விற்காமல் தாங்களே தயாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்காரை ஓரங்கட்டிய தளபதி விஜய்யின் “மாஸ்டர்”.., இது என்ன அரசியல் மாநாடா..?...

Quick Share

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்துவருகிறது. பொங்கல் பண்டிகை முடிந்ததிலிருந்து நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய்க்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அமைதியாக நடந்த படப்பிடிப்பு தற்போது வருமான வரித்துறையின் செய்திக்கு பிறகு பலருக்கு விஜய் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலி தான் நடக்கிறது என தெரியவந்தது. இதனால் தளபதி விஜய்யை காண பல மாவட்டங்களிலிருந்து நெய்வேலி படப்பிடிப்பு தளத்திற்கு படையெடுத்துள்ளனர். இதனால் நெய்வேலி முற்றிலும் ஸ்தம்பித்தது. அரசியல் மாநாடா ? என வியக்க வைக்கும் அளவுக்கு கூட்டம் அலைமோதியது. இதில் விஜய் ஒரு வேண் மீது ஏறி தனது போனில் செலஃபி எடுத்துக்கொண்டார். மேலும் அதை ட்விட்டரில் பதிவிட்ட சில மணி நேரத்தில் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

கூடுதல் அவகாசம் கேட்கும் நடிகர் விஜய் தரப்பு.., வருமான வரித்துறை சம்மனுக்கு விஜய் வருவா...

Quick Share

வருமான வரித்துறை சம்மனுக்கு விளக்கம் அளிக்க தனக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

நடிகர் விஜய் இன்றே ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு வருமான வரித்துறை அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது. விஜயின் சென்னை சாலிகிராமம், நீலாங்கரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது விஜய் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். பின்பு சோதனை முடிந்தபின் மீண்டும் நெய்வேலி படப்பிடிப்பிற்கு சென்றார்.

வருமான வரித்துறை சோதனையை அடுத்து விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கும், பிகில் பட தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரத்துக்கும் ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு முன்பு விஜய்க்கு 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. மூன்று நாட்களில் வருமான வரித்துறை அலுவலகத்தில் வந்து விளக்கம் கொடுக்கவேண்டும் என்று கூறியது. ஆனால் தற்போது 3 நாள் காலக்கெடு மாற்றப்பட்டு இன்றே ஆஜராகி விளக்கம் கொடுக்கவேண்டும் என வருமான வரித்துறை கூறியுள்ளது.

இதனால் விஜய் தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டுள்ளது ஆனால் இதற்கு வருமான வரித்துறை சார்பாக அளிக்கப்பட்ட பதில் குறித்த தகவல் வெளியாகவில்லை. விஜய்க்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட வாய்ப்பில்லை எனவும் கூடுதலாக நாளை வரை அவகாசம் தர மட்டுமே வாய்ப்புள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.




You cannot copy content of this Website