இங்க சங்கம் இருக்கே.., போலீஸ் எதற்கு ?? ஏ ஆர் முருகதாஸை கிழித்து தொங்கவிட்ட TR ராஜேந்தர...
தயாரிப்பு நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு விலையை ஏத்தி கொடுத்ததாலும், பொங்கல் முன்பே படத்தை வெளியிட்டதாலும் விநியோகஸ்தர்கள் பெரிய அளவில் நஷ்டப்படவிட்டதால் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் தர்பார் பட நஷ்டம் காரணமாக இயக்குனர் முருகதாஸை சந்திக்க கோரிக்கை மனு கொண்டு சென்ற விநியோகிஸ்தர்கள் போலீஸ் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். சமீபத்தில் விநியோகிஸ்தர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில், விநியோகிஸ்தர்களுக்கு ஆதரவாக பேசிய டி.ராஜேந்தர், முருகதாஸையும் தயாரிப்பு நிறுவனத்தையும் கடுமையாக சாடினார்.
தர்பார் படம் முழுவதும் அடிக்கடி ஹிந்தி மொழியில் பேசுவதும், பல ஹிந்தி நடிகர் நடித்துள்ளதால் படம் அந்த அளவில் ஓடவில்லை என பேசினார். படத்தில் மட்டும் பொதுமக்களுக்கு உதவி செய்பவர் போல படம் எடுத்துவிட்டு நிஜத்தில் இப்படி நடந்து கொள்வது தவறு” என்றும், “விநியோகிஸ்தர்கள் மீதான வழக்கு திரைத்துறைக்கு நல்லதில்லை” இறுதியாக TR பேசும் போது, “பாத்து நடந்துக்கங்க முருகதாஸ் தம்பி” என்று கடுமையாக எச்சரித்துள்ளார், இது திரைத்துறையில் பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.