பாலிவுட் சென்ற “பில்லா” இயக்குனர் விஷ்ணு வரதனுக்கு தல ரசிகர்கள் வாழ்த்து !!
தமிழில் அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களை இயக்கியவர் விஷ்ணு வரதன். இயக்குனர் விஷ்ணு வரதன் தல அஜித்தை வைத்து, ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்ல் ஸ்டைலாக காட்டின்னார். விஷ்ணு வரதனுக்கு இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது வசூல் சாதனை படைத்தது. அடுத்து ஆரம்பம் படத்தில் தல அஜித்துடன் இணைந்த விஷ்ணுவர்தன் இன்னொரு வெற்றி படத்தை கொடுத்தார். இவரது உழைப்பினை கண்ட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இவர் பாலிவுட்டில் செல்ல ரூட் போட்டு கொடுத்தார்.
தற்போது இந்தியில் தர்மா ப்ரோடுக்ஷன்ஸ் கரண் ஜோகர் தயாரிப்பில் இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ரா பற்றி “சீர்ஷாஹ்” என்னும் படத்தை இயக்கிவருகிறார். இதில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி போன்றவர்கள் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் முதல் போஸ்டர் வெளியானது வெளியான சில நிமிடங்களில் தல ரசிகர்கள் விஷ்ணு வரதனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் சிலர் தல அஜித்தை வைத்து எப்போது மீண்டும் படம் எடுப்பீர்கள் என தல ரசிகர்கள் கேட்டுள்ளனர்.