வலிமை பட ஷுட்டிங்கில் 100 அடியில் இருந்து குதித்த நடிகர் அஜித், மிரண்டுபோன இயக்குனர் மற்றும் படக்குழு.
ரசிகர்களின் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் தல அஜித்தின் “வலிமை” படத்தின் ஷுட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றது. தற்போது அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்ட படக்குழு தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த தயாராகியுள்ளது. ஹாலிவுட் லெவலில் இந்த படத்தில் பல ரிஸ்க்கான ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ஆக்ஷன் காட்சிக்காக ஹைதராபாத்தில் தல அஜித் எடுத்த ரிஸ்க்கை பற்றி படக்குழு பரபரப்பாக பேசிவருகின்றனர்.
வலிமை படத்தின் ஒரு ஆக்ஷன் காட்சியில் ஹீரோ 100 அடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும். அதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இயக்குனர் வினோத் இந்த காட்சியை டூப் வைத்து செய்துவிடலாம் என ஏற்படும் செய்துவிட்டார். ஆனால் டூப் போடுவதை அஜித் அறவே தவிர்த்து விட்டார். எந்த வித பெரிய ரிஸ்க்கான இருந்தாலும் நானே எடுக்கிறேன்.
எந்த அசம்பாவிதம் நடந்தாலும் என்னுடனே போகட்டும். அப்படி ரிஸ்க் எடுத்து நடிப்பவர்களுக்கு குடும்பம் குழந்தை இருக்கிறது என அஜித்தை இயக்குனரிடம் தைரியம் சொல்லி, அவரே அந்த 100 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார். இந்த காட்சி முடிவும் வரை படக்குழு மொத்தமும் ஷாக்கில் உறைந்துள்ளனர். ஏற்கனவே முதுகு தண்டுவடத்தில், கால்களிலும் என பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டாலும், தனது ரசிகர்களுக்காக எந்த ரிஸ்க்காக இருந்தாலும் தானே மேற்கொள்ளும் இந்த குணத்திற்காகவே பலரும் அவரின் ரசிகர்களாக உள்ளனர். இருந்தாலும் உங்களை திரையில் பார்த்தால் போதும், இதுபோன்ற பெரிய ரிஸ்கெல்லாம் எடுக்காதீர்கள் தல, என அஜித் ரசிகர்கள் அன்பான கோரிக்கைகைகளை வைத்து கொண்டு வருகிறார்கள்.