சினிமா

சூப்பர் மாடல் மீராவின் அலப்பறை அடேங்கப்பா.., தாங்கல – கதறும் நெட்டிசன்ஸ் !!

Quick Share

மீராமீதுன் 2016ம் ஆண்டு தென்னிந்தியாவில் நடைபெற்ற அழகிப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி அடைந்த மீரா அதன்பின் ,மாடலிங் துறையில் நுழைந்தார். 8 தோட்டங்கள் எனும் படத்தின் மூலம் தமிழ் திரைஉலகிலும் அறிமுகமானார். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சி “பிக்பாஸ் சீசன்-3” நிகழ்ச்சியில் நுழைந்தார். வீட்டிற்குள் இயக்குனர் சேரன் மீது தவறான குற்றசாட்டை வைத்ததால், அதிரடியாக நிழ்ச்சியில் இருந்து ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.வெளியே வந்த பின் சக போட்டியாளர்களை குறித்தும் கடுமையாக விமர்ச்சனங்களை முன் வைத்தார் . பல தமிழ் படங்களில் கமிட் ஆனா அவர் தொடர்ந்து தனது புகைப்படங்களையும் ,வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் .அதில் எப்போதும் அரைகுறை ஆடையுடன், முன்னழகியும், தொடையையும் காட்டுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் செம்மையாக கலாய்ப்பது மட்டுமல்லாமல், ஏன் இவ்வளவு கிளாமர் என திட்டி தீர்த்து வருகிறார்கள். அதனாலேயே அவர் போடும் புகைப்படங்கள் வைரலாகும். ஒருகட்டத்தில் அவரின் கிளாமரை பார்த்து ரசிகர்களே அலுத்து போய்விட்டார்கள்.

இந்நிலையில் தற்போது அட்டகாசமாக கிளாமர் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தோடு , அதற்கு கீழே” நான் ஃபேஷனை உருவாக்கவில்லை, நானே ஒரு ஃபேஷன் தான்” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது. பலர் மீம்ஸ், கமெண்ட் மூலமாக களைத்து தள்ளுகின்றனர். இவருக்கு தீவிர வெறித்தனமான ரசிகர்களும் அவருடைய பேரழகை வர்ணித்து வருகின்றனர்.

சமூகம் பெரிய பு***யோ?, விஜய் ரசிகரை விளாசிய பிக் பாஸ் காஸ்தூரி !!!

Quick Share

நீ பிக்பாஸ் போனியே என்ன கிழிச்சிட்ட என கேட்ட விஜய் ரசிகரை, வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் கஸ்தூரி, தற்போது படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இடையில் ஒரு படத்தின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைக்கு கருத்தை தெரிவித்து கொண்டே இருப்பார். சமீபத்தில் இவர் விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த அளவுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் இல்லை, அதனால் ரசிகர்களால் வெளியே அனுப்பபட்டர். இவர் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்திய பேரணியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கலந்து கொள்ளாதது ஏன் என தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த ட்விட்டிற்கு விஜய் ரசிகர் ஒருவர், நீ பிக்பாஸ் போனியே அங்க என்ன கிழிச்சிட்ட என பதில் ட்விட் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த கஸ்தூரி சமூகம் பெரிய பு***யோ ? என பதிலடி கொடுத்துள்ளார். பு****யோ? என்றவார்த்தைக்கு பல அசிங்கமாக பதில்கள் உள்ளன. ஒரு சாதாரண ரசிகர் கேள்வி கேட்டதற்க்கு பிரபல நடிகையான நீங்கள் இப்படி ஒரு மோசமான பதிலை சமூக வலைத்தளத்தில் அளிக்கலாமா என பலரும் அவரை கேள்வி எழுப்பி வருகின்றனர். இறுதியாக நீ என்ன பெரிய “புள்ளியோ” என முழு வார்த்தையை அனைவரின் வாயை அடைத்தார்.

தனது பெற்றோர் முன் தேசிய விருதுடன், பாரம்பரிய உடையில் மேடையில் ஜொலித்த கீர்த்தி சுரேஷ் !!

Quick Share

மகாநதி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை துணைக் குடியரசு தலைவர் கையால் வாங்கிய கீர்த்தி சுரேஷ், மேடையில் புடவையில் ஜொலித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர். மேலும் அவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் ஏராளமான மொழிகளில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைத்து நடித்த ரஜினிமுருகன், ரெமோ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அவர் விஜய், விகாரம் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். அவ்வளவாக கவர்ச்சி ஏதும் காட்டாமல் தனது திறமையை நிரூபிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது . சமீபத்தில் இவர், 2018 ம் ஆண்டு அமைந்த மாபெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான “மகாநதி” படத்தில் நடித்தார். தமிழில் இந்த படம் “நடிகையர் திலகம்” என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் அவரின் இயல்பான, திறமையான நடித்த நடிப்பு பலராலும் பேசப்பட்டது. இந்த படத்தில் இவர் ஒப்புதல் ஆனதும் பலர் இவரை விமர்ச்சித்தர்கள் முகபாவனையே சரியில்லாமல், சும்மா சிரித்து படத்தை ஒட்டும் இவர் எப்படி அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியும் என கேலி செய்தனர்.

மேலும் இவரின் புகைப்படத்தை வைத்து மீம் கிரியேட்டர்களும் முகபாவனையை கலாய்த்து வந்தனர். அந்தநிலையில் அவரின் மகாநதி திரைப்படம் அனைவருக்கும் பதிலடி கொடுத்தது. சாவித்ரியையே கண்முன் கொண்டுவந்த கீர்த்திசுரேஷ் அந்த படத்திற்காக சிறந்த நடிகைகான பிலிம்பேர் விருது வாங்கினார். இந்நிலையில் அவருக்கு மகாநதி படத்திற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதை பெற்றுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 66வது தேசிய விருது வழங்கும் விழாவில், பாரம்பரிய உடையான புடவையில் தலையில் மல்லிகை பூவுடன் பேரழகாய், மேடையில் சென்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் கையால் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். பின்னர் அவர் துணைக் குடியரசு தலைவரின் கால்களில் விழுந்து ஆசிபெற்றார். தற்போது இந்த வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. இதனால் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியுள்ளனர். கீர்த்தி தற்போது முதன் முதலாக “மைதான்” எனும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168 வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“காந்த கண்ணழகி பிகினியில் உல்லாசம்” கடற்கரையில் சகோதரியுடன் காஜல் அகர்வால் !!

Quick Share

தமிழ் திரையுலகில் தொடர்ந்து டாப் நடிகர்களுடன் நடித்து வரும் காஜல் கர்வால் தற்போது பல மொழி படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இவர் தெலுகு, கன்னடா, ஹிந்தி மொழி படங்களில் ரொம்ப பிஸி. தன்னுடைய பிஸியான வாழகைக்கிடையே தன் குடுபத்திற்காகவும், சந்தோஷத்திற்காகவும் நேரம் ஒதுக்குகிறார். சமீபத்தில் காஜல் அகர்வால் தனது சகோதரி நிஷா அகர்வால் உடன் உல்லாசமாக கடற்கரையில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிகினியில் அகர்வால் சகோதரிகள் ஜாலியாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகை படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பிறகு லைக்ஸ் குவிந்து வைரலாகி வருகிறது.

கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் 90 வயது மூதாட்டியாக நடிக்கிறார் என செய்திகள் கசிந்தது. இந்தியன் 2 படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது மேலும் காஜல் அகர்வால் நடித்து வெளியாகவுள்ள “பாரிஸ் பாரிஸ்” படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடியுள்ளது.

வந்துட்டாங்கய்யா !! கைகோர்க்கும் “குண்டக்க மண்டக்க” கூட்டணி, பரவும் போட்டோ:...

Quick Share

நகைச்சுவையில் கலக்கிய பழைய கூட்டணி, தற்போது சந்தித்து கொண்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான நகைசுவை கூட்டணியான வடிவேலு – பார்த்திபன் கூட்டணியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. வெற்றி கொடிக்கட்டு, காதல் கிறுக்கண் போன்ற நகைச்சுவை படங்கள் மூலம் காமெடியில் கலக்கியவர்கள் இவர்கள். கடைசியாக குண்டக்க மண்டக்க எனும் படத்திற்கு பிறகு ஒன்றாக சேரவே இல்லை. எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் வடிவேலு மாதிரி வராது, என சொல்லும் அளவிற்க்கு வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி தற்போது வரை பேசப்படுகிறது. தற்போது மீம் கிரியேட்டர்களின் தெய்வமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் வைகைப்புயல். அவரின் ரியாக்ஷனை வைத்து என்ன மீம் போட்டாலும் அப்படியே செட் ஆகிவிடும். 2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக விஜயகாந்தை விமர்சித்த விவகாரத்தில், அப்போது சினிமாவை விட்டு போனவர் அதன் பின்னர் வரவே இல்லை. இருந்தாலும் மீம்களின் மூலம் வலைத்தளங்களில் தினமும் வலம் வருகிறார். சமீபத்தில் கமல் 60விழாவில் கலந்துகொண்டு தரிசனம்தந்த அவர் “தலைவன் இருக்கிறான் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வருவதை உறுதி செய்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, நடிகர் வடிவேலுவும், நடிகரும், இயக்குனருமான பார்த்திபனும் நேரில் சந்தித்த ஒரு போட்டோவை போட்டு” இன்றைய சந்திப்பு, நாளைய செய்தியாகலாம் ” என பதிவிட்டுள்ளார் பார்த்திபன். இந்த போட்டவை பார்த்த நெட்டிசன்கள், செய்தியெல்லாம் வேண்டாம் நல்ல காமெடியை பார்த்து ரொம்ப நாளாச்சு சீக்கிரம் உங்க கூட்டணியில் படம் பண்ணுங்க, படத்திற்காக காத்திருக்கிறோம் என கெஞ்சாத குறையாக கோரிக்கையை வைத்துள்ளனர்.

ரஜினி, அஜித், விஜய் Forbes பட்டியலில் 2019ம் ஆண்டின் இந்தியாவின் அதிக வருமானம் வாங்கும...

Quick Share

இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்கள் பட்டியல் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்பட நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பலர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸ் வெளியிடுவது வழக்கம் அதேபோல 2019-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்கள் பட்டியலை அவர்களின் புகழ், ஆண்டு வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இந்திய கிரிகெட் வீரர் விராட் கோலி உள்ளார். அவரது 2019ம் ஆணடு வருமானம் ரூ.252 கோடி ஆகும். இரண்டாவது இடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும், மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் உள்ளனர். ஓய்வு பெற்ற பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி ரூ.135.93 கோடி வருமானத்துடன் 5வது இடத்தை பிடித்துள்ளார். பெரும்பாலும் பாலிவுட் நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் இடம் பிடித்த இந்த பட்டியலில் தமிழ் திரையுலகினரும் இடம் பிடித்துள்ளார்.

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (ரூ.100கோடி வருமானம்) 13வது இடத்தையும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (ரூ.94.8 கோடி வருமானம்) 16வது இடத்தையும், தளபதி விஜய் (ரூ.30 கோடி வருமானம்) 47வது இடத்தையும், தல அஜித் (ரூ.40.05 கோடி வருமானம்) 52வது இடத்தையும், இயக்குனர் ஷங்கர் (ரூ.31 கோடி வருமானம்) 55வது இடத்தையும், உலக நாயகன் கமலஹாசன் (ரூ.34 கோடி வருமானம்) 56 வது இடத்தையும், நடிகர் தனுஷ் (ரூ.31.75 கோடி வருமானம்) 64 வது இடத்தையும், இயக்குனர் சிறுத்தை சிவா (ரூ 2.17 கோடி வருமானம் ) 80 வது இடத்தையும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் (ரூ.13.5 கோடி வருமானம் ) 84 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நம்ம லெஜெண்ட் ஹீரோ அண்ணாச்சி !! பாலிவுட் ஜோதா அக்பர் படத்தை மிஞ்சும் அளவுக்கு செய்யும் ...

Quick Share

லெஜெண்ட் சரவணா “ப்ரொடக்சன் நோ 1” படத்தில் பாடலின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சரவணா ஸ்டோர்ஸ் புகழ் லெஜெண்ட் சரவணன், தற்போது கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அவர் தயாரித்து நடிக்கும் படத்தின் பெயர் “ப்ரொடக்சன் நோ 1” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அறிமுக கதாநாயகி கீத்திகா திவாரி நடிக்க உள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தி பிரபு, விவேக், மயில்சாமி, தம்பி ராமையா போன்றவர்கள் நடித்துவருகிறார்கள்.

Legend saravanan
Legend saravanan

இந்த படத்தில் இருக்கும் அணைத்து தொழிற்நுட்ப கலைஞரும் பெரியலளவில் பெயர் உள்ளவர்கள், இவர்களுடன் இணைந்துள்ள லெஜெண்ட் சரவணன் இந்த படத்தின் மூலம் சகாப்தம் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர், இயக்குனர், காமெடி நடிகர்கள் ஹீரோவாக வளம் வரும் ட்ரெண்டில் நம்ம தொழிலதிபர் லெஜெண்ட் அண்ணாச்சி வருகைதந்துள்ளார். இவருடைய படத்தில் பாடல் கட்சிகளின் புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

விஸ்வரூபம் நடிகை பூஜா குமார் ஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள் உ...

Quick Share

காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர்.

அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். அமெரிக்க சென்று காணாமல் போன இந்த பொக்கிஷத்தை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த கமல்ஹாசன் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார்.

அமீர்கான் மகள் ஐரா கான் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..!

Quick Share

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானின் மகள் ஐரா அமெரிக்காவில் உள்ளார். அவர் கேமராவுக்கு பின்னால் இருக்க ஆசைப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் ஐரா தொடர்ந்து போட்டோஷூட்டுகளில் கலந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவருக்கு நடிகையாகும் ஆசை வந்துவிட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐரா ஒரு போட்டோஷூட்டில் கலந்து கொண்டார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “என்ன ஒரு வியூ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அமிதாப் கூறிய 3 அறிவுரை: ஒன்றிற்கு” நோ” சொன்ன ரஜினி !! “எனது ஆசை வேறு...

Quick Share

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் எனக்கு 3 அறிவுரை வழங்கினார் ஆனால் ஒன்றை மட்டும் என்னால் கடைபிடிக்க முடியவில்லை, தர்பார் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் மனம் திறந்த ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கியுள்ள திரைப்படம் “தர்பார் ” இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா மும்பையின் நேற்று பிரமாண்டமாக நடந்தது. மும்பையில் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்தி திரையுலகில் அமிதாப்பச்சன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் அவர் என்னிடம் 60 வயதில் முக்கியமான 3 விஷயங்களை கடைபிடிக்கச்சொன்னார். உடற்பயிற்சியை தினமும் தவறாமல் செய்யவேண்டும். எப்போதும் நம்மை பிஸியாக வைத்துக்கொள்ள வேண்டும், அரசியலில் நுழைய கூடாது இந்த மூன்றும் அவர் எனக்கு கூறிய அறிவுரைகள்.

ஆனால் அதில் என்னால் முதல் இரண்டை மட்டும் தான் கடைபிடிக்க முடிந்தது என கூறினார். இதன் மூலம் தான் அரசியலுக்கு வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பேசிய அவர் தர்பார் படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது சற்று மாறுபடும். திருநங்கை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என பேசினார்.

அந்த மாதிரி படம் பார்த்தால் அரஸ்ட்..! ப்ளீஸ்.. இப்படியெல்லாம் போடாதீங்க..! ராய் லக்ஷ்மி...

Quick Share

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள்.

அவர்களில், முக்கியமானவர் நடிகை ராய் லட்சுமி. படங்களில் இவரை பார்கிறோமோ இல்லையோ.. சமூக வலைதளங்களில் நிச்சயம் பார்க்கலாம். செம்ம ஆக்டிவாக இருப்பார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் விதவிதமான கோணங்களில் எடுக்கப்பட்டதாக இருக்கும். அவற்றை பலரும் ரசித்து லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளித்தெளிப்பார்கள்.

இன்று ராய் லட்சுமி வெளியிட்டுள்ள படம் கிளாமரின் உச்சமாக இருந்தாலும், அதில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைதான் ஹைலைட். ‘கண்கள் எப்போதும் பொய் சொல்லாது’ என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த மாதிரி படம் பார்த்தாலே போலீஸ் அரஸ்ட் பண்ணிடும்ன்னு சொல்றாங்க.. நீங்க இப்படியெல்லாம் போஸ்ட் பண்ணாதிங்க எங்களை அரஸ்ட் பண்ணிட போறாங்க என்று திகில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

நெகிழ்சி ! ‘கர்பிணி பெண்ணின்’ ஆசையை நிறைவேற்றிய ‘ரஜினி’..

Quick Share

சென்னை : சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்த ராகவா விக்னேஷ் மற்றும் அவர் மனைவி ஜெகதீஸ்வரி, இவர்கள் இருவருமே ரஜினியின் தீவீர ரசிகர்கள் ஆவர். இவர்கள் புதியதாக திருமணம் செய்தவர்கள். பல ஆசைகள் ஜெகதீஸ்வரிக்கு இருந்தாலும் சூப்பர் ஸ்டார் பார்ப்பதே இவரின் கனவு ஆசையாக இருந்தது.இந்நிலையில் கணவரான ராகவ் விக்னேஷ் தன் மனைவியிடம் நான்கு மாதமாக கருவுற்ற இருந்தபோது மனைவியின் ஆசையை கேட்டுள்ளார். அதற்கு அவரின் மனைவி தனக்கு பிடித்த ஹீரோவாக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை காணவேண்டும் என்பதையும் அவரிடம் எப்படியாவது ஓர் உரையாடலை வைத்துகொள்ளவேண்டும் என்ற ஆசையையும் தெரிவித்தார்.

இதனால் அவரை காண நான்கு மாதங்களாக முயற்சித்துவந்தார்.இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் தான் திரைபடப்பிடிப்பு எடுக்கும் இடத்திற்கு இருவரையும் அழைத்து அவர்களிடம் ஒருசில மணிநேரம் செலவழித்தார். பிறகு ஜெகதீஷ்வரிக்கு வளையல் வாங்கி போட்டுவிட்டார். எனவே இங்கு ஜெகதீஸ்வரியின் கனவு நினைவானது ஆகையால் அக்குடும்பம் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.




You cannot copy content of this Website