அனல் பறக்கும் தர்பார் ட்ரைலெர் வெளியானது !! மிரட்டும் ஆதித்யா அருணாசலம் !!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தர்பார் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது.
ரஜினியின் “தர்பார்” லைக்கா தயாரிப்பில் எ.ஆர் முருகதாஸ் இயக்க பெரும் பொருள்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆதித்ய அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் கமிஸ்ஸின்ர் ஆக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கிறார் என லைக்கா நிறுவனம் தெரிவித்தது. படத்தை பொங்கலுக்கு வெளியிட பட குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார். இன்று டிசம்பர் 16 மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் எ.ஆர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், காமெடி நடிகர் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் தர்பார், பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக அரங்கேறியது, அனிருத் இசையில் அணைத்து பாடல்களும் பட்டி தொட்டி முழுவதும் பட்டையை கிளப்புகின்றது. இந்நிலையில் தர்பார், ட்ரைலர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.