800-கோடியில் “பொன்னியின் செல்வன்” தாய்லாந்தில் படப்பிடிப்பு துவக்கம் !!!
இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் படமான பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட படப்பிடிப்பு ஆரம்பமானது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கி எழுதிய நாவலான “பொன்னியின் செல்வன்” தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்கப்படவுள்ளது. இந்தப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடிகர் விக்ரமும், வந்திய தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழி வர்மனாக நடிகர் ஜெயம் ரவியும் மற்றும் நந்தினி, மந்தாகினி என்ற இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் போன்று மேலும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்காக 14 முன்னணி நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த படம் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக படமாக்கப்பட உள்ளது. இந்த படத்திற்காக அனைத்து இடங்களையும் மணிரத்னம் ஏற்கனவே பார்த்து முடிவு செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தாய்லாந்து காடுகளில் தொடங்கியுள்ளது. தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. தற்போது கார்த்தி , ஜெயம் ரவி சம்மந்த பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நடிகர் விக்ரமும் சேர்ந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பை முடித்தால் தான் சென்னை திரும்புவார்கள்” பொன்னியின் செல்வன்” படக்குழு.