”ரெண்டு பேரும் ஒரே வேவ் லென்த்ல ” மனம்திறந்த கெளதம் மேனன். அப்போது, எனக்குள...
அதிக ஆங்கில வசனங்கள், சுத்தத் தமிழ் பாடல்கள்… இதுதான் கௌதம் ஸ்டைலா? லெட் மீ ஸ்டார்ட் லைக் திஸ் .. தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு ”யுனிக்” ஆன ஸ்டைல் கொண்டுள்ளவர் தான் நம் இயக்குனர் கெளதம் மேனன், அவர்களுடன் ஒரு குட்டி கன்வெர்சேஷன்
இளையராஜா இன்சிபிரேஷன் எப்படி .?
ஸ்கூல், காலேஜ் படிச்ச காலத்துல அவருடைய மியூசிக்கைக் கேட்டு வளர்ந்தவன். வாழ்க்கையில அவர் இசையால் நிறைய சுவாரஸ்யங்கள் நடந்திருக்கு. இந்தப் படத்துல வொர்க் பண்ண முடியுமா’னு ராஜா சார்கிட்ட கேட்டதுக்கு, ஏன் இப்படிக் கேட்குறீங்க… வாங்க பண்ணுவோம்’னு சொன்னார். நோ சொல்லிடுவாரோங்கிற தயக்கம் எனக்குள்ள ஓடிகிட்டே இருந்தது. உங்க படங்கள்லாம் தெரியும்’னு ராஜா சார் சொன்னதும் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. இந்தப் படத்துல ஒவ்வொரு பாட்டுக்கும் மூணு ட்யூன் கொடுத்தார். மொத்த கம்போஸிங்கும் அரை மணி நேரத்துல முடிஞ்சிருக்கவேண்டியது. ஏன்னா, ஒவ்வொரு செகண்டும் எனக்காக வேலைபார்த்தார். பாட்டோட வேலைகளுக்காக லண்டன் வந்தார். முதல்ல நோட்ஸ் எழுதுவார், அப்புறம் ஒரே டேக்ல பாட வெச்சு, மொத்த ரெக்கார்டிங்கையும் முடிச்சிடுவார். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். இசை வெளியீட்டு விழாவுக்கு அவரோட வேலை பார்த்த எல்லோரும் வந்திருந்தாங்க. என்னுடைய வாழ்க்கையில மறக்க முடியாத தருணம் அது. இதுக்கப்புறம் என்னுடைய படங்கள் எதுக்கும் அவ்வளவு பெரிய விழா நடத்தலை. “
சப்போர்டிங் ரோல் எப்படி ச்சூஸ் பண்றீங்க .?
ஒரு படத்துக்கு துணை கதாபாத்திரம் ரொம்பவே முக்கியம். துணை கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க எனக்கு ஒரு தனி டீமே இருந்தாங்க. நானும் நிறைய டைம் எடுத்துப் பார்ப்பேன்.
விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துல சிம்புவோட ஃப்ரெண்டா கணேஷை நடிக்க வெச்சது யாருக்கும் பிடிக்கலை. இந்த கேரக்டர் வொர்க்அவுட் ஆகும்னு நானும் சிம்புவும்தான் நம்பினோம்.வேட்டையாடு விளையாடு’ படத்துல இருந்தே நானும் கணேஷும் சேர்ந்து வொர்க் பண்றோம். என்னுடைய பல படங்கள் உருவானதுக்கு அவரும் முக்கியக் காரணம். பாடி லாங்குவேஜ், வாய்ஸ்னு அவருடைய ஸ்பெஷல் யார் கண்ணுக்கும் தெரியலை. ஆனா, அவருடைய கேரக்டர் செம ஹிட்டாச்சு. ஸோ, கண்டிப்பா படத்துக்காக செலெக்ட் பண்ற ஆர்ட்டிஸ்ட் ரொம்பவே முக்கியம்.
வெற்றியில் சரிபாதி என் மனைவி : ”ஷி பிலேஸ் எ மேஜர் ரோல்”
டெக்னிக்கல் டீம் .? அது முழுக்கவே என்னுடைய மனைவிதான் செலெக்ட் பண்ணுவாங்க. பொதுவா ஒரு படத்துக்கு ஒளிப்பதிவாளர் ரொம்ப முக்கியம். நாம நினைக்கிறதை அவர்தான் திரையில காட்டப்போறார். ஸோ, ரெண்டு பேரும் ஒரே வேவ் லென்த்ல இருக்கணும். அதேசமயம், சொல்ல வர்றதை அதிக செலவு இல்லாமலும் செய்யணும்னு நினைப்பேன். இந்தச் சின்ன வைப்ரேஷன், ரெண்டு பேருக்கும் இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்.
இது போன்று இன்னும் பல சந்தோஷமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் நம் (ஜி.வி.எம் ).