சூர்யாவா.?? சூரியா.?? குழப்பத்தில் வெற்றிமாறன் .
அடுத்த படத்திற்க்கு ஆல்ரெடி புக் ஆன நம்ம பரோட்டா சூரிக்கு வந்த ஏமாற்றம்.
”வெற்றிமாறன் ” இயக்கிய அசுரன் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கி செதுக்கி ரசனையோடு மிகவும் தத்ரூபமாக இயக்கினார் வெற்றிமாறன். கண்களை உறையவைக்கும் காட்சிகள் சோகத்தை சொல்லும் இசை, ஆகமொத்தம் அனைத்திலும் சிறந்த படமாக இருந்தது. இந்நிலையில் , அப்படத்திற்கு பின் நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கவிருந்தார். இயக்குனர் வெற்றிமாறன் என்பதால் இப்படத்தில் நடிக்க சூரியும் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

இதற்கிடையில், அசுரன் போன்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்துவிட்டு ஏன் சூரியை வைத்து படம் இயக்குகிறீர்கள் என தமிழ் சினிமா உலகினர் வெற்றிமாறனை மூளைச்சலவு செய்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் மாறிய வெற்றிமாறன் சூரி படத்தை தள்ளி வைத்துவிட்டு அடுத்து சூர்யாவை வைத்து படம் எடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ”நா சும்மாதானே இருந்தேன் ஏன் இப்டி பண்ணீங்க” … புலம்பும் சூரி .