சினிமா

கண்ணீர் விட்டு அழுதார் !! மரணப்படுக்கையில் தனது ரசிகரை சந்தித்த நடிகர் கார்த்தி !!

Quick Share

தனது ரசிகரின் மரணத்தில், கார்த்தி கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

மக்கள் மட்டும் ரசிகர்களின் நன்மதிப்பை எப்போதும் தன்வசம் வைத்துக்கொள்வதில் சிவகுமாரின் இளையமகன் கார்த்தி ரொம்ப இளகிய மனம் உள்ளவர். எந்த வித ஆர்பரிப்பும் இல்லாமல் சர்வ சாதாரணமாக இருக்கும் நட்சத்திர நடிகர் கார்த்தி. மக்கள் நல பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.

கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா, நேற்று இரவு உளுந்தூர்பேட்டை சாலை விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். வியாசை நித்தியாவின் மரண செய்தியை கேட்டவுடன் இன்று அதிகாலை அவரது உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார். பிரிவால் வாடும் வியாசை நித்தியாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். கார்த்தி கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

2020-ல கண்டிப்பா இந்த நடிகை வேற லெவெல்க்கு போகப்போறாங்க !

Quick Share

எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நந்திதா சுவேதா. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பிங்க் புடவையோடு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகின்றன. இதனால் நந்திதா சுவேதாவின் பேன் பலோவ்ர்ஸ் அதிகமாகியுள்ளது.

இவர் இப்போது சிபிராஜ் உடன் “கபடதாரி” என்னும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். பூஜா குமார், நாசர், ஜெயப்ரகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் திரைகதை மற்றும் வசனத்தை ஜான் மஹேந்திரன், ஜி. தனஞ்சயன் ஆகிய இருவரும் எழுதியிருக்கிறார்கள். படத்தை லலிதா தனஞ்சயன் தயாரிகிறார். கடந்த 1-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை படப்பிடிப்பு நடைபெறும்.

இந்த படத்தின் மூலம் நந்திதா 2020-இல் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

நாற்காலியை தூக்கி எறிந்த ரஜினி! அவர் கிட்ட அதைமட்டும் சொல்லிடாதிங்க! – முருகதாஸ் ...

Quick Share

தர்பார் படத்தில் போலீசாக நடிக்கும் ரஜினிகாந்த் ஆக்க்ஷன் காட்சிகளில் எப்படி சிறப்பாக நடித்து இருக்கமுடியும் என சோசியல் மீடியாவில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக படத்தின் இயக்குனரான ஏ.ஆர் .முருகதாஸ், “ரஜினியை அவர் வயதைவைத்து எடைபோடாதீர்கள்”, தர்பார் படத்தின் ஆக்க்ஷன் காட்சியின் போது, நாற்காலியை தூக்கி கேமராவை நோக்கி எரிய வேண்டும், நாற்காலி கனமாக உள்ளதால் இரண்டு ஷாட்டாக பிரித்து எடுக்க திட்டமிட்டோம். ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத ரஜினி ஒரே ஷாட்டில் அந்த நாற்காலியை தூக்கி எறிந்தார். அவரது அந்த எனர்ஜி எங்களை ஆச்சரியத்தில் தள்ளியது என கூறினார். இதை கேட்கும் போது ” வயசானாலும் உங்க ஸ்டைலும் ,அழகும் இன்னும் உங்களைவிட்டு போகல “என்ற படையப்பா பட சினிமா வசனம் ரஜினிக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இதனையடுத்து இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பணிகள் தீவிரமடைந்துள்ளன. சமீபத்தில் படத்தின் முதல் சிங்கள் டிராக் “சும்மா கிழி” பாடல் வெளியாகி 24 மணிநேரத்திற்குள் 8 மில்லியன் பேர் பார்த்து புதிய சாதனை படைத்துள்ளது. இருந்தாலும் இந்த பாடலின் மெட்டுகள் காப்பியடிக்க பட்டதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலா? நடிகை ராஷி கண்ணா சொன்ன ரகசியம்!!

Quick Share

தமிழ் திரையுலகில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பெற்றவர் நடிகை ராஷி கண்ணா. அந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்கியா மற்றும் சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் ஆகிய படங்களை தொடர்ந்து ரசிகளுக்கு தந்த வண்ணம் உள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் விஜய தேவரகொண்டா, நாகசைதன்யா போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் தனியார் சேனல் ஒன்றிற்கு பெட்டியளித்துள்ளார். அப்பெட்டியில் அவரின் சிறுவயது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், 16 வயதிலேயே எனது வயது பையனுடன் டேட்டிங் சென்றுள்ளதாகவும் பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் பிரபல கிரிக்கெட் வீரரான பும்புராவுடன் காதல் ஏற்பட்டது என்ற தகவல் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, பும்புரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டும் தான் எனக்கு தெரியும். வேறு எதுவும் எனக்கு தெரியாது. நான் அவரை சந்தித்தது கூட கிடையாது. இப்படி இருக்க காதல் எப்படி ? அதெல்லாம் வெறும் வதந்தி, உண்மையில்லை, என்று பதில் கூறினார்.

இது அதுல ??? எங்கே சுட்டீங்க டியூனை ? தர்பார் பட “சும்மா கிழி” பாடலை கிழித்...

Quick Share

அனிருத் இசையில் நேற்று வெளியாகிய தர்பார் படத்தின் “சும்மாகிழி ” பாடலின் சிங்கள் டிராக் ,ஐயப்ப சாமி பாடலில் இருந்து சுடப்பட்டதா என சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்கள் விமர்சனம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் சிங்கள் டிராக் நேற்று வெளியாது. வெளியான சிலமணி நேரத்திலே லட்சக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டு ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது. இந்தநிலையில் ரசிகர்கள் இந்தப்படத்தின் “சும்மா கிழி “பாடலின் மெட்டு பல வருடங்களுக்கு முன்பு வெளியான ஐயப்ப சுவாமி ஆல்ப பாடலை போல உள்ளது என சர்சை கிளம்பியுள்ளனர். இப்பாடலில் வரும் முதல் இசை அண்ணாமலை படத்தில் வரும் “வந்தேன்டா பால்காரன்” என்ற பாடலினிசையை போன்று உள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது, அனிருத்துக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது

மற்றொரு தரப்பு இந்த பாடல் தேவா இசையில் உருவான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் உள்ள தண்ணி குடம் எடுத்து என்ற பாடலை போல உள்ளது எனவும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அனிருத்தின் மீது அவர் பழைய பாடல்களை காப்பி அடிக்கிறார் என்ற புகார்கள் எழுவது புதிதல்ல. எல்லாவற்றிக்கும் மேலாக அனிருத் இசையில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் பாடல் ஒன்று ஆங்கில பாடல் போல உள்ளது என்று எழுந்த புகாரால் அந்த பாடல் யூடியூப்பில் இருந்தே நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“காதலால் இணையும் தளபதி விஜய் – அதர்வா குடும்பங்கள் ” விரைவில் டும் டு...

Quick Share

மறைந்த நடிகர் முரளி குடும்பமும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் குடும்பமும் திருமண உறவின் மூலம் இணைகிறது. டிசம்பர் 6ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்ய முடிவு.

மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் என்பவரும், எஸ்.ஏ சந்திரசேகரின் கூட பிறந்த தங்கை விமலாவின் மகளுமான சினேகா பிரிட்டோ கல்லூரி காலத்திலிருந்தே ஆகாஷை காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்தது. இரு குடும்பத்தினரும் வெவ்வேறு மதத்தினர் என்பதால் இவர்களின் காதலில் மதம் தடையாக இருந்தது ஆனால் ஆகாஷும் – சினேகா பிரிட்டோ-வும் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததால் இவர்கள் காதலுக்கு இருகுடும்பமும் காதலுக்கு மரியாதை செய்துள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பின்னரே இவர்கள் காதல் கைகூடியுள்ளது.

எஸ்.ஏ சந்திரசேகர்க்கு மிகவும் பிடித்தமான பேத்தியாக சினேகா இருந்துள்ளார். எனவேதான் சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தில் சினேகாவை இயக்குனராக அறிமுகம் செய்யவுள்ளார். ஆகாஷ் – சினேகா பிரிட்டோ-வின் நிச்சயதார்த்தம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது . சினேகாவின் தந்தை பிரிட்டோ தான் “தளபதி 64”-இன் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிக்கொண்டாரா சின்மயி .? நீங்க நித்தியானந்தாவுக்கும் ரசிகையா..? சமூக வலைதளத்தில் வ...

Quick Share

பயங்கரமான ”பெண்ணியவாதி சின்மயி” இதற்க்கு மட்டும் ஏன் குரலெழுப்பவில்லை ..? ஸ்வாமி நித்தியானந்தா பற்றி எந்த ஒரு விஷியத்திற்கும் குரலெழுப்பவில்லை , ட்விட்டர் அக்கவுண்ட்ல் சீறிப்பாய்ந்த சின்மயி எதிர்ப்பாளர் .

வைரமுத்து மீது ”மீடு” புகார் அளித்ததில் இருந்து பல்வேறு விஷயங்களுக்கும் பொங்கி எழும் பாடகி சின்மயி நித்தியானந்தா விஷயத்தில், ஒரு ட்விட் கூட போடாததற்கு எதிராக நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர். பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தாவைப்போய் சந்திப்பதா என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாடகி சின்மயி நித்யானந்தாவை சந்தித்ததாக சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அதற்கான விளக்கத்தை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.

”மீடு” விவகாரத்தில் பல பிரபலங்கள் தங்களை பற்றி விமர்சித்து கொண்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீர் என்று வைரமுத்து மேல் ஒரு குண்டு தூக்கிப்போட்டு ஓவர் நைட்டில் பேமஸ் ஆனார் சின்மயி , சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் இவர் ஸ்வாமி விஷியத்தில் மட்டும் மௌனம் காப்பது ஏன் .? பற்றி இன்னும் விளக்கம் தெரிவிக்கவில்லை .

அதிர்ச்சியில் திரையுலகினர் ! புதுப்பேட்டை படத்தில் நடித்த பாலாசிங் திடீர் மரணம்

Quick Share

தமிழ் சினிமாவில் நாசர் இயக்கிய அவதாரம் படத்தில் அறிமுகமானவர் பாலாசிங், புதுப்பேட்டை, NGK போன்ற படங்களில் தன் நடிப்பின் மூலம் பிரபலமானார்.

நேற்று மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள விஜயா மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். நள்ளிரவு 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். பாலா சிங்க் காலமானது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனெக்கென உள்ள வில்லத்தன பணியில் நடிப்பதில் புகழ் பெற்றவர் பாலாசிங். மீம்ஸ் க்கிஏடர்ஸ் போன்றவர்களுக்கிடையே மிகவும் பிரபலமானவர்.

முதல் முறையாக இவர்களை பற்றி பேசிய விஜய் சேதுபதி!

Quick Share

சினிமாவில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தையும் ஈஸியாக நடிக்கும் வல்லமை பெற்றவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் தெலுங்கு சினிமாவில் சயிரா நரசிம்ம ரெட்டி என்னும் படத்தில் சிரஞ்ஜீவியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அண்மையில் அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி முதல் முறையாக தனக்கு பிடித்த நடிகர்கள் பெயர்களை பட்டியலிட்டு மேலும் அவர்களுடன் உரையாட விரும்புவதாக தெரிவித்தார். முதலில் அவர் சிவாஜிகணேசன் பெயரை கூறி அவர் எல்லா கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் வகையில் தத்ரூபமாக நடிப்பார், இரண்டாவதாக கமல் ஹாசனின் நேர்த்தியான நடிப்பு பிடிக்கும், மூன்றாவதாக மோகன்லால் எந்த கதாபாத்திரத்தையும் ஈஸியாக நடிப்பார் என கூறினார்.

விஜய் சேதுபதி தனக்கு எம்ஜிஆர் ரொம்ப பிடிக்கும் என கூறினார். அவர் கதை தேர்தெடுக்கும் விதம் மக்கள் ரசனைக்கேற்ப இருக்கும் என கூறினார். தெலுங்கில் விஜய்சேதுபதி கால்பதித்த பிறகு ஹிந்தியில் தற்போது அமீர் கான் உடன் லால் சிங் சதார் படத்தில் நடிக்கவுள்ளார். லால் சிங் சதார் அடுத்த வருடம் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

சங்கடத்தில் வலிமை பட இயக்குனர்… அப்படி என்ன செய்தார் அஜித்…!!?

Quick Share

தல அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் தலயின் 60வது படம் ” வலிமை”. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். அண்மையில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தல அஜித்தின் புதிய கெட்டப்பில், தாடி முழுவதும் எடுத்துவிட்டு மீசையை இறக்கி விட்டு கொஞ்சம் நடுத்தரமான வயது தோற்றத்திலும் …கட்டான தோற்றத்தில் கருப்பு நிற முடியுடனும் போலிஸ் கெட்டப்பில் உள்ள புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. வெவ்வேறு தோற்றத்தில் ட்ரெண்டான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வலிமை படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக எண்ணி சந்தோஷத்தில் இருந்தனர்.

ஆனால், தற்போது அதுபற்றி உண்மை வெளிவந்துள்ளது. அதாவது அஜித் வலிமை பட கெட்டப்பில் ஏர்போர்ட்கலீல் போகும் போது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொள்வதால் கெட்டப் ரகசியம் கசிந்து விடுகிறதாம். இதுவரை 3 கெட்டப்களை மாற்றியும் அத்தனையும் லீக் ஆகிவிட்டது. எனவே வளர்ந்து வரும் இயக்குனரான வலிமை பட இயக்குனர் வினோத் இதனை எப்படி அஜித்திடம் சொல்வது என தெரியாமல் பெரும் சங்கடத்தில் உள்ளாராம்.

சிரஞ்சீவி வீட்டில் கூடிய 80’ஸ் கிட்ஸின் ரீயூனியன்!! வைரலாகும் நடிகர் ,நடிகைகளில் ...

Quick Share

ஹைராபாத்: 80’ஸ் நடிகர், நடிகைகளில் ரீயூனியன் நிழச்சி ஹைதராபாதில் இன்று நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் கோலாகலமாக நடைபெற்றது.இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

1980களில் தென்னிந்திய திரைத்துறையில் கொடிகட்டி பறந்த நடிகர் நடிகைகளின் ரீயூனியன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள மெகா ஸ்டார் சீரஞ்சீவி வீட்டில் கோலாகலமாக தொடங்கி நிறைவுபெற்றது.இந்த பிரமாண்டமான நிகழ்வில் தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழியை சேர்ந்த 80’ஸ் ஹீரோ ஹீரோயின்கள் பங்கேற்றனர்.

இதில் சிரஞ்சீவி, மோஹன்லால், நாகர்ஜுனா, பாக்யராஜ், வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், ரமேஷ் அரவிந்த், ரகுமான்,குஷ்பூ, சுஹாசினி, ஜெயராம், ராதா, ராதிகா, பூர்ணிமா, அமலா, சரிதா, சரத்குமார், ஷோபனா, நதியா உள்ளிட்டோர் கருப்பு மற்றும் தங்க நிற உடையில் பங்கேற்றனர். எவர்க்ரீன் நாயகன், நாயகிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் எடுக்க பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தர்பார் படத்தின் “சும்மா கிழி” முதல் பாடல் NOV 27 தேதி வெளியாகிறது!

Quick Share

எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் டப்பிங் சமீபத்தில் முடிந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் இன்று படத்தின் முதல் பாடலை NOV 27 வெளியிடுவதாக அறிவித்தது. இந்த பாடல் வெளியிடும் அறிவிப்பை லைகா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் வீடியோ பதிவில் கூறினார். பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியுள்ளார். SPB இந்த பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடல் அப்டேட் ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் சமூகவலைத்தளங்களில் “சும்மா கிழி” என்னும் ஹாஷ் டேக் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்குகிறது.




You cannot copy content of this Website