A L விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் பேரழகி கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். எம் .ஜி, ஆர் -ஆக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சு அசலாக ஜெயலலிதாவை போல் இருக்கும் பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் .
இவர் திரையுலகில் தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கியவர். தனது நடிப்பு திறனாலும், நடனம் ஆடும் திறனாலும் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தன்னை ஹீரோ ஒருத்தர் படுக்கைக்கு அழைத்ததாக குற்றம் எழுப்பி உள்ளார் .
“மீடூ ” விவகாரம் சமிபத்தில் பல்வேறுகாரத்தினால் மக்களிடையே பரபரப்பில் இருந்தது. அதில் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளை பெண்கள் பதிவிட்டு வருகிறார்கள். இதில் தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி அடிக்கடி வந்து பரபரப்பை ஏற்படுத்துவார் .
இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக அவர் தெரிவித்தார். அவர் ஹீரோ என தகவல் வெளியானது. ஆனால் அந்த ஹீரோ யார் என்று அவர் தெரிவிக்கவில்லை .அவர் டீசென்டாக தன்னை அழைத்ததாகவும் பிறகு மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நடிகரும், பாடகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி, தமிழின் மீது ஆர்வம் கொண்டதால் “தமிழி” என்ற எபிசோடை வெளியிட்டு வருகிறார். சென்னை லயோலா கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆதி தாம் எபிசோடின் இசைவெளியீட்டு நிகழ்வை அக்கல்லூரியில் வைத்து தொடங்கினார்.
இந்நிலையில் “தமிழி”-யின் 8 எபிசோட்டை யுடியூபில் வெளியிட்டுள்ளார். வாரத்திற்கு ஒருமுறை என ஒவ்வொரு எபிசோடு வெளியிடப்பட்டது. இவரின் அயரா முயற்சியினால் தமிழின் வரலாற்றை பல கோடி மக்களுக்கு எடுத்து சென்று உள்ளார். ஆகையால் தமிழ் மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது குறிப்பிடப்பதக்கது.
கன்னியாகுமரி: சூரிய உதயம், சூரிய மறைவு மற்றும் முக்கடல் இணைப்பு போன்ற பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் ஒன்று கன்னியாகுமரி ஆகும். கன்னியாகுமரி இரயில் நிலையத்தின் அருகில் மாயாப்புரி மெழுகுச்சிலை அருங்காட்சியம் உள்ளது. அதில் அப்துல்கலாம், மன்மோகன்சிங், அமிதாப்பச்சன், அன்னை தெரசா, ஒபாமா, மோகன்லால், ஷாருக்கான் போன்ற பிரபலங்களின் மெழுகுச்சிலை சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இங்கு நடிகர் தளபதி விஜயின் மெழுகுச்சிலை வைக்கப்ப்பட்டுள்ளது. இதுவே தமிழ் நடிகருக்கு வைக்கப்படும் முதல் சிலை ஆகும். இப்புகழ்பெற்ற அருங்காட்சியத்தில் விஜயின் சிலை வைக்கப்பட்டமையால் விஜயின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்று தளபதியின் மக்கள் இயக்க தொண்டர்களால் விஜயின் மெழுகுச்சிலை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். ரசிகர்களும் அருங்காட்சியத்தை பார்வையிடும் மக்களும் விஜயின் மெழுகுச்சிலையின் அருகில் சென்று புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.
தல60-ல் நடிக்க மறுத்த நடிகர் அரவிந்த் சாமி, அஜித்துடன் இவர் நடித்திருந்தால் படம் வேற லெவல்ல இருந்திருக்கும் என ரசிகர்கள் வருத்தம்!
இந்த ஆண்டு வெளியாகி செம்ம ஹிட் கொடுத்த படம் நேர்கொண்ட பார்வை அதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வினோத் உடன் இரண்டாவது முறையாக தல அஜித் கைகோர்த்துள்ள படம் தல60. இந்த படத்தின் பூஜை நடைபெற்ற அன்று இப்படத்திற்கு “வலிமை” என படக்குழு பெயர் வைத்தது. இப்படத்திற்காக அஜித் பிஃட் ஆக மாற நேரம் எடுப்பதால் இன்னும் பட பிடிப்பு ஆரம்பிக்க படவில்லை.
இந்நிலையில், தனிஓருவன் படத்தின் மூலம் வில்லனாக கலக்கிய நடிகர் அரவிந்த் சாமியை தல60 -ல் நடிக்க இயக்குனர் வினோத் கேட்டிருக்கிறார். ஆனால் அரவிந்த் சாமி தற்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜே. ஜெயலலிதா அவர்களின் வாழக்கை வரலாற்று படமான” தலைவியில் “நடிக்க கமிட்டாகி இருப்பதால் இந்த படத்தில் நடிக்க அவர் மறுத்துள்ளாராம்.
ஒரு வேலை தல60-ல் அரவிந்த் சாமி தல அஜித்துடன் நடித்திருந்தால் , படம் செம்ம மாஸ் ஆகா இருந்திருக்கும் என சினிமா ரசிகர்கள் வட்டாரம் வருத்தம் தெரிவித்துள்ளது .
தான் சீரியஸ் ஆகா ஒருவரை காதலிப்பதாகவும், மூன்று வருடத்தில் திருமணம் செய்யவிருப்பதாகவும் நடிகை நிக்கி கல்ராணி ஓபன் டாக் விடுத்துள்ளார்.
2014 ம் ஆண்டு மலையாள படம் மூலம் அறிமுகமாகி தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நடிகை நிக்கி கல்ராணி, தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவருகிறார். தமிழில் டார்லிங், காஞ்சனா, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களில் பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை தன்வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் நடிக்கும் மலையாள படமான ‘தமாகா” படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க போது பத்திரிக்கையாளர் ஒருவர் உங்கள் காதல் வாழ்க்கை பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்க்கு , நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன்.ஆனால் அவர் யார் என்று தற்போதைக்கு சொல்ல முடியாது . என்றும் எப்போது கல்யாணம் என்ற கேள்விக்கு ,இன்னும் மூன்று வருடங்களில் அவரையே திருமணம் செய்ய விருப்பதாகவும் நிகழ்ச்சி மேடையிலேயே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஹாட்டான உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் கல்ராணிக்கு நிஜவாழ்வில் ஜோடியாக வருபவர் யார் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக தனெக்கென்று ஓவர் நகைச்சுவை பாணியில் தடம் பதித்தவர் நடிகர் சந்தானம் . ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்து வந்தார், பிறகு படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் ஹீரோவாகவும் இடம்பிடித்தார். இந்நிலையில் சந்தானம் தயாரித்து நடிக்கும் ”டிக்கிலோனோ ” திரைபடத்தில் மூன்று வேடங்களில் தான் நடிக்கபோவதாக சந்தானம் தெரிவித்தார் .
படத்தை பற்றி கூறிய சந்தானம்: ஒவ்வொரு நடிகருக்கும் அடுத்த கட்டம் என்பது நிச்சயமாக உள்ளது .நான் திரை உலகில் நகைச்சுவை நடிகனாக காலடி வைக்கும்போதே நான் அடுத்த கட்டத்தை நோக்கி நிச்சயமாக போவேன் என்ற திடமான நம்பிக்கை எனக்குள் இருந்தது. அதற்கு ஏற்றவாறு வாய்ப்புகளும் கிடைத்தது. அதை நான் தைரியமாக பயன்படுத்திக் கொண்டேன் .
” டிக்கிலோனோ” படத்தில் எனக்கு மூன்று வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹீரோ, வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகனாக தாம் நடிக்க போவதாகவும் அதில் நான் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார். எவ்வளவு வருடம் சினிமாவில் இருக்கிறோமோ அவ்வளவு வித விதமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கூறினார்.
ஆடை விளம்பரங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய விளம்பரங்களில் நடிக்க சாய் பல்லவி கேட்டதற்கு ஸ்ட்ரெயிட் நோ சொல்லிவிட்டார் .
2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் “பிரேமம்”. இது மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் மிக பெரிய வரவேற்பு பெற்றது . பெண்ணுக்கு பெண்ணே ,பேராசை கொள்ளும் பேரழகு படைத்த பேரழகி , நம்ப ”சாய் பல்லவி” . நடிக்க வந்த முதல் படத்திலேயே தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.
2015ம் ஆண்டு பிரேமம் படத்தில் தொடங்கிய இவரது பயணம் மேலும் பல வெற்றி படங்களை பல மொழிகளில் தந்துள்ளது .தனக்கேன சில கொள்கைகளை வகுத்து திரைப்படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, கதை நன்றாக இருந்தால் மட்டுமே படங்களில் நடிக்க சம்மதிக்கிறார். கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறேன் என தயாரிப்பாளர்கள் ஆசை வார்த்தை கூறினாலும், ஸ்கிரிப்ட் கொடுங்க படிச்சிட்டு சொல்றேன் என கறாராக துரத்தி விடுகிறார் சாய் பல்லவி.இந்நிலையில், ஆடை விளம்பரங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய விளம்பரங்களில் நடிக்க சாய் பல்லவி கேட்டதற்கு ஸ்ட்ரெயிட் நோ சொல்லிவிட்டார் .
இதற்கு முன்னதாக அழகு க்ரீம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றும் சாய் பல்லவியை கோடிகளில் வளைக்க பார்த்து மண்ணைக் கவ்வியது. 2 கோடி கூட கொடுப்பதற்கு ஒப்பந்தம் போட்டது ,வெள்ளை தான் அழகு என்பதை ஏற்க முடியாது என கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தாராம் நம்ப சாய் பல்லவி .