சினிமா

தளபதி 69ல் இணைந்த ஸ்டார் நடிகர்!

Quick Share

நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி69 ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். விஜய் தனது அரசியல் கட்சி பணிகளை ஒருபக்கம் செய்தாலும், ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தளபதி 69ல் கன்னட நடிகர் ஷிவராஜ் குமார் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருவதாக பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். ஷிவராஜ்குமார் ஏற்கனவே ரஜினியின் ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் சூர்யாவிடம் சண்டை போட்ட நபர்!

Quick Share

சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் ப்ரோமோஷனை இறுதிகட்டமாக படக்குழு செய்து வருகிறது. இன்று மும்பையில் கங்குவா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா பங்கேற்றார்.

இந்நிலையில் பிரெஸ் மீட்டுக்கு வந்த சூர்யாவிடம் மீடியாவை சேர்ந்த நபர் ஒருவர் ஆவேசமாக வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி இருக்கிறது.

தாமதமாக வந்தது, நேரம் வீணானது பற்றி அந்த நபர் சண்டை போட்டிருக்கிறார். சூர்யா கூலாக அந்த நபரை சமரசம் செய்ய முயற்சித்து இருக்கிறார்.

இந்த வீடியோ வைரல் ஆகும் நிலையில் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக இணையத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். பாலிவுட் ஹீரோவாக இருந்தால் இப்படி எல்லாம் பேசுவார்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சக்திமான் 2 தொடங்கியது!

Quick Share

90ஸ் கிட்ஸ் எல்லோருக்கும் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம் என்றால் அது சக்திமானாக தான் இருக்கும். அந்த காலகட்டத்தில் எல்லோரையும் கவர்ந்த சூப்பர்ஹீரோ தொடர் சக்திமான். அதில் முகேஷ் கண்ணா நடித்து இருந்தார்.

தற்போது நடிகர் முகேஷ் கண்ணாவுக்கு 66 வயதாகிறது. தற்போது சக்திமான் 2ம் சீசன் எடுக்கும் பணிகளில் அவர் இறங்கி இருக்கிறார். தற்போது அதற்கான ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. வயதான தோற்றத்தில் சக்திமான் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி இருக்கிறது.

லெஜண்ட் சரவணன் இத்தனை கோடி விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளாரா?

Quick Share

தமிழ்நாட்டில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மிகவும் பிரபலம். லெஜண்ட் சரவணன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் சரவணன் அருள் தாக். கோடி கோடியாய் சம்பாதிக்கும் தொழிலதிபர்களில் ஒருவராக இருக்கும் இவர் இப்போது சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு லெஜண்ட் படம் வெளியாகி இருந்தது, தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தொழில், சினிமா என வெற்றிப்பயணம் செய்யும் லெஜண்ட் சரவணனுக்கு கார்கள் மீது அதிக பிரியமாம்.

விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரே மொத்தம் 3 வைத்துள்ளாராம்.

ரூ.12 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம், ரூ.8.23 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் விரைத், ரூ.7.25 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆகிய கார்கள் உள்ளன.

அஷ்டன் மார்டின் DB11, இதன் மதிப்பு ரூ.4.44 கோடியாகும், அஷ்டன் மார்டின் ரேபிட் S, இதன் மதிப்பு ரூ.3.89 கோடி ஆகும்.

மெர்சிடிஸ் E63 AMG, இதன் மதிப்பு ரூ.1.79 கோடி மெர்சிடிஸ் S63 AMG, இதன் மதிப்பு ரூ.2.86 கோடி மெர்சிடிஸ் கார் மேபேஜ் S650, இதன் மதிப்பு ரூ.3.3 கோடி

லம்போகினி அவெண்டேடர், இதன் மதிப்பு ரூ.5 கோடி லம்போகினி ஹரிகேன், இதன் ரேட் ரூ.3.22 கோடி

பென்ட்லி நிறுவன கார்கள் லெஜண்ட் சரவணனிடம் 4 உள்ளது.

அட்டகாசமான ப்ரீ புக்கிங் வேட்டையில் சூர்யாவின் கங்குவா!

Quick Share

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா அதிக பட்ஜெட்டில் நடித்துள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவை அடுத்து திஷா பதானி, பாபி தியோல் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பான் இந்தியா வெளியீடாக வெளியாக இருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

10,000 ஸ்கிரீன்களுக்கு மேலாக கங்குவா படம் ஒளிபரப்பாக இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷ செய்தியாக உள்ளது.

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் தான் வசூல் வேட்டை நடத்தும் என்பது இல்லை.

படங்களின் வியாபாரம், ப்ரீ புக்கிங் போன்ற விஷயங்கள் மூலமாகவே கலெக்ஷன் நடக்கும்.

வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் காட்டி வருகிறது. தற்போது முன்பதிவு மூலம் இப்படம் ரூ. 9 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

நெப்போலியன் மகன் தனுஷிற்கு அக்ஷ்யா கொடுத்த முதல் பரிசு!

Quick Share

நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் திருமணம் பற்றிய செய்திகள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் உலா வருகிறது. அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் தனது மகன் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பல் மூலமாக ஜப்பான் சென்று தனுஷின் திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளார் நெப்போலியன். தனுஷ்-அக்ஷ்யா திருமணத்திற்கு சரத்குமார், ராதிகா, குஷ்பு, மீனா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு நெப்போலியன் மற்றும் அவரது மனைவி தனியாக பேட்டி கொடுக்க புது ஜோடி தனுஷ் மற்றும் அக்ஷயாவும் பேட்டி கொடுத்தனர். அதில் அக்ஷயா பேசும்போது, நான் ஓவியம் நன்றாகவே வரைவேன், தனுஷிற்கு அவரது உருவத்தை ஓவியமாக வரைந்து முதன்முதலில் பரிசாக கொடுத்தேன். எங்களுடைய முதல் கிஃப்ட் அதுதான் என்று கூறியுள்ளார்.

அசத்தல் அப்டேட்…மணிரத்தினம் படத்தில் உலகஅழகியும் அவரது கணவரும்…

Quick Share

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பிரிந்து வாழ்வதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், பிரபல தமிழ் இயக்குனரின் அடுத்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் அந்த வதந்தி முற்றுப்புள்ளி ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, மணிரத்னம் இயக்கிய ’குரு’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன் பின்னர் இரு தரப்பு பெரியவர்கள் பேசி திருமணத்தை நடத்தி வைத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானாலும், இரு தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த விதமான தகவலும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், ’தக்லைஃப்’ படத்தை முடித்தவுடன், மணிரத்னம் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்க இருப்பதாகவும், மணிரத்னம் தயாரித்து இயக்கும் இந்த படம் ஹிந்தியில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் உறுதி செய்யப்பட்டால், அபிஷேக் – ஐஸ்வர்யா ராய் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!

Quick Share

நடிகர் டெல்லி கணேஷ் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர். ரஜினி, கமல் முதல் இன்றைய தலைமுறை முன்னணி ஹீரோக்களுடைய படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக அண்மைக்காலமாக அதிமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தாலும் கடந்த வருடம் ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது உறக்கத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான டெல்லி கணேஷ் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து முத்திரை பதித்தவர். குறிப்பாக கமல்ஹாசன் திரைப்படங்களில் இவருக்கென ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் அமைந்திருக்கும். நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அட்டகாசமாக நடந்து முடிந்தது நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்!

Quick Share

தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். பின் ஜோக்கர், ஆண் தேவதை படங்கள் நடிக்க இரண்டு படங்களும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. தமிழை தாண்டி மலையாளத்திலும் படம் நடித்துள்ள ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார், முகிலன் என்ற வெப் தொடரிலும் நடிக்கிறார். சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.

நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளரான லவ்ல் தவானுக்கும் ரிஷிகேஷில் உள்ள ஷிவ்புரியில் கங்கை நதி கரையில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது புதிய ஜோடியின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

கூலி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

Quick Share

முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகர்ஜுனா, ஷோபின் ஷபீர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக சில தகவல்கள் இணையத்தில் உலா வந்தது. ஆனால், இது உண்மையில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக பாலிவுட் சென்றிருந்த சிவகார்த்திகேயனிடம், ‘கூலி படத்தில் நடிக்கிறார்களா’ என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ‘அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. எனக்கு கூலி படத்திற்கும் இருக்கும் ஒரே தொடர்பு நான் ரஜினியின் ரசிகன் என்பது மட்டும் தான். அந்த படத்தில் நான் நடிக்கவில்லை’ என கூறி வந்தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

3 படங்களுக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெரும் பிரபாஸ்!

Quick Share

பான் இந்தியன் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் பிரபாஸ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சலார் மற்றும் இந்த ஆண்டு வெளிவந்த கல்கி ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதில் கல்கி திரைப்படம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக பிரபாஸ் ராஜாசாப் எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரபாஸ் கைவசம் Fauji, சலார் 2, ஸ்பிரிட் ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சலார் படத்தை தயாரித்த Hombale Films நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள மூன்று படங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் பெறவுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎப், காந்தாரா, சலார் ஆகிய படங்களை தயாரித்து இன்று இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்துள்ளது Hombale Films. இவர்களுடைய தயாரிப்பில் அடுத்ததாக பிரபாஸ் மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளாராம்.

இந்த மூன்று படங்களுக்கு சேர்த்து ரூ. 575 கோடி சம்பளமாக பிரபாஸ் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் 2 படத்திற்கு பின் மாஸ் கூட்டணியில் இணையும் நெல்சன்!

Quick Share

இன்றைய தேதியில் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார். பீஸ்ட் படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து. இதனால் நெல்சன் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதனை ஜெயிலர் படத்தின் மூலம் தகர்த்தெறிந்து இன்று முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக ஜெயிலர் 2 உருவாகவுள்ளது.

இப்படத்திற்கான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், ஜெயிலர் 2 உருவாகுவது என்பது உறுதி என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தான் நெல்சன் ஈடுபட்டுள்ளாராம்.

இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்திற்கு பின் இயக்குனர் நெல்சன் யாரை வைத்து இயக்க போகிறார் என்பது குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கு நடிகரான ஜூனியர் என் டி ஆர் உடன் கைகோர்க்கவுள்ளாராம் நெல்சன்.

ஏற்கனவே சில கதைகளை ஜூனியர் என் டி ஆர்-க்கு கூறியுள்ளாராம். மேலும் இந்த படத்தை தயாரிக்க இரண்டு தயாரிப்பு நிறுவனம் போட்டியிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.




You cannot copy content of this Website