கிரைம்

விடுமுறைக்கு வந்த சிறுமியை தவறான பாதைக்கு உட்படுத்திய அத்தை!

Quick Share

சென்னையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் செய்த சோதனைகளின் அடிப்படையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்தாண்டு காலாண்டு தேர்வு விடுமுறையில் அத்தை வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை அத்தை மற்றும் மூன்று பெண்கள் சேர்ந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை மற்றும் மூன்று பெண்களை கோயம்பேடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தந்தையின் தலையை வெட்டி சமூக ஊடகத்தில் காணொளியாக வெளியிட்ட கொடூரன்!

Quick Share

அமெரிக்காவில் நபர் ஒருவர் சொந்த தந்தையின் தலையை வெட்டி சமூக ஊடகத்தில் காணொளியாக வெளியிட்டுள்ளதுடன் அரசியல் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய நபரை கைது செய்துள்ளதுடன், அந்த காணொளியும் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 32 வயதான ஜஸ்டின் மோன் பென்சில்வேனியாவில் அவரது 68 வயது தந்தை மைக்கேல் மோனை கொலை செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

அவர் மீது முதல் நிலை கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது ஜஸ்டின் மோனின் தாயாரே 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார்.

தமது கணவரின் துண்டிக்கப்பட்ட தலை குடியிருப்பில் காணப்படுவதாக அவர் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார். மதியம் 2 மணி வரையில் தாம் அந்த குடியிருப்பில் இருந்ததாகவும், அதன் பின்னர் வெளியே சென்றுவிட்டு திரும்பிய நிலையில் இந்த கோர சம்பவம் கண்ணில் பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், தலையற்ற நிலையில் சடலத்தை மீட்டுள்ளதுடன், வாள் மற்றும் சமையலறை கத்தி ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.

அத்துடன், 20 ஆண்டுகள் அரசாங்க ஊழியராக பணியாற்றிய தமது தந்தை ஒரு தேசதுரோகி என்றும், அமெரிக்கா மிக மோசமாக சீரழிந்துள்ளதாகவும் காணொளியில் பதிவு செய்துள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டவர்களை கடுமையாக விமர்சித்துள்ள அவர், பெடரல் தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பெடரல் சட்ட அமலாக்கத் துறையினரைத் தாக்க அமெரிக்கர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

விடுதி அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்.

Quick Share

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் இளம்பெண்ணொருவர் தனது காதலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்சவாத் நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு, கடந்த 25ஆம் திகதி ரிஷாப் நிகாம், வந்தனா திவிவேதி என்ற ஜோடி அறை எடுத்து தங்கியுள்ளது.

இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களை அந்த ஜோடி பகலில் சுற்றிவிட்டு அறைக்கு திரும்பியுள்ளது. சனிக்கிழமை இரவு 10 மணியளவில், வந்தனாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு நிகாம் அங்கிருந்து தப்பியுள்ளார்.இதனையடுத்து தனது அறையில் சடலமாக வந்தனா கிடந்தது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரின் சடலத்தைக் கைப்பற்றிய பொலிஸார், CCTV காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.அப்போது நிகாம் வெளியேறிய காட்சிகள் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் தப்பியோடிய அவரை பொலிஸார் கைது செய்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிகாம் தனது காதலி வந்தனாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்துள்ளார்.இதனால் அவரை கொலை திட்டமிட்டு துப்பாக்கியுடன் அறைக்கு சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது. மேலும், IT ஊழியரான வந்தனா திவிவேதி 10 ஆண்டுகளாக நிகாமை காதலித்து வந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

தனது சுயநலத்துக்காக மற்றொரு பெண்ணை கொலை செய்த இளம்பெண்!

Quick Share

தான் புது வாழ்வைத் துவக்குவதற்காக மற்றொரு பெண்ணைக் கொலை செய்த இளம்பெண், தான் கொலை செய்த பெண்ணின் மேலாடையை அணிந்துகொண்டு, அவரது கைப்பையையும் சுமந்து செல்லும்போது பொலிசாரிடம் சிக்கினார். 2022ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், தெற்கு ஜேர்மனியில் கார் ஒன்றில் அழகிய இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஷாராபான் (Sharaban K, 23) என்னும் பெண்ணுடைய உடல் என அவரது பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டது.

Ingolstadt என்ற இடத்தில், மெர்சிடிஸ் காரில் கண்டுபிடிக்கப்பட்ட ஷாராபான் என்னும் அந்தப் பெண் ஈராக் நாட்டவர் ஆவார். அவர் ஜேர்மனியின் Munich நகரில் வாழ்ந்துவந்தார்.

திகைத்துப்போயிருக்க, உடற்கூறு ஆய்வு சில அதிர்ச்சியளிக்கும் இரகசியங்களை வெளிப்படுத்தியது. இறந்த பெண்ணின் உடலில் குத்தப்பட்டிருந்த டாட்டூக்கள் சந்தேகத்தை உருவாக்கின.

கடைசியில், அந்த உடல் ஷாராபானுடையதே அல்ல. அது, கதீஜா (Khadidja O, 23) என்னும் அழகுக்கலை நிபுணருடைய உடல் என்பது தெரியவந்தது. அல்ஜீரியா நாட்டு இளம்பெண்ணான கதீஜா, ஜேர்மனியிலுள்ள Heilbronn என்ற இடத்தில் வாழ்ந்துவந்துள்ளார்.

பொலிசாரின் தீவிர விசாரணையில், கொல்லப்பட்டது கதீஜா என்னும் பெண் என்றும், ஷாராபான் உயிருடன் இருக்கிறார், கதீஜாவைக் கொன்றதே ஷாராபான்தான் என்பதும் தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, பவேரிய பொலிசாரால் Sheqir K (23) என்பவரும், ஷாராபானும் கைது செய்யப்பட்டார்கள். தொடர் விசாரணையில், கட்டுப்பாடான தனது ஈராக்கிய குடும்பத்தைவிட்டு தப்பித் தலைமறைவாக விரும்பிய ஷாராபான், தன்னைப் போலவே காணப்படும் வேறொரு இளம்பெண்ணைக் கொலை செய்துவிட்டு தன் காதலனான Sheqirஉடன் தலைமறைவாகிவிட திட்டமிட்டது தெரியவந்தது.

ஷாராபான் கைது செய்யப்படும்போது, அவர் தான் கொலை செய்த கதீஜாவின் மேலாடையை அணிந்துகொண்டிருந்ததுடன், கதீஜாவின் கைப்பையையும் சுமந்துகொண்டு, தன்னை கதீஜா போல் காட்டிக்கொள்ள முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

Quick Share

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் எலி இறந்து கிடந்ததால் ஆடவர் ஒருவர் 75 மணி நேரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த ராஜீவ் சுக்லா என்ற நபர் கடந்த 8ம் திகதி மும்பை வந்துள்ளார். ராஜீவ் சுக்லா அன்றிரவு உணவிற்காக ஆன்லைன் மூலம் உணவகம் ஒன்றில் சைவ உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

ஆனால் சாப்பாட்டில் சுவை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த ராஜீவ் சுக்லா பார்சலில் வந்த உணவை பரிசோதித்து பார்த்துள்ளார், அப்போது அதில் இறந்த எலி ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜீவ் சுக்லா, கிட்டத்தட்ட 75 மணி நேரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ராஜீவ் சுக்லா மும்பை நாக்பாடா காவல் நிலையத்தில் புகார் வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட ராஜீவ் சுக்லா தன்னுடைய X தளத்தில் எலி இறந்து கிடந்த உணவு மற்றும் மருத்துவமனை கட்டண ரசீது ஆகியவற்றை பகிர்ந்து நீதி கேட்டுள்ளார்.

இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட (Barbeque Nation) உணவகம் ராஜீவ் சுக்லாவின் பதிவுக்கு பதிலளித்து பேசியுள்ளது.

அதில் வணக்கம் ராஜீவ் சுக்லா, நீங்கள் அடைந்த சிரமத்திற்கு வருந்துகிறோம், மும்பை அலுவலகத்தின் ஊழியர் பரேஷ், உங்களை தீர்வை நோக்கி அழைத்து செல்ல தொடர்பில் இருப்பார். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

மகளின் குழந்தையை கடத்தி ரூ.2 லட்சத்திற்கு விற்ற பாட்டி!

Quick Share

மகளின் ஆண் குழந்தையைக் கடத்தி 2 லட்ச ரூபாய்க்கு விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் ஷாபெரி பகுதியைச் சேர்ந்தவர் ஷிவாங்கி. இவர் கடந்த மே மாதம் தனது தாய் மீது பொலிசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் அவர், “என் ஆண் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக என் தாய் எங்களுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலயில், மே மாதம் 10 -ம் திகதி நானும், என் கணவரும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். பின்னர், வீட்டிற்கு வந்து பார்த்த போது, எனது தாயும் குழந்தையும் காணவில்லை” என்று கூறியிருந்தார்.

பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் ஷிவாங்கியின் தாய் பபிதாவைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அபோது, குழந்தையை ஹாபூரில் உள்ள ஜமுனா என்ற பெண்ணின் உதவியுடன் ரூ.2 லட்சத்திற்கு விற்றதாக அவர் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஜமுனாவை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், குழந்தை ஹாபூரைச் சேர்ந்த மருத்துவர் தீபக் தியாகியிடம் ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது. அப்போது, தீபக்கை பிடித்து விசாரித்த போது அமர்வீர் என்ற நபருக்கு 2 லட்ச ரூபாய்க்கு விற்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதன் பின்னர், எட்டு மாதங்களுக்கு பின்பு குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிசார் கூறுகையில், “ஜமுனாவும், பபிதாவும் தலா ரூ. 50,000 பெற்றுள்ளனர். மருத்துவர் தீபக் தியாகி ரூ. 1 லட்சம் பெற்றுள்ளார்” என்றனர்.

இதனிடையே, கடவுள் என் பிரார்த்தனைகளைக் கேட்டு, என் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டுக் கொடுத்துள்ளார் என ஷிவாங்கி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மகளின் குழந்தையை கடத்தி ரூ.2 லட்சத்திற்கு விற்ற பாட்டி!

Quick Share

மகளின் ஆண் குழந்தையைக் கடத்தி 2 லட்ச ரூபாய்க்கு விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் ஷாபெரி பகுதியைச் சேர்ந்தவர் ஷிவாங்கி. இவர் கடந்த மே மாதம் தனது தாய் மீது பொலிசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் அவர், “என் ஆண் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக என் தாய் எங்களுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலயில், மே மாதம் 10 -ம் திகதி நானும், என் கணவரும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். பின்னர், வீட்டிற்கு வந்து பார்த்த போது, எனது தாயும் குழந்தையும் காணவில்லை” என்று கூறியிருந்தார்.

பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் ஷிவாங்கியின் தாய் பபிதாவைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அபோது, குழந்தையை ஹாபூரில் உள்ள ஜமுனா என்ற பெண்ணின் உதவியுடன் ரூ.2 லட்சத்திற்கு விற்றதாக அவர் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஜமுனாவை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், குழந்தை ஹாபூரைச் சேர்ந்த மருத்துவர் தீபக் தியாகியிடம் ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது. அப்போது, தீபக்கை பிடித்து விசாரித்த போது அமர்வீர் என்ற நபருக்கு 2 லட்ச ரூபாய்க்கு விற்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதன் பின்னர், எட்டு மாதங்களுக்கு பின்பு குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிசார் கூறுகையில், “ஜமுனாவும், பபிதாவும் தலா ரூ. 50,000 பெற்றுள்ளனர். மருத்துவர் தீபக் தியாகி ரூ. 1 லட்சம் பெற்றுள்ளார்” என்றனர்.

இதனிடையே, கடவுள் என் பிரார்த்தனைகளைக் கேட்டு, என் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டுக் கொடுத்துள்ளார் என ஷிவாங்கி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

‘தாங்கிக் கொள்ள முடியவில்லை’ – 4 வயது மகனை கொன்ற கொடூரத் தாயின் கடிதம்!

Quick Share

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத் (39). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெங்கட்ராமன் என்பவருடன் திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருந்தான். தம்பதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சுசானா சேத் தனது மகனுடன் கோவாவில் உள்ள பிரபலமான ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து, அவர் கடந்த 8 ஆம் தேதி காலை ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு வாடகை கார் மூலம் பெங்களூருக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், சுசானா சேத் இருந்த அறையை சுத்தம் செய்ய பராமரிப்பு ஊழியர் அறைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு, ரத்தக் கறைகள் படிந்த ஆடைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார். 

இதில் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஓட்டலில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், சுசானா சேத் பயணித்த வாடகை கார் ஓட்டுநரிடம் தொடர்புகொண்டு அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு வருமாறு போலீசார் கூறியுள்ளனர். அதன்படி, கார் ஓட்டுநர் ஓட்டி வந்த காரை ஜமங்கலா போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்த சூட்கேசில் சுசானா சேத்தின் 4 வயது மகன் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுசானா சேத் தனது மகனைக் கொன்று உடலை சூட்கேசில் அடைத்து காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுசானா சேத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அந்த விசாரணையில், சுசானா சேத்துக்கும் அவரது கணவரான வெங்கட்ராமனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்கள் இருவரும் விவாகரத்து வழங்கக் கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன், தனது மகனிடம் பேச அனுமதி அளித்து இருந்தது. அதன்படி, கடந்த 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன் தனது மகனிடம் பேச, சுசானா சேத்தின் செல்போனுக்கு வீடியோ காலில் அழைத்து பேசிய போது மகனிடம் போனை கொடுக்காமல் மறுத்துள்ளார். 

அப்போது, அவரது மகன் தனது தந்தையிடம் பேச வேண்டும் என்று கூறி அடம்பிடித்து அழுது கொண்டிருந்துள்ளான். இந்த நிலையில், கணவர் மீது இருந்த அதிருப்தியிலும், மகன் அவரிடம் பேச வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் கோபத்தின் உச்சியில் இருந்த சுசானா சேத், தனது மகனைக் கொல்ல திட்டமிட்டு தனது மகனுக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுத்து, அவன் மயங்கியதும் மூச்சைத் திணறடித்து கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்தது.

இந்த நிலையில், தனது மகனை கொலை செய்துவிட்டு சுசானா சேத் தன் கண் மையால் எழுதியிருந்த கடித்ததை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசானா சேத் எழுதிய அந்த கடிதத்தில், ‘நீதிமன்றமும், ஒரு பக்கம் எனது கணவரும், மகனை தான் வைத்துக்கொள்ள முடியாமல் அழுத்தம் கொடுக்கின்றனர். இனிமேலும், இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் முன்னாள் கணவர் ஒரு வன்முறையாளர். தவறான பழக்கங்களை என் மகனுக்கு கற்பித்தார். ஒரு நாள் கூட அவரிடம் மகனை விடுவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை’ என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

மோசமான கவர்ச்சியில் நடிகை கேத்ரின் தெரசா!

Quick Share

நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் படம் மூலமாக பிரபலம் ஆனவர். அவர் அதன் பிறகு ஏராளமான சின்ன ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.

பெற்ற மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!

Quick Share

மராட்டிய மாநிலம் நவுகார்க் நகரில் 14 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சில நாட்களூக்கு முன்பு அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அந்த சமயத்தை பயன்படுத்திய தந்தை சிறுமியை அழைத்து தவறாக நடத்து கொள்ள முயன்று இருக்கிறார். ஆனால் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியை தந்தை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இச்சம்பவம் பற்றி யாரிடம் சொல்ல கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். சிறுமியும் இச்சம்பவம் பற்றி யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் தந்தை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அக்காவிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து சிறுமியின் அக்கா அருகில் உள்ள நவுகார்க் போலீஸ் நிலையத்திற்கு சிறுமியுடன் சென்று சம்பவம் பற்றி புகார் அளித்துள்ளார். சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரைகுறையாக ஆடை அணிந்த மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற காதல் கணவன்!

Quick Share

இந்திய மாநிலம் கர்நாடகாவில் அரைகுறையாக ஆடை அணிந்ததால், இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவின் ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன் (25). இவரும் ஜோதி (22) என்ற பெண்ணும் காதலித்து வந்ததைத் தொடர்ந்து, இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

கணவன் – மனைவிக்குள் உடை விடயத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஜோதி மார்டன் உடைகளை அணிந்து வந்துள்ளார். ஆனால், அவர் அரைகுறையாக ஆடை அணிவதாக ஜீவன் அவருடன் சண்டையிட்டுள்ளார்.எனினும், ஜோதி அவரது பேச்சை கேட்காமல் மாடர்ன் உடைகளை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று முன் தினம் ஜோதி தனது கணவருக்கு பிடிக்காத வகையில் ஆடையணிந்து வெளியே கிளம்பியுள்ளார்.அதனை ஜீவன் கண்டித்தும் ஜோதி அதை பொருட்படுத்தவில்லை. அதன் பின்னர் ஜோதியை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறி ஜீவன் கூறி வெளியே கூட்டி சென்றுள்ளார்.அவர் வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் தப்பியோடிய ஜீவனை தேடி வருகின்றனர்.

பெற்ற மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!

Quick Share

மராட்டிய மாநிலம் நவுகார்க் நகரில் 14 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சில நாட்களூக்கு முன்பு அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அந்த சமயத்தை பயன்படுத்திய தந்தை சிறுமியை அழைத்து தவறாக நடத்து கொள்ள முயன்று இருக்கிறார். ஆனால் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியை தந்தை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இச்சம்பவம் பற்றி யாரிடம் சொல்ல கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். சிறுமியும் இச்சம்பவம் பற்றி யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் தந்தை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அக்காவிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து சிறுமியின் அக்கா அருகில் உள்ள நவுகார்க் போலீஸ் நிலையத்திற்கு சிறுமியுடன் சென்று சம்பவம் பற்றி புகார் அளித்துள்ளார். சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




You cannot copy content of this Website