கிரைம்

கிறிஸ்மஸ் பரிசுக்காக அக்காவை சுட்டுக்கொன்ற சிறுவர்கள்!

Quick Share

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பரிசுகள் தொடர்பான பிரச்சினையால் தனது சகோதரியை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் இரு பதின்ம வயது சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது 10 மாத குழந்தையுடன் இருந்த 23 வயது சகோதரியை 14 வயதான சகோதரர் நெஞ்சில் சுட்டுக் கொன்றிருப்பதாக புளோரிடா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அந்த சகோதரரை 15 வயதான மூத்த சகோதரர் வயிற்றில் சுட்டுள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையில் யாருக்கு அதிக பரிசுப் பொருள் கிடைத்திருக்கிறது என்ற விவாதத்தால் ஏற்பட்ட மோதலை அடுத்தே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 14 வயது சகோதரர் சிகிச்சை முடிந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டிருக்கும் 15 வயது சகோதரர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கேரளாவை உலுக்கும் வரதட்சணை கொடுமை: பெண் தூக்கிட்டு தற்கொலை!

Quick Share

75 சவரன் நகை கொடுத்தும் கணவரின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டதால் பெண் ஒருவர் விபரீத முடிவு எடுத்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லம் அருகே உள்ள வண்டித்தனம் பகுதியை சேர்ந்தவர் சஹானா ஷாஜி. இந்த பெண்ணிற்கும் கட்டக்கடா பகுதியை சேர்ந்த நவ்பல் என்ற இளைஞருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து, 2 வயதில் குழந்தை உள்ளது.

இதில், சஹானா ஷாஜியின் குடும்பத்தினர் திருமணத்தின் போதே 75 சவரன் நகைகள் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் நவ்பல்லும், மாமியார் சுமிதாவும் சஹானாவை துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து, கணவர் மற்றும் மாமியாரின் டார்ச்சரால் சஹானா தனது தாயார் வீட்டிற்கு குழந்தையுடன் வந்துள்ளார். இந்நிலையில், மனைவி சஹானாவை சந்திக்க கணவர் நவ்பல் வண்டித்தனத்திற்கு வந்துள்ளார்.

அவர், தனது சகோதரரின் குழந்தைக்கு பிறந்தநாள் என்பதால் அதில் கலந்து கொள்ள மனைவியை அழைக்க வந்துள்ளார். ஆனால்,மனைவி சஹானா வரமுடியாது என்றதால் அவரை தாக்கிவிட்டு குழந்தையை தூக்கிவிட்டு கணவர் சென்றுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சஹானா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து சஹானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் செய்த செயல்!

Quick Share

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் முன்னாள் காதலனை பழி வாங்க, இளம்பெண்ணொருவர் கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டம் படித்து வருபவர் ஷ்ரவன். இவருக்கு முன்னாள் காதலியான ரிங்கி திடீரென போன் செய்து நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.

ஒரே கல்லூரியில் படிக்கும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 6 மாதங்களுக்கு முன்பே பிரிந்த நிலையில், ”உன்னிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேச வேண்டும் வா” எனக் கூறியதால் ஷ்ரவன் நம்பி அவர் கூறிய பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு ரிங்கி அவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் ரிங்கியின் நண்பர்கள் ஐவர் ஷ்ரவன் வந்த காரில் 40 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலத்தை போட்டுவிட்டு ஓடியுள்ளனர்.

பின்னர் அவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ஷ்ரவனின் காரை சோதனை செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும், ஷ்ரவனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் ரிங்கி தன்னை போன் செய்து அழைத்தது முதல் காதல் விவகாரம் வரை விவரமாக கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் ரிங்கியை பிடித்து விசாரித்தபோது முன்னாள் காதலனை பழி வாங்க கஞ்சா கடத்தல் பழியை சுமத்தியதாக ஒப்புக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ரிங்கி மற்றும் அவரது ஐந்து நண்பர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் மூக்கை கடித்த கணவர்!

Quick Share

வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் மூக்கை, கணவர் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மகேஷ்பூர் பகுதியில் வரதட்சணை கொடுமையால் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகேஷ்பூரைச் சேர்ந்த அஜ்மி (22) என்பவர் தனது கணவர் குடும்பத்தில் உள்ள 6 பேர் மீது கசிபி கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், கணவர் எனது மூக்கை கடித்ததாகவும் கூறியுள்ளார். அந்த புகாரின் படி, மாமனார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் தனது புகாரில், “எனக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில் 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 15 -ம் திகதி வரதட்சணை கொடுக்கவில்லை எனக் கூறி என்னை எனது மாமியார் அடித்தார்.

எனது கணவர் என் மூக்கை கடித்து காயப்படுத்தினார். வரதட்சணையை காரணம் காட்டி பலமுறை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். எப்போதெல்லாம் அவர்கள் துன்புறுத்துகிறார்களோ அப்போது ஊர் பஞ்சாயத்தை கூட்டி சமரசம் செய்து வைக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.டி பெண் ஊழியர் கொலையில் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள்!

Quick Share

செங்கல்பட்டில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் திருநம்பி என தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அடுத்துள்ள பகுதி பொன்மார். அங்குள்ள வேதகிரி நகரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் மதுரையை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. கண்ணகி நகர்ப் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கியிருந்த அப்பெண் ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.காதல் விவகாரத்தில் பெண் இறந்திருக்கலாம் என என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்திருக்கும் நிலையில் வெற்றிமாறன் என்ற நபரை முதற்கட்டமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் வெற்றிமாறன் திருநம்பி என தெரியவந்துள்ளது. அவரது இயற்பெயர் பாண்டி மகேஸ்வரி என்பதும் தெரியவந்துள்ளது.எட்டு மாதத்திற்கு முன்பு மதுரையிலிருந்து சென்னை வந்த அப்பெண் பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதேபோல வெற்றிமாறன் என்ற திருநம்பிக்கும் அப்பெண்ணிற்கு படிக்கும் போதே இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் நட்பாக பழகி வந்துள்ளனர். அவர் திருநம்பி என்பதால் அவரை அப்பெண் உதாசீனம் செய்ததாக தெரியவந்துள்ளது.பிறந்தநாள் பரிசு கொடுக்க இருப்பதாக திருநம்பி அப்பெண்ணை இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். பிறகு புதர் பகுதிக்குச் அழைத்துச் சென்ற வெற்றிமாறன் கை, கால்களை சங்கிலியால் கட்டி பூட்டிய பிறகு கண்களைக் கட்டி அவரின் கழுத்தை அறுத்துவிட்டு பெட்ரோல் ஊற்றி கொடூரமாக எரித்துள்ளார்.சாலை ஓரத்திலேயே இருந்த புதர் பகுதியில் இருந்து சத்தம் வருவதை பார்த்த வாகன ஓட்டிகள் இருவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்குவந்து எரிந்த நிலையில் இருந்த பெண் மீது துண்டை போர்த்தி 108 ஆம்புலன்ஸ்க்கு தூக்கி சென்றனர். அப்பொழுது அப்பெண் மரணத்தின் தருவாயில் ஒரு தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார். அந்த தொடர்பு எண்ணை வைத்து விசாரணை செய்ததில் வெற்றிமாறன் என்ற பாண்டி மகேஸ்வரி இந்த கொலையை செய்தது போலீசாருக்கு தெரியவந்து கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புறநகர் பகுதியில் நடந்த இந்த கொடூரக்கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூப் வீடியோ பார்த்து 5ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

Quick Share

யூடியூப் வீடியோ பார்த்து 5ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஹமிர்பூர் நகரத்தை சேர்ந்தவர்கள் அவதேஸ் சாஹூ – ரூபி தம்பதியினர். இவர்களுக்கு நிகில் என்ற 11 வயது மகனும் ஒரு மகளும் உள்ளனர். 5ஆம் வகுப்பு படித்து வந்த நிகில், வீட்டில் தனியாக இருக்கும்போது செல்போன் பார்த்துள்ளான். ‘தூக்குமாட்டிக்கொண்டு அதில் இருந்து தப்பித்து எப்படி உயிருடன் வருவது’ என்ற வீடியோவை நிகில் பார்த்துள்ளான். இதற்காக தாயின் துப்பட்டாவை கொண்டு தூக்கிட்டபோது, துரதிஷ்டவசமாக அவர் உயிரிழந்தார்.

வரதட்சணை கொடுக்காத விரக்தி.., மனைவியின் மூக்கை கடித்த கணவர்

Quick Share

வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் மூக்கை, கணவர் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி புகார்

இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மகேஷ்பூர் பகுதியில் வரதட்சணை கொடுமையால் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மகேஷ்பூரைச் சேர்ந்த அஜ்மி (22) என்பவர் தனது கணவர் குடும்பத்தில் உள்ள 6 பேர் மீது கசிபி கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், கணவர் எனது மூக்கை கடித்ததாகவும் கூறியுள்ளார். அந்த புகாரின் படி, மாமனார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணவரின் செயல்

மேலும் அவர் தனது புகாரில், “எனக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில் 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 15 -ம் திகதி வரதட்சணை கொடுக்கவில்லை எனக் கூறி என்னை எனது மாமியார் அடித்தார்.எனது கணவர் என் மூக்கை கடித்து காயப்படுத்தினார். வரதட்சணையை காரணம் காட்டி பலமுறை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். எப்போதெல்லாம் அவர்கள் துன்புறுத்துகிறார்களோ அப்போது ஊர் பஞ்சாயத்தை கூட்டி சமரசம் செய்து வைக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.       

நடிகை கெளதமி அளித்த நில மோசடி புகாரில் திடீர் திருப்பம்.

Quick Share

நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களான அழகப்பன், அவரது மனைவி மாச்சியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் சதீஷ்குமார் உட்பட 6 பேரை கேரளாவில் உள்ள திருச்சூரில் வைத்து கைது செய்துள்ளனர்

கடந்த செப்டம்பர் மாதம் நடிகை கௌதமி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில மோசடி குறித்த புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல்வேறு இடங்களில் தனக்கு சொந்தமான சொத்துக்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்,.

இந்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அழகப்பன் மற்றும் அவரது மனைவியின் விசாலாட்சி உள்பட 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பல நாட்களாக இவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில் மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் இவர்களை தேடி வந்தனர். அதுமட்டுமின்றி அவர்களுடைய வீட்டில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர்.

13 வயது சிறுமி 10 நாட்கள் பலாத்காரம்

Quick Share

13 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்த நபர் 10 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை சம்பந்தப்பட்ட நபர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சிறுமியை அறையில் அடைத்து வைத்துள்ளனர். அந்த நபரின் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிறுமி தன் தாயிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளத்தொடர்புக்கு இடையூறு; 1½ வயது குழந்தையை ஆற்றில் வீசிய தாய்!

Quick Share

கள்ளக்காதலனுடனான உறவுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை தாய் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ராமநகர் சன்னபட்னாவில் செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துணி துவைக்க ஆற்றுக்கு வந்த அப்பெண் குழந்தையை தண்ணீரில் வீசி கொன்றுள்ளார். பின்னர் குழந்தை ஆற்றில் தவறி விழுந்து விட்டதாக கூச்சலிட்டு நாடகமாடியுள்ளார். இன்று குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் தாய் பாக்யம்மா (21) கைது செய்யப்பட்டார். இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலனுடனான உறவுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை!

Quick Share

சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (40). இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட சேட்டு என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். மேலும், யானைக்கவுனி காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இருக்கிறது. சேட்டு கொலை வழக்கில் பிரேம்குமார் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இந்த நிலையில், சேட்டு கொலை வழக்குக்காக பிரேம்குமார் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு வந்து ஆஜரானார். அதன் பின்னர், அங்கிருந்த தனது உறவினர்களான நரேஷ், வசந்த் ஆகியோருடன் ரிப்பன் மாளிகை எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், பிரேம்குமாரை சுற்றி வளைத்து தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டாக்கத்தியால் ஓட ஓட சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற நரேஷ் மற்றும் வசந்துக்கும் வெட்டு விழுந்தது. அதில், பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேம்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேம்குமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த நரேஷ் மற்றும் வசந்த் ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெரியமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சேட்டு கொலைக்கு பழிக்கு பழி வாங்க பிரேம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரைக் கொலை செய்த குற்றவாளிகள் அடையாளம் தெரிந்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பட்டப் பகலில் 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட துரை, சஞ்சய் உள்ளிட்ட 6 பேர் திருவண்ணாமலையில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவசங்கர், சாந்தகுமார், நாராயணன், சரவணன், குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 6 பேர் பொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

பெரும் அதிர்ச்சி !’டீ’ போட்டுத்தர தாமதமானதால் மனைவியை கொலை செய்த கணவன் !!

Quick Share

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகர் பகுதியில் உள்ள ஃபல்ஜகர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. தரம்வீர், சுந்தரி (50) கணவன் மனைவி. தரம்வீர் சம்பவத்தன்று, தனது மனைவியிடம் டீ போட்டுத் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், டீ தயார் செய்து தாமதமாக வந்ததால் தரம்வீர் மனைவியைக் கொன்றார். அவர் தனது மனைவியை 15 முறை கொடூரமாக கத்தியால் குத்தினார். தலைமறைவான குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.




You cannot copy content of this Website