அமெரிக்காவில் இந்தியருக்கு நடந்த சோகம்.., பூங்காவில் ஜாக்கிங் சென்ற 43 வயது பெண்ணை கொலை...
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஷர்மிஸ்தா சென்(43) ஆராய்ச்சியாளர் டெக்சாஸ் மாகாணத்தின் ப்ளானோ நகரில் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உயிரியல் தொடர்பான படிப்பில் ஆராய்ச்சி செய்து வரும் அவர், புற்றுநோயாளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உடையவர்.
இவர் கடந்த 1ம் தேதி பூங்கா ஒன்றின் அருகே கடுமையாக தாக்கப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதேநேரத்தில், அவரது வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக 29 வயது மதிக்கத்தக்க பகரி அபியோனா மொன்கிரீப் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர் ஷர்மிஸ்தா சென் இவர் தடகள வீராங்கனை எனபதும் இவர் பூங்கா பகுதியில் தினமும் ஜாக்கங் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதிரடியான விசாரணையில் கொலையாளி பகரி அபியோனா மொன்கிரீப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.