கிரைம்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…மூன்றே மாதத்தில் எடுத்த விபரீத முடிவால் நேர்ந்த சோகம்!

Quick Share

காதல் திருமணம் செய்து கொண்ட பெண் 3 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த தம்பதி சந்திரகுமார்-சத்தியவாணி. இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளான தீபிகா(19), அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பிரசாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் தீபிகாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் கண்டித்த நிலையில், கடந்த மே மாதம் 18-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய இவர் வீடு திரும்பவே இல்லை.

இதையடுத்து தீபிகாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, தனது காதலர் பிரசாந்த் உடன் இருப்பது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி, இவர்கள் கடந்த 9-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இருவரும் திருமண வயது நிரம்பியவர்கள் என்பதால் தீபிகாவை பிரசாந்த் உடன் அனுப்பி வைத்துள்ளனர். திருமணத்திற்கு பெற்றோர் செய்ய வைத்திருந்த நகையை வாங்கி வருமாறு பிரசாந்தின் தாயார் தீபிகாவிடம் கூறியுள்ளார்.

தீபிகாவும் தனது தாயார் வீட்டுக்கு சென்று நகையை கேட்டுள்ளார். ஆனால், தங்களுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட மகளின் மீது கோபத்தில் இருந்த பெற்றோர், வேறு வழியின்றி நகையை கொஞ்சநாள் கழித்து தருவதாக கூறியுள்ளனர். தொடர்ந்து ஆடி மாதத்தை ஒட்டி கடந்த 20-ஆம் திகதி தீபிகா தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

காதல் கணவரின் நடவடிக்கை சரியில்லை என்றும், மாமியார் நகை கேட்டு நச்சரிப்பதாகவும் தாயிடம் கூறி அழுதுள்ளார். ஆடி மாதம் முடிந்து செல்லும்போது நகை போட்டு அனுப்புவதாகக்கூறி அவரது தாயார் சமாதானம் செய்துள்ளார்.

மேலும், நீயே விரும்பி தேர்வு செய்து கொண்ட வாழ்க்கை, பிரச்னைகளை நீதான் சமாளித்து வாழவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர். வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த தீபிகா மதியம் 3 மணி வரை சாப்பிட வராதால் அவரது தயார் அறையை திறந்து பார்த்துள்ளார். அப்போது தீபிகா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். உடலை இறக்கிய பெற்றோர், பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம உறுப்பிலிருந்து வெளியேறிய ரத்தம்! மயங்கி விழுந்த கணவர்… அம்பலமான மனைவியின் செயல்

Quick Share

கொரோனா லாக்டவுனில் தனக்கு அதிகமான தொல்லை கொடுத்த கணவரை மனைவி அடித்துக்கொன்றுள்ள சம்பவம் தமிழகத்தில் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர் என்ற சுதீர்(34). இவருடைய மனைவி அருள்செல்வி. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஜெயஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளார்.

கணவர் சுந்தர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகவும், மனைவி அருள்செல்வி தனியார் பள்ளியில் டீச்சராகவும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

சுந்தருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. சம்பவத்தன்று சுந்தர் திடீரென கட்டிலில் இருந்து மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது ஆணுறுப்பில் ரத்தம் இருப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்பு பொலிசாரின் விசாரணையில், அருள்செல்வி தனக்கு அடிக்கடி தொல்லை கொடுத்ததாலும், ஒரு கட்டத்தில் வன்புணர்வில் கணவர் ஈடுபட்டதால் அடித்துக்கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சுந்தரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், அவ்வறிக்கை வந்த பின்பே உண்மையான காரணம் தெரியவரும் என்றும், மனைவி அருள்செல்வியிடம் தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

கத்தி முனையில் 42 வயது பெண்ணை சகோதரர்கள் உட்பட 4 பேர் சிதைத்த அவலம் !!

Quick Share

வேலைக்கு சென்ற 42 வயது பெண்ணை 2 சகோதரர்கள் உட்பட 4 பேருடன் கத்தி முனையில் கூட்டு பாலியல் பலகாரம் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பிவாண்டியில் 42 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு பவர்லூம் நகரத்தின் சார்னிபாடா பகுதியில் அமைந்துள்ள கோடவுன் ஒன்றில் பெண் வேலை தேடிச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“அங்குள்ள ரயில்வே தடங்களுக்கு அருகே இருந்து கடத்தப்பட்டு, அருகிலுள்ள புதர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கத்தியை வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மயக்க நிலையில் கிடந்த பெண்ணை பார்த்த வழிப்போக்கர்கள் நர்போலி பகுதி போலீசிடம் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 42 வயது பெண்ணின் சகோதரர்கள் மோன்டி வர்தே மற்றும் விஷால் வர்தே, மற்றும் குமார் ரத்தோட் மற்றும் அனில் ஷியாம் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சகோதரர்களே இப்படி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம உறுப்பு நசுக்கப்பட்டு அரை நிர்வாணமாக கிடந்த சடலம்: காதலியை கரம்பிடித்த இளைஞனுக்கு ...

Quick Share

தமிழகத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்து கொல்லப்பட்டு, அரை நிர்வாணமாக சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. பெங்களூரில் காய்கறி மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வந்த விஜிக்கும், அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால், இவர்களின் காதலுக்கு ராஜேஸ்வரி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டு, அடுத்த நாள் மாலையும், கழுத்துமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இது குறித்து அங்கிருந்த கிராமத்தில் இருந்த பெரியோர் ஒன்று கூடி பேசிய போது, 3 மாதத்தில் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக பெண்ணின் வீட்டார் வாக்குறுதி கொடுத்து மகளை அழைத்துச் சென்றுள்ளனர். 3 மாதங்கள் கடந்த நிலையில், ஊரடங்கை காரணம் காட்டி, பெண்ணின் பெற்றோர் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். இதற்கிடையில், இந்த ஊரடங்கு காரணமாக, பெங்களூரில் பார்த்து வந்த காய்கறி வியாபாரம் மற்றும் சிப்ஸ் கடையை விஜியால் நடத்த இயலாத நிலை ஏற்பட்டு வருமானத்திற்கு வழியில்லாமல் தவித்து வந்துள்ளார்.

இருப்பினும், தனது காதல் மனைவியை தன்னுடன் அனுப்பும் படி, ராஜேஸ்வரியின் தந்தையிடம் விஜி கேட்டு வற்புறுத்தியுள்ளார். அதன் பின், தன்னுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் என்று கூறி 31-ஆம் திகதி ராஜேஸ்வரியின் தந்தை விஜியை அழைத்துள்ளார். இந்த் நிலையில் தான், மறுநாள் காலை பாலக்காடு அருகே விஜி மர்ம உறுப்பு நசுக்கப்பட்ட நிலையில், அரை நிர்வாணமாக இறந்து கிடந்தார்.

அவரை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். விஜியின் சடலம் சாலையில் கிடப்பது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார், அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விஜி காதல் விவகாரம் தொடர்பாக அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறும் ஏதும் காரணமா? என்ற கோணத்திலும், விஜியின் தந்தையிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த இளைஞரை பூரிக்கட்டையால் தாக்கி கொலை செய்த கணவர்!

Quick Share

மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த இளைஞரை அவரது கணவர் பூரிக்கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை குட்டம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி லிங்கம். இவர் ஐ.டி. படிப்பு பாதியில் நிறுத்தி விட்டு வேலை தேடி கோவைக்கு கடந்த 3 வருடத்துக்கு முன்பு வந்துள்ளார். கோவை விளாங்குறிச்சி ரத்தினகிரி ரோடு பகுதியில் அறை எடுத்து தங்கி குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் இனிப்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் இசக்கி லிங்கம் தங்கியிருந்த அறையில் வலிப்பு- வந்து இறந்து விட்டதாக அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்தபோது இசக்கி லிங்கத்தின் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் செய்த்தன்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் இசக்கி லிங்கத்திற்கும் சிட்கோ பிள்ளையார்புரம் காந்திநகரை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி அபுபக்கர் சித்திக் (வயது 38) என்பவரது மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

இதனால் இசக்கி லிங்கத்தின் உறவினர்கள் அவர்களை கண்டித்தனர். ஆனாலும், இருவருக்கும் இடையேயான கள்ளகாதல் தொடர்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த அபுபக்கர் சித்திக் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆத்திரத்திலிருந்த அபுபக்கர் சித்திக், இசக்கி லிங்கத்தின் அறைக்கு சென்று, அங்கு தனியாக இருந்த இசக்கி லிங்கத்துடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது தொடர்ந்து அபூபக்கர் சித்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இசக்கி லிங்கத்தை கொலை செய்ய முயன்ற போது இசக்கி லிங்கத்தின் கையில் கத்திக்குத்து விழுந்தது.

தொடர்ந்து, அருகில் இருந்த பூரிக்கட்டையை எடுத்து இசக்கிலிங்கத்தின் தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே இசக்கி லிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பேரில் அபூபக்கரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

மளிகை கடை உரிமையாளரை கத்தியால் குத்தி ரூ1 லட்சம் கொள்ளை – காவல் நிலையம் எதிரில் ப...

Quick Share

காவல் நிலையம் எதிரில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மளிகை கடை உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு 1 லட்சம் ரூபாய் மற்றும் மளிகை சாமான்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த கந்திலி காவல் நிலையம் எதிரில் அஃதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (70) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். வீடும் கடையும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீனிவாசனுக்கு கிருஷ்ணகுமார் மற்றும் ஸ்ரீதர் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 5 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சீனிவாசன் வீட்டிற்க்கு சென்று,மளிகை பொருட்கள் வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்து, கடையில் உள்ள சீனிவாசன், இவரது மகன் கிருஷ்ணகுமார் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரை கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கல்லாப் பெட்டியில் இருந்த ஒரு லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பிக்கும் பொழுது ஸ்ரீதர் திருடன் திருடன் என கூச்சல் போடவே அந்த மர்ம கும்பல் ஸ்ரீதரின் கையை வெட்டியுள்ளனர்.

அதன்பின் தப்பிச் செல்லும்போது, அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சசிதரன் (23) மர்ம கும்பலை பிடிக்க முயன்ற போது மர்ம கும்பலை சேர்ந்த ஒருவர் சசிதரனின் மார்பு பகுதியில் பயங்கரமாக குத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த சசிதரனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

படுகாயங்களுடன் இருந்த கடையின் உரிமையாளர் ஸ்ரீதரை, பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. காவல் நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒரு லட்ச ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் கந்திலி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் செய்வதை வழக்காம கொண்ட 30 வயது பெண் – கத்தியால் குத்தி கொலை செய்த 9-வது க...

Quick Share

30 வயது மதிக்கத்தக்க பெண் ஆண்களுடன் பழகி திருமணம் செய்வதை வழக்காம கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் 9-வது கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தின் பஹாடி ஷெரிப் எல்லைக்குட் பகுதியிலே இந்த சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஆந்திரப்பிரதேசத்தின் குர்நூல் மாவட்டத்தின் ஜாப்பலியை சொந்த ஊராக கொண்டவர் நாகராஜு.

கேப் டிரைவரான இவருக்கும், ஹைதராபாத்தின் காட்டேடன் தொழிற் பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த 30 வயது மதிக்கத்தக்க வரலட்சுமி என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களின் இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன் படி வரலட்சுமி தன்னுடைய கணவர் மற்றும் மகனையும் விட்டு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாகராஜுவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில மாதங்களிலே வரலட்சுமி, அப்பகுதியில் இருக்கும் மற்ற ஆண்களுடன் பழகத் துவங்கியுள்ளார். இதனால் இந்த தம்பதிக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

அதன் படி சம்பவ தினத்தன்று, அதாவது கடந்த செவ்வாய் கிழமை அவர்களிடம் இருந்து சற்று விலகியிருக்கும் படி நாகராஜு மனைவியை எச்சரித்துள்ளார். இது பெரிய வாக்குவாதமாக மாற, நாகராஜு ஆத்திரத்தில் அங்கிருந்த கத்தியை எடுத்து வரலட்சுமியின் கழுத்தில் குத்திவிட்டு, அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வரலட்சுமி, நாகராஜுவுக்கு ஒன்பதாவது கணவர் என்பது தெரியவந்துள்ளது.

இப்படி ஒரு ஆணுடன் பழக்கம் வைத்து, அதன் பின் அவரை திருமணம் செயது, அவர்களை விட்டு வேறொரு நபருடன் பழக்கம் வைப்பதையே இவர் வழக்கமாக கொண்டிருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிசார் இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒர்க் பிரம் ஹோமிற்கு கணவர் உதவாததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை -ஊரடங்கில் நேர்ந்த சோகம்!

Quick Share

ஊட்டியை சேர்ந்த ஹரிகணேஷ் மற்றும் பிரிய தர்ஷினி ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஹரிகணேஷ் அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகவும், பிரிய தர்ஷினி நுங்கம்பாக்கத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டு விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தகவலறிந்த கே.கே நகர் போலிஸார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தே பிரியதர்ஷினி பணிப்புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பிரியதர்ஷினி பணிப்புரியும் போது கணவர் ஹரிகணேஷிடம் பணியின் காரணமாக உதவி கேட்டதாக தெரியவருகிறது. ஹரிகணேஷ் உதவி புரிய மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த பிரியதர்சினி தனி அறைக்கு உறங்க சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை நீண்ட நேரமாகியும் பிரியதர்சினியின் அறை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஹரிகணேஷ் கதவை உடைத்து பார்த்த போது பிரியதர்சினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், பிரியதர்ஷினி வேலை பளுவின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இவர் மன அழுத்தம் காரணமாக சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வருவதும் போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பிரியதர்ஷினி மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஒருவருடத்தில் புதுமணப்பெண் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆணவக்கொலை?காதல் திருமணம் செய்த இளைஞர் உடல் சடலமாக மீட்பு!

Quick Share

தருமபுரியில் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்த இளைஞர் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஓட்டர்திண்ணை கிராமத்தை சேர்ந்த விஜி, அதேபகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆரம்பம் முதலே இந்த காதலுக்கு பெண் வீட்டார் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது.

இந்த நிலையில் கடும் எதிர்ப்பையும் மீறி, கடந்த 6 மாதத்திற்கு முன் ராஜேஸ்வரியை விஜி திருமணம் செய்திருக்கிறார். பெங்களூருவில் காய்கறி கடை நடத்தி வந்த விஜி, கொரோனா ஊரடங்கால் வியாபாரம் இல்லாததால் வருமானமின்றி தவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் விஜியை தொடர்புகொண்ட அவரது மனைவி ராஜேஸ்வரியின் தந்தை காய்கறி வியாபாரத்தை விட்டுவிட்டு தன்னுடன் வந்து ரியல் எஸ்டேட் தொழிலை செய்யுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து நேற்று முன்தினம் தனது மாமனாரை பார்க்க சென்ற விஜி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கும்மனூர் அருகே சாலையோரம் வாலிபர் விஜி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பஞ்சப்பள்ளி போலீசார், திருமணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். விஜியின் மாமனார் தலைமறைவாகி இருப்பதால் அவரை பிடிக்கவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். காதல் திருமணம் செய்த வாலிபர் சடலமாக மீட்கப்பட்டது தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெடிக்களிலேயே சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை -மதுரையில் பரபரப்பு!

Quick Share

மதுரையில் சிறார்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளரை போலீசார் கைது, மருந்தகத்தில் இருந்த மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தான் அதிகளவு கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுவது அவர்கள் போதை மாத்திரைகள் உட்கொள்வதாகவும், தொடர்ந்து புகார் வந்த நிலையில்,மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் துறை ஆணையரின் தனிப்படை பிரிவினர் மதுரை வண்டியூர் பகுதியில் மாத்திரை வைத்திருந்த சிறார் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் அதே பகுதியில் இருக்கக்கூடிய மருந்தகத்தில் வாங்கியதாக தெரியவந்தது.

அதனை தொடர்ந்து சிறுவர் அளித்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அதிரடியாக மருந்தகத்தில் சோதனை செய்தபோது, சட்டத்திற்கு புறம்பாக மருந்தகத்தில் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து மருந்தகத்தின் உரிமையாளர் ராஜாமுகமது என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து சுமார் 273 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை மாத்திரை மருந்தகத்தில் விற்பனை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை பிறப்புறுப்பில் அடித்து கொலை செய்த மனைவி!

Quick Share

கணவன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், ஆத்திரமடைந்த மனைவி, அவரின் உயிர் தளத்தில் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாயாண்டி நகரைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கு சுந்தர் என்ற சுதீர் (34) என்ற மகன் உள்ளார். சுந்தருக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அருள்செல்வி என்பவருன் திருமணம் நடைபெற்றுள்ளது, இந்த தம்பதிக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

சுந்தர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். அருள்செல்வி திருமங்கலம் அருகேயுள்ள கீழ்செம்பட்டி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கட்டிலில் இருந்து கீழே மயங்கி விழுந்ததாக கூறி சுந்தரை குடும்பத்தினர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சுந்தரை பரிசோதனை செய்த மருத்துவர் அவரது உயிர் தளத்தில் ரத்தம் இருப்பதாகக் கூறி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின் பொலிசார் அங்கு விரைந்து வந்து மனைவி அருள் செல்வியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, கணவர் அடிக்கடி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதால், அவரே அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் பிரேதபரிசோதனை முடிவில் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியும் என்பதால், அதில் வரும் தகவலை பொறுத்து பொலிசார் அடுத்த கட்ட விசாரணையை துவங்கவுள்ளனர்.

ஓட்டுனர்களை கொலை செய்து முதலைகளுக்கு உணவாக போட்ட கொடூரன்!

Quick Share

ஐம்பதுக்கும் மேற்பட்ட டாக்ஸி டிரைவர்களை கொன்று, அதை மறைப்பதற்காக முதலைகள் இருக்கும் கால்வாயில் சடலங்களை வீசியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து 2004-ஆம் ஆண்டு வரை Devender Sharma என்ற நபர் ஏழு டாக்ஸி ஓட்டுனர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 16 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த Devender Sharma, கடந்த ஜனவரி மாதம் குறுகிய பரோல், அதாவது 20 நாள் பரோலில் வெளிவந்தார்.

ஆனால் பரோல் முடிந்து சிறைக்கு திரும்பாமல் Devender Sharma தலைமறைமாகிவிட்டார். இதனால் பொலிசார் அவரை தேடி வந்த நிலையில், கடந்த புதன் கிழமை(ஆறு மாதங்களுக்கு பிறகு) தலைநகரான டெல்லியில் அவரை கைது செய்தனர். பரோலில் இருந்து வெளியில் வந்த அவர் விதவை ஒருவருடன் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், தான் பரோல் நிபந்தனைகளை மீறியதாகவும், சிறைக்கு திரும்ப விருப்பம் இல்லாததன் காரணமாகவே இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது குற்றவியல் கடந்த காலத்தைப் பற்றி Devender Sharma விரிவாக கூறினார். அதில், பாரம்பரிய இந்திய மருத்த்துவத்தில் பட்டம் பெற்ற இவர், கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் 11 ஆண்டுகள் ராஜஸ்தானில் இருக்கும் மருத்துவமனையில் ஒரு கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மோசடி ஒன்றில் ஏராளமான பணத்தை இழந்த Devender Sharma, பணத்திற்காக எரிவாயு சிலிண்டர்களை போலியாக விற்கும் திட்டத்தில் ஈடுபடத் துவங்கினார்.

அதுமட்டுமின்றி, சட்ட விரோதமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்றவைகளிலும் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2004-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். சுமார் 125 மாற்று அறுவை சிகிச்சை செய்த அவர், இதன் மூலம் ஒரு அறுவை சிகிச்சைக்கும் 6,680 டொலர் முதல் 9,350. டொலர் வரை சம்பாதித்துள்ளார். அதன் பின், உத்திரப்பிரதேசத்தில், ஒரு கூட்டத்துடன் சேர்ந்து மற்றொரு திட்டத்தை தீட்டியுள்ளார். அதன் படி வாடகை டாக்ஸிகளை புக் செய்வது போன்று புக் செய்து, அதன் பின் அந்த டாக்ஸியை ஏதேனு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளுக்கு அழைத்து சென்று, அங்கு டாக்ஸியின் டிரைவர்களை கொலை செய்துவிட்டு, பொலிசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அந்த டிரைவர்களின் சடலங்களை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிவிடுவர்.

அதன் பின் அந்த காரின் பாகங்களையோ அல்லது முழுவதுமாகவோ விற்று பணம் சம்பாதித்துள்ளார், ஒரு காரை இப்படி சுமார் 250 டொலர் வரை விற்றுள்ளார், இப்படி சுமார் 50-க்கும் மேற்பட்ட டாக்ஸி ஓட்டுனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக Devender Sharma பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும் அவர் இப்போது சில கொலைகளுக்கு மட்டுமே தண்டனை பெற்று வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.




You cannot copy content of this Website