கிரைம்

சிறையில் இருந்து வெளியில் வந்த கொடூரனால் 65 வயது மூதாட்டி கற்பழிப்பு.

Quick Share

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. அவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் மனநலம் பாதிக்கப்பட்டு தாயுடன் வாழ்ந்து வருகிறார். மூதாட்டி தனது வீட்டையொட்டி பெட்டிக் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று அன்னான்டப்பட்டி ஆரிப்கான் நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராகுல் (30). மது போதையில் தனது தந்தையுடன் தகராறு செய்துள்ளார்.

இதனால் அவரை வீட்டில் தனி அறையில் தந்தை பூட்டி வைத்து உள்ளார். எனினும், ராகுல் நள்ளிரவு ஒரு மணியளவில் அறையில் உள்ள ஜன்னலை உடைத்து வெளியே வந்துள்ளார். பின்னர் 65 வயது மூதாட்டி வீட்டிற்குச் சென்று ஊறுகாய் வேண்டும் என கேட்டுள்ளார். உடனே மூதாட்டி கதவைத் திறந்துள்ளார். அப்போது ராகுல் வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். அதன் பிறகு மூதாட்டியை கற்பழித்துள்ளார்.

பின்னர் ராகுல் உடைகளை மாற்றிக்கொண்டிருந்த போது, மூதாட்டி வெளியே சென்று கதவை வெளிப்புறமாக பூட்டி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக பொதுமக்கள் இதுபற்றி ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து வந்து பூட்டிய வீட்டுக்குள் இருந்த ராகுலை மீட்டுச்சென்றனர்.

ராகுல் மீது ஏற்கனவே கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணை கற்பழித்ததாக போலீசார் வழக்கு பதிவு கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ஜாமீனில் சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளார். இவர் முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட, உடல் ஊனமுற்றவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து வழக்குப் பதிவு செய்து ராகுலை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மூதாட்டி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தாய் அவதிப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் கழுத்தறுத்து கொலை செய்த மகன்!

Quick Share

கை, கால்கள் செயலிழந்து தாய் அவதிப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத மகன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூரை அடுத்த கீவலூர் பகுதியில் வசிப்பவர் துரை (60), மனைவி கோவிந்தம்மாள்(வயது 58), இவர்களது மகன் ஆனந்தன். தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் ஆனந்தனுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே கோவிந்தம்மாளுக்கு கை, கால்கள் செயலிழந்து போனதால் அவதிப்பட்டு வந்தார். தாய் மீது அதிக பாசம் வைத்திருந்ததால், ஆனந்தன் அம்மாவை நன்றாக கவனித்தும் வந்துள்ளார்.

இதனால் ஆனந்தனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடந்ததாக தெரிகிறது, இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆனந்தனின் மனைவி அவருடைய அம்மா வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் மன உளைச்சல் அடைந்த ஆனந்தன், தாய் அவதிப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

கடந்த 26 ஆம் தேதி இரவு வெளியில் சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த கோவிந்தம்மாளின் கழுத்தை அறுத்து ஆனந்தன் கொலை செய்தார்.

கோவிந்தமாளின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கோவிந்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி சிறுவர்கள் விளையாட வாங்கிய விசிலில் ஆபாசப் பட பிலிம் ரோல் – பெற்றோர்கள் அதி...

Quick Share

சூலூரில் மளிகை கடையில் வாங்கிய விசிலில் ஆபாச பட பிலிம் ரோல் இருந்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளர்.

கோவை சூலூர் புதிய பேருந்து நிலையத்தில், உள்ள மளிகை கடையில் 5 ரூபாய் கொடுத்து பள்ளி மாணவர்கள் விசில் வாங்கியுள்ளனர். அதனை வைத்து விளையாடி முடித்த குழந்தைகள் பின்னர் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அந்த குழாய் வடிவிலான விசிலில் ஆபாச பட பிலிம் ரோல் சுற்றப்பட்டு இருந்தது.

இதையடுத்து மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் கோவை சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் பேரில் சூலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மளிகை கடை உரிமையாளர் பாலகுமாரிடம் விசாரணை செய்த போலிஸார் விசில்களை பறிமுதல் செய்து, கடைக்கு சப்ளை செய்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபாசபடங்களால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்த படங்களைக் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில், இது போன்ற பழைய ஆபாச படம் பிலிம் ரோல்கள் கிராமப்புற மாணவர்கள் வாங்கும் விளையாட்டு பொருட்களில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் ஏற்படுத்தி உள்ளது.

தன்னுடைய சொந்த பேத்திகளை கிணற்றில் வீசிய பாட்டி- கள்ளக்குறிச்சியில் நேர்ந்த சோகம்!

Quick Share

தன்னுடைய சொந்த பேத்திகளை கிணற்றில் மூதாட்டி தூக்கி வீசியதால் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். சலவைத் தொழில் செய்து வரும் இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி, அமுதினி(வயது 2), ரிஷிகா (வயது 4) ஆகிய மகள்கள் உள்ளனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ‌தனது மாமியார் வீடான தியாகதுருகத்திற்கு தனது பிள்ளைகளை அழைத்து கீர்த்தனா சென்றுள்ளார். மாமியார் வீட்டிற்கு சென்ற நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக இருந்துவிட்டு நேற்று இரவு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு‌ படுத்து உறங்கிவிட்டனர்.

இன்று அதிகாலை 3:00 மணி அளவில் கீர்த்தனா எழுந்து பார்த்தபோது தனது 2 பெண் பிள்ளைகளையும் காணவில்லை என பதறிப்போய் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் இருவரும் அலறியடித்து பல இடங்களில் தேடி பார்த்தனர்.

சிறுமிகள் கிடைக்காத நிலையில் கீர்த்தனாவின் தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட வள்ளியம்மாள் என்பவரை அடித்து கேட்டபோது அவர் கிணற்று பக்கம் கை காட்டியுள்ளார். இன்று காலை 7 மணி அளவில் உதயமாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள பலராமன் என்பவரது விவசாய கிணற்றில் சந்தேகத்தின் அடிப்படையில் ஊர் மக்கள் உதவியுடன் தேடி பார்த்துள்ளனர்.

கிணற்றில் தண்ணீரின் ஆழம் அதிகமாக இருந்ததால் சிறுமிகளை தேடுவதற்காக தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 7 பேர் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் ரிஷிகா (வயது 4) மற்றும் அமுதினி (வயது 2) ஆகிய இருவருடைய சடலமும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

அதன்பின்னர் தியாகதுருகம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு சிறுமிகளின் உடலையும் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன்பின்பு சிறுமிகளின் பாட்டி வள்ளியம்மை மற்றும் தந்தை திருஞானசம்பந்தர் தாயார் கீர்த்தனா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்யப்பட்டது. அதில் மனநலம் பாதிக்கப்பட்ட வள்ளியம்மை தான் தனது பேத்திகளை கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தியாகதுருகம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்ட பாட்டியால் கிணற்றில் வீசப்பட்டு 2 இளம் பிஞ்சுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

நண்பருடன் உறவு வைத்துக்கொள்ள வலியுறுத்திய கணவருக்கு மனைவி வைத்த ஆப்பு!

Quick Share

ஆந்திராவில் மனைவியை நண்பருடன் உறவு வைத்துக்கொள்ள வலியுறுத்திய நபரை போலீசார் கைது
செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (30). இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்குள்ள பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாஸ்கருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவெடுத்த நிலையில் குண்டூரைச் சேர்ந்த 25 வயதான பெண்ணை பேசி முடித்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த மார்ச் மாதம் முக்கிய சில உறவினர்கள் முன்னணியில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்க மாப்பிள்ளை என்பதால் பாஸ்கருக்கு பெண் வீட்டார் 50 சவரம் நகை மற்றும் ரூ. 50 லட்சம் ரொக்கத்தை வழங்கியுள்ளனர். திருமணம் முடிந்த நிலையில் குண்டூரில் உள்ள மணமக்கள் இருவரும் இல்லற வாழக்கையை தொடங்கினர். முதல் இரவு அன்று புதுப்பெண் அறைக்குள் சென்றபோது, தனக்கு உடல்வலி இருப்பதாக கூறிய பாஸ்கர் சீக்கிரமகாவே தூங்கியுள்ளார்.

சரி, ஒருநாள் தானே என்று பெருசாக எடுத்துக்கொள்ளாமல் புதுப்பெண்ணும் உறங்கியுள்ளார். ஆனால், அன்றுமுதல் ஒரு மாதத்துக்கும் மேலாக தாம்பத்ய உறவில் ஈடுபட மறுத்து வந்த பாஸ்கர் பலவகை காரணங்களை சொல்லி தட்டி கழித்து வந்துள்ளார். மேலும், பாஸ்கரின் நடவடிக்கையில் சில வித்தியாசத்தையும் அவர் உணர்ந்துள்ளார்.

இதையடுத்து பாஸ்கரின் நடவடிக்கையை குறித்து புதுப்பெண் தனது வீட்டில் தெரியப்படுத்தவே, இரு வீட்டாரும் சேர்ந்து பாஸ்கருடன் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மனைவியுடன் தனியாக பேசவேண்டும் என அழைத்து சென்ற பாஸ்கர், அமெரிக்காவில் தான் ஏற்கெனவே ஒரு ஆணுடன் நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவரும் ஓரினசேர்க்கையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நீ என்னுடன் வாழ விரும்பினால், அமெரிக்காவில் உள்ள என் நண்பனுக்கும் மனைவியாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த புதுப்பெண் விஷயத்தை பெற்றோருடன் தெரிவிக்க, பாஸ்கர் மீது குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பாஸ்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சட்டப்படி இருவரையும் பிரித்து, வரதட்சணையை திருப்பி கொடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கல்லூரி மாணவியின் செல்போனுக்கு வந்த மெசேஜ் லிங்க்…ரிப்ளை செய்ததால் நேர்ந்த அதிர்ச...

Quick Share

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவியிடம் இணையதளம் மூலம் நூதன முறையில் 87 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

அங்குள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருபவர் சவுந்தர்யா. இவரது செல்போனை தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று, கூகுள் பே இணையப் பணவர்த்தனை செயலிக்கு வந்துள்ள லிங்கை கிளிக் செய்யும்படி கேட்டுள்ளனர்.

அவர்கள் சொன்னபடி செய்த சவுந்தர்யாவின் வங்கிக் கணக்கில் இருந்த 87 ஆயிரம் ரூபாய் பணம் மின்னல் வேகத்தில் சூறையாடப்பட்டது.

இதன் பின்னர் சவுந்தர்யவின் தந்தை சுரேஷ், நாமக்கல் மாவட்ட காவல் கண்காளிப்பாளரிடம் புகார் அளிக்க, அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

பணி முடித்து வெளியே வந்த பெண்ணை கொடூரமாக குத்தி கொலை செய்த நபர் -அதிர்ச்சி பின்னணி!

Quick Share

ஒரு நிமிட கோபம், அதனால் ஏற்படும் நிதானமின்மை ஒரு குடும்பத்தை எப்படி எல்லாம் சிதைத்து விடுகிறது என்பதற்கு பெரும் உதாரணமாக மாறியுள்ளது இந்த கொடூர சம்பவம்.

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின் மோனிப்பள்ளியை சேர்ந்தவர் மெரின் ஜாய். 26 வயதான இவர், அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். தற்போது கொரோனா பரவலால் மருத்துவமனை பணி என்பது அதிகமாக இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக பணிக்குச் சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென்று வந்த மர்ம நபர் ஒருவர் மெரின் ஜாய்யை கொடூரமாகக் குத்தி கொலை செய்தார். கொடூரமாக நடைபெற்ற இந்த கொலை சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிலிப்மேத்யூ என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது தான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. கைது செய்யப்பட்ட நபர், மெரின் ஜாயின் கணவர் என்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரி பிராட் பிகொவொன் கூறுகையில், மெரரின் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, அந்த நபர் அவரை இழுத்துப் பல முறை கத்தியால் குத்தி உள்ளார்.இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போதும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என கூறினார். மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மெரின் ஜாய்க்கும், பிலிப்மேத்யூவிற்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தற்போது 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்தச்சூழ்நிலையில் கடந்த 2019-ஆம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். குழந்தையானது மெரினின் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளது. ஆனால் குழந்தையை மெரினும், அவரது தாயும் பார்க்க விடவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பிலிப் தனது மகள் மற்றும் மனைவி மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார்.

இதற்கிடையே கடந்த திங்கட்கிழமை, குழந்தையை இனி எப்போதும் உன்னைப் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள் என மெரின், பிலிப்பிடம் கூறியதாகத் தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த பிலிப், மறுநாள் வேலை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு நிமிட கோபத்தால் ஒட்டுமொத்த குடும்பமும் தற்போது சிதைந்து போனது தான் சோகத்தின் உச்சம்.

17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலன் -போலீசாரால் கைது!

Quick Share

புதுக்கோட்டை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜகோபால் (வயது23). இவர் கல்லுப்பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ராஜகோபால் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜகோபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட சிறுமியை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். புதுக்கோட்டையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 17 வயது சிறுமியை 23 வயது வாலிபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தொடரும் வழிப்பறிப்பு :பொறியாளரை கத்தியால் தாக்கி வழிப்பறி -அச்சத்தில் பொதுமக...

Quick Share

சென்னை பாடியில் இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற தனியார் நிறுவன பொறியாளர் உட்பட ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாடியில் டி.வி.எஸ் நகரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவிட்டு அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாத காரணத்தினால் தள்ளிக்கொண்டே வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், அவரின் தலையில் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.

படுகாயமடைந்த வெங்கட்ராமன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோன்று, திருமுல்லைவாயலை சேர்ந்த உலகப்பன், ஒரகடம் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இரவு பணி முடிந்து வீடுதிரும்பிக்கொண்டிருந்த அவரை இதே 3 மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி செல்போன் மற்றும் மணிபர்ஸை கொள்ளையடித்து சென்றனர்.

அதாவது கடந்த 10 நாட்களில் மட்டும் 30க்கும் மேற்பட்டோரிடம் வழிப்பறி நடைபெற்றிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்!

Quick Share

படைப்பை அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (21). இவர் அதே பகுதியில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணிக்கு செல்வதற்காக வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையிலிருந்து தொழிற்சாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

இவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அஜய்யை வழிமறித்து கத்தியால் வெட்ட தொடங்கியதும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அருகிலிருந்த ஓட்டலில் நுழைந்தார்.

இதனைப் பயன்படுத்தி அஜய்யை ஓட்டலின் உள்ளேயே வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு மர்ம கும்பல் பைக்கில் ஏறி தப்பி சென்றது.

இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட அஜய் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 வயது சிறுமியை வேலைக்கு வைத்த நடிகர் ஷியாம், இப்போ நான் சிறுமியை படிக்கவைக்குறேன் !!

Quick Share

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் சினிமா நடிகர் ஷாமுக்கு சொந்தமான, அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென போலீஸ் சோதனை நடத்தினர். அப்போது நடிகர் ஷாம் உட்பட 12 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை ஜாமினில் விடுவித்தனர்.

இந்நிலையில் நடிகர் ஷியாம் வீட்டில் 15 வயது சிறுமியை வீட்டில் வேலைக்கு வைத்துள்ளதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சிறுமியின் தாய், ஷாம் வீட்டில் வேலை பார்த்து வருவதால் சிறுமியும் வேலை பார்த்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த தகவல் அறிந்து வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு குழு மைனர் சிறுமியை மீட்டுள்ளனர். மேலும் சிறுமிக்கு 15 வயது எனத்தெரியாது என்று கூறியுள்ள ஷாம், சிறுமி படிப்புச்செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளாராம். எப்படி சிறுமியின் வயசு தெரியாமல் வேலைக்கு சேர்த்திருப்பார்கள் என நெட்டிசன்கள் பல சமூகவலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வீட்டை சூதாட்ட கிளப் போல் மாற்றிய பிரபல நடிகர்., சிக்கிய 13 நபர்கள் யார் யார் ?

Quick Share

தமிழ் திரையுலகில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் நடிகர் ஷாம். சமீபகாலமாக திரையுலகில் வாய்ப்பு கிடைக்காததால் சிறிய கதாபாத்திரத்தில் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.

நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டை சீட்டாட்டம் போல் மாற்றி காசை வைத்து சூதாட்டம் ஆடி போலீசிடம் சிக்கியுள்ளது திரைத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் நடிகர் ஷாம்க்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் ஆட்களை சேர்த்துக்கொண்டு சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலறிந்த போலீசார் நேற்றிரவு ஷ்யாமின் அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென நுழைந்து சோதனை செய்த போது, நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யபட்டன.
தொடர்ந்து பல நாட்களாக அடிக்கடி இங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் பலர் இது போன்று சட்டவிரோதமாக சீட்டு விளையாட்டின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை நடிகர் ஷாம் சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதில் சிக்கிய 13 பேர் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

இந்த சூதாட்டத்தில் பல முக்கிய பிரபலங்கள் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.




You cannot copy content of this Website