தந்தை சாவில் மகனுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் !!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் ஜோதி முருகன்(32) தந்தை இவருடைய ஆண்டிச்சாமி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
தந்தையின் இறுதிச்சடங்கு செய்வதற்காக அவரது ஜோதி முருகன் மாலை உட்பட இறுதிச்சடங்கு பொருட்களை வாங்குவதற்காக நண்பர் முத்துச்செல்வம் என்பவரை அழைத்துக்கொண்டு நிலக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது குண்டலபட்டி அருகே எதிர்பாராத விதமாக மினி லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜோதிமுருகனும், அவரது நண்பரும் படுகாயம் அடைந்தனர். அடிபட்ட இருவரையும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மோசமான நிலையில் மேல்சிகிச்சை கொடுத்து பலனின்றி நேற்று ஜோதிமுருகன் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற முத்துசெல்வத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தந்தை சாவிற்காக சென்ற மகன் வாகன விபத்தில் இறந்தது அவர் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.