கிரைம்

8 மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த பெண்!

Quick Share

பிரித்தானியாவில் தனது எட்டு மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் ஒரு பெண். லண்டனின் Wembleyயிலுள்ள ஒரு வீட்டுக்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்தபோது, ஒரு எட்டு மாதக் குழந்தை கழுத்தறுபட்டுக் கிடந்துள்ளது. விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மற்றும் கொலை செய்தவர் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று மட்டும் கூறிய பொலிசார், மேலதிக தகவல்களை வெளியிடமுடியாது என்று கூறிவிட்டனர்.

ஆனால், விசாரணைக்கு வந்த பெண் பொலிசார் ஒருவருக்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் Ilona Sidorova (45) என்ற பெண் காபி தயாரித்துக் கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண் பொலிசார், Ilonaவிடம் சில தகவல்களைக் கூறியுள்ளார். அதன்படி, அந்த வீட்டில் வசித்துவரும் ஒரு பெண் தனது எட்டு மாதக் குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, தன் கணவனை அழைத்து, உன் குழந்தையைக் கொன்று விட்டேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

கருப்பு உடை அணிந்திருந்த ஒரு பெண்ணை பொலிசார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதாகவும், அந்த பெண், பொலிசாரைப் பார்த்துக் கத்திக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் Ilona. சற்று தொலைவில் ஒரு ஆண் ஹிஸ்டீரியா வந்தவர் போல் கத்திக்கொண்டிருந்ததையும், அவரை பொலிசார் காரில் ஏற்றியதோடு, அந்த பெண்ணையும் காரில் ஏற்றிச்சென்றதாகவும் Ilona தெரிவித்துள்ளார். தற்போது தடயவியல் நிபுணர்கள் அந்த வீட்டில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

வயிற்று வலியால் 14 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி – சிகிச்சைக்கு பின் குழந்த...

Quick Share

மயிலாடுதுறை மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மணல்மேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று முன்தினம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி நிறைமாத கர்ப்பமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு மயிலாடுதுறை மருத்துவமனை நிர்வாகத்தினர் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் 14வயது சிறுமிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் ஆரோக்கியராஜ், மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். வைதீஸ்வரன் கோவிலைச் சேர்ந்த சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ் மற்றும் பலர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மாரியம்மாள் மீதும், சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வேறு சில நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

முகக்கவசம் அணியாததால் கண்மூடித்தனமாக தாக்கிய பொலிஸ்: சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழப்பு!

Quick Share

ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சீராலா நகரை சேர்ந்தவர் கிரண்குமார். கடந்த 19-ம் தேதி முகக் கவசம் அணியாமல் வீதியில் நடமாடிய கிரண் குமாரை தடுத்து நிறுத்திய சீராலா காவல் நிலைய போலீஸ் எஸ்.ஐ விஜயகுமார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் படுகாயம் அடைந்த கிரண் குமாரை உறவினர்கள் காவல் நிலையத்தில் இருந்து அழைத்து சென்று குண்டூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கிரண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

பெற்ற மகள்களின் கண்முன் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்: நடந்தது என்ன?..

Quick Share

டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் திங்கட்கிழமை இரவு தனது இரண்டு மகள்கள் முன்னால் சுடப்பட்ட உத்தர பிரதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளர் இன்று காலை காலமானார். திங்கட்கிழமை இரவு விக்ரம் ஜோஷி தனது இரு மகள்களுடன் தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை தாக்கி, பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டது. இரு மகள்கள் உதவிக்காகச் சத்தமிடும் காட்சிகள் அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

“காசியாபாத் போலீஸ் இந்த வழக்கில் இதுவரை ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன,” என்று மூத்த காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது ஏ.என்.ஐ செய்தி முகமை.

சட்ட ஒழுங்கு

உத்தர பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறது அந்த சம்பவம். உத்தர பிரதேச அரசு விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. விக்ரமின் குடும்பம் இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டி, பிரேத பரிசோதனை நடைபெறும் மருத்துவமனை வளாகத்தில் போராடி வருகின்றனர். போலீஸின் இயலாமைக்கு தன் உயிரையே விலையாக விக்ரம் ஜோஷி கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

ஏன் இந்த தாக்குதல்?

இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நான்கு நாட்களுக்கு முன்பு, தனது உறவினர் ஒருவர் ஒரு கும்பலால் துன்புறுத்தப்படுவதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸ் இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனை தொடர்ந்தே அவர் தாக்கப்பட்டுள்ளார்.

சிசிடிவி பதிவில் இருப்பது என்ன?

ஒரு கும்பலால் அவர் தாக்கப்படும் காட்சி தெளிவாக சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. ஒரு கும்பல் அவரை தாக்குகிறது. பின்னர் அவரை சுடுகிறது. விக்ரம் தரையில் விழுகிறார். அவரது மகள்கள் உதவி வேண்டி கதறுகிறார்கள். இந்த காட்சிகள் அந்த சிசிடிவி பதிவாகி உள்ளன. காசியாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், புதன்கிழமை காலை மரணமடைந்தார்.

விக்ரம் ஜோஷிக்கு மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிர்ந்த ட்வீட்டில், இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். சட்ட ஒழுங்கு குறித்த பல கேள்விகளை இந்த சம்பவம் எழுப்புவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தமது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தலைநகர் பகுதி அருகே இருக்கும் ஒருபகுதியிலே சட்ட ஒழுங்கு நிலைமை இப்படி இருக்கிறது என்றால், உத்தர பிரதேசத்தில் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என பிரியங்கா காந்தி ஒரு ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

29 வயது தங்கையின் தகாத நடத்தையால் சகோதரர்கள் ஒன்று சேர்ந்து செய்த கொடூர சம்பவம் !!

Quick Share

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 29 வயதான பிரதிபா மத்ரே என்ற பெண் விவாகரத்தாகி பார் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். திடீரென பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் அந்தப் பெண் பாரில் பணிபுரிந்த தாகவும் அவருக்கு தகாத முறையில் பல சகவாசம் இருந்ததால் அவரது சகோதரர்கள் சேர்ந்து கொன்று விட்டார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

அவரது உடலை எரித்ததாக மூன்று பேர் தானே மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்காவது சகோதரருக்காக தேடுதல் நடைபெற்று வருவதாக துணை போலீஸ் கமிஷனர் எஸ் எஸ் பர்ஸ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பிரதிபா மத்ரே (29) தனது கணவருடன் விவாகரத்து பெற்ற பின்னர் தானேவில் உள்ள டைகர் என்னும் பகுதியில் தனது சகோதரர்களுடன் வசித்து வந்தார். சகோதரர்கள் அவரது நடத்தை அவதூறாக இருப்பதைக் கண்டனர், இது சண்டைகளுக்கு வழிவகுத்தது, மேலும் ஆரம்ப விசாரணையின் படி, அவர் தனித்தனியாக வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

மே 1 மற்றும் 2 தேதி பெண்ணின் சகோதரர்களே கழுத்தை நெரித்து, அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து, மரம், டயர்கள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி வயலில் எரித்ததாக டி.சி.பி தெரிவித்துள்ளார். தானே மாவட்டம் ஷில்-டைகர் காவல் துறை கொலை குறித்து ஒரு தகவலைப் பெற்ற பின்னர் விசாரணையைத் தொடங்கினர்.

கொலை குற்றச்சாட்டில் நாதா அசோக் பாட்டீல் (31), பகவான் அசோக் பாட்டீல் (24), பாலாஜி அசோக் பாட்டீல் (20) ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

கருமுட்டைகளுக்காக மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்!

Quick Share

மனைவியை கொல்வது என இணையத்தில் தேடிய கணவனால் மனைவி கொல்லப்பட்ட நிலையில், மனைவியின் கருமுட்டைகளை திருட அந்த கணவன் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Middlesbroughவில் வாழ்ந்து வந்த பார்மசிஸ்டான ஜெசிகா பட்டேல் (34), ஒரு நாள் தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தன் மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்தார் ஜெசிகாவின் கணவர் மித்தேஷ். ஆனால், அது ஒரு நாடகம் என்றும் அவர்தான் ஜெசிகாவை பிளாஸ்டிக் கவர் ஒன்றால் கழுத்தை நெறித்துக்கொன்றார் என்பதும் அவரது ஐபோனை ஆராய்ந்தபோது தெரியவந்தது.

ஒன்பது ஆண்டு திருமண வாழ்வில், ஐந்து ஆண்டுகளை மனைவியை கொல்வது குறித்து திட்டமிடுவதிலேயே செலவிட்டுள்ளார் மித்தேஷ். காரணம், மித்தேஷ் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்… ஜெசிகாவை கொன்றுவிட்டு, அவரது இன்சூரன்ஸ் பணத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தனது ஓரினச் சேர்க்கை காதலனுடன் வாழ்க்கையை தொடங்குவதுதான் மித்தேஷின் திட்டம்.

இதற்கிடையில், இன்னொரு கொடுமையான உண்மை தற்போது வெளிவந்துள்ளது. ஆம், மனைவி வேண்டாமாம், ஆனால் அவளது கருமுட்டைகள் வேண்டுமாம் அவருக்கு! கருமுட்டை வங்கியில் உறைநிலையில் சேமிக்கப்பட்டிருந்த ஜெசிகாவின் கருமுட்டைகளை திருடிக்கொண்டு, அவுஸ்திரேலியா சென்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும், அந்த குழந்தைகளுடன், தனது ஓரினச்சேர்க்கை காதலனுடன் வாழவும் திட்டமிட்டுள்ளார் மித்தேஷ்.

தற்போது ஜெசிகா கொலை வழக்கு மீளாய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், பல்வேறு உண்மைகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. ஜெசிகா கொலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 74 பக்கங்கள் கொண்ட மீளாய்வு, பல்வேறு உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது. ஒன்பது ஆண்டுகள் திருமண வாழ்விலும் மனைவியை மித்தேஷ் கொடுமைப்படுத்தியதும், அந்த திருமணத்திலிருந்து கௌரவமாக வெளியேறுவதற்காக மனைவியை கொல்ல அவர் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளதையடுத்து, இது ஒரு கௌரவக் கொலையாக கருதப்படவேண்டும் என மீளாய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்ற முயற்சி செய்த இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நபர் கைது!

Quick Share

ஈரோட்டில் பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

கந்தசஷ்டி கவசம் பாடலை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கறுப்பர் கூட்டத்தை கண்டிக்கும் விதமாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரகாஷ்(45) என்பவர் காவி சாயம் ஊற்ற முயற்சி செய்தார்.

அப்போது சிலையின் அருகே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனை அடுத்து பெரியார் சிலைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

https://twitter.com/mannar_mannan/status/1285154070898991105

ஏரிக்கு அருகே இளம்பெண்கள் உட்பட 7 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு: நாட்டையே உலுக்கிய கோர சம...

Quick Share

பனமா தலைநகருக்கு வடக்கே 80 கி.மீ தொலைவில் உள்ள ஏரிக்கு அருகே ஏழு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் பனமேனிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக வழக்கறிஞர் தெரிவித்தார். பனாமா கால்வாயின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் ஒரு அழகிய மனிதனால் உருவாக்கப்பட்ட கதுன் ஏரிக்கு அருகில் இந்த தாக்குதல் நடந்தது. 17 முதல் 22 வயது வரையிலான நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வழக்குரைஞர் அடோல்போ பினெடா தெரிவித்தார்.

குழுவில் உள்ள சிலர் தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளதாகவும் மற்றும் விசாரணைக்கு அதிகாரிகளுக்கு உதவுகிறார்கள் என பினெடா மேலும் கூறினார். இறந்தவர்களில் சிலருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருந்தன, ஆனால் மரணத்திற்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை தாக்குதலுக்கான நோக்கமும் விசாரணையில் உள்ளது என பினெடா கூறினார்..

இது உண்மையில் அனைத்து கண்ணோட்டங்களிலிருந்தும் அதிர்ச்சியான நிகழ்வு என்று பினெடா கூறினார். பலியானவர்கள் வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாக குடும்ப உறுப்பினர்கள் தகவல் தெரிவித்ததாகவும், மேலும் அவர்கள் நீச்சலுக்காக வெளியே சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மது அருந்திவிட்டு போதையில் கார் ஓட்டிய பெண்ணால் 8 வயது சிறுமி பரிதாப பலி!

Quick Share

கனடாவில் மது போதையில் கார் ஓட்டிய பெண்ணால் ஏற்பட்ட விபத்து காரணமாக 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கனடாவின் லண்டன் நகரில் கார் ஒன்றில் 8 வயது சிறுமி உள்ளிட்ட நால்வர் சில தினங்களுக்கு முன்னர் இரவு 10 மணியளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் வந்த கார், நால்வர் பயணித்த கார் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் 8 வயது சிறுமி படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார், மற்ற மூவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் போதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக Alicia Van Bree என்ற 33 வயது பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.

அவரை பரிசோதனை செய்தபோது இரத்தத்தில் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக ஆல்கஹால் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

ஆனால் பின்னர் விடுவிக்கப்பட்ட Alicia Van Bree நீதிமன்றத்தில் செப்டம்பர் 10ஆம் திகதி ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்ற மகளை நடுத்தெருவில் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக கொன்ற தந்தை!

Quick Share

ஜோர்தான் நாட்டில் சொந்த மகளை தெருவில் பல பேர் முன்னிலையில் துரத்திச் சென்று தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் துஸ்பிரயோகத்திற்கு இலக்காகி வந்த 30 வயது அஹ்லம் என்ற பெண்ணே தந்தையின் கொடூர செயலுக்கு இரையாகியுள்ளார். குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரம் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. குடியிருப்பில் இருந்து யாராவது காப்பாற்றுங்கள் என அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த அவரை, துரத்தி வந்த தந்தை சிமென்ட் கட்டையால் தலையை குறிவைத்து தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் நிலைகுலைந்து தரையில் சரிந்த அஹ்லம், இறக்கும் வரை அந்த நபரால் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது. மரண பயத்தில் அஹ்லம் அலறியதைக் கேட்டு தெருவில் கூடிய பொதுமக்கள் முன்னிலையில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. அஹ்லம் அவரது தாயாரிடம், கெஞ்சியும் அந்த தாயார் சிலையாக நின்றிருந்தார் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அந்த தந்தையை தடுத்து நிறுத்த சிலர் முயன்ற போதும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறுகின்றனர்.

இதனிடையே, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார், மகளின் சடலத்தின் அருகே தேநீர் அருந்தியபடி சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த தந்தையை கண்டு அதிர்ந்துள்ளனர். அஹ்லம் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜோர்தான் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆணவக்கொலை எனவும் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பலர் சமூக ஊடகங்களில் கடுமையாக வாதிட்டு வருகின்றனர்.

தனிமையில் இருந்த காதலி: காதலனின் வெறிச்செயல்!

Quick Share

காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற காதலனை பொலிசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூரின் பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு தெரியவர அவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர்.

இதனால் ஐஸ்வர்யா ரதீஸிடம் பேசுவதை தவிர்த்துள்ளார், இதில் கோபமடைந்த ரதீஸ் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு வந்து தன்மை மீண்டும் காதலிக்குமாறு கூறியுள்ளார். இதில் நடந்த வாக்குவாதத்தில், மாணவி மறுக்கவே, மறைத்து வைத்திருந்த கத்தியால், ஐஸ்வர்யாவை குத்தி விட்டு தப்பியுள்ளார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரின் தந்தைக்கும் இரு கைகளில் கத்தி குத்து விழுந்துள்ளது. படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா உயிரிழந்தார். இதனிடையே வழக்குப்பதிவு செய்த பேரூர் காவல்துறையினர் தப்பியோடிய ரதீஸை தேடி வருகின்றனர்.

திருமணமான பெண்களை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த 23 வயது இளைஞன்!

Quick Share

தொழிலதிபர் என கூறி பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர் உதயகுமார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார். தற்போது கொரோனா காரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், உதயக்குமார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது அங்கு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் என்ற 23 வயது நபர் அறிமுகமாகியுள்ளார்.

விக்னேஷ், உதயகுமாரிடம் தான் ஒரு தொழிலதிபர், குடிநீர் விற்பனை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் விற்பனை செய்வதாகவும், பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, சில நாட்களில் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். உதயகுமார் வீட்டுக்கு அடிக்கடி வந்த விக்னேஷ், தன்னுடன் இணைந்து தொழில் செய்தால், லாபத்தில் பங்கு தருவதாக உதயகுமாரிடம் கூறியுள்ளார். அதை நம்பி, 12 லட்சம் ரூபாய் வரை உதயகுமார் கொடுத்துள்ளார். அதன் பின் விக்னேஷ் தலைமறைவானார். அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால், இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுக்க, தலைமறைவாக இருந்த விக்னேஷை பொலிசார் தனிப்படை அமைத்து நேற்று முன் தினம் கைது செய்தனர். கைது செய்த விக்னேஷிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பொலிசார் கூறுகையில், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள விக்னேஷ், ஆங்கிலம் சரளமாக பேசுவதால் பிபிஓ நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

இவர், டிக்டாக் செயலியில் அதிகளவில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதை பல பெண்கள் லைக் செய்துள்ளனர். அவ்வாறு தனது வீடியோவை லைக் செய்யும் பெண்களுடன் சாட்டிங் செய்வது இவரது வழக்கம். அதன்படி, பல பெண்களிடம் தொடர்பு எண்ணை பெற்று, பழகி வந்துள்ளார். ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதாலும், தன்னை வசதியானவர் என கூறியதாலும் பலர் இவரது வலையில் விழுந்தனர். இவர்களில் வசதியான பெண்களை தெரிவு செய்து, அவர்களிடம், வெளியில் சென்றபோது சிறிய விபத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

அவரமாக பணம் தேவை. உங்களிடம் இருந்தால் கொடுங்க. வீட்டுக்கு வந்து, திருப்பி கொடுத்து விடுகிறேன், என கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளான். குறிப்பாக, வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகள் இங்கு தனியாக இருப்பது தெரிந்தால், அவர்களுக்கு வேண்டியதை செய்வது போல் நடித்து, பலரிடம் பணம் பறித்துள்ளான். சென்னை மட்டுமின்றி வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பெண்கள் இவனிடம் ஏமாந்துள்ளதாக பொலிசார் கூறினர்.

மேலும், வெளி மாநிலங்களில் உள்ள பெண்களை சந்திக்க செல்லும்போது, டிப்டாப் உடை மற்றும் கவரிங் நகைகளை அதிகளவில் அணிந்து, விமானத்தில் செல்வது இவரது வழக்கம். ஒவ்வொறு பெண்ணிடமும் ஒவ்வொறு செல்போன் எண்ணில் பேசியுள்ளார். ஒரு பெண்ணை ஏமாற்றியதும், அந்த சிம்கார்டை தூக்கி வீசுவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட சில திருமணமான பெண்கள் பொலிசாரை தொடர்பு கொண்டு, தங்கள் கணவருக்கு தெரியாமல் பணத்தை கொடுத்தோம். அவருக்கு தெரிந்தால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, வாழ்கை பாதிக்கப்படும் என்ற பயத்தில் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதுபோன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும் என கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட விக்னேஷிடம் இருந்த 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ள பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டால், இன்னும் வேறு என்ன? பித்தலாட்டம் எல்லாம் செய்தான் என்பது தெரியவரும்.




You cannot copy content of this Website