கிரைம்

“நடிகையின் குமுறல்” என்னை காசுக்காக விலை போனவள், கொலைகாரி என்றெல்லாம் மிரட்...

Quick Share

பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய வீட்டில் கடந்த மாதம் ஜூன் 14-ம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் இயற்கையானது அல்ல ரசிகர்கள் பல எதிர்ப்புகள் எழுப்பி வருகின்றனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் கூட அவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்பதை போலீசாரால் கண்டறிய முடியவில்லை.

தற்போது சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி, “நீ காசுக்காக விலை போனவள் கொலைகாரி, நீ பாலியல் வன்கொடுமை செய்யப்படுவாய் என இன்ஸ்டாகிராமில் இருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக மும்பை சாண்டா கிருஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

மும்பை சாண்டா கிருஸ் பகுதி காவல்துறை துணை ஆணையர் அபிஷேக் திரிமுகே (மண்டலம்- IX), ”ரியா சக்ரபோர்த்தி புகாரின் பேரில் மிரட்டல் விடுத்த இரண்டு இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிராக ஆபாச செய்திகளை அனுப்பி அச்சுறுத்தியதாக குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிரிவின் 507, 509 தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67 (ஆபாசப் பொருள்களை மின்னணு வடிவத்தில் வெளியிடுவதற்கு அல்லது கடத்துவதற்கான தண்டனை) 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ள காதலனுக்காக கணவனை மது ஊற்றி கொன்ற மனைவி, ஆதரவில்லாமல் தவிக்கும் 2 பெண் குழந்தைகள் !!

Quick Share

கள்ளகாதலனுக்காக ஓன்று சேர்ந்து கணவனுக்கு மது ஊற்றி கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, கீழாத்துகுழி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தேவராஜ் (30) – புஷ்பா(27) தம்பதியர். இவர்களுக்கு 8 மற்றும் 5 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் இந்நிலையில் புஷ்பா மற்றும் தேவராஜ் கர்நாடக மாநிலம், மைசூரில் இருக்கும் மிளகு தோட்டத்திற்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கணவனும் மனைவியும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

தேவராஜின் மனைவி புஷ்பாவிற்கும், மிளகு தோட்டத்தில் அவருடன் பணிபுரிந்த கல்வராயன்மலை, கீரகடை கிராமத்தைச் சேர்ந்த மணி (23) என்பருக்கும் தகாத கள்ளஉறவு ஏற்பட்டுள்ளது.

சொந்த ஊருக்கு திரும்பி வந்த பின்னும் அவர்களின் உறவை தொடர்ந்துள்ளனர். அடிக்கடி போனில் பேசுவதை கவனித்த தேவராஜ் ஒரு கட்டத்தில் மனைவி வேறொருவருடன் உறவில் உள்ளார் என்பதை அறிந்து அவரை கண்டித்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் தேவராஜை புஷ்பாவும் மணியும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இதனால் கடந்த, 2-ம் தேதி, தேவராஜை, புஷ்பா அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து சுயநினைவை மறக்கடிக்க செய்துள்ளார். அதைத்தொடர்ந்து தன் கள்ளக்காதலன் மணிக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறும் கூறியுள்ளார். மணி தனது மைத்துனர் சுரேஷுடன் வந்து தேவராஜின் வாயில் துணி வைத்து அடைத்து கொலை செய்துள்ளனர்.

கொலை செய்தபின் உடலை இருவரும் பைக்கில் தூக்கி கல்வராயன்மலை வனப்பகுதியில் வீசியுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். கணவரை கொலை செய்த புஷ்பா மற்றும் அவரின் கள்ளக்காதலன் மணியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு உதவி புரிந்த சுரேஷை போலீசாரை தேடி வருவதாக கூறியுள்ளனர்.

கடந்த 7-ம் தேதி கல்வராயன்மலை வனப்பகுதியில் தேவராஜ்ஜின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வழக்குபதிவு செய்த கரியாலுார் போலீசார் இவை அனைத்தையும் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற சிறுமி-பக்கத்துவீட்டுக்காரனால் கழுத்து நெரித்து ...

Quick Share

 7 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு பாலத்தின் அடியில் வீசப்பட்ட சம்பவத்தில், அந்த சிறுமியின் தாயார் பல அதிர்ச்சி தரும் தகவல்களை கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த வடலிவிளை இசக்கியம்மன் கோவில் அருகில் உள்ள சிறிய பாலத்தின் அடியில் தண்ணீர் பிடிக்கும் வெற்று டிரம்மில் 8 வயது சிறுமி உடலில் காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது கடந்த 16-ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின், பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக கிடந்த சிறுமி, கல்விளை இந்திராநகரைச் சேர்ந்த சேகர் – உச்சிமாகாளி தம்பதியின் மகள் என்றும், அவர் 3-ஆம் வகுப்ப் படித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக உச்சிமாகாளி, கணவரை பிரிந்து கூலி வேலை செய்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று, வழக்கமாக உச்சிமாகாளி கூலி வேலைக்குச் சென்றுவிட்ட, காலை 10.30 மணிக்கு பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பிரேதபரிசோதனை அறிக்கையில், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை, குழந்தை கழுத்து நெரித்ததன் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் இந்திராநகரைச் சேர்ந்த முத்து ஈஸ்வரன் (20), நந்தீஸ்வரன் (20) ஆகியோரை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுமியின் தாயார், தன்னுடைய மகளின் உடலில் கடித்து வைத்தது போன்ற ரத்த காயம் இருந்தது, டிரம்முக்குள் எடுக்கும் போது நாங்கள் பார்த்தோம் என்று கூறியுள்ளார். உயிரிழந்த சிறுமி, ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அருகில் இருக்கும் முத்து ஈஸ்வரன் வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார்.

இது முத்து ஈஸ்வரனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் படி சம்பவ தினத்தன்று டிவி பார்ப்பதற்கு அங்கு சென்ற போது, சிறுமியை வெளியில் அனுப்பி முத்து ஈஸ்வரன் வீட்டை பூட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி வீட்டின் மீது கல் எறித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடும் கோபமடைந்த முத்து ஈஸ்வரன், சிறுமியை கழுத்தை நெரித்துள்ளார். அதன் பின், சிறுமியை டிரம்மில் போட்டு, பாலத்திற்கு அடியில் போட்டு வந்துள்ளார். இதற்கு அவரின் நண்பர் நித்தீஸ்வரர் உதவியுள்ளார். முத்து ஈஸ்வரன் குழந்தையின் கழுத்தை நெரித்தவுடன் மயங்கி விழுந்துள்ளார். அவர் உயிரிழக்கவில்லை, மயங்கிய சிறுமியை தான், அங்கிருந்து சுமார் 2 கி.மீற்றர் தொலைவில் இருக்கும் ஓடை பாலத்தில் போட்டுள்ளனர்.

சுமார் 42 நிமிடங்கள் சிறுமி, டிரம்மிற்குள்ளே உயிருக்கு போராடி, துடி துடித்து பரிதாபமாக இறந்துள்ளார். சிறுமியின் உடல் மற்றும் உதட்டில் கடித்து வைத்தற்கான காயம் இருந்ததுள்ளது. தலையில் ரத்த காயம் இருந்ததாகவும், அந்த சிறுமியின் தாயார் கூறியுள்ளார். மேலும், சிறுமியை வீட்டுக்குள்ளே வைத்து வன்கொடுமை செய்து, அதன் பின்பு தான் டிரம் உள்ளே போட்டுள்ளனர். இவன் தான் என் குழந்தையை கொன்றவன், ஏற்கனவே இவன் கஞ்சா விற்றுகிட்டு இருந்தவன், போதையில் தான் இந்த அக்கிரமத்தை அவன் செய்திருக்கிறான் என்று தாய் கதறி அழுகிறார்.

பிரேதபரிசோதனை முடிவு வெளிவந்தாலும், தாயார் கூறும் தகவல்களால் சிறுமியின் மரணம் மர்மமாகவே உள்ளது. மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக 4 லட்சத்து 12 ரூபாய்க்கான காசோலையும், அவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு பட்டாவும் அப்பகுதி மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டுள்ளது. மொத்த 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தருவதாக மாவட்ட கலெக்டர் உறுதியளித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

என் சாவுக்கு காரணம் பேய் தான்- கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த இளம்பெண்!

Quick Share

என் சாவுக்கு காரணம் பேய் தான் என இளம்பெண் ஒரு கடிதம் எழுதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கோபி. கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளான லத்திகா என்பவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். தற்போது கொரோனா காரணமாக விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடிய லத்திகா அதன்பின் எவரிடமும் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வேடசந்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அவரது அறையில் ஒரு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் லத்திகா பென்சில் மூலமாக தனது தற்கொலைக்கு காரணம் பேய் என்று எழுதியிருந்தார்.

மேலும், அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது: “அப்பா, அம்மா யாரோ என்னை பயமுறுத்துராங்க. அப்பா நைட்டு தூக்கம் இல்லை. என்ன சாக வானு கூப்பிடுறாங்க. இதை சொன்னா எல்லாரையும் கொல்லுவேன் என்று சொல்லுது அந்த பேய். என்ன சாக கூப்பிடுது என்னை ஏதாவது பண்ண சொல்லுதுபா இல்லைனா நம்ம குடும்பத்தை அழிப்பேன்னு சொல்லுதுபா. யாரோ உங்களை வசியம் பண்ணனும்னு நினைக்கிறாங்க என்னோட பொருள் நான் பயன்படுத்திய எதுவும் தயவு செய்து வீட்டில் வைக்க வேண்டாம்.

எல்லாம் நன்மைக்கே தம்பி தங்கச்சி நீங்க அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கங்க. லவ் யூ மை ஃபேமிலி’ என்று அந்த கடிதத்தில் லத்திகா எழுதி வைத்துள்ளார். இக்கடிதத்தை கைப்பற்றிய போலீசார் கடிதத்தில் எழுதி இருப்பதின் உண்மை தன்மை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லத்திகா பயன்படுத்திய செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கையில் வீட்டை காலி செய்ய சொல்லி உரிமையாளர் நெருக்கடி – விரக்தியடைந்த தாய்2 ...

Quick Share

சிவகங்கையில் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் நெருக்கடி கொடுத்ததால் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை அருகே குறிஞ்சி நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தனது மகன் அபிஷேக், மகள் மங்கையர் திலகம் ஆகியோரை படிக்க வைப்பதற்காக சிவகங்கை குறிஞ்சி நகரில் ஒத்திகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார்.

அங்கு தனது குழந்தைகளுடன் வசித்து வந்த காளிஸ்வரியிடம் ஒத்திகைக்கு எடுத்த காலம் முடிவதற்கு முன்பே வீட்டின் உரிமையாளர் காலி செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த காளிஸ்வரி 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றதோடு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட காளிஸ்வரி, தங்களது சாவிற்கு, வீட்டின் உரிமையாளர்தான் காரணம் என்று வீட்டின் சுவற்றில் எழுதி வைத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை போலீசார், 3 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர. மேலும், தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் மிரட்டியதால் குழந்தைகளுடன், தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் சிலை அவமதிப்பு – தானாக முன்வந்து கிருஷ்ணன் என்பவர் போலீசாரிடம் சரண்R...

Quick Share

கோவையில் பெரியார் சிலை மீது காவி் சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் பாரத்சேனா அமைப்பை சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் சரணடைந்துள்ளார்.

கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலை மீது, நேற்று இரவு, காவி சாயம் பூசப்பட்டது.இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஈ.வெ.ரா., ஆதரவாளர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது.

கடந்த 1995ம் ஆண்டு, கோவை – பொள்ளாச்சி சாலையில், சுந்தராபுரத்தில் ஈ.வெ.ரா.,வின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டது.

கோவையில் உள்ள மூன்று முக்கிய சிலைகளில் இதுவும் ஒன்று. இந்த சிலையின் முன், திராவிட கழகத்தினரால், பல்வேறு விதமான போராட்டங்களும், பகுத்தறிவு சார்ந்த சிந்தனை நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும். திராவிடர் கழகத்தினரால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த சிலை மீது, காவி சாயம் பூசப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈ.வெ.ரா., தொண்டர்களும் தி.மு.க., – ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் இன்று காலை அந்த பகுதியில் ஒன்று கூடி, ‘சாயம் பூசிய நபர்களை கைது செய்ய வேண்டும்’ எனக் கோஷம் எழுப்பினர். குனியமுத்தூர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருண்கிருஷ்ணன் என்பவர் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் பாரத்சேனா அமைப்பை சேர்ந்தவர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய மர்ம நபர்கள் -அதிர்ச்சி பின்னணி என்ன ??

Quick Share

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஈ.வெ.ராமசாமி சிலைக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட குழுவினரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் ஈ.வெ.ரா., ஆதரவாளர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு, கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலை மீது, காவி சாயம் பூசப்பட்டது.

கடந்த 1995ம் ஆண்டு, கோவை – பொள்ளாச்சி சாலையில், சுந்தராபுரத்தில் ஈ.வெ.ரா.,வின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டது. கோவையில் உள்ள மூன்று முக்கிய சிலைகளில் இதுவும் ஒன்று.

இந்த சிலையின் முன், திராவிட கழகத்தினரால், பல்வேறு விதமான போராட்டங்களும், பகுத்தறிவு சார்ந்த சிந்தனை நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும். திராவிடர் கழகத்தினரால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த சிலை மீது, காவி சாயம் பூசப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈ.வெ.ரா., தொண்டர்களும் தி.மு.க., – ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் இன்று காலை அந்த பகுதியில் ஒன்று கூடி, ‘சாயம் பூசிய நபர்களை கைது செய்ய வேண்டும்’ எனக் கோஷம் எழுப்பினர். குனியமுத்தூர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

அறந்தாங்கி 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய கைதி ராஜா தேடுதல் வேட்டைக...

Quick Share

புதுக்கோட்டை அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் போலீசாரிடமிருந்து தப்பியோடிய நபர் 15 மணி நேரத்திற்கு பின் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அறந்தாங்கியை அடுத்த ஏம்பலில் சிறுமி கொல்லப்பட்டது தொடர்பாக வீட்டருகே வசிக்கும் சாமிவேல் என்ற ராஜாவை போலீசார் கடந்த 1-ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் ராஜா மீது போக்சோ சட்டம் பதியப்பட்டதால் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்தபின்பு பரிசோதனை முடிவுகளை பெற்று கொள்ளச் சென்றபோது, நேற்று ராஜா தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து மோப்ப நாய்களின் உதவியுடன் அவர் தேடப்பட்டு வந்த நிலையில், முள்ளூர் விளக்கு பிரிவு சாலையில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் பதுங்கி இருந்த ராஜாவை போலீசார் பிடித்தனர்.

இதனிடையே ராஜா தப்பியோடியது தொடர்பாக இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கணவனின் உண்மை முகம் அம்பலமானதால் தற்கொலை செய்து கொண்ட மனைவி..

Quick Share

கணவனின் உண்மை முகம் அம்பலமானதால், தற்கொலை செய்து கொண்ட மனைவி, தன்னுடைய மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து பெற்றோர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சென்னை, ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விஜயகுமாருக்கு திருமணத்தின் போது, 50 சவரன் நகைகளும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனமும், வீட்டுக்கு தேவையான அனைத்துத் பொருட்களும், வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மாமியார், ஷோபனாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ஆபாச வார்த்தைகளால் வசைபாடி வந்ததாக கூறப்படுகின்றது. சென்னை ஐடி கம்பெனியில் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரிந்த விஜயகுமார், இந்த கொரோன ஊரடங்கு காரணமாக வேலையை இழந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டில் விஜயக்குமார் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரின் செல்போனுக்கு ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழைத்துள்ளார். அதில், தான் விஜயகுமாரின் காதலி என பேசத் துவங்கிய அவர், சுமார் 41 நிமிடம்

விஜயகுமாரின் மொத்த காதல் விளையாட்டுகளையும் அப்படியே ஷோபனாவிடம் போட்டு கொடுக்க, ஷோபனா கடும் வேதனையடைந்துள்ளார். அதன் பின், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர், தன்னுடைய செல்போனில் இரண்டு வீடியோக்களை பதிவிட்டுள்ளார். ஒன்றில் தன் கணவரின் பெண் தொடர்பு மற்றும், மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு வீடியோவில், தன்னை கணவர் அடிக்கும் போது , வீட்டுக்குள் சென்று அறையை பூட்டி அடிக்கச்சொல்லி மாமியார் தூண்டியதாக கூறும் ஷோபனா, தனது ஒரு வயதுக் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், தன்னுடைய அப்பா இறந்த இடத்தின் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தனது தாயிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த இரு வீடியோக்களையும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து விட்டு புதன்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வரும் பொலிசார் இரு வீடியோக்களையும், முன்னாள் காதலி பேசிய ஆடியோவையும் முன்னெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி கொடூர கொலை – கைதான ராஜா போலீசிடம் இருந்து தப்பி ஓட்...

Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் மேலகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமியின் சடலம், கடந்த 1-ம் தேதி கிளவிதம்மம் ஊரணியில் இறந்த நிலையில் தலை மற்றும் கை பகுதியில் காயங்களுடன் கண்டறியப்பட்டது.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்துக்கொல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூ கட்டும் தொழிலாளி ராஜா (27) என்பவரை பிடித்தனர்.

போலீஸ் நடத்திய விசாரணையில், சிறுமி அவரது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ”உன்னுடைய மாமா வயலில் நிற்கிறார். அங்கு அழைத்துச் செல்கிறேன்” எனக் கூறி அங்குள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கழுத்துப்பகுதியில் குத்தியும் தலையில் அடித்துக்கொலை செய்ததாகவும் ராஜா ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் இன்று மருத்துவ பரிசோதனைக்காக ராஜாவை இரண்டு காவலர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது கைவிலங்கை உருவிக்கொண்டு மருத்துவ மனையிலிருந்து ராஜா தப்பிச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து இரண்டு காவலர்களும் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தப்பிச்சென்ற ராஜாவை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார்,

மேலும் தப்பிச் சென்ற ராஜாவை பிடிக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள முள்ளூர் ராஜாபட்டி கரையாம்பட்டி தென்னந்திரையான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு மணி நேரத்தையும் தாண்டி தீவிரமாக தேடி வருகின்றனர்,

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த இளம்பெண்: தொட தயங்கிய அதிகாரிகள்!

Quick Share

பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் சடலமாக கிடந்ததால் கொரோனா பயத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகளும், மக்களும் தயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரியின் மத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வசித்து வரும் பெண் கவிதா(வயது 30, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னையில் வேலை செய்து வந்த கவிதா, கடந்த மார்ச் தான் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது, திருமணமாகி விவாகரத்தானவர் என்பதால் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மத்தூர் பகுதியில் உள்ள சில மருத்துவமனைகளில் கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார்.

கடந்த சில வாரங்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார், அந்த பெண் உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பெண் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பூட்டிய வீட்டுக்குள் காய்ச்சல் அறிகுறியுடன் பெண் இருப்பது குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மருத்துவ அலுவலர்கள் ஆம்புலன்சுடன் வந்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என சளி, ரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டனர். எனினும் கொரோனா தொற்றின் காரணமாக அப்பெண் இறந்திருக்கலாம் என நினைத்த அப்பகுதி மக்கள் அடக்கம் செய்ய மறுத்ததுடன் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சுகாதார மற்றும் வருவாய்த்துறையினர் கொரோனா பீதியால் அந்த உடலை அடக்கம் செய்ய தயக்கத்துடன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பதற்றம் அதிகரித்த நிலையில் காலையிலிருந்து மாலை சடலம் அப்படியே இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த மனித நேய மக்கள் கட்சியினர் சுமார் 15 பேர், கவச உடைகளுடன் அப்பெண் அடக்கம் செய்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி சடலமாக மீட்பு -போலீசார் தீவிர விசாரணை…!!!

Quick Share

சாத்தான்குளம் அருகே வடலிவிளையில் விளையாடச் சென்ற 7 வயது சிறுமி, காட்டுப்பகுதி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் அருகே கல்விளை இந்திராநகரை சேர்ந்த சேகர் என்பவருடைய மகள் 7வயது சிறுமி. இந்த சிறுமி இன்று காலை முதல் காணாமல் போன நிலையில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் வடலிவிளையில் உள்ள இசக்கி அம்மன் கோவில் அருகே உள்ள ஓடை பகுதியின் பாலத்திற்க்கு அடியில் ஒரு குழந்தையில் உடலை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சிறுமியின் உதடுகளில் ரத்த காயங்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக குழந்தை மீட்கப்பட்ட பகுதி மக்கள் கூறுவதாவது;

சிறுமியின் உடல் டிரம்மில் வைக்கப்பட்டு காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுளளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தண்ணீர் டிரம்மில் சிறுமியில் உடல் இருந்ததால் சிறுமி கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாரா 7 வயது சிறுமி? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்த போலீசார்; இது குறித்து 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்து வருகிறார்.




You cannot copy content of this Website