கிரைம்

மத்தியப்பிரதேசத்தில் வெறும் 30 நொடிகளில் ரூ.10 லட்சம் ரூபாயை திருடி சென்ற 10 வயது சிறுவ...

Quick Share

ம.பி.,யில் கூட்டுறவு வங்கி ஒன்றில் நுழைந்த 10 வயது சிறுவன், வெறும் 30 நொடிகளில் 10 லட்சம் ரூபாயை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் நீமுஜ் மாவட்டம் ஜாவத் என்னும் இடத்தில் கூட்டுறவு வங்கி உள்ளது. பகல் 11 மணியளவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த போது, வங்கி கேஷியர் அறைக்குள் இருந்த ரூ.10 லட்சம் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் கேஷியர் அறைக்குள் சிறுவன் நுழைந்து திருடி சென்றது தெரியவந்தது.

வங்கி பணபரிவர்த்தனை செய்வதற்காக கவுன்டர் முன்பாக வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்கையில், வங்கி கேஷியர் தனது கேபின் அறையை பூட்டாமல் பக்கத்து அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது 10 வயதுள்ள சிறுவன் ஒருவன் விறுவிறுவென வங்கியினுள் நுழைந்து, கேஷியர் கேபின் அறைக்குள் சென்றான். அவரது கல்லாப்பெட்டியை திறந்து, இரண்டு 500 ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்து, தான் வைத்திருந்த பையினுள் வைத்து ‛எஸ்கேப்’ ஆனான். இவை அனைத்தும் 30 நொடிகளில் அரங்கேறியுள்ளது.

அச்சிறுவன் கேஷியர் டேபிளின் உயரம் கூட இல்லாததால், வரிசையில் நின்ற யாரும் கவனிக்கவில்லை.

இச்சம்பவத்திற்கு முன்பாக கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு முன்பாக 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன், வங்கிக்குள் வந்து ஓரமாக காத்திருந்துள்ளான். சுற்றும் முற்றும் நோட்டமிட்டுக் கொண்டிருந்த அவன், கேஷியர் அறையை விட்டு கிளம்பியதும், வெளியே நின்ற அச்சிறுவனுக்கு ‛சிக்னல்’ கொடுத்ததும் சிசிடிவி.,யில் பதிவாகியுள்ளது. வெறும் 30 நொடிகளில் ரூ.10 லட்சத்தை திருடி சென்ற சிறுவனையும், அவனுக்கு உதவிய இளைஞனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கனடாவில் சொந்த குழந்தைகளை கத்தியால் கொடூரமாக தாக்கிய தாயார்!

Quick Share

கனடாவில் தனது இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தியதாக 36 வயது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவின் Weston Road and Finch Avenue West பகுதியில் தான் இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் கத்தி குத்து காயத்துடன் கிடந்த 4 வயது சிறுவன் மற்றும் 6 மாத பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களின் காயம் தீவிரமானவை எனவும், அதே சமயம் இருவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் 36 வயது தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி, மோசமான தாக்குதலில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

ஆனால் கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஏனெனில் அவர் குழந்தைகளின் அடையாளத்தை பாதுகாப்பதற்காக அவரது அடையாளம் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

கற்பழிக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்: அதிர்ச்சி பின்னணி!

Quick Share

 மாடு மேய்க்க சென்ற பெண் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் கீரைக்காட்டை சேர்ந்தவர் விவசாயி நடேசன். இவரது மனைவி தீபா (25). தம்பதியருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மாடுகளை வனப்பகுதியான எடக்காடு பகுதிக்கு தீபா ஓட்டிச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியடைந்த நடேசன், பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால், எங்கும் காணவில்லை. இந்நிலையில் நேற்று காலை உறவினர்களுடன் சென்று வனப்பகுதியில் தேடினார். அப்போது, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் தீபா சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அந்த இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனாவை பயன்படுத்தி சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்!

Quick Share

உத்திரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுக்ரட்டல் ஆசிரமம். ஆசிரமத்தை சுவாமி பக்தி பூஷண் கோவிந்த், மோகன் தாஸ் என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார். அவருடைய ஆசிரமத்தில் கல்வி பயில வந்த சிறுவர்கள், பல கொடுமைகளை அனுபவிப்பதாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் போனில் குழந்தைகள் நல வாரியத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து கோடியா மத் ஆசிரமத்திற்கு சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட 10 சிறுவர்களை ஆசிரமத்திலிருந்து மீட்டனர். இவர்கள் திரிபுரா மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

அப்போது மீட்கப்பட்ட சிறுவர்களை பரிசோதனை செய்த போது, அவர்களில் 4 பேர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அம்பலமானது. அதைத் தொடர்ந்து, போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட சாமியார், சிறுவர்களுக்கு கொரோனா மருந்து என்ற பெயரில் வலுகட்டாயமாக மதுபானத்தை கொடுத்துள்ளார்.

அதன் பிறகு, அவர்கள் போதையில் இருக்கும் போது, ஆபாச படங்களை வற்புறுத்தி பார்க்கவைத்துள்ளார். பின்னர், அவர்களை கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடுமைபடுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கூறுகையில், அவர் பேச்சைக் கேட்க மறுத்தால் கண்மூடித்தனமாக தாக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

சாமியார் மீது போக்சோ வழக்கின் கீழ் சுவாமி பக்தி பூஷண் கோவிந்த், மோகன் தாஸ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சாமியார் மீசாட்டில் இருந்து 65 கி.மீ தொலைவில் உள்ள சிசாலி கிராமத்தில் வசிப்பவர். அவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தை அமைத்தார், என்று முசாபர்நகர் எஸ்.எஸ்.பி அபிஷேக் யாதவ் கூறினார்.

தூக்கில் தொங்கிய நிலையில் மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவீட்டின் முன் சடலமாக மீட்பு – ப...

Quick Share

பாஜக எம்எல்ஏ தேபேந்திரநாத்தின் இன்று காலை உடல் அவரது வீட்டின் முன்பு தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார் .

மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள தினஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேபேந்திரநாத் ராய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஹேமதாபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகிய அவர், கடந்த ஆண்டு பாஜக-வில் இணைந்தார்.

இந்நிலையில், இன்று காலை தேபேந்திரநாத்தின் உடல் அவரது வீட்டின் முன்பு தூக்கில் தொங்கியவாறு கண்டறியப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேபேந்திரநாத் ராய் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக அம்மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அவர் பாஜகவில் இணைந்தது குற்றமா எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சந்தேகத்திற்கிடமாக தேபேந்திரநாத் ராய் கொல்லப்பட்டுள்ளது மம்தா பானர்ஜி அரசு சட்டம் ஒழுங்கில் தோல்வியடைந்துவிட்டதை காட்டுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/BJP4Bengal/status/1282526208723259392

29 வயது நபருடன் திருமணம்: நான்கே நாளில் தூக்கில் தொங்கிய 20 வயது இளம்பெண்!

Quick Share

திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (29), தையல் தொழிலாளியான இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகள் தேவி (20) என்பவருக்கும் கடந்த 8 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஞாயிறு அன்று தேவியும், அவரது கணவரும், தாராபுரத்தில் உள்ள அவரது அக்கா அழகேஸ்வரி வீட்டுக்கு, திருமண விருந்துக்கு சென்றனர். புதுமண தம்பதியருக்கு வீட்டில் உணவு தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, தேவி தனியறைக்கு சென்ற நிலையில் அங்கு அவரை அழைக்க முற்பட்ட போது, அவர் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்து அழுத அவர் குடும்பத்தினர், தாராபுரம் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பொலிசார் பிரேதத்தை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி, நான்கு நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் காதலியை காணச்சென்ற இளைஞன்: பின்னர் செய்த கொடூர செயல்!

Quick Share

லண்டனில் கர்ப்பிணியான முன்னாள் காதலி மற்றும் அவர்களது பிறக்காத குழந்தையை கண்மூடித்தனமான தாக்குதலில் கொலை செய்ததாக கூறி இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். 26 வயதான ஆரோன் மெக்கென்சி என்பவர், தூக்கத்தில் இருந்த தமது முன்னாள் காதலி கெல்லி ஃபவ்ரெல்லின் படுக்கையறைக்குள் நுழைந்து, 21 முறை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஃபெவ்ரெல்லி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். மேலும் நிறைமாத கர்ப்பிணியான அவர் அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். ஆனால் நான்கு நாட்களுக்கு பின்னர் மருத்துவமனையில் வைத்து அந்த குழந்தையும் மரணமடைந்துள்ளது.

மோட்டார் பைக் மீது ஈர்ப்பு கொண்ட ஃபெவ்ரெல்லி அதே ஈடுபாடு கொண்ட மெக்கென்சியுடன் நெருங்கி பழகியுள்ளார். ஆனால் இவர்களது இந்த உறவு கடந்த ஆண்டு துவக்கத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவை மாற்றிக் கொள்ள ஃபெவ்ரெல்லியிடம் மெக்கென்சி கெஞ்சியுள்ளார். ஆனால் மெக்கென்சிக்கு உளவியல் ரீதியான உதவி தேவைப்படுவதாகவும், நமது குழந்தை தொடர்பாக மட்டுமே இனி பார்க்கவோ பேசவோ அனுமதிக்க முடியும் என ஃபெவ்ரெல்லி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, இந்த உறவு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கடந்த மார்ச் மாதம் ஃபெவ்ரெல்லி தமது தாயாரிடமும் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே ஜூன் 29 ஆம் திகதி நள்ளிரவில், ஃபெவ்ரெல்லியின் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து மெக்கென்சி கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ளார். ஃபெவ்ரெல்லியின் உடல் முழுவதும் மொத்தம் 21 ஆழமான காயங்கள் இருந்துள்ளது.

இருப்பினும் பகலில் குழந்தையை பார்ப்பதற்காக மெக்கென்சி மருத்துவமனைக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. துவக்கத்தில் இந்த கொலைகளுக்கு தாம் பொறுப்பல்ல என தெரிவித்து வந்த மெக்கென்சி, இறுதியில் பொறாமையால் தாம் தாக்குதலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் நேர்ந்த அவலம்.., 15 வயது சிறுமியின் கைகால்களை கட்டிப்போட்டு நள்ளிரவில...

Quick Share

இந்தியாவில் பல கிராமத்தில் மைனர் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அரசாங்க விதிப்படி அரசு நிர்ணயித்த வயதைவிட குறைவானவர்களுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என விதிகள் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி 15 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சனூர் என்ற பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று இரவு தனது அவருடைய கை கால்களை கட்டிவிட்டு வலுக்கட்டாயமாக இரவு 11 மணி அளவில் அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த கொடூரம் முடிந்து காலை விடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது அந்த சிறுமி அவருடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சம்பவம் சமூக நலத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் அந்த சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தாத்தாவின் பென்ஷன் பணத்தை பப்ஜி விளையாடி காலி செய்த சிறுவன் ? தொகை எவ்வளவு தெரியுமா

Quick Share

இந்தியா முழுவதும் பப்ஜி பேட்டில் கிரவுண்ட் எனும் மொபைல் கேமுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல லட்சக்கணக்கான அடிமையாகி உள்ளனர். பெரும்பாலான நேரத்தை இவர்கள் இந்த விளையாட்டிலேயே கழிக்கின்றனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் தாத்தாவின் பென்சன் வங்கி கணக்கில் இருந்த பணத்தை வைத்து பப்ஜி வீடியோ கேமில் காசை செலவழித்து உள்ளார். மேலும் விளையாட்டில் அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்பதற்காக பணத்தை செலவழித்துள்ளார்.

மேலும் இந்த யுத்தியை பள்ளியில் உள்ள ஒரு சீனியர் மாணவர் ஒருவர் இதை கற்றுக் கொடுத்ததாகவும் இதைப் பயன்படுத்தி சுமார் 2 லட்சம் வரை தாத்தா வின் வங்கி கணக்கில் இருந்து காலி செய்துள்ளான். எதேர்ச்சையாக இந்த சிறுவனின் தாத்தா வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை சரிபார்க்கும் போது மிகப்பெரிய தொகையை பேடிஎம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவருக்கு தெரியவந்தது.

இதனால் முதியவர் அதிர்ச்சி அடைந்து சிறுவனை கண்டித்துள்ளார். படிப்பதற்காக போன் வேண்டுமென இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு சிறுவன் இதுபோன்று செய்துள்ளான். சில படிப்பறிவு இல்லாத பெற்றோர்களை சிறுவர்கள் இப்படி ஏமாற்றுவது தொடர்கதையாக தான் இருக்கிறது.  பிள்ளைகளுடன் மொபைல் போன்களை கொடுப்பதே பெற்றோர்கள்தான் என்பது தவிர்க்க முடியாத உண்மை

சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த நபர் ..2 கிலோ கஞ்சா பிடிப்பு- போலீசாரால் கைத...

Quick Share

புதுச்சேரியில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வில்லியனூர் பகுதியை சேர்ந்த நடராஜன் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குறிவைத்து கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடத்துவதற்காக தாசில்தார் மற்றும் போலீசார் அவர் வீட்டுக்குச் சென்ற பொழுது வீட்டு முன்பு நின்றிருந்த சிறுவர்களுக்கு சிறிய அளவிலான கஞ்சா பாக்கெட்டுகளில் விற்கப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவர்களையும், கஞ்சா விற்ற மாரிமுத்துவையும் போலீசார் பிடித்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது 2 கிலோ அளவிலான கஞ்சா பாக்கெட்டுகள் பிடிபட்டன.

இதனையடுத்து மாரிமுத்துவை கைது செய்தபோலீசார் கொரோனா சோதனைக்கு பின் சிறையில் அடைத்தனர். கஞ்சா வாங்க வந்த சிறுவர்களை எச்சரித்து அனுப்பினார்.

கேம் விளையாடிய 11 வயது மகனை கொன்ற தாய், உடலை மறைத்து வைத்து தாய் செய்த வேலை !!

Quick Share

மகன் இரவு பகல் எனப்பாராமல் மகன் செல்போனில் கேம் விளையாடக்கூடாது என கூறி ஆத்திரத்தில் பெற்ற மகனையே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 33 வயதான அலெக்ஸாண்ட்ரா டகோகென்ஸ்கி என்ற பெண்மணி திருமணமாகி விவகாரத்தானவர். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் 11 வயதுடைய ரஃபேல் என்னும் 10 நாட்களாக காணவில்லை மேலும் இதுபற்றிய புகாரையும் அலெக்ஸாண்ட்ரா போலீசாரிடம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தான் அலெக்ஸாண்ட்ராவின் வீட்டின் கேரேஜில் (வாகனங்கள் பழுதுபார்க்கும் இடம்) இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கேரேஜில் இருந்த அழுகிய சடலத்தை மீட்டு ஒருவாரமாக விசாரணை நடத்தினர். அதன் பிறகுதான் இறந்த சடலம் சிறுவன் ரஃபேல் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரஃபேல் தாய் அலெக்ஸாண்ட்ராவிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்துள்ளார். மேலும் தன் நடத்தையில் சந்தேகம் அடைந்து வாக்குவாதத்தில் மகன் வீட்டை விட்டு சென்று விட்டான் எனக்கூறி, போலீசாரின் விசாரணையை திசை திருப்ப முயன்றார்.

வீட்டிற்கு அருகிலுள்ள காட்டில், ஸ்னிஃபர் நாய்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.

மகனின் சடலத்தை ஓர் அட்டை பெட்டியில் பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்தார். பின்னர் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள வீட்டின் வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில கொண்டு சென்று அட்டை பெட்டியில் மறைத்து வைத்துவிட்டார்.

10 நாட்களுக்கு பின் அழுகிய சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசவே உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது தாயை பற்றி போற்றி அந்த சிறுவன் ஏற்கனவே போனில் ஒரு கவிதை எழுதியிருப்பதாக போலீசார் தாயிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை அதிலேயே கழிக்கின்றனர். மேலும் இந்த வீடியோ கேம் அவரது வாழ்க்கையாகவே மாறிவிடுகிறது.

குழந்தை வளர்ப்பதில் பெற்றோர்கள் ஆரம்பத்தில் அலட்சியம் காட்டுவதும் மொபைல் போனை காட்டி சோறு ஊட்டுவதும் இவை அனைத்திற்கும் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது.

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து வேறு ஒரு நபருடன் உறவு ;நல்லவர் போல் நாடகமாடியது அம்பலம்!

Quick Share

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் வசிப்பவர்கள் மனராம்-பப்பு தேவி தம்பதி(30) பப்பு தேவி, கணவனுக்கு தெரியாமல் வேறு ஒரு நபருடன் உறவு வைத்துள்ளார். இது கணவனுக்கு தெரியவந்துள்ளது. இதை சுதாரித்துகொண்ட மனைவி, கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி, மனராம் தூங்குவதற்கு முன்பு, அவருக்கே தெரியாமால் தூக்கு மாத்திரை கொடுத்துள்ளார் பப்பு தேவி.

அதைத் தொடர்ந்து, தன்னுடைய காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் மயக்க நிலைக்குச் சென்ற கணவனைப் பிடித்து இழுத்து, அவரது விரல்களில் கரண்ட் ஷாக் கொடுத்து கொடூரமாக இருவரும் கொலை செய்துள்ளனர். இதில், மனராம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தின் போது, மனராமின் காலில் அடிபட்டு ரத்தம் கசிந்துள்ளது. ஆனால், இவை அனைத்தையும் மறைத்து நல்லவர் போல் உறவினர்களிடம் பப்பு தேவி இத்தனை நாட்கள் நாடகமாடியுள்ளார். இதன்பின்னர், காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் தான், கொலையைச் செய்ததாக பப்பு தேவி வாக்குமூலம் அளித்துள்ளார். இதை அறிந்த உறவினர்களும், அப்பகுதி மக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.




You cannot copy content of this Website