கிரைம்

மனநலம் பாதிக்கப்பட்ட15 வயது சிறுமியை 3 மாதங்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்...

Quick Share

சென்னை அயனாவரத்தில் தன் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார் 15 வயதான சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், அவ்வப்போது தன் பாட்டியுடன் சண்டை போடுவது வழக்கம். இதனிடையே கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி பாட்டியுடனான சண்டை முற்றவே, வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் அவர்.

எங்கு போவது என தெரியாமல் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுமிக்கு அடைக்கலம் கொடுப்பது போல நைசாக பேச்சுக் கொடுத்திருக்கிறார் திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன். அவரது பேச்சை நம்பிய அந்த சிறுமி, அவருடன் சென்றிருக்கிறார். திருத்தணிக்கு சென்ற பிறகு சிறுமிக்கு நடந்த சம்பவங்கள் எல்லாம் கொடூரத்தின் உச்சம்.

வீட்டில் சிறுமியை தனி அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் வெங்கடேசன். வீட்டில் தன்னுடைய தாய் இருந்தபோதிலும், எந்த பயமும் இன்றி, சிறுமியை தொடர்ந்து தன் பாலியல் தேவைக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேலாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் வெங்கடேசனின் தாய் உள்ளுக்குள் தவித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் வேலை விஷயமாக வெங்கடேசன் வெளியூருக்கு சென்றதால், நிம்மதி பெருமூச்சு விட்ட அந்த தாய், சிறுமியை காப்பாற்றும் நோக்கி அவரை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார். இதையடுத்து திருத்தணி ரயில் நிலையத்தில் சிறுமி சுற்றித் திரிவதை கண்ட ரயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் சிறுமி கூறவே அதிர்ந்து போன ரயில்வே போலீசார், அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மீட்கப்பட்ட சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தந்த வெங்கடேசன் ஆந்திராவிற்கு சென்ற நிலையில் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த சிறுமி தன் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறி கடைசியில் பாலியல் கும்பலிடம் மாட்டிக் கொண்டார். இதுபோல் சாலைகளில் சுற்றித்திரியும் பிள்ளைகளை குறிவைக்கும் கும்பல், அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுகிறது.

ஊரடங்கு காலத்தில் சிறுமிகளின் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

11 மாத குழந்தையை தூக்கில் தொங்கவிட்ட இளம்தாய்: பின்னர் நடந்த சம்பவம்!

Quick Share

தமிழகத்தில் 11 மாத குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூர் அருகெ கந்திலி அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன், இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 11 மாதத்தில் குழந்தையொன்றும் உள்ளது. இந்நிலையில் சிலம்பரசனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது கவிதாவுக்கு தெரியவந்தது.

இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது, இதில், மனமுடைந்த கவிதா இன்று காலை கணவன் வேலைக்கு சென்ற பின்பு, தனது 11 மாத ஆண் குழந்தைக்கு தூக்கு மாட்டி விட்டு, கவிதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கவிதா வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் கவிதா சடலமாக கிடந்துள்ளார். குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது, எனினும் குழந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சிலம்பரசனை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜே.சி.பி வண்டியின் முன்வாளியை கொண்டு தரையில் நின்றவரை தாக்கிய ஓட்டுநர் – பகீர் வீ...

Quick Share

தெலங்கானா மாநிலத்தில் ஜே.சி.பி வண்டி ஓட்டுநர், வண்டியின் மண் அள்ளும் பகுதியைக் கொண்டு ஒருவரைக் காயப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இணையத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் ஜே.சி.பி இயந்திரத்தை ஓட்டுபவர், அந்த வண்டியின் மண் அள்ளும் பகுதியைக் கொண்டு தரையில் நிற்பவரைத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் தெலங்கானா மாநிலம் முழுகு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த வீடியோ குறித்து மங்காபேட்டா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கூறுகிறார்,

‘ஜே.சி.பி இயந்திரத்தை இயக்குபவருக்கும், தரையில் நின்று கொண்டிருந்தவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தரையில் நின்று கொண்டிருந்தவர் குடித்திருந்தார். அதனால், ஜே.பி.சி ஓட்டுநர் இயந்திரத்தின் மண் அள்ளும் பகுதியைக் கொண்டு தாக்கியுள்ளார். வண்டி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று விளக்கமளித்துள்ளார்.

https://twitter.com/ANI/status/1280755145312096256

ஊழியரை கடத்தி பிறப்புறுப்பில் சானிடைசரை தெளித்து சித்ரவதை செய்த மேலாளர்!

Quick Share

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வேலையிழப்பு, பொருளாதார சரிவு, வறுமை போன்றவை மக்களை வாட்ட ஆரம்பித்து இருக்கின்றன. அதிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தலை விரித்தே ஆடத்தொடங்கி இருக்கின்றன. தற்போது ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கோத்ரூட்டில் ஓவிய கண்காட்சி ஏற்பாடு செய்து நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் 30 வயது இளைஞர் ஒருவர் மேனேஜராக வேலை செய்து வருகிறார்.

வேலை தொடர்பாக டெல்லி சென்ற அவர் கொரோனா லாக்டவுன் காரணமாக அங்கேயே சிக்கிக்கொண்டார். தொடர்ந்து மே 17-ம் தேதி புனே திரும்பி இருக்கிறார். வெளியூரில் இருந்து வந்ததால் 17 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அவரது உரிமையாளர் சொல்லி இருக்கிறார். ஆனால் ஊழியர் கையில் காசு சுத்தமாக இல்லை. வேறு வழியின்றி கையில் இருந்த டெபிட் கார்டு, செல்போனை அடகு வைத்து தங்கியிருக்கிறார்.

இதனியிடையே கடந்த ஜூன் 13-ம் தேதி கம்பெனி உரிமையாளர் மற்றும் சிலரை சேர்த்துக்கொண்டு ஊழியரை பிடித்து, கடத்தி சென்று அடைத்து வைத்துள்ளார். மேலும், கம்பெனி பணத்தை செலவு செய்ததாக அவரை அடித்து, உதைத்து அவரது ஆணுறுப்பில் சானிடைசர் தெளித்து சித்திரவதை செய்துள்ளனர். இதையடுத்து ஒரு வழியாக அவர்களுடம் இருந்து தப்பித்த ஊழியர் காவல் நிலையத்தில் புகாரளிக்க தற்போது அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு அனுமதித்து இருக்கிறார்கள்.

கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து நகைக்கடையில் கொள்ளை-போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரம்&...

Quick Share

மகாராஷ்டிர நகைக்கடை ஒன்றில் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே வருகின்றனர். ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து மற்றவர்களுக்கு சேவை செய்கின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் திருடர்கள் பாதுகாப்பு உடை அணிந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். நகைகள் திருடு போயுள்ளதாக கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையர்கள் சிலர் முகக்கவசம், கையுறைகள், பாதுகாப்பு உடைகள் அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறிந்தனர்.

சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்துள்ள அவர்கள், கடையில் இருந்து சுமார் 780 கிராம் மதிப்பிலான நகைகளை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

உரிய விசாரணை நடத்தாமல் இளைஞரின் மூக்கு, பல் உடைத்த போலீசார்- வாக்குவாதத்தில் ஈடுபட்ட க...

Quick Share

விழுப்புரம் அருகே, இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் முத்துராமன். இவர் தற்போது அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி வருகிறார்.

வீடு முழுதும் அரசே கட்டிக்கொடுக்கும் என்பதால் வீடு கட்டும் பணிகளை திருமுண்டீஸ்வரம் கிராமத்தை சேர்ந்த மேஸ்திரி சுபாஷ் சந்திரபோஸ் கவனித்து வந்தார்.

கடந்த மாதம் முத்துராமன் வீட்டுக்கு ஒதுக்கப்பட்ட சிமெண்ட் மூட்டைகள் மற்றும் செங்கற்களை சுபாஷ்சந்திரபோஸ் எடுத்துச் சென்றார். முத்துராமன் அதைத் தடுத்த போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்காம் தேதி அன்று முத்துராமன் வங்கி கணக்கிற்கு அரசு செலுத்திய 25,000 ரூபாய் பணத்தை எடுத்து தர வேண்டும் என சுபாஷ்சந்திரபோஸ், கேட்டுள்ளார்.

ஏற்கனவே தன்னிடம் கேளாமல் சிமென்ட், செங்கற்களைத் துாக்கிச் சென்றதால் இப்போது பணம் தர முடியாது என முத்துராமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோபத்தில் அங்கிருந்து சென்ற சுபாஷ், திருவெண்ணெய்நல்லுார் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் தங்கவேல் மற்றும் காவலர் முருகன் ஆகியோரிடம், தன்னை முத்துராமன் தாக்கியதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனாத்தூர் கிராமத்திற்கு சென்ற காவலர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமனை வெளியே அழைத்தனர்.வெளியே வந்த முத்துராமனிடம் எவ்வித விசாரணையும் நடத்தாமல், உதவி ஆய்வாளர் தங்கவேல் தாக்கியுள்ளார்.

இருசக்கர வாகனத்தின் சாவியால் குத்தியதில் முத்துராமனுக்கு மூக்கில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இரண்டு பற்கள் உடைந்தன. அதைப் பார்த்து ஆத்திரமடைந்த அங்கிருந்த கிராம மக்கள் உரிய விசாரணை நடத்தாமல் ஏன் தாக்கினீர்கள் என கேட்டு காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காவலர்கள் இருவரும் தங்கள் பைக்கில் ஏறித் தப்ப முயன்றபோது கிராம மக்கள், பைக் சாவியைப் பறித்துக் கொண்டு அவர்களைச் சூழ்ந்து கொண்டு சிறைப்பிடித்தனர். தகவலறிந்த விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், விழுப்புரம் கோட்ட டிஎஸ்பி நல்லசிவம் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சிறைப் பிடித்து வைக்கப்பட்ட இரண்டு போலீசாரையும் கிராம மக்கள் விடுவித்தனர்

மனைவியின் உயிரை பறித்த ஒற்றை வார்த்தை: குடிபோதையில் கணவன் செய்த செயல்!

Quick Share

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியில் வசித்து வந்தவர் சிவகுமார்(31). இவர் சிற்ப தொழிலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிவகுமார், சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு தற்போது 5 மற்றும் 3 வயதில் இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் கொரோனோ பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சிற்ப தொழிலாளியான சிவகுமாருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் அவர் சமீபகாலமாக கீரை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமார் சமீபத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட சரண்யா அவரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிவகுமார் மனைவி சரண்யாவின் நடத்தையை சந்தேகப்பட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சரண்யா நள்ளிரவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிவகுமார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரண்யா ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் பெரும் வருத்தத்தில் இருந்த சிவகுமார் வீட்டிற்கு வந்து மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது அம்மா, அப்பாவை இழந்த இரண்டு குழந்தைகள் அனாதையாக நின்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மற்றுமொரு கொடூரம்: உயிருடன் எரித்து கொல்லப்பட்ட 14 வயது சிறுமி!

Quick Share

தமிழகத்தில் 14 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையின் அதவத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கங்கா தேவி என்ற 14 வயது மகள் உள்ளார். இன்று பிற்பகல் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

இருப்பினும் சிறுமி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், ஊருக்கு வெளிப்புற பகுதியில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார், இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிற்பகல் 1 மணி வரை வீட்டிலிருந்து வெளியே வந்த மாணவியை எரிந்த நிலையில் பார்த்த உறவினர்கள் அங்கேயே கதறி அழுதனர்.

மாணவியின் சடலத்திற்கு அருகே தீப்பெட்டி, பெட்ரோல் என அனைத்தும் இருந்துள்ளது. எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக இருக்கும் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். மேலும், சில தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுமி ஒருவர் இப்படி இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் பறிப்பு – ஜெர்...

Quick Share

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, இளம் பெண்களின் படங்களை எடுத்து மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்த கும்பலை ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த திருமணமான இளம் பெண் ஒருவர், எஸ்.பி., வருண்குமாரின் சிறப்பு அலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் ஒன்றை அளித்தார். அதில் இன்ஸ்டாவில் பதிவேற்றிய அவரது படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து ஒரு கும்பல் மிரட்டலில் ஈடுபட்டு வருதாக கூறியிருந்தார்.

மிரட்டலுக்கு அஞ்சியதால் அந்தக் கும்பல் அவரை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்ததாகவும் அதை வைத்து மிரட்டி ஏழரை லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததாகவும, தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

தான் மட்டுமல்லாமல் பல பெண்களிடம் அந்த கும்பல் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி , பின்னர் போட்டோக்களை மார்பிங் செய்து மிரட்டி வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதையடுத்துஅந்த பெண் பணம் அனுப்பிய கூகுள் பே, பேடிஎம், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும், அந்த பெண்ணிடம் பழகிவந்த மிரட்டல் நபரின் இன்ஸ்டா ஐ.டி. செயல்படும் ஐ.பி. முகவரியையும் சோதித்தனர். அதில் ஜெர்மனியில் இருந்து அந்த மோசடி கும்பல் செயல்பட்டது தெரிய வந்தது.

தொடர்ந்து விசாரித்த போது மார்பிங் மிரட்டல் கும்பலின் தலைவன் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த முகமது முகைதீன் எனத் தெரிய வந்தது.

அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட முகைதீனின் நண்பர்களான புதுச்சேரியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் நுார், சென்னையைச் சேர்ந்த பாசித்அலி, திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் பார்டு பைசுல், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜாசிம் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர்.

பின்னர் ஜாசம் கனி, பார்டு பைசுல் ஆகியோரை கைது செய்த ராமநாதபுரம் போலீசார், தமிழகத்தில் உள்ள மற்ற மூவரை தேடி வருகின்றனர்.

மேலும், ஜெர்மனியில் உள்ள முகமது முகைதீனை இந்தியா வர வைத்து கைது செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

கல்யாண கொண்டாட்டத்தில் புகுந்து கொடுரமாக தான் ஆசைப்பட்ட பெண்ணை கொன்ற கொடூரம் !!

Quick Share

உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியில் அஞ்சல் என்னும் 19வயது பெண்ணின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது காதலன் புகுந்து அஞ்சல் மற்றும் அவரது தந்தை ராஜ்குமார் கொடுரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் என்னும் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மீரட் பகுதியை சேர்ந்த அஞ்சால் என்ற இளம்பெண்ணிற்கு இரண்டு தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், இரவு நேரம் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. உறவினர்கள் பலருடன் கல்யாண குதூகலத்துடன் இருந்த நிலையில், திடீரென சிலர் மணப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

வீட்டிற்குள் புகுந்த காதலர் மற்றும் கூட்டாளிகள் துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை சுட்டுள்ளனர். இதில் அஞ்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அஞ்சாலின் தந்தை மருத்துவமணியல் பலியான நிலையில், அஞ்சாலின் சகோதரருக்கும் காயம் பட்டுள்ளது.

இதுகுறித்து அஞ்சாலின் மூத்த சகோதரர் அளித்த புகாரின் பெயரில், ‘சாகர் என்ற இளைஞர் ஒருவர் எனது தங்கையின் பின்னால் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், என் தங்கைக்கு சாகரை பிடிக்கவில்லை.

இதனால் அவரை எனது தங்கை தவிர்த்து வந்துள்ளார். இதன் காரணமாக, கோபத்தில் தங்கையின் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னதாக இரவு வீட்டிற்கு வந்த சாகர் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர், மீண்டும் தன்னுடன் எனது தங்கையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார். நாங்கள் மறுக்கவே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

போலீசார் தரப்பில் கொலை வழக்கு தொடர்பாக சாகரின் நண்பர்கள் இரண்டு பேர் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான சாகர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதை தலைக்கேறி உச்சம் அடைந்து சேற்றில் புரளும் போதை ஆசாமியின் வீடியோ !

Quick Share

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் மதுகடைகள் இயங்கி வருகின்றது. கொரோனா அதிகம் பரவியுள்ள பகுதிகளில் டாஸ்மார்க் திறக்க தமிழக அரசு தடை விதித்தது. பல மாவட்டங்களில் டாஸ்மாக் வியாபாரம் அமோகமாக நடந்து வருகின்றது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் மது அருந்துபவர்கள் நிதானமாக காத்துக் கொண்டு மது வாங்கி சென்ற காட்சிகளெல்லாம் வெளியானது.

பல இடங்களில் மது குடித்துவிட்டு அலப்பறை கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் சாலை அருகே வயலில் ஒரு ஒரு குடிமகன் குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் சேற்றில் படுத்து உறங்கிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. வெயிலுக்கு இதமாக சாலையோரம் இருக்கும் சேற்றில் படுத்து புரள்வது போதையின் உச்சகட்டம்.

துடிக்க துடிக்க கொலை செய்யப் பட்ட இளம் பெண்..! அழுகிய நிலையில் சடலம்.! அதிர்ச்சியில் பெ...

Quick Share

அழகு நிலையம் நடத்தி வந்த டிக் டாக் பிரபலம் ஷிவானி கொடூரமாக கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவை சேர்ந்த ஷிவானி தனது நண்பர் நீராஜ் உடன் சேர்ந்து அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த்துள்ளார். அடிக்கடி டிக் டாக்கில் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். இவரது டிக் டாக் வீடியோக்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

இந்த நிலையில் ஷிவானி திடீரென காணாமல் பெற்றோர் பொலீஸில் புகார் கொடுத்த நிலையில் நேற்றைய தினம் நீராஜ் தங்கள் அழகு நிலையத்தை திறந்துள்ளார். அதன் போது துர் நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதன் போது ஷிவானியின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்த நீராஜ் உடனடியாக பொலீஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் ஷிவானியின் சடலத்தை மீட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுபியுள்ளனர். இதனை தொடர்ந்து இடம்பெற்ற விசாரணை யில் ஷிவானியின் கழுத்து நெரித்த அடையாளம் இருப்பதுடன் உடலில் பல இடங்களில் காயம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஷிவானியின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோர் கூறுகையில் ஷிவானியை ஆரிப் என்ற இளைஞன் நீண்ட நாட்களாக பின் தொடர்ந்தார்.

ஷிவானியை காதலிக்கும் படி வற்புறுத்தினார். ஆனால் ஷிவானி ஆரிப்பின் காதலை நிராகரித்தார். இதனால் இவர்களுக்கிடையே முரண்பாடுகள் இருந்தது, இது பற்றி பொலீஸிலும் புகார் கொடுத்தோம், அவர்கள் எச்சரித்து அனுபினார்கள், இருப்பினும் ஆரிப் பின் தொடர்வதையும் தொல்லை செய்வதையும் நிறுத்தவில்லை ஆரிப் தான் எங்கள் மகளை கொலை செய்திருப்பான் என தெரிவித்துள்ளனர்..!!




You cannot copy content of this Website