மாற்றுத்திறனாளி பெண்ணை இரும்பு தடியை வைத்து விளாசிய உயர்அதிகாரி !! CCTV-ல் பதிவான அதிரவ...
ஆந்திராவில் சுற்றுலாத்துறை கீழ் உள்ள ஒரு ஓட்டலில் ஒப்பந்த அடிப் படையில் சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை உயரதிகாரி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லூரில் உள்ள ஆந்திர மாநில சுற்றுலாத் துறையின் கீழ் உள்ள ஒரு ஹோட்டலின் மேல் அதிகாரியாக இருப்பவர் பாஸ்கர். அலுவலகத்தில் ஒப்பந்த அடிப் படையில் சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று மாற்றுத்திறனாளி பெண் உயரதிகாரி பாஸ்கரிடம் ஏன் மாஸ்க் அணியவில்லை ? என கேட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுதல் கருத்தில் கொண்டு மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்தும் இந்த வழிமுறைகளை உயர் அதிகாரிக்கு கூறியுள்ளார். இதனால் எரிச்சலடைந்த உயரதிகாரி அந்தப் பெண்ணை தாறுமாறாக இரும்பு கம்பியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.
அந்த வீடியோவில், பாஸ்கர், முகமூடி அணியாமல், தனது கேபினிலிருந்து வெளியே வந்து, அந்த பெண்ணை தலைமுடியால் இழுத்து, இழுத்துச் சென்று, ஒரு பொருளைக் கொண்டு பலமுறை தாக்கியபோது, மற்ற சக ஊழியர்கள் தலையிட முயற்சிக்கிறார்கள்.
ஆத்திரம் அடங்காத அவர், பெண்ணை கீழே தள்ளி, தலைமுடியை பிடித்து அடித்தும், கட்டையால் கடுமையாக தாக்கியும் உள்ளார். ஜூன் 27ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பான நெல்லூர் போலீசார் பாஸ்கரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த செய்தி சுற்றுலா துறைஅமைச்சரை சென்றடைந்துள்ளது.
IPC 354, 355, மற்றும் 324 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதித்துறை ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.