கிரைம்

தமிழகத்தை உலுக்கிய இரட்டைக்கொலை: பிறப்புறுப்பில் எட்டி உதைத்தற்கான அடையாளங்கள்! –...

Quick Share

தமிழகத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கில், அதில் ஒருவருக்கு பிறப்புறுப்பில் எட்டி உதைத்தற்கான அடையாளங்கள் இருப்பது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். பொலிசார் அவர்களை மிகவும் மோசமாக தாக்கியதே, அவர்களின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இவர்கள் வைத்திருக்கும் செல்போன் கடையில் செல்போன் தராத ஆத்திரத்தில் குறிப்பிட்ட சில பொலிசார் இந்த செயலில் ஈடுபட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இவர்களின் மரணம் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என்றும் நெல்லை சிபிசிஐடி அதிகாரி இன்றே விசாரணை தொடங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், தற்போது பென்னிக்ஸின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்தற்கான அடையாளங்கள் இருப்பது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது.

பெண்னிக்ஸின் பின்பக்கத்தில் இருந்து இரத்தம் வெளியேறியதற்கான ஆதாரங்கள் வெளியாகியது. பென்னிக்ஸ் உடல் கொண்டு வரும் போது அவரை கிடத்தியிருந்த போர்வையில் ரத்தக்கறை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கணவன்: மகளையும் சூறையாட முயன்ற அவலம்!

Quick Share

 திருச்சி, கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்தவர் 41 வயதான தினேஷ் என்ற முகமது அஸ்லாம். இவருக்கும் முகமது பாரூக் என்பவருக்கும் கல்லூரி காலத்திலிருந்தே நட்பு இருந்து வந்தது. கடந்த 2005ம் ஆண்டு தினேஷ் முஸ்லிம் பெண் ஒருவரை காதலித்ததால் மதம் மாறினார், தன்னுடைய பெயரை முகமது அஸ்லாம் என மாற்றியும் கொண்டார். இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தது, இந்நிலையில் 2008ம் ஆண்டு புனித நீர் எனக்கூறி அஸ்லாமின் மனைவிக்கு கொடுத்துள்ளார் பாரூக்.

அதை குடித்தவுடன் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழ, வன்கொடுமை செய்ததுடன் அதை புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து அஸ்லாமின் தங்கை எரமிடமும், பாரூக்கின் மனைவி பாத்திமாவிடமும் கூறிக் கதறி அழுதுள்ளார். இதுகுறித்து 2008ம் ஆண்டு பொலிசில் புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை, இந்நிலையில் 9 ஆண்டுகளாகவே போட்டோவை காட்டி அஸ்லாமின் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

மேலும் இதுபற்றிய பிரச்னை வெடிக்காமல் இருக்க, பாரூக் தனது நண்பரான அஸ்லாமை மதுபோதையில் ஆழ்த்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஸ்லாமின் மகளுடனும் தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரமடைந்த அஸ்லாமின் மனைவி பாரூக் மீது பொலிசில் புகாரளித்தார். இதனைதொடர்ந்து வழக்குபதிவு செய்த பொலிசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காவல் துறையின் கோர முகம்: விசாரணை என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொல்லப்பட்ட அவலம்!

Quick Share

தென்காசியில் பொலிசார் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் ஆட்டோ ஓட்டுநர் குமரேசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தென்காசியின் வீரகேரளம்புதூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் குமரேசன் மீது செந்தில் என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மே மாதம் 8, 10 ஆகிய தேதிகளில் விசாரணைக்குச் சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோர் கடுமையாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. வெளியில் சொன்னால் குமரேசனின் தந்தையையும் அடிப்போம் என மிரட்டியதால் குமரேசன் யாரிடமும் சொல்லவில்லை.

இந்நிலையில் கடந்த 10ம் திகதி குமரேசன் ரத்தம் கக்கியதால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 12ம் திகதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பொலிசார் தன்னை சித்ரவதை செய்ததாக கதிரேசன் மருத்துவரிடம் கூறியுள்ளார், இதனால் அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பலத்த காயமடைந்ததாக கதிரேசனின் தந்தையிடம் மருத்துவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தன் மகனை துன்புறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குமரேசனின் தந்தை புகார் கொடுத்தார். இதனிடையே 16 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் சிகிச்சை பயனின்றி சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். இதனையடுத்து உறவினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கடைகளும் மூடப்பட்டன.

தொடர்ந்து குமரேசனின் சந்தேக மரணத்திற்கு காரணமானவர்கள் எனக் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், காவலர் குமார் ஆகியோர் மீது வீரகேரளம்புதூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட குமரேசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

காவல் துறையினரால் நேர்ந்த மற்றுமொரு கொடூரம்: 19 வயது இளைஞன் அடித்துக்கொலை!

Quick Share

கர்நாடகா போலீசாரால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞன் மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பிஜாப்பூர் மாவட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது, 19 வயதான சாகர் என்ற இளைஞரை பொலிசார் லத்தியால் அடித்ததில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் SSLC கணக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தனது நண்பருக்கு உதவுவதற்காக சாகர் விடைத்தாள்களை தூக்கி எறிந்ததாகவும், பணியில் இருந்த ஆசிரியர் அதை பார்த்து விட்டதால் தப்பிச் செல்ல முயன்ற போது தடுக்கி விழுந்து உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனை மறுத்துள்ள சாகரின் குடும்பத்தினர், தனது தங்கையை இறக்கிவிடுவதற்காக சாகர் சென்றதாகவும், எவ்வித முறைகேட்டிலும் சாகர் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சாகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர், அறிக்கை வந்த பின்னரே உண்மை வெளிவரும் என தெரிகிறது.

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 5 வயது சிறுமியை தனியாக அழைத்து கற்பழித்த 30 வயது கொடூரன் !!

Quick Share

மத்தியபிரதேச மாநிலம் ரைசனில் மாவட்டத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் (மொடக்பூர்) கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்தோடு திருமணத்தில் கலந்து கொள்ள சென்ற 5வயது சிறுமியை சந்தோஷ் சிங் ஆதிவாசி (30 வயது) என்னும் நபர் சிறுமியை தனியாக தூக்கி சென்று கற்பழித்துள்ளார்.

சந்தோஷ் சிங் ஆதிவாசி மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். சமீபத்தில் ஜாமீனில் வெளியேறியரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் சிங் ஆதிவாசி தனது குடும்ப உறுப்பினர்கள் திருமண விழாவில் கலந்துகொண்டிருந்தபோது சிறுமியை தனது வீட்டிற்கு தனியாக நடந்து கொண்டிருந்தபோது பிடித்துக்கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மோசமாக காயமடைந்த சிறுமி எப்படியாவது திருமண இடத்திற்கு நடந்து சென்று தனது குடும்ப உறுப்பினர்களிடம் நடந்த கொடூரத்தை கூறியுள்ளார். மேலும் அவர் பாலியல் தொல்லை கொடுத்த சந்தோஷ் சிங் ஆதிவாசியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

மகனை அடித்து கொன்றுவிட்டார்கள் என கதறி துடிக்கும் தாய், பெங்களுருவில் நடந்த கொடூரம்

Quick Share

பெங்களூர் பிஜாப்பூர் மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி பரீட்சை எழுத வந்த 19 வயது இளைஞன் காவல்துறையினரால் லத்தியால் அடித்து பிடிக்க முயன்ற போது இளைஞர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் விஜயபுராவில் நடந்து வரும் எஸ்.எஸ்.எல்.சி பரிட்சை மையத்தை தேர்வில் முறைகேடுக்கு உதவ முயற்சித்ததாக 19 வயது இளைஞர் மீது சந்தேகமடைந்த போலீசார் சிறுவனை லட்டி வைத்து நெருங்க முற்பட்டபோது அவர் பைக்கில் ஏறி தப்பித்ததாகவும், அப்போது காவலர் சிறுவனின் பைக்கை தாக்கியதில் அடிக்கும் போது சிறுவன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளான்.

இறந்த சிறுவன் அவர் தனது சகோதரியை விட சென்றதாகவும், எந்த முறைகேடிலும் ஈடுபடவில்லை என்றும் கூறுகின்றனர். மேலும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்: அனாதையான 8 மாத பிஞ்சு குழந்தை ..

Quick Share

தமிழகத்தில் கணவனால் இளம்பெண் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் குழந்தை அனாதையாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சரவணக்குமார் (24). இவருக்கும் ஜெயலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவரும் வேறு, வேறு பட்டாசு ஆலைகளில் கூலி தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். மாமியார் வீட்டின் அருகில் வாடகைக்கு வீடு பார்த்து குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த தம்பதிக்கு கயல் என்ற 8 மாத பெண்குழந்தை உள்ள நிலையில், ஜெயலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு சரவணக்குமார் அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது.

வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தனது மனைவியை தொழிற்சாலைக்கு வேலைக்கு போக வேண்டாம் என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயலட்சுமி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சமாதானம் பேசுவது போல மாமியார் வீட்டில் இருந்து தனது மனைவியை அழைத்து வந்த சரவணக்குமார் உடனே அவர் மீது ஆத்திரப்பட்டு அவரின் கழுத்து அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டான்.

இதில் பலத்த காயம் அடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் ஜெயலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை கண்டு ஜெயலட்சுமியின் தாய் கதறினார். இதற்கிடையே செங்கமலப்பட்டி கண்மாயில் பதுங்கி இருந்த கொலைகாரக் கணவன் சரவணக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். பெற்ற தாய் கொலை செய்யப்பட்டுவிட தந்தையும் ஜெயிலுக்கு சென்றுவிட, நடந்தது என்ன என்பதை அறியும் பருவமில்லா அவர்களின் 8 மாத பெண் குழந்தை கயல் வெள்ளந்தியாக விழித்துக் கொண்டிருந்தது.

வேதனையில் அழுது துடித்த ஜெயலட்சுமியின் தாயாரோ, தனது மகளே போய்விட்டாள் , இனி அவனுக்கு பிறந்த குழந்தையை தெருவில் வீசிவிடுங்கள் என்று அந்த குழந்தையை ஒதுக்க தொடங்கியது தான் வேதனையின் உச்சமாக இருந்தது. ஒரு கட்டத்தில் பசியால் தவித்த அந்த குழந்தை ஊராரின் கைகளில் இருந்து மாறி தனது தாயின் சகோதரியிடம் வந்து சேர, அவர் கொடுத்த உணவை சாப்பிட மறுத்து கதறியது அந்த பிஞ்சு. இந்த நிலையிலும் ஆத்திரம் தாளாமல் அழுது கொண்டிருந்த ஜெயலட்சுமியின் தாய், குழந்தையை வாங்க மறுத்ததால், சரவணகுமாரின் குடும்பத்தினரிடம் குழந்தையை கொடுத்துவிடலாம் என ஊரார் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் “Zomato” நிறுவன உடையில் கோழி கறி விற்பனை செய்த நபர் போலீசாரால் க...

Quick Share

சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பையில், கோழி கறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கடந்த 19-ந்தேதியில் இருந்து இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட அனுமதியில்லை.

இந்நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பையில், கோழி கறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கண்ணகிநகரை சேர்ந்த சரவணன் என்பவர், டெலிவரி பாய் போல தனியார் நிறுவன ஆடை அணிந்துக்கொண்டு கோழி கறியை திருட்டுத்தனமாக விற்பனை செய்தது, போலீசார் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

16 வயது இளம் டிக்-டாக் பிரபலம் தற்கொலை.., அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

Quick Share

கடந்த இரண்டு மாத காலத்தில் மன அழுத்தம் காரணமாக பிரபலங்கள் தற்கொலை செய்த சம்பவம் அதிகமாகி உள்ளது. டெல்லியில் 16 வயதான டிக்-டாக் பிரபலம் Siya kakkar தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

16 வயதேயான சியா காக்கர் வளர்ந்து வரும் நட்சத்திரமாக சமூக வலைத்தளங்களில் ஜொலித்து இருந்தார். சினிமாவில் ஹீரோயினாக அளவிற்கு அழகும் திறமையும் கொண்ட இவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் முழுவதுமாக வெளியாகவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2 மாதத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் முன்னாள் மேனேஜர் டிஷா, பிறகு சுஷாந்த் சிங் மற்றும் சீரியல் நடிகைகளின் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மன அழுத்தம் தற்போது மன வியாதியாக மாறி பலரின் வாழ்க்கையில் மோசமான நினைவுகளை விட்டுச் செல்கிறது.

https://www.youtube.com/watch?v=eBSBJjAhfMY

கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் அடித்துக் கொலை…!!! அதிர்ச்சி சம...

Quick Share

பட்டுக்கோட்டை அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் இவருக்கு சுந்தரி என்ற மனைவியும் சண்முகப்பிரியா, கௌசல்யா, சந்தியா, கௌசிகா என்ற நான்கு மகள்களும், ராஜா வசந்த சேகரன் (15) என்ற ஒரு மகனும் உள்ளனர். இதேபோல் சக்திவேல் வீட்டின் அருகேயே வசித்து வருபவர் குபேந்திரன் – சரோஜா தம்பதியினர். இவர்களுக்கு குருபிரவு (28) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சக்திவேல் மகன் ராஜா வசந்த சேகரனை, குபேந்திரன் மகன் குரு பிரபுவும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மீண்டும் இன்று சக்திவேல் குடும்பத்திற்கும் குபேந்திரன் குடும்பத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இரண்டு குடும்பத்திற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த கைகலப்பு சண்டையில் சக்திவேலின் மகள் சண்முகப்பிரியாவை, குபேந்திரன், அவரது மனைவி சரோஜா மற்றும் அவர்களுடைய மகன் குருபிரபு ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மண்வெட்டியால் தலையில் தாக்கியதில் சண்முகப்பிரியா சம்பவ இடத்திலிருந்து பரிதாபமாக உயிரிழந்தார். சண்முகப்பிரியாவை காப்பாற்ற சென்ற அவரது இரண்டு சகோதரிகளையும் குபேந்திரன் மற்றும் குரு பிரபு தாக்கியதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பட்டுக்கொட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்த சண்முகப்பிரியாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த சண்முகப்பிரியாவின் சகோதரிகளையும் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் குபேந்திரன் சரோஜா மற்றும் குரு பிரபு ஆகிய மூவரையும் கைது செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு மூவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட தகராறில் ஒரு இளம் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்திசாலித்தனமாக தம்பியை கொன்ற அண்ணன்: சாதூர்யமாக கண்டுபிடித்த போலிசார்!

Quick Share

தமிழகத்தின் சேலத்தில் நிலத் தகராறில் வானொலி பெட்டியில் ஜெலட்டின் குச்சிகளை நிரப்பி வெடிக்க செய்து தம்பியை கொலை செய்த அண்ணனை பொலிசார் கைது செய்துள்ளனர். சேலம் பனமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயியான மாரிமுத்து (59). சம்பவத்தன்று இவரது குடியிருப்பருகே அமைந்துள்ள தோட்டத்து கிணற்று அருகில் ஒரு பையில் வானொலி பெட்டி கேட்பாரற்று கிடந்தது. அதை எடுத்து வந்து மறுநாள் வீட்டில் மின் இணைப்பு கொடுத்து இயக்க செய்துள்ளார் மாரிமுத்து. அப்போது திடீரென வானொலி பெட்டி வெடித்து சிதறியதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதில் மாரிமுத்துவின் பேத்தி 12 வயது சிறுமி செளரூபியா, அண்ணன் மகன் வசந்தகுமாா் (37) மற்றும் உறவினா் நடேசன் (67) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து 3 பேரும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து விசாரணையை முன்னெடுத்தனர். மட்டுமின்றி வெடித்தது சக்திவாய்ந்த வெடிபொருள் என்பதை தடயவியல் நிபுணா்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் பரிசோதித்து உறுதி செய்தனா். விசாரணையில் மாரிமுத்துவின் அண்ணன் செங்கோடன் (64) என்பவருக்கு தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த வழக்கின் பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு மாரிமுத்து மற்றும் அவரது சகோதரா்கள் மேலும் 2 போ் கூட்டாக சோ்ந்து தங்களது தோட்டத்துக்குச் செல்லும் வழிக்கான நிலத்தை, விலை கொடுத்து வாங்கி உள்ளனா். அப்போது செங்கோடன் இணைய மறுத்துவிட்டாா். தற்போது அந்த வழி தேவை என்பதால் அதற்கான தொகையை தான் தருவதாக செங்கோடன் கூறியபோது மற்ற இரண்டு சகோதரா்கள் ஒத்துக்கொண்டனா்.

இதில் மாரிமுத்து மட்டும் மறுத்துவிட்டாா் எனத் தெரிகிறது.இதனால் மாரிமுத்துவை கொலை செய்ய திட்டமிட்ட செங்கோடன் ஜெலட்டின் குச்சிகள் நிரப்பிய வானொலி பெட்டி மற்றும் சில பொருள்களை ஒரு பையில் போட்டு அவரது வீட்டருகே வைத்து சென்றது தெரியவந்தது. மேலும் மாரிமுத்து எடுத்து வந்த பை போன்ற மற்றொரு பை மற்றும் அதிலிருந்த பொருள்களின் மீதி பொருள்கள் செங்கோடன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.

செங்கோடன் எலக்ட்ரிக்கல் வேலை செய்வதில் அனுபவம் கொண்டவா். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் இருந்து பாறை உடைக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை வாங்கி வந்து வானொலி பெட்டியில் இணைத்து, மின் இணைப்பு கொடுத்தவுடன் வெடிக்கும்படி செய்து தனது தம்பியை கொலை செய்துள்ளதை அவர் பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

கணவன் பிரியாணி வாங்கி தராததால் மனைவி தீ வைத்து தற்கொலை…!!!

Quick Share

மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதி.இங்கு ஒரு வீட்டில் குடியிருந்து வரும் தம்பதி மனோகரன் – சவுமியா.. 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மனோகரன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தார். அப்போது, அவரது வீட்டு ஹவுஸ் ஓனர், தனக்கு ஒரு பிரியாணி வாங்கி வருமாறுசொல்லி பணமும் தந்தார்.

இதை பார்த்த சவுமியாவும், தனக்கும் ஒரு பிரியாணி வேண்டும் என்று கேட்டிருக்கிறார் .ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் இல்லை, பிறகு வாங்கி தருவதாக சொல்லி உள்ளார்.எனினும் வீட்டுக்கு வரும்போது, குஸ்கா வாங்கி வந்துள்ளார்.. குஸ்காவை பார்த்ததும் சௌமியா கோபமாகி பேச ஆரம்பித்து கடைசியில் அதுதான் மெல்ல மெல்ல சண்டையாக மாறியுள்ளது. தம்பதிக்குள் வாக்குவாதம், தகராறு என வீட்டிற்குள் பூகம்பமே வெடித்தது.

கடைசியில் ஆத்திரமடைந்த சவுமியா, மனோகரனின் பைக்கில் இருந்த பெட்ரோலை பிடித்து கொண்டு, மொட்டை மாடிக்கு எடுத்து சென்று உடம்பில் ஊற்றி தீயையும் வைத்து கொண்டார். உடம்பெல்லாம் பற்றிய எரிய அலறி துடித்துள்ளார் சவுமியா.. இதை பார்த்து கதறிய மனோகரன், சவுமியாவை மீட் டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

தகவலறிந்து போலீசார் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர். தீவிர சிகிச்சையில் இருந்த சவும்யா, “எப்படியாவது அவர் என்னை காப்பாத்திடுவார்னு நினைச்சுதான் பெட்ரோலை ஊத்திக்கிட்டேன், அவசரப்பட்டுட்டேனே” என்று கதறி அழுதார்.ஆனால் 80 சதவீதம் உடம்பில் தீ பிடித்தால் அவரை காப்பாற்ற முடியவில்லை.இதையடுத்து சிகிச்சை பலனின்றி சவுமியா இறந்துவிட்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




You cannot copy content of this Website