கிரைம்

பெற்ற மகளை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய்: 6 வருடங்களுக்கு பிறகு வெளிச்சத்துக்க...

Quick Share

காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை கொன்று வீட்டுக்குள் புதைத்த தாயின் செயல் ஆறு வருடத்திற்கு பின்னர் அம்பலமாகியுள்ளது. திருப்பூரின் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் பேபி, இவர் கடந்த 2014ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 4 குழந்தைகளோடு வேலன் நகரில் உள்ள தாய் சகாயராணி வீட்டுக்கு சென்றுள்ளார். சகாயராணியோ, பாக்கியராஜ் என்பவருடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார், இந்நிலையில் ஒருநாள் எஸ்தர் பேபி மாயமானதாக பொலிசிடம் புகார் அளித்துள்ளார் சகாயராணி. கடந்த 6 ஆண்டுகளாக எஸ்தர்பேபியை பொலிசார் தேடி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

அதாவது, கடந்த மார்ச் மாதம் சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கு ஒன்றில் சேவியர் அருண் என்பவர் கைதானார். இவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக எஸ்தர் பேபியின் தந்தை புகாரளிக்க, சேவியர் அருணிடம் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது. 6 வருடத்திற்கு முன்பு கணவனை பிரிந்து குழந்தைகளோடு வீட்டிற்கு வந்த மகள் எஸ்தர் பேபியை, தனது குடும்பத்தை கவனித்துவந்த பாக்கியராஜின் ஆசைக்கு இணங்குமாறு தாய் சகாயராணி வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு உடன்பட மறுத்து எஸ்தர்பேபி சண்டையிட்டு வந்ததால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தன்னைப்பற்றி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் எஸ்தர் பேபி கூறியதால் மகள் என்றும் பாராமல் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் சகாய ராணி. அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி வீட்டிற்கு வந்த சேவியர் அருண் மற்றும் பாக்கியராஜ் ஆகியோருடன் சேர்ந்து எஸ்தர் பேபியை கத்தியால் குத்திக் கொலை செய்ததுடன் வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டார்.

யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, தன் மகளை காணவில்லை என பொலிசிலும் புகார் கொடுத்து நாடகமாடியுள்ளார். இதையடுத்து எஸ்தர் பேபி கொலை வழக்கு தொடர்பாக சேவியர் அருண், சகாயராணி, பாக்கியராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து எஸ்தர் பேபியின் சடலத்தை தோண்டி எடுத்த பொலிசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அரைநிர்வாண உடலில் குழந்தைகளை வைத்து ஓவியம் வரைய செய்த பகீர் காரியம்… ரெஹானா பாத்த...

Quick Share

தனது அரை நிர்வாண உடலின் மீது தன்னுடைய இரண்டு குழந்தைகளும் ஓவியம் வரையும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட கேரளாவைச் சேர்ந்த சமூக மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலை கோயிலுக்கு பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, பெண் சமூக ஆர்வலர்கள் பலர் கோயில் செல்ல முயன்றனர். அதில் கேரளாவை சேர்ந்த சமூக மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளர் பாத்திமா ரெஹானாவும் ஒருவர். ரெஹானா கோயிலுக்குள் செல்ல முயன்ற போது, இந்து அமைப்புகள் அவர் மீது தாக்குதல் நடத்தியதால் பிரச்சனையும் எழுந்தது.

இந்நிலையில் அவரது அரை நிர்வாண உடலில், அவரின் இரண்டு குழந்தைகளும் ஓவியம் வரைய வைத்து அந்த வீடியோவை அவருடைய யூடியூப் பக்கம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் உடலரசியல் என்ற தலைப்பில், அழகு என்பது எப்படி பார்ப்பவர்களின் கண்களுக்கு ஏற்றவாறு உள்ளதோ அதைப்போல ஆபாசம் என்பது பார்ப்பவர்களின் கண்களை பொருத்தே அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரெஹானா பாத்திமா, கடந்த சில ஆண்டுகளாகவே சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்துவருகிறார். மேலும் ஆண்களின் உடலைப்போன்றே பெண்களின் உடலும் சாதாரணமானது என்றும், பெண்களின் உடல் ஒரு போகப்பொருளோ அல்லது ஆபாச பொருளோ அல்ல என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். குறிப்பாக சமூகத்தில் அடுத்த தலைமுறையினராவது பெண்களின் உடலை வெறும் உடலாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும், அதனை வியாபார பொருளாகவோ அல்லது, ஆபாசமாக பார்க்ககூடாது எனவும் தெரிவித்துவருகிறார்.

இதன் தொடர்ச்சியாகவே அவர், அவருடைய குழந்தைகளை வைத்தே உடலரசியல் என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோவை கண்டித்து கேரளாவில் உள்ள பாஜக நிர்வாகி ஒருவர் ரெஹானா பாத்திமா மீது புகார் அளித்துள்ளார். அந்த வீடியோவில் 18 வயது பூர்த்தியடையடையாத அவரது குழந்தைகள் இருவர் உள்ளதால் இது குழந்தைகளுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவல்லா காவல்துறையினர் ரெஹானா பாத்திமா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சமூக வலைதளத்தில் ஆபாச வீடியோக்களை பதிவிடுவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஏன் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்பகுதியை முற்றிலுமாக சிதைந்தது கிடந்துள்ளது.., அதிரவைக்கும் குடும்பத்தார்

Quick Share

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த செல்போன் கடை வியாபரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் நடத்திய விசாரணையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தவர்கள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ். ஊரடங்கு சமயத்தில் கடையை அதிகநேரம் திறந்து வைத்திருப்பதாகவும். அதில் போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து அவர்கள் இருவரையும் விசாரணைக்காக போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் செய்தியாளர்களை தங்கை சந்தித்து பேசினார். அதில், தனது சகோதரனது பின்பகுதி முழுவதுமாக சிதைக்கப்பட்டுள்ளதாக கண்கலங்க தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர். மேலும் இதை பற்றி விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்திய தம்பதியினர் வீட்டில் திருட நுழைந்த பாகிஸ்தானி…!!!பெற்றோர் கொடூரமாக தாக்கி ...

Quick Share

துபாயில் இந்திய தம்பதியினர் வசிக்கும் வீட்டில் திருட நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் அந்த தம்பதியினரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இந்தியாவை சேர்ந்த ஹிரன் ஆதியா, மனைவி வித்தி ஆதியா மற்றும் 18 மற்றும் 13 வயதுடைய மகள்களுடன் வசித்து வந்தார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 18ம் தேதி இரவு பாகிஸ்தானை சேர்ந்த நபர், வீட்டிற்குள் திருட நுழைந்துள்ளார். முதலில், 2,000 திர்ஹாம் இந்திய மதிப்பில் 41,229 ரூபாய் இருந்த பர்சை திருடியுள்ளார். தொடர்ந்து வீட்டில் விலை உயர்ந்த பொருள் உள்ளதா என தேடியுள்ளார்.

அப்போது சத்தம் கேட்டு ஹிரன் மற்றும் வித்தி, ஒருவர் பின் ஒருவராக எழுந்தனர். இதனை கண்ட, குற்றவாளி இருவரையம் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த அவர்களது 18 வயது மகளின் கழுத்தில் திருடன் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார். கழுத்தில் லேசான காயமடைந்த அவர், காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கிடந்த கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை கண்டுபிடித்தனர். பின்னர் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ததுள்ளனர்.

இது குறித்து தெரிவித்துள்ள துபாய் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநரின் உதவியாளர் கர்னல் அடில் அல் ஜோக்கர், கைது செய்யப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். மேலும் இந்த திருட்டு சம்பவத்தை திட்டமிட்டு செய்ததாக கூறிய அவர், குற்றவாளி ஒரு வருடத்திற்கு முன்பாக ஹிரன் வீட்டில் வேலை செய்ததாக கூறினார். மேலும் அப்போதே வீட்டில் அதிக பணம் இருப்பதை பார்த்து அதனை திருடும் எண்ணம் குற்றவாளிக்கு ஏற்பட்டதாக கூறினார். இதற்காக திட்டமிட்டு ஒருவருடம் கழித்து இந்த குற்றச்செயலில் குற்றவாளி ஈடுபட்டுள்ளதாகவும் கர்னல் அடில் அல் ஜோக்கர் கூறினார்.

இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனவும் கொலைசெயப்பட்ட தம்பதியினரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளோம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

லத்தியை ஆசன வாய் பகுதியில் நுழைத்து… கண்ணீர்விட்டு கதறும் மனைவி – தந்தை மகன...

Quick Share

தமிழகத்தில் சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவத்தில், ரத்தம் சொட்ட சொட்ட பொலிசார் அடித்ததாக மனைவி புகார் அளித்துள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருக்கு பென்னிக்ஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் காமராஜர் சிலை அருகில் செல்போன் கடை வைத்துள்ளனர். கடந்த 19-ஆம் திகதி, கடையை கூடுதல் நேரமாக திறந்து வைத்திருந்தது கூறி பொலிசாரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, சாத்தான்குளம் எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் 2 பேரும் அங்கு வந்து, கடையை ஏன் இவ்வளவு நேரம் திறந்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். ஜெயராஜ் வாக்குவாதத்தில் இறங்கியதால், பொலிசார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஜெயராஜ்ஜை பொலிசார் தாக்கப்படுவதைக் கண்டு மகன் பதறியுள்ளார்.

இது குறித்து கேட்ட போது, பென்னிக்ஸையும் பொலிசார் தாக்கியுள்ளனர். அதன் பின், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் நேற்று முன்தினம் இரவு பென்னிக்ஸ் நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போதே உயிரிழந்துவிட்டதாகவும், இவரைத் தொடர்ந்து தொடர்ந்து ஜெயராஜும் மரணமடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அது எப்படி 2 பேரும் அடுத்தடுத்து இறக்க முடியும் என்று வணிகர்கள் ஒருபக்கம், பொதுமக்கள் மறுபக்கம், எதிர்கட்சிகள் இன்னொரு பக்கம் என சேர்ந்து இவர்களின் மரணம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயராஜ் மனைவி செல்வராணி, தன்னுடைய மகன், கணவன் மர்ம மரணம் குறித்து காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், என் கணவரையும், மகனையும் பொலிசார் ஆபாசமா திட்டினர். ரத்தம் சொட்ட சொட்ட அடித்திருக்கிறார்கள். எஸ்ஐ ரகு கணேஷ் நான் யார் தெரியுமா? கொம்பன் என மிரட்டி அடித்திருக்கிறார். என் கணவன், மகன் மரணத்துக்கு காரணமான பொலிசாரை சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் இப்புகார் அளித்துள்ளார்.

மேலும், சட்டையை பிடிச்சு அடித்து இழுத்து சென்றுள்ளனர். இதை என் மகன் பார்த்துவிட்டு, ஏன் என் அப்பாவை இப்படி இழுத்துட்டு செல்கிறீர்கள் என்று கேட்ட போது, நீயும் காவல்நிலையத்திற்கு வா என்று சொல்லிவிட்டு போயுள்ளனர். காவல்நிலையத்தில் என் கணவரை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆபாசமாக திட்டி கன்னத்தில் அடித்துள்ளார். இதனைப் பார்த்த என் மகன், ஏன் என் அப்பாவை அடிக்கறீங்க என்று கேட்ட போது, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் பால்துரையிடம் எனது மகனையும் அடிக்க சொல்லியிருக்கிறார். இதற்குபிறகுதான், எஸ்ஐ பால்துரையும், பொலிசாரும் சேர்ந்து என் மகனை மூட்டுகளில் கம்பால் அடித்தனர். பொலிசார் அடித்த அடியில் பின்பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியுள்ளது.

இதனைப் பார்த்த என் கணவர், என் பையனை ஏன் இப்படி போட்டு அடிக்கறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீதர் என் கணவரையும் அடிக்க சொல்லியிருக்கிறார். எனது கணவரை கம்பால் அடித்து ரத்தம் சொட்டச்சொட்ட லாக் அப்பில் நிர்வாணமாக அடைத்துள்ளனர். இரவு 11.30 மணிக்கு வந்த எஸ்ஐ ரகு கணேஷ், நான் யார் தெரியுமா? கொம்பன் என்று கூறி கெட்ட வார்த்தைகளில் திட்டி அவரும் அடித்துள்ளார். இதெல்லாம் தெரிந்து நான் காவல்நிலையத்திற்கு சென்று பார்த்தேன். அங்கே எனது கணவரும் மகனும் காயத்துடன் நின்றிருந்தனர். 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.

நீதிமன்றத்தில்போய் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டனர். ஜுன் 21-ஆம் திகதி என் கணவரையும் மகனையும் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு எனது கணவர் ஜெயராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அதன் பின் நேற்று காலை எனது மகன் பென்னிக்ஸ் இறந்துவிட்டான் என செய்தி வந்தது. என் கணவரும் மகனும் சாத்தான்குளம் பொலிசார் அடித்துதான் இறந்துள்ளார்கள். காட்டுமிராண்டி தனமாக அடித்து கொலை செய்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவல் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், பால்துரை, ரகு கணேஷ், காவலர்கள் வேலுமுத்து, ஜேசுராஜ் சாமத்துரை, பாலா, தன்னார்வ தொண்டர்களான கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா மேலும் தொடர்புடைய நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை விசாரணை செய்து நீதி, நிவாரணம் பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று செல்வராணி புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், பென்னிக்ஸை பொலிசார் தாக்கியபோது, அவரது ஆசன வாய் வழியே லத்தியால் குத்தி கொடுமைப்படுத்தியதில் காயம் ஏற்பட்டு ரத்த கசிவும் ஏற்பட்டதாம். தன்னால் சிறுநீர்கூட கழிக்க முடியவில்லை என்று அங்கிருந்தோரிடம் பென்னிக்ஸ் அழுததாக தகவல் வெளியானதால், இதை பச்சை படுகொலை என்றே பொதுமக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

தந்தையின் காதில் பூச்சி மருந்தை ஊற்றி கொன்ற மகன் மற்றும் குடும்பத்தார்!

Quick Share

தினந்தோறும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்த கணவனை குடும்பத்தார் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (50). ஓட்டுநரான இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதால், அடிக்கடி மது அருந்திவிட்டு குடும்பத்தில் தகராறு செய்வதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளிடமும் தகராறு செய்து வந்ததாகவும், மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தாமாகவே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் ராஜசேகர், மனைவி, தாய், மகனிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனைவி சுகுணா (40), மகன் ரவிவர்மன் (23), தாய் செல்வி (70) ஆகியோர் சேர்ந்து ராஜசேகரை கட்டிப்போட்டு காதில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜசேகரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராஜசேகரின் மனைவி சுகுணா, தாய் செல்வி, மகன் ரவிவர்மன் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் 40 வயது பெண்ணிடம் இளைஞர் செய்த சேட்டை..,செருப்பால் வெளுத்து வாங்கிய சம்...

Quick Share

சமீபகாலமாக பாலியல் சீண்டல் அதிகமாகி வருகிறது. ஊரடங்கு நேரத்தில் பொது இடங்களில் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் சற்று குறைவானது. தற்போது மக்கள் தளர்வு கொடுக்கப்பட்ட ஊரடங்கை விட்டு வெளியே வர தொடங்கிவிட்டதால் பொது இடங்களில் பாலியல் சீண்டல் அதிகமாகிவிட்டது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் என மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகக் காணப்படும்.

மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அருகே உள்ள சிகிச்சை மற்றும் செக் அப் செய்வதற்காக பலர் வந்துள்ளனர். அங்கு 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரிடம் வெகு நேரமாக இளைஞர் ஒருவர் சுற்றிக் கொண்டு வளைத்து சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் 40 வயது பெண்ணிடம் நெருங்கி அந்த இளைஞர் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. எரிச்சலடைந்த பெண் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற =இளைஞரை பிடித்துச் செருப்பால் வெளுத்து வாங்கினார். மருத்துவமனையில் இருந்த காவலரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தார். பாலியல் சீண்டலில் ஈடுபட இளைஞரை காவலர்கள் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கண்ணமங்கலம் அடுத்த கம்பம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது. நோயாளிகள் சிகிச்சைக்காகவும், செக் அப் செய்வதற்காக வரும் நோயாளிகளிடம் இப்படி சீண்டலில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது.

டீ- யில் சர்க்கரை குறைவாக இருந்ததால் மனைவியை கொன்ற கொடூர கணவன்!

Quick Share

டீ-யில் சர்க்கரை குறைவாக இருந்ததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார் (40). இவரது மனைவி ரேனு(35), மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இன்று காலை வழக்கம் போன்று, ரேனு பப்லு குமாருக்கு டீ போட்டு கொடுத்துள்ளார், அதில் சர்க்கரை குறைவாக இருந்ததால் இருவருக்கும் சண்டை வந்துள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பப்லு குமார், சமையலறை கத்தியால் ரேனுவின் கழுத்தை அறுத்துள்ளார். வலியால் ரேனு கதறித்துடிக்க மூன்று பிள்ளைகளும் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த பொலிசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் தலைமறைவான பப்லுவை தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் பயங்கரம்: தந்தை மற்றும் மகனை அடித்துக்கொன்ற போலீசார்!

Quick Share

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், செல்போன் கடை நடத்தி வருபவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்ததாக கூறி, இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களை கோவில்பட்டி கிளை சிறையில், அடைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அதை தொடர்ந்து இன்று காலை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து, உறவினர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாத்தான்குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்- நாகர்கோவில் சாலையில் நிகழ்ந்த இந்த சாலை மறியல் போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. தகவல் அறிந்து வந்த கோட்டாட்சியர் தனபிரியா, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக் குழுவினர், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும் சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அரக்கன்”!! பிறந்து 54 நாளே ஆன குழந்தையை தூக்கி வீசிய தந்தை ., உயிருக்கு போ...

Quick Share

கேரளாவில் பிறந்து 54 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தந்தை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 19 ம் தேதி கேரளாவின் எர்ணாகுளத்தில் அங்கமாலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிறந்து 54 நாள் ஆன பச்சிளம் குழந்தை தந்தையால் தூக்கி எறியப்பட்டு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

கொடூரமாக தாக்கப்பட்ட அந்த குழந்தை தாக்குதலுக்கு பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்குகிறது.

தந்தை, 40 வயதான ஷைஜு தாமஸ், தனது மகள் தற்செயலாக கட்டிலிலிருந்து விழுந்ததாகக் கூறினாலும், அவரது கூற்றுக்கள் குறித்து மருத்துவர்கள் சந்தேகம் அடைந்தனர். விசாரணையின் பின்னர் தாமஸ் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் கூற்றுப்படி, தாமஸ் குடி போதையில் குழந்தையை தூக்கி எறிந்தது தெரியவந்துள்ளது.

குழந்தையின் தாய் கணவர் தாமஸ் குழந்தையைத் தாக்கியதைக் போலீசிடம் கூறிவிட்டார். தாமஸ் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரிவு 307 (கொலை முயற்சி) உட்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நகைக்காக இந்திய தம்பதியரை துபாய் பண்ணைவீட்டில் வைத்து கொலை செய்த பாகிஸ்தானியர்.., அதிர்...

Quick Share

கடந்த ஜூன் 18, 2020 ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் அதிகாலை ஒரு இந்திய தம்பதியர் ஒரு பாகிஸ்தான் நாட்டவரால் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹிரென் ஆதியா மற்றும் விதி ஆதியா (இருவரும் 40 வயதுடையவர்கள்) துபாயில் அரேபிய பண்ணை நிலத்தில் வசித்து வந்தனர். ஹிரனுக்கு ஷார்ஜாவில் வியாபாரம் நடத்திவந்துள்ளார். இந்த ஜோடி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துபாய்யில் வசித்துவந்துள்ளனர். அவர்களுக்கு இந்தியாவில் உறவினர்கள் உள்ளனர்.

இந்த தம்பதியர்களை கொன்றுவிட்டு நகைகளை திருடிசென்றுளார். இந்த சம்பவம் குறித்து துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு, அவர் திருடிய நகைகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

“இந்த கொலை பின்னணி பற்றி மேலும் விசாரித்துக்கொண்டிருப்பதாகவும் இதை இறந்தவர்களை நெருங்கிய வட்டாரத்தை தொடர்பு கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.” இந்த செய்தி ஏற்கனவே முதலில் குஜராத்தி ஊடகங்களில் ஜூன் 19/20 அன்று வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாக அவருடைய உறவினர்கள் விசாரணை தீவிரப்படுத்த இறந்தவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்

9 வயது சிறுமி மர்ம சாவு: சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தபோது வெளிவந்த உண்மை!

Quick Share

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கே.குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. அவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி காலையில் வீட்டில் களியும், கொள்ளு குழம்பும் செய்தார். பின்னர் ராஜேஸ்வரி, தனது மகள்கள் அர்ச்சனா (13), கீர்த்தனா (9), மாமியார் மாரம்மாள் (70) ஆகிய 4 பேருடன் உணவு சாப்பிட்டார். பின்னர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த ராஜேஸ்வரி காலையில் செய்த களி மற்றும் கொள்ளு குழம்பை சுட வைத்து 4 பேரும் சாப்பிட்டு விட்டு இரவு தூங்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு ராஜேஸ்வரி உள்ளிட்ட 4 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை உறவினர்கள் சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று 4 பேரும் வீடு திரும்பினார்கள். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனால் மாரம்மாளை தவிர மற்ற 3 பேரையும் மீண்டும் கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி கீர்த்தனா பரிதாபமாக இறந்தாள். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் கே.குட்டூருக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே வீட்டில் இருந்த மூதாட்டி மாரம்மாளும் இறந்து கிடந்தார். இதைத் தொடர்ந்து சிறுமி கீர்த்தனா, பாட்டி மாரம்மாள் ஆகியோரின் உடலை உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்தனர். தற்போது ராஜேஸ்வரியும், அர்ச்சனாவும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரி, அவரது மகள் அர்ச்சனா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள். மாரம்மாள், அவரது பேத்தி கீர்த்தனா ஆகியோரின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கெட்டு போன உணவை சாப்பிட்டதால் அவர்கள் இறந்தார்களா? அல்லது யாரேனும் விஷம் கலந்து கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன கீர்த்தனா 4-ம் வகுப்பு படித்து வந்தாள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அர்ச்சனா 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




You cannot copy content of this Website