கிரைம்

திருமணமான ஒன்றரை வருடத்தில் பச்சிளம் குழந்தையின் அம்மா தூக்குப்போட்டு தற்கொலை…

Quick Share

கோவை இடையர்பாளையம் அருகே உள்ள நெல்லி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி ரத்திகா(வயது20). இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ரத்திகாவிற்கு கடந்த 12 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ரத்திகா அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட ரத்திகாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒன்றரை வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்தி வருகிறார்.

சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளி வ.ஊ.சி.வீதியை சேர்ந்தவர் மருதாசலம். இவரது மனைவி புவனேஸ்வரி(57). சம்பவத்தன்று கட்டிலில் படுத்திருந்த இவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிழிந்தார்.இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிளாஸ்டிக் பைகளில் எச்சை துப்பி வீடு வீடாக தூக்கிப்போட்டு செல்லும் கும்பல், கொரோனவை பரவ...

Quick Share

ராஜஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் கோட்டா மாவட்டத்தில் உள்ள சில வீடுகளில் 4 – 5 பெண்கள் பிளாஸ்டிக் பைகளில் எச்சில் துப்பி வீடு வீடாக போட்டுவிட்டு செல்கின்றனர். இதனை சிசிடிவி கேமரா படம்பிடித்துள்ளது.

இது போன்று ஒரே தெருவில் இருந்த பல வீடுகளில் அவர்கள் இந்த வேலையைச் செய்துள்ளனர். இந்த நபர்களின் முகங்கள் சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்தியாவில் கொரோனா பரவும் அச்சம் நிலவுவதால் மக்கள் ஒருவரை ஒருவர் விலகி இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. எச்சில் மூலமாகவும், தும்மல் மூலமாக பரவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தானில் நடந்த சம்பவம் கொரோனவை பரப்பி விடுவதற்காக தீய எண்ணம் உடைய பெண்கள் இது போன்று செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை பற்றி கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே தூய்மைப் பணியாளர்கள் வந்து சனிடைசர் போன்றவற்றை தெளித்து அப்புறப்படுத்தினர்.

தற்போது காவல்துறையினர் யார் இந்த வேலையை செய்தது என்பதை கண்டுபிடித்து அவர்களை விசாரித்து வருகின்றனர். ராஜஸ்தானில் தற்போதைய நிலவரப்படி 796 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

9-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்பமாக்கிய பள்ளி மாணவா்கள்…

Quick Share

கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவா்கள் நான்கு போ் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்த தம்பதிக்கு 15 வயதில் மகள் உள்ளாா். இவா், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் சிறுமிக்கு சில நாள்களுக்கு முன்னா் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அச்சிறுமியை அவரது பெற்றோா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனா். இதில் அந்த சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில், சிறுமியுடன் பள்ளியில் படித்த மாணவா், அவரது பள்ளி நண்பா், வீட்டு அருகே உள்ள நண்பா்கள் என 10 போ் சோ்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கிழக்குப் பகுதி அனைத்து மகளிா் காவல் துறையினா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, பள்ளி மாணவா்கள் 4 போ் உள்பட 8 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பீடா புத்தியை பயன்படுத்தும் வட மாநிலத்து இளைஞர்கள், காற்றிலே கடத்தல் செய்யும் நூதனம்..!

Quick Share

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம், அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பீடா, மாவா, பான்மசாலா, மது அருந்துவார்கள். சிகரெட் குடிப்பவர்கள் தான். தற்போது குஜராத்தில் இளைஞர்கள் சிலர் வானத்தில் பறக்கும் ட்ரோன் மூலம் பான் மசாலா கட்டிவிட்டு இடம் மாற்றும் வேலையை செய்துள்ளனர் தற்போது வீடியோ வெளியாகியுள்ளது.

போதை பிரியர்கள் அத்தியாவசியமாக இந்த பான்மசாலாவை கருதி வான்வெளியில் கடத்துகின்றனர். மேலும் இந்த வீடியோவை தைரியமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த குஜராத் போலீஸ் இந்த வேலையை பார்த்த 2 போதை ஆசாமிகளை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வயதான ஆதரவற்று இறந்தவரை நல்லடக்கம் செய்த காவல் உதவி ஆய்வாளர் !

Quick Share

சிவகங்கை மாவட்டம் தமறாக்கி வடக்கு கிராமத்தில் கடந்த 05.04.2020-ம் தேதியன்று பெயர் தெரியாத 85 வயது பெரியவர் ஒருவர் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.

இதை அறிந்த உடன் காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். 10.04.2020-ம் தேதி வரை பிரேதத்தை வாங்க உறவினர்கள் யாரும் வராத நிலையில்¸ சிவகங்கை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஜான் பிரிட்டோ அவர்கள் இறந்த நபரின் உடலுக்கு தக்க மரியாதை செலுத்தி உடல் நல்லடக்கம் செய்தார். காவல் ஆய்வாளர் செய்த செயல் பலரை நெகிழவைத்துள்ளது.

முதியவரை அடித்து கொன்று விட்டு காய்கறியை திருடிச் சென்ற கொடூரன்

Quick Share

டெல்லி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவையை வாங்குவதற்கு மட்டுமே வெளியே வருகின்றனர். டெல்லியில் சஞ்சய் காலனி என்ற பகுதியில் வசித்துவரும் முதியவர் வெளியே சென்று காய்கறி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அதே பகுதியில் வசித்து வரும் நானி என்பவர் இந்த முதியவரிடம் இருந்து காய்கறியை பறித்து பறித்துச் செல்ல முயன்றுள்ளார்.

சண்டையில் முதியவரை பலமாக தலையில் அடித்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்தார். பிறகு அந்த நபர் காய்கறியை திருடிச் சென்றார். தலையில் காயத்தோடு கீழே விழுந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார். முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறந்த முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் முதியவரை தாக்கிய nanhe என்பவரை காவல்துறை தேடி வருகிறது.

நிலைமை அறியாத முட்டாள் மக்களின் செயல், 144 தடையை மீறி மஞ்சுவிரட்டு – காளை மூட்டி ...

Quick Share

தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நடைமுறையில் இருந்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி கிராமம் கீழக்கோட்டை பகுதியில் 06.04.2020 தேதியன்று அரசு அனுமதியின்றி ஊர் மக்கள் சிலர் ஒன்று கூடி மஞ்சுவிரட்டு நடத்தினர். மக்கள் தங்கள் களைகளை கொண்டு கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர்.

இதை பற்றி காவல் துறைக்கு தகவல் வந்ததையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் கூடியிருந்த மக்களை கலைத்தனர். அப்போது அங்கிருந்த காளை முட்டியதில் காவலர் திரு. கனகராஜ் அவர்கள் பாடுகாயம் அடைந்தார்.
எங்கள் உயிரையும் பொருட்படுத்தாது காவல் பணி புரிகிறோம் நாங்கள் இந்த நிலையறிந்து கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றியடைய வீட்டிலே இருங்கள் நீங்கள் என காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவரை நோக்கி எச்சில் துப்பினால் என்ன தண்டனை தெரியுமா ??

Quick Share

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை நோக்கி எச்சில் துப்பினால் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என இமாச்சல பிரதேச டிஜிபி எச்சரித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் வெளியே திரிவதால் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு, காவல்துறையும் ஆலோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கொரோனா பாதித்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவ பணியாளர்கள் அழைத்து சென்றபோது அவர் அதற்கு ஒத்துழைக்காமல் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் கொரோனா பாதிப்புள்ளவர் யார் மீதாவது துப்பினால் அது கொலைமுயற்சி வழக்காக பதி்வு செய்யப்படும் என அம்மாநில டிஜிபி கூறியுள்ளார். எதிர் நபர் அதனால் கொரோனா பாதிப்புக்கு உள்ளானால் அது கொலை வழக்காக பதியப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனவை எதிர்கொள்ள கையில் துப்பாக்கியுடன் கிளம்பிய உ.பி பாஜக மஞ்சு திவாரி

Quick Share

நேற்று இரவு ஒன்பது மணிக்கு உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூர் பகுதியை சேர்ந்த பாஜக மகளிர் அணி தலைவர் மஞ்சு திவாரி, தன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு வானத்தை நோக்கி சுட்டார். ஒன்பது மணிக்கு விளக்கு அல்லது டார்ச் பயன்படுத்துங்கள் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் இவருக்கு நரேந்திர மோடி கூறியது என்னவென்று புரியாமல் கையில் துப்பாக்கியை எடுத்து கொரோனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க மேல்நோக்கி சுட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று இரவு 9 மணி அளவில் பிரதமரின் அறிவிப்பின்படி ஒன்பது நிமிடங்கள் வீட்டில் உள்ள அனைத்து மின்சார விளக்குகளையும் அணைத்து. கையில் டார்ச் மற்றும் விளக்குகளை ஏந்தி நின்றனர். சில இடங்களில் பட்டாசு வெடித்தும் கையில் தீப்பந்தம் என்றும் கூட்டம் கூட்டமாக தெருவில் சென்றனர்.

தெலுங்கானாவில் ராஜா சிங் என்ற பாஜக எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் கையில் தீப்பந்தங்களை யேந்தி “சீனா வைரஸ் ஓடிப்போ” !! என தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் கள்ளக்காதலியை நண்பர்களுடன் சேர்ந்து’.. 17 வயது சிறுவன் செய்த கொடூரம்.. “வெளிவ...

Quick Share

தஞ்சாவூர் அடுத்த பட்டுக்கோட்டை மதுக்கூர் கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணமாகி வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அந்த கணவருக்கும், அதேப் பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவருடன் வசித்து வந்த 47 வயதுடைய ஒரு பெண்மணிக்கும் இடையே தவறான உறவு இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி, தகராறு ஏற்பட்டது தந்தையின் கள்ள தொடர்பினால் ஆத்திரமடைந்த சிறுவன், தந்தையுடன் தவறாக பழகி வந்தப் பெண் மீது கோபத்தில் இருந்துள்ளான். சம்பவத்தன்று தனது நண்பருடன், தந்தையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளான்.

அப்பொழுது தந்தையுடனான இருக்கும் தொடர்பை கைவிடும்படி அந்த பெண்ணிடம் சிறுவன் கேட்டுள்ளான். இதில் அவர்களுக்குள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிறுவன், நண்பருடன் சேர்ந்து அந்தப் பெண்ணை ஆயுதங்களால் தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார். பின்னர் பதறிப்போன சிறுவன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்க்கும் போது ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்த பெண்ணை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது கிடைக்காமல் ஷேவிங் லோஷனை குடித்தவர்கள் பலி!

Quick Share

ஊரடங்கால் மது கிடைக்காத சூழலில் அதற்கு பதிலாக ஷேவிங் லோஷனை குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் அல்லல்படும் மதுவுக்கு அடிமையான சிலர் கள்ளச்சாராயத்தை நாடுவது மற்றும் இன்ன பிற ஆபத்தான காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.புதுக்கோட்டையில் மது கிடைக்காததால் விரக்தியடைந்த மீனவ வேலை பார்க்கும் மூன்று பேர், ஷேவிங் செய்த பின் பயன்படுத்தும் லோஷனில் ஆல்கஹால் உள்ளதால் அதை பருகலாம் என முடிவெடுத்துள்ளனர். குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து பருகியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அன்வர் ராஜா என்ற நபர் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதுகாப்பு பணியாளர்களை அடித்து விரட்டிய நபர்கள் – முதல்வர் அதிரடி முடிவு

Quick Share

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் சுகாதார ஊழியர்கள் கொரோனா நோயாளிகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்ட நபர்களிடம் வெறித்தனமாக நடந்துகொண்டு அவர்களை தாக்கியுள்ளார். மேலும் அவர்களை கற்களால் தாக்கிய வீடியோ தீயாக பரவி வருகிறது. காவலர்களும் இதில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஊரடங்கு நேரத்தில் நோய்த்தொற்றின் பரவலை தடுக்க வேலை செய்யும் சுகாதாரப் பணியாளர்களை எதிர்க்கின்றனர். தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நான்கு பேருக்கு எதிராக உ.பி. அரசு அதிகாரிகள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சுகாதார ஊழியர்களுடன் தவறாக நடந்து கொண்டதற்காக 6 உறுப்பினர்கள் மீது NSA கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ்காரர்களைத் தாக்கும் அனைவரும் NSA கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று உத்தரபிரதேச மாநிலத்தின் யோகி அரசு எச்சரித்துள்ளது.




You cannot copy content of this Website