கிரைம்

டிக் டாக் இலக்கியா… இவங்க ஆட்டத்த பார்க்காதவர் யாரேனும் உண்டா !! இனிமே பார்க்கமுட...

Quick Share

டிக் டாக் ஆப்-ல் மிக பிரபலமானவர் இலக்கியா. அடிக்கடி கவர்ச்சி டபுள் மீனிங் வீடியோக்களை வெளியிட்டு சர்சையில் சிக்கியதால் தற்போது வீடியோ பதிவிடுவதை நிறுத்திவிட்டதாக டிக்டாக் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிக் டாக் மூலம் கிடைத்த பெயரை வைத்து யோகிபாபு நடிக்கும் சோம்பி என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், இலக்கியா என்ற பெயரில் போலியாக கணக்கு ஆரம்பித்து அதில், தான் கவர்ச்சியாக ஆடும் வீடியோக்களை பயன்படுத்தி பலரிடம் பணம் மோசடி செய்யப்படுவதாக, நடிகை இலக்கியா டிக் டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

போலி கணக்குகளின் மூலம் பணத்தை இழந்தவர்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். இதையடுத்து, டிக் டாக் நடிகை இலக்கியா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதோடு யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்

இலக்கியாவின் புகைப்படத்தையும், வீடியோக்களையும் பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும் தான் அது போன்று நடிப்பதை விட்டுவிட்டதாக தெரிவித்தார்.

ஐந்தாவது குழந்தை பெற்ற மனைவி-கணவன் செய்த கொடூர செயல் .

Quick Share

மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் கணவர் கூறிய நிலையில் அதை ஏற்காத மனைவி பெற்றோர்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் சம்பலை பகுதியை சேர்ந்தவர் கமீல். இவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. கமீலுக்கு மொத்தம் நான்கு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்தநிலையில் மனைவி மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு அவர் சென்றார்.

அங்கு அவருக்கு ஐந்தாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் பெண் குழந்தை பிறந்ததை கேள்விப்பட்ட கமீல் கடும் கோபமடைந்தார் இதனால் மனைவி மீது விரக்த்தியடைந்த கமீல் மனைவியை விவாகரத்து செய்வதாக கூறினார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத மனைவி குடும்பத்தாருடன் காவல் நிலையத்துக்கு சென்று கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.புகாரின் அடிப்படியில் விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

கள்ளக்காதல் கொலையாக மாறியது – தேனி அருகே பரபரப்பு .

Quick Share

தேனி மாவட்டம் போடி, நந்தவன தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி வளர்மதி.3 வருடங்களாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வளர்மதிக்கு கேரளாவில் 15 ஏக்கர் ஏலத்தோட்டம் உள்ள நிலையில் இவரிடம் கேரளாவைச் சேர்ந்த பியல்ராஜா (31) என்பவர் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் இவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் உல்லாசமாக இருந்தனர். பின்னர் வளர்மதியிடம் கருத்து வேறுபாடு காரணமாக ராஜா கத்தியை காட்டி மிரட்டி கொல்ல முயன்றதாக தெரிகிறது.

இந்நிலையில் சாமாதானமாகிவிடலாம் என்று கூறி ராஜாவை வளர்மதி போடிக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த ராஜாவின் முகத்தில் மிளகாய்ப்பொடி வளர்மதி தூவியதோடு, தான் ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி ராஜாவை கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வளர்மதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொலைச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

தலைக்கேறிய போதை.. நண்பனை குத்தி கொலை செய்து நாடகம் !!

Quick Share

தெற்கு டெல்லியின் யூசுப் சாராய் பகுதியில் நண்பர்களுடன் மது பார்ட்டியில் பிரச்சினை நடந்துள்ளது இந்த சண்டையில் தனது நண்பரையே குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட அலோக் மற்றும் பாதிக்கப்பட்ட சுமன் இருவரும் தங்கள் 20வது வயதில், பீகார் பெகுசராய் நகரிலிருந்து டெல்லி வந்தவர்கள். சம்பவம் நடந்தபோது இருவரும் மது போதையில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் தனது சொந்த மாநிலத்தில் நடந்த விபத்தின் போது ஏற்பட்ட எலும்பு தொடர்பான சிக்கல்களுக்காக அலோக் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பீகாரில் இருந்து சுமன் என்ற நண்பரை அவருடன் ஒரு பராமரிப்பாளராக அழைத்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இருவரும் யூசுப் சாராயில் ஒரு வாடகை விடுதியில் தங்கியிருந்தனர், மேலும் சிறிய பிரச்சினைகள் தொடர்பாக அடிக்கடி சண்டை போடுவார்கள் என்று அவர்கள் கூறினர்.

சனிக்கிழமை இரவு, அவர்கள் தங்கள் அறையில் மது அருந்திக்கொண்டிருந்தபோது, ​​வாக்குவாதம் முற்றி பிரச்சினைகள் பெரிதாக ஆனது, அதைத் தொடர்ந்து அலோக் சமயலறையில் இருந்த கத்தியை எடுத்து சுமனை மார்பில் குத்தினார் கொலை செய்துவிட்டு பாதிக்கப்பட்டவரைக் கொன்ற பிறகு, நள்ளிரவில் அலோக் தனது நண்பரை யாரோ கொன்றதாகக் கூறி போலீஸை அழைத்தார்.

போலீசார் சம்பவ இடத்தை வந்தடைந்த பின்னர், ​​அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் பாதிக்கப்பட்டவரையும் மட்டுமே அறையில் கண்டனர், விசாரணையின் போது அலோக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று போலீஸ் கமிஷனர் (தென்மேற்கு) தேவேந்தர் ஆர்யா தெரிவித்தார்.

இந்நிலையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த போலீஸார் தெரிவித்தார்

அதிர்ச்சி தகவல்.!! மசாஜ் சென்டரில் விபச்சாரம்..”மஜாவாக இருக்கும் விஐபிR...

Quick Share

நாகர்கோவிலில் இயங்கிய மசாஜ் சென்டருக்கு விஐபிக்கள், மற்றும் காவல் துறையில் உள்ளவர்கள் ரெகுலராக வந்து சென்ற தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளது. நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இயங்கும் ஒரு மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இயங்கும் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது ,இதன் அடிப்படையில் ஏஎஸ்பி தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து மறைமுகமாக விசாரணை நடைபெற்றது.அதன்படி நேற்று மாலை அதிரடி மசாஜ் சென்டர் நுழைந்தபோது அங்கு மூன்று இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் இருந்தனர். மேலும் வாலிபர் ஒருவர் இருந்தார். அங்கு விசாரித்தபோது மசாஜ் சென்டர் என்ற பெயரில் வாலிபர்களை வரவழைத்து விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த 3 இளம்பெண்களை வாலிபரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த இளம் பெண்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் மற்றும் புதுச்சேரி, திருப்பூர் பகுதி சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இது திருப்பூரை சேர்ந்த இளம்பெண்ணை 20 வயதிற்கும், மற்ற இரு பெண்கள் 27 மற்றும் 40 நிரம்பியவர் ஆவர்.இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசாஜ் சென்டர் நாகர்கோவில் மையப் பகுதியில் இருப்பதால் பல முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர் ரகசிய புள்ளிகள் போலீஸ் அதிகாரிகள் இந்த மசாஜ் சென்டர்கள் ரெகுலராக வந்து சென்றுள்ளன. இந்த மசாஜ் சென்டரில் பேக்கேஜ் சிஸ்டத்தில் பணல் வசூலித்துள்ளனர். 45 நிமிடத்துக்கு ரூ.1500, ஒரு மணிநேரத்திற்கு ரூ.2000, ஒன்றரை மணி நேரத்துக்கு ரூ.3000 (2 இளம்பெண்கள் மசாஜ் செய்யவார்கள்) 2 மணி நேரத்துக்கு ரூ.3500 (3 இளம்பெண்கள் மசாஜ் செய்யவார்கள்) என்பது தெரியவந்துள்ளது.

6 வயது சிறுமி கற்பழிப்பு…, அடுப்பங்கறையில் கிடைத்த சடலம் !! போதை ஆசாமியின் வெறிச்...

Quick Share

ராஜஸ்தானின் ஜலவார் என்னும் கிராமத்தில் தனது வீட்டு உரிமையாளரின் ஆறு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக போலீஸ் ஒருவரை கைது செய்துள்ளார். இந்த சம்பவம் மார்ச் 4 ஆம் தேதி ஜலவர் மாவட்டத்தில் நடந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர், லால்சந்த் L பைராகி என அடையாளம் காணப்பட்டார், இவர் வீட்டில் ஒரு வாரத்திற்கு முன்பு தான் வாடகைக்கு குடியேறினார். குற்றம் நடந்த இரவில், வீட்டு உரிமையாளர் மற்றும் வாடைகைக்கு வந்தவர் இருவரும் மது அருந்தியுள்ளனர். இவர்கள் மது அருந்தியபோது வீட்டு உரிமையாளரின் 6 வயது மகள் விளையாடி கொண்டிருந்தாள்.

காலையில், அவரது குடும்பத்தினர் குழந்தையை காணவில்லை எனக் பதற்றம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். லால்சந்த் L பைராகி சமயலறையில் ஆறு வயது குழந்தையின் உடலை ஒரு சணல் பையில் மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லால்சந்த் L பைராகியை கைது செய்யப்படுவதற்கு முன்னர் உடலை கிணற்றில் கொட்டிய பின்னர் மத்திய பிரதேசத்திற்கு ஓட திட்டமிட்டிருந்தார்.

காவல் துறையினர் லால்சந்த் L பைராகியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானில் அடிக்கடி இது போன்ற குழந்தைகள் பாலியல் பலாத்கார அரங்கேறுவது வேதனைக்குரியது.

கள்ளகாதலியுடன் அட்டூழியம்…கணவனை எரித்து கொன்ற மனைவியும் மகளும்….

Quick Share

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள புதன்சந்தை ஜீவா நகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45) கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி அங்கம்மாள் (40). இவர்களது மகள் சாந்தி செல்வம் (20).

நேற்று முன்தினம் இரவு அங்கம்மாள் தனது மகள் சாந்தியை அழைத்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாயார் எல்லம்மாள் (65) வீட்டிற்கு சென்றார். அப்போது கந்தசாமி அவரது வீட்டின் வெளியே தனியாக கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள், கந்தசாமியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டனர். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து சேந்தமங்கலம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியின் மனைவி அங்கம்மாள், மகள் சாந்தி, மற்றும் எல்லம்மாள் ஆகியோரிடம் துருவி துருவி விசாரனை நடத்தினார். அப்போது, தாங்கள் தான் கந்தசாமியை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு ஓடினோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அங்கம்மாள், தனது கணவரை எதற்காக கொலை செய்தேன்? என போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

எனது கணவர் கந்தசாமி கொத்தனார் என்பதால் தினமும் கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம். அவர் வேலை செய்த இடத்தில் சேலத்தை சேர்ந்த சரோஜா என்ற பெண் சித்தாளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், எனது கணவர் கந்தசாமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இது பற்றி எனக்கு தெரியவந்தது. நான், எனது கணவரிடம் சரோஜாவுடன் இருக்கும் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. கள்ளத்தொடர்பை விட்டு விடுங்கள் என பலமுறை கெஞ்சினேன். அதற்கு அவர் மறுத்து வந்தார்.

மேலும் எனது பெயரில் இருக்கும் சொத்துக்களை கள்ளத்காதலி சரோஜா பெயருக்கு மாற்றி கொடுக்குமாறு கூறி தினமும் என்னிடமும், மகளிடமும் கந்தசாமி தகராறு செய்து வந்தார்.

ஒரு நாள் கந்தசாமி என்னிடம், நான் சரோஜாவுடன் வாழ விரும்புகிறேன் என தெரிவித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நானும், மகளும், கந்தசாமியை கொலை செய்ய முடிவு செய்தோம். அதன்படி நேற்று முன்தினம், கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த கந்தசாமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றோம். போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி எங்களை கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

நகை கடையில் 3 பெண்கள் செய்த திருட்டு…எப்படி மாட்டினார்கள் தெரியுமா….

Quick Share

நகைக் கடையில் நகை வாங்குவது போல் நாடகமாடி 4 பவுன் தங்க நகைகளை திருடிய 2 பெண்கள் உட்பட 3 பேரை விரைந்து கைது செய்த திசையன்விளை காவல்துறையினர்.

திசையன்விளை மெயின் பஜாரில் உள்ள ஒரு நகைக் கடையில் 4 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திசையன்விளை காவல் ஆய்வாளர் திருமதி.ஜூடி அவர்கள்‌ உதவி ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் ஆகியோர் கடையில் உள்ள CCTV கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் ராமநாதபுரத்தை சேர்ந்த லட்சுமி (60), சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி (46), கருப்பசாமியின் மனைவி பாண்டீஸ்வரி (41) ஆகிய 3 பேரும் தங்க நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது, இதனையடுத்து மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து u/s 380 IPCன் கீழ் வழக்குப்பதிவு செய்து, நகைகளை மீட்டு, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இத்திருட்டுச் சம்பவத்தில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த திசையன்விளை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்

”தலைக்கேறிய காமம்” பேராசிரியர் மாணவியை கட்டிப்பிடித்தாரா.?? கலெக்டரிடம் புக...

Quick Share

புகார் கொடுத்து இது நாள் வரையில் ஒரு விசாரணையும் நடத்தாமல் தள்ளி போடுவது ஏன் .?? இதன் பின்னால் உள்ள அரசியல் பின்னணி தான் என்ன .? நடுத்தர குடும்பதின் புகார் காவல்துறையால் கண்டுகொள்ள படாதது ஏன் .?? உயிர் தகவலியல் துறை உதவி பேராசிரியர் ஜெயச்சந்திரன்.என்னுடைய கைகளை இழுத்து ஆபாச வார்த்தைகளை பேசி பாலியல் வற்புறுத்தல் மற்றும் அத்துமீறிய செயல்களில் ஈடுபட முயற்சித்தார்.இது தொடர்பாக 25.01.2020 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் புகார் மனு அளித்தேன்.இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார் மாணவி ஒருவர். இது குறித்து அவர் கூறுகையில்,
இது தொடர்பாக 25.01.2020 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் புகார் மனு அளித்தேன்.இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார் மாணவி ஒருவர்.இதனால் பல்கலைக்கழகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் படபடத்துக் கிடக்கிறது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாணவி கண்ணீர் மல்க காத்திருந்து கலெக்டரை சந்தித்தார்.

அப்போது நடந்த சம்பவத்தை எடுத்து கூறிய மாணவிக்கு உடனடியாக 13 பேர் கொண்ட குழுவை நியமித்து விசாரணை நடத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும், துணைவேந்தர் எனது ஆராய்ச்சி படிப்பு தொடர வழிகாட்டியாக இரு பேராசிரியர்களை நியமித்தார்.ஆனால் அந்த இரு பேராசிரியர்களளும் பல காரணங்களை கூறி எனக்கு வழிகாட்டியாக இருக்க மறுத்துவிட்டனர்.பாலியல் தொந்தரவு என்பது அனைத்து துறைகளிலும் காமம் தலைக்கேறி போய் இருக்கிறது. கூடுதலாக வேலியை பயிர் மேய்வது பெண்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாக இருக்கிறது. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவிடவும்.

காமவெறியினால் கல்யாணமான ஆண்டியிடம் அத்து மீறிய 15 வயது சிறுவன்.

Quick Share

கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி நகரில் உள்ள பெரியார் நகரில் வசித்து வரும் 29 வயதுடைய திருமணமான பெண் நேற்று இரவு உறங்குவதற்கு முன் வெளியில் சென்றிருந்த நிலையில், அப்போது, மறைந்திருந்து அந்த பெண்ணை நோட்டமிட்டுக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் பெண்ணை வழிமறித்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். இதனால் பயந்து அவனிடமிருந்து தப்பித்து ஓடிவீட்டிற்கு சென்று நடந்ததை தன் கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் சிறுவன் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரித்ததில், நடந்த சம்பவத்தை உறுதி செய்த பின்னர், அச்சிறுவனை கைது செய்த போலீசார் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, மேலும், ‘சிறுவர் சீர்திருத்த பள்ளி’யில் சிறுவனை ஒப்படைத்தனர். 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருடபோன இடத்தில் ஆன்டியை உஷார் பண்ண திருடர்ர்ர்ர்ர்…

Quick Share

பிரேஸிலில் உள்ள பிரபல மெடிக்கல் ஷாப்பில் புகுந்த இரு திருடர்கள், கடை உரிமையாளரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வந்தனர் கடையில் இருக்கும் பணத்தை கொடுங்கள் இல்லையென்றால் கொன்று விடுவேன் என்று மிரட்டிய நிலையில் அதில் ஒரு திருடன் கடையின் உள்லே சென்று பார்த்த போது ஒரு இளம் பெண் மருந்து பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தார் அந்த திருடன் அந்த பெண்ணிடம் உன்னிடம் இருக்கும் பணத்தை தந்தாள் உன்னை விட்டு விடுகிறேன் என்று மிரட்டினார்.

அந்த பெண் என்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில் பயத்தில் அந்த பெண் கத்தி உள்ளார் பதற்றத்தில் அந்த திருடன் அப்பெண்ணிடம் சென்று பயப்பிடாதே என்று கூறி அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுத்தார் பிறகு அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறிவிட்டு அந்த மெடிக்கல் ஷாப்பில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.

33வயது அமெரிக்க பெண்ணை போதை ஏற்றி கொடூரமாக கற்பழித்த இளைஞர்…

Quick Share

அமெரிக்காவில் இருந்து 33 வயதுடைய பெண், இந்தியாவில் உள்ள ரிஷிகேஷ் என்னும் இடத்தில் தங்கியிருந்தார். கடந்த ஒரு மாதமாக தபோவன் என்னும் பகுதியில் உள்ள யோகா நிலையத்தில் பயிற்சி பெற்றுவருகிறார்.

கடந்த 10ஆம் தேதி இரவு யோகா நிலையத்தில் உள்ள அட்டண்டென்ட் ஜித்னான்ஸ் என்னும் 26 வயது இளைஞர் அந்த பெண்மணிக்கு மது வழங்கியுள்ளார். மதுவை அமெரிக்கா பெண்ணிடம் கொடுத்து அவரை பலவந்தமாக கற்பழித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவத்தை பற்றி அருகில் இருக்கும் முனி கீ ரிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில் யோகா பயிற்ச்சி மேற்கொள்ளும் அமெரிக்க பெண்மணியை ஒரு மாதம் நோட்டம் விட்டு இதை செய்துள்ளார் என சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சித் குமார் தெரிவித்தார். கற்பழித்த 26 வயது இளைஞர் ஜித்னான்ஸ் மீது IPC Section 376 (Rape) கீழ் கைது செய்துள்ளனர். அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டுள்ளது என சஞ்சித் குமார் கூறினார்.




You cannot copy content of this Website