கிரைம்

உல்லாசமாக இருந்துவிட்டு , விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி – விசாரணையில் பல்வேறு அத...

Quick Share

கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர். அப்போது வள்ளங்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் ஆண் ஒருவர் பிணம் கிடந்தது. தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அந்த பிணத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த ஆணின் சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டையை பார்த்த போது, அவர் கேரள மாநிலம் கொல்லம் தட்டாரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் போஸ் (வயது 38) என்பதும், காசனூர் போலீஸ்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரது செல்போன் எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில் அவர் ஒரு இளம்பெண்ணுடன் கன்னியாகுமரி வந்ததும், ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரிய வந்தது.

உயிருக்கு போராட்டம்

உடனே போலீசார் அந்த விடுதிக்கு சென்றனர். போஸ், இளம்பெண்ணுடன் தங்கி இருந்த அறைக்கதவு பூட்டப்பட்டு இருந்தது. அறையின் உள்ளே இருந்து ஒரு பெண்ணின் அழுகை சத்தம் கேட்டது. உடனே போலீசார் அந்த அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒரு பெண் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதிர்ச்சி தகவல்கள்

விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

போலீஸ்காரர் போஸ் கன்னியாகுமரிக்கு அழைத்து வந்த பெண்ணின் பெயர் சுப்ரியா. இவர் கேரள மாநிலம் காசனூர் பகுதியைச் சேர்ந்தவர். போஸ், சுப்ரியா இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது இருவரும் காதலித்து வந்தனர்.

இதற்கிடையே சுப்ரியாவுக்கு அசோக் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சுப்ரியா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட பிறகு போஸ், வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

தனிமையில் உல்லாசம்

இதற்கிடையே சுப்ரியாவின் கணவர் அசோக் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். அதன்பிறகு சுப்ரியா, போஸ் இடையே மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. பழைய காதலர்கள் என்பதால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு வந்துள்ளது. சுப்ரியாவின் கணவர் அசோக் இதனை கண்டித்தார்.

தனது கல்லூரி காதலை மறக்க முடியாத சுப்ரியா கணவர் அசோக்கை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்துள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட சுப்ரியாவுடன் அதிக நேரத்தை போஸ் செலவிட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்திலும் தகராறு ஏற்பட்டது. உடனே கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி எங்காவது சென்று வாழலாம் என முடிவு செய்துள்ளனர். அதன்படி அவர்கள் கோவை சென்றுள்ளனர்.

சாவில் இணைய முடிவு

இதற்கிடையே இருவரையும் காணவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் சார்பில் காசனூர் போலீசில் தனித்தனியாக புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போஸ் மற்றும் சுப்ரியாவை தேடி வந்தனர். போஸ் போலீஸ்காரர் என்பதால் விசாரணை துரிதமாக நடந்தது. கள்ளக்காதல் ஜோடியின் செல்போன் எண் சிக்னலை வைத்து கேரள போலீசார் கோவை வந்தனர்.

இதனை அறிந்த போஸ் மற்றும் சுப்ரியா அங்கிருந்து கன்னியாகுமரிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்தனர். அவர்கள் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்களை தேடி கேரள போலீசார் கன்னியாகுமரிக்கு வந்துள்ளதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் மனம் உடைந்த போஸ் மற்றும் சுப்ரியா இருவரும் போலீசார் நம்மை பிரித்து விடுவார்கள். எனவே சாவில் இருவரும் இணைந்து விடுவோம் என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்தனர்.

விஷம் குடித்தனர்

இருவரும் விடுதி அறையில் ஒன்றாக அமர்ந்து விஷம் குடித்தனர். விஷம் குடித்த சிறிது நேரத்தில் போஸ் வாந்தி எடுத்துள்ளார். விடுதி ஊழியர்களுக்கு விஷம் குடித்த விவரம் தெரிந்து விடும் என நினைத்து அங்கிருந்து வெளியேறி உள்ளார். அவர், வாவத்துறை பகுதியில் சென்ற போது வள்ளங்களுக்கு இடையே மயங்கி விழுந்த அவர் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.

சுப்ரியா விடுதியில் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். அவரை மீட்டு போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருமண கோலத்தில் இருந்த புதுமணத்தம்பதியை காரில் கடத்தி சென்ற கும்பல்!

Quick Share

தமிழகத்தில் சுயமரியாதை திருமணம் செய்த காதல் ஜோடி திருமணம் முடிந்த சில நிமிடங்களில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து நேற்று சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.

அப்போது அங்கு வந்த சுமார் 40 ற்கும் மேற்பட்டோர் அங்கிருந்தவர்களைத் தாக்கினர். செல்வன் மற்றும் இளமதி ஜோடியை அடித்து காரில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பொலிசார் செல்வனை மீட்டனர். தொடர்ந்து இளமதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே காதல் ஜோடியை கடத்தியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

நண்பன் காதலுக்காக உதவப்போன இளைஞருக்கு ஊர்மக்களால் நடந்த கொடூரம்!!!

Quick Share

ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கடத்தப்போய், கடைசியில் உதவி செய்யப் போன நண்பன் மட்டும் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், தூசூா் பகுதியைச் சோ்ந்த பிரியா கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினாள் கணவரை பிரிந்த பிரியா, சித்தப்பா நடேசன் வீட்டில் தங்கியிருந்து, நாமக்கல் கடைவீதியில் உள்ள ஜவுளிக் கடைக்கு வேலைக்கு சென்று வந்தாா். இந்நிலையில், இவர் வாரம் ஒருமுறை சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில் அங்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் பூவராகவன் என்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அவரை ஒரு தலையாக காதலித்து உள்ளார் .

2 முறை காதலை தெரிவித்த போது, பிரியா காதலிக்க மறுத்துள்ளார். ஒருதலையாக காதலித்து வந்த பூவராகவன், பிரியாவை தொடா்ந்து திருமணத்துக்கு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு பிரியா மறுப்பு தெரிவித்த நிலையில், பூவராகவன் மற்றும் அவரது நண்பா்கள் செந்தில், குமாா் ஆகியோா் நாமக்கல்லில் வேலைக்குச் செல்லும் பிரியாவை கடத்த திட்டமிட்டனா். இதைதொடர்ந்து , திங்கள்கிழமை காலை சேலத்தில் இருந்து ஆட்டோவில் வந்த மூவரும், வேலைக்கு சென்ற பிரியாவை நாமக்கல் அரங்கநாதா் கோயில் அருகில் வழிமறித்து கடத்த முயன்றார்.

அப்போது அவா் கூச்சலிட, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்கள்,ஆட்டோ ஓட்டுநா்கள், ஆகியோா் 3 பேரையும் பிடிக்க முயற்சித்தனா். இதில், பூவராகவன், செந்தில் இருவரும் தப்பியோடினா். நண்பனுக்கு உதவ வந்த குமாா் என்ற இளைஞர் மட்டும் சிக்கிக் கொள்ள பொதுமக்கள் அவரை கடுமையாகத் தாக்கினா்.

தகவல் தெரிந்து வந்த போலீசார் காயமடைந்த குமாரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்ற போலீசார், தப்பியோடிய பூவராகவன் மற்றும் செந்திலை பயங்கரமாக தேடி வருகின்றனா். நண்பனுக்கு உதவப் போய் கடைசியில் இளைஞர் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது இணையத்தில் பரவி வருகிகிறது.


காதலித்த’…. ‘காதலியை வீட்டிற்க்கே சென்று வலுக்கட்டாயமா கொடூரம்’.. ‘செய்த காதலன்’.

Quick Share

கோவையை அடுத்த கல்லுக்குழி பகுதியை சேர்ந்த நந்தினி பிரபல தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நந்தினி அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்தார் தற்போது காதலர் தினேஷ் மது , கஞ்சா , மற்றும் பல பெண்களுடன் தொடர்பு என அனைத்து தீ’ய பழக்கங்களும் கொண்டு இருந்தார்.

இதனை அறிந்த நந்தினி காதலர் தினேஷை விட்டு விலகி சென்றார் இதனையறிந்த தினேஷ் ஏன் என்னைவிட்டு விலகி போகிறாய் என்று கேட்டபோது, அவர் வைத்திருக்கும் அனைத்து தீய பழக்கங்களும் சுட்டி காட்டினார், மேலும் நம் திருமணத்திற்கு என் அம்மாவிடம் மிகவும் சிரமப்பட்டு சம்மதம் வாங்க்கினேன் ஆனால் நீ இதுபோல கெட்டவனாக மாறி போகிறார் என்று கூறினார்.

இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்னை மறந்து விடு என்று கூறினார். இதனை சற்றும் ஏற்றுக்கொள்ளாத தினேஷ் அடிக்கடி நந்தினியை தன் காதலை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் நந்தினி தினேஷை விட்டு விலகி சென்றார்.

பின்னர் ஒரு கட்டத்தில் கோபமான தினேஷ் அளவுக்கு அதிகமான மது போதையில் நந்தினியை பார்க்க அவர் வீட்டிற்க்கே சென்றார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் கோபமான நந்தினி உன்னுடன் வாழ்வதற்கு சாவதே மேல் என்று கூறினார் இதனால் ஆத்திரத்தில் தான் எடுத்து சென்ற சாணிப்பவுடரை கரைத்து நந்தினி வாயில் ஊற்றியுள்ளார். பின் சிறிது நேரத்தில் நந்தினி மயக்கமானார்.

பின்னர் பதற்றத்தில் தினேஷ் அங்கிருந்து தப்பித்து ஒட்டிவிட்டார். நந்தினி அம்மா வந்து பார்த்து அதிர்ச்சியானார் பின்னர் மயக்கத்தில் இருந்த நந்தினியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் தினேஷும் சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

54 வயது கராத்தே மாஸ்டரின் பாலியல் சீண்டல்- பள்ளியில் 12 வயது சிறுமிக்கு நடந்த சோகம்.

Quick Share

பள்ளி விளையாட்டு அறையில் 12 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கராத்தே டீச்சர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது.

மும்பையில் உள்ள சியன் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 12வயது சிறுமியை பள்ளியில் உள்ள விளையாட்டு அறையில் தனியாக அழைத்து சென்று 54 வயதுடைய கராத்தே மாஸ்டர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து வீட்டிற்கு சென்று தந்து தாயிடம் அழுது நடந்ததை கூறியுள்ளார். பிறகு வீட்டிற்கு வந்து கராத்தே மாஸ்டர் சிறுமியின் கையை பிடித்து எதுவும் நடக்கவில்லை என மீண்டும் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்,

இந்த சம்பவம் மார்ச் 6ஆம் தேதி மாலை 2.35 முதல் 4 மணிக்கு இடையே நடந்துள்ளது. இதை கேட்டு அதிர்ந்து போன தாய் அருகில் உள்ள காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும் காவல் துறையினர் கராத்தே மாஸ்டர்-ஐ கைது செய்தனர்.

விசாரணையில் அவர் அதே பகுதியில் சியன்-கொள்ளிவாடா என்னும் இடத்தை சேர்ந்தவர் எனவும் அவர் பெயர் விஸ்வநாத் கிருஷ்ணாசந்த் நாயக் என்பது தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் அவரை கைது செய்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் தொடரும் கூட்டு பாலியல் –வாணியம்பாடியில் 6-ம் வகுப்பு மாணவியை கூட்டு ப...

Quick Share

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வீட்டில் கழிவறை வசதி இல்லை. கடந்த 6-ந்தேதி இரவு 7 மணிக்கு பாலாற்று கரையோரம் இயற்கை உபாதை கழிப்பதற்காக சிறுமி சென்றார்.

அப்போது அங்கு அப்பகுதியை சேர்ந்த சந்துரு (24). பார்த்திபன் (21), கண்ணன் (30) ஆகிய 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்கள் மாணவியை பார்த்தும் அவருக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்று அவரை மடக்கினர். மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கி சென்று கற்பழிக்க முயன்றனர். சிறுமி கத்தி கூச்சலிட்டார். இதனால் பீர் பாட்டிலை உடைத்து சிறுமியின் கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். பின் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்.

பின்னர் அந்த சிறுமி தன்னை சுதாரித்துகொண்டு சுடுகாட்டில் பிணத்தின் மீது போற்ற பயன்படுத்திய உடைகளை எடுத்து தன் மீது போற்றிக்கொண்டு வீட்டிற்கு தப்பி வந்தார். வீட்டில் உள்ளவர்களிடம் அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளார்.

அதிவேகத்தில் சென்ற காரினுள் உல்லாசத்தில் இருந்த ஜோடிகள்.! எதிரே வந்தவருக்கு நேர்ந்த கொட...

Quick Share

மலேஷியாவில் கல்லூரியில் படிக்கும் இரு காதலர்கள் காரினுள் உல்லாசமாக இருந்துள்ளனர் கார் ஒரே இடத்தில் இருந்தால் சந்தேகம் வரும் என்பதால் கார் ரன்னிங்கில் சென்றுள்ளது. வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை மடக்கி உள்ளனர் கல்லூரி ஜோடிகள் காரினுள் உல்லாசத்தில் இருந்ததால் காரை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டி சென்றனர். அதனால் எதிரே வந்த இருசக்கரத்தின் மீது மோதியதால் அதில் வந்த நபர் தூக்கி ஏற்ப்பட்டு விழுந்தார்.பின்னர் போலீசார் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த காரை பிடித்து அதில் உள்ளவர்களை கைது செய்துள்ளனர்.

காம வெறியால் தன் மகளின் வாழ்க்கையை சீர்ழித்த தாய்..

Quick Share

பஞ்சாபில் ஒரு மகளின் தாய் செய்த காரியம் அப்பகுதியில் விவாதமாக பேசப்பட்டு வருகிறது என்ன என்பது பார்ப்போம்.

பஞ்சாப் மாநிலம் குர்டாஸ்புர் என்ற பகுதியில் வயதுடைய தாய் தனது 18 வயது மகளை 21 வயதான ஒருவருக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணமா செய்து கொடுத்தார்.

திருமணமான தன் மகளை பார்க்க அடிக்கடி மகள் வீட்டிற்கு செல்வது வழக்கமாய் வைத்திருந்த தாய். அப்போது தன் 21 வயதான மருமகனின் அண்ணனான 22 வயது மதிக்க தக்க நபரிடம் பழக்கம் ஏற்பட்டது. பின் அப்பழக்கம் கள்ளத்தொடர்ப்பாக மாறிய நிலையில் அந்த மகளின் தாய் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு

தன்னை விட 15 வயது குறைவான தன் மகளின் கொழுந்தனாரை
திருமணம் செய்து கொள்வதாக கூறிய நிலையில் தன் மகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தன்னை மிரட்டுவதாக காவல் துறையிடம் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பின் இவ்வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருகிறது, இந்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது மேலும் முறையற்ற இந்த தொடர்பினால் அந்த தாயின் மகள் மிகவும் மனவேதனை பட்டு வருகிறார்.

தெருவுல இதெல்லாம் தேவையா…

Quick Share

டிக்-டாக் செயலி தற்போது பெரும்பாலானோரின் போனில் உள்ளது. இதை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் பலர் இதை வைத்து பொது இடங்களில் சேட்டைகள் செய்து வருகின்றனர். இவர்களின் செயல்கள் பலரை முகம் சுழிக்க வைக்கிறது.

இந்த வீடியோவில், தெருவில் ஒரு ஜோடி நடந்து கொண்டிற்கும் பொது ஒரு இளைஞர் தெருவில் வந்து தனது போனை நடுட்ரோட்டில் வைத்து அயிட்டம் டான்ஸ் ஆடுகிறார். அதை பார்த்ததும் நடந்து கொண்டிருந்த ஜோடியில், பெண் உச்சநிலை அடைந்து அவரோடு ஆட்டம் போட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் பிறகும் போது இனி பொது இடங்களில் டிக்-டாக் செய்வதற்கான இடம் ஒதுக்க வேண்டும் என்ற நிலை வரும் போல் இருக்கிறது.

இந்த டிக் டாக்-ல் இளசுகள் தான் அலப்பறைகள் கொடுக்கின்றது என்றல் நடுத்தர வயதுள்ளவர்களும் இதற்கு அடிமையாகியுள்ளனர். வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு இணையதளத்தின் கவர்ச்சி உலகின் கதவை திறந்து ஆட்டம் போடுகிறார்கள். பல மோசமான சம்பவங்களும் நடப்பதை அன்றாட செய்திகளில் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

போலீஸ் கொடுமைப்படுத்துவதாகக் கூறி முன்னாள் ஊராட்சித் தலைவர் தற்கொலை முயற்சி !!

Quick Share

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம் S.M.புரம் கிராமத்தில் சவுத்ரி அவினாஷ் இதற்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். அவருடைய கிராமத்தில் உள்ள பழம்பெரும் சிவன் கோயில் உள்ளது. அந்த கோயிலை புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், அவரை விலக்கி விட்டு கோவில் பணிகளை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசைச் சேர்ந்த சஞ்சய் ராணி என்பவர் மேற்கொள்ள முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் மோதல் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் அவினாஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவந்தனர். அவினாஷ் காவல்நிலையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். மேலே இருந்து விழுந்து படுகாயமடைந்த அவினாஷை மீட்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போலீசார் கொடுமை படுத்துவதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.

டிக்-டாக் ஆண்ட்டியை சிதைத்த இளைஞன்..வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செய்த கொடூர சம்பவம...

Quick Share

நொய்டாவில் உள்ள பிசர்க் என்னும் பகுதியில் உள்ள அபார்ட்மென்டில் நடுத்தர வயதான நீர்ஜா சவுகான் எனும் பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் ஒரு டிக்-டாக் பிரபலம். அடிக்கடி வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நடுத்தர வயது பெண்மணியை ராகவ் குமார் என்ற இளைஞர் பின்பற்றியுள்ளார் மேலும் நாட்கள் போக இருவரும் நண்பர்கள் ஆனார்கள். வீட்டிற்கு வருவதும் போவதுமாய் நாட்கள் சென்றுள்ளது.

இந்நிலையில் ராகவ் குமார் அந்தப் பெண்ணிடம் பணம் சம்பந்தமான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் வாக்குவாதம் அதிகமான ஆத்திரம் அடைந்த ராகவ் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை முகத்தை சிதைத்துவிட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டான். மேலும் அந்த பெண்ணின் மகன் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார், தகவல் அறிந்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு 6 மணி நேரத்தில் கொலை செய்த இளைஞரை கைது செதுள்ளனர்.

விசாரணையில் இருவரும் இறந்து வருடமாக பழகியுள்ளதாக கொலை செய்த ராகவ் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எந்த ஊராக இருந்தாலும்’… பிளைட்’ புடிச்சு போய் எங்கள் தொழிலை.. செய்வோம்..வசமாக சிக்கிய”....

Quick Share

கோயம்புத்தூர் கோனியம்மன் கோயில் திருவிழா கடந்த நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அம்மன் தேர் கிளம்பும் போது அங்கு கூடியிருந்த பெண்களிடம் இருந்து சுமார் 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் தேர் சென்ற வழியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

வீடியோவில் மூன்று பெண்கள் சுற்றிச்சுற்றி வந்து நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்க பட்டது. அதில் திருச்சூரை சேர்ந்த இந்துமதி(27), இலங்கையை சேர்ந்த பராசக்தி(36) லண்டனை சேர்ந்த செல்வி(36) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

மேலும் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அப்போது அவர்கள் கூறுகையில், ” நாங்கள் மூவரும் அக்கா, தங்கைகள் முறை. பல வருடமாக இந்த திருட்டு தொழிலை செய்து வருகிறோம். இணையத்தில் இந்தியா முழுவதும் எங்கு திருவிழா நடைபெறுகிறது என்று பார்ப்போம். பின்னர் பிளைட் பிடித்து அந்த இடத்திற்கு சென்று அங்கு, பின்னர் திருவிழா நடைபெறும்போது கூட்டத்திற்குள் புகுந்து நகைகளை திருடி மூவாறும் பிரித்து கொண்டு, அவரவர்கள் வீட்டிற்கு சென்று விடுவோம்.

இதை தான் எங்கள் வாடிக்கையாக வைத்துள்ளோம். இந்தியா முழுவதும் கூட்டத்திற்குள் புகுந்து எங்கள் கைவரிசையை காட்டி இருக்கிறோம். கடந்த மாதம் நடைபெற்ற தஞ்சாவூர் கோயிலிலும் கூட்டத்திற்குள் புகுந்து நகைகளை திருடினோம். தற்போது கோயம்புத்தூர் கோனியம்மன் திருவிழாவில் திருடிய போது மாட்டிக்கொண்டோம்,” தற்போது இவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த போலீசார் அவர்களின் பாஸ்போர்ட்டை முடக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.





You cannot copy content of this Website