கிரைம்

‘முகநூல்’ பார்த்ததை தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை.

Quick Share

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே வசித்து வருபவர் கோவிந்தன். இவர் அச்சகம் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு பிரசாந்த் (25) என்ற மகனும், ரக்‌ஷா (19) என்ற மகளும் இருந்தனர்.இவர்களில் பிரசாந்த் என்ஜினீயர் ஆவார். மகள் ரக்‌ஷா, சேலம் அருகே கொங்குநாடு மகளிர் கலை கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பட்டப்படிப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவி ரக்‌ஷாவுக்கு அவருடைய தந்தை புதிதாக ‘ஆண்ட்ராய்டு’ செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். அந்த செல்போனை மாணவி பயன்படுத்தி வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை:நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை ரக்‌ஷா செல்போனில் முகநூலில் (பேஸ்புக்) தோழிகளுடன் ‘சாட்’ செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த ரக்‌ஷாவின் தந்தை கோவிந்தன், அவரை கண்டித்துள்ளார்.இதனால் மாணவி மனவேதனை அடைந்துள்ளார். இதையடுத்து அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் அவர் அறையின் ஜன்னல் கம்பியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே நேற்று காலை நீண்ட நேரமாகியும் தங்கள் மகள் கதவை திறக்காததால் தாழ்ப்பாளை உடைத்து அறைக்குள் சென்று பெற்றோர் பார்த்தனர். அங்கு மாணவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து தகவல் கிடைத்ததும், தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

6 ஆண்டுகள் காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவி-விசம் ஊற்றி கொன்ற ‘காதல்...

Quick Share

கோவையை அடுத்த கீரணத்தம் அருகே உள்ள கல்லுக்குழியை சேர்ந்தவர் முருகன் மகள் நந்தினி (21). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் இறுதியாண்டு படித்து வந்தார்.கோவை கணபதி அருகே உள்ள சங்கனூரை சேர்ந்தவர் தினேஷ் (21). இவர் வீடுகள் மற்றும் மண்டபங்களில் உள் அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். நந்தினியும், தினேசும் சிறுவயது முதல் ஒன்றாக படித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. அவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் செல்போன் மூலமும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நந்தினியிடம் தினேஷ் வற்புறுத்தி வந்தார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து இருவீட்டாரும் சந்தித்து பேசி நந்தினியின் படிப்பு முடிந்தவுடன் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.இதைத்தொடர்ந்து நந்தினியும் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினியை சந்தித்த தினேஷ் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு நந்தினி படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் கூறி உள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

அதன்பிறகு தினேஷ், நந்தினியை பார்க்கும் இடங்களில் எல்லாம் திருமணம் குறித்து பேசி தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் நந்தினி கடந்த 20 நாட்களாக தினேசிடம் சரியாக பேசவில்லை. மேலும் அவரை திருமணம் செய்யவும் சம்மதம் தெரிவிக்க வில்லை என்று கூறப்படுகிறது.இதனால் நந்தினி மீது தினேஷ் கடும் கோபத்தில் இருந்து வந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் நந்தினியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு தினேஷ் சென்றார். அங்கு தனியாக இருந்த நந்தினியிடம் திருமணம் குறித்து தினேஷ் மீண்டும் பேசி உள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ் வீட்டில் இருந்த இருக்கைகைகளை எடுத்து நந்தினியை தாக்கினார். இதில் அவர் தலை, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகும் வெறி அடங்காத தினேஷ், வீட்டில் இருந்த ஒரு துப்பட்டாவால் நந்தினியின் கழுத்தை இறுக்கினார். மேலும் தான் கொண்டு வந்திருந்த சாணி பவுடரை (விஷம்) நந்தினியின் வாயில் ஊற்றினார்.

பின்னர் அவர், அங்கிருந்து தப்பிச் சென்று குரும்பபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் பதுங்கி இருந்தார். இந்த நிலையில் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர், நந்தினி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், நந்தினியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை நந்தினி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து மாணவியின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள், நந்தினியை கொன்ற தினேஷை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் காதலியை கொன்ற தினேஷ் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் பாட்டி வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் அவர் உயிர் பிழைத்தார். இதையடுத்து அவர் சிகிச்சை பெறும்வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்படுவார்.

கணவனின் தகாத உறவு – தாய் தந்தையை இழந்து பரிதவிக்கும்..சிறுபிள்ளைகள்!

Quick Share

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் 40வயது, இவர் கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நதியா 35வயது இவர்களுக்கு மதன் வயது 9 வைஷ்ணவி வயது 6 என 2 குழந்தைகள் உள்ளனர். சக்திவேலுக்கு தகாத உறவு இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

சம்பவத்தன்று நதியா தன்னுடைய வீட்டில் இருக்கும்பொழுது வழக்கம் போல் நதியாவிற்கும் சக்திவேலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சக்திவேல் கத்தியால் நதியாவின் கழுத்தை அறுத்து மார்பு பகுதியில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே நதியா உயிரிழந்தார். போலீசார் கைது செய்து விடுவர் என்ற பயத்தில் உடனே சக்திவேல் கழுத்தை அறுத்து கொண்டார்.

சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சக்திவேல் தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்த தகவலின்பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலியை வரவழைத்த காதலன்- 15 நாள் நண்பர்களோடு சேர்ந்து செய்த வெறித்தனம்..?

Quick Share

வீட்டு வேலை செய்யும் பெண்ணை தண்ணி கேன் போடவரும் இளைஞன் காதலிப்பதாக ஆசை வார்த்தையை கூறி நம்பி வந்த சிறுமியை நண்பர்களோடு சேர்ந்து சிதைத்த கொடூரம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ரீனா சென்னை அடையாறில் உள்ள தனது உறவினர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டிற்கு தண்ணீர் கேன் போடுவதற்கு வந்து செல்பவர் தான் சதீஷ் குமார் என்ற இளைஞர். இவர் அடிக்கடி தண்ணீர் கேன் போடும் போது சிறுமிக்கும் சதீஷ் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் சதீஷ்குமார், சிறுமியை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை காட்டி உள்ளார். இதனை நம்பிய அந்த சிறுமி ரீனா, வீட்டை விட்டு சதிஷ்குமாருடன் ஓடி வந்துள்ளார். அந்த சிறுமி ரீனாவை அழைத்து கொண்டு சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து சதீஷ் குமார், கற்பழித்துள்ளார்.

மேலும், தனது நண்பர்களான வினோத், ராஜா ஆகியோரை வரவழித்த சதீஷ் குமார் அந்த சிறுமி ரீனாவை கூட்டாக கற்பழித்துள்ளனர். இதே போல தொடர்ச்சியாக. சுமார் 2 வார காலம் அந்த சிறுமியை அந்த மூன்று பேரும் வெறி தீரும் வரை மாறி, மாறி பாலியல் கற்பழித்துள்ளனர். பின்னர் சிறுமி ரீனாவின் உறவினர் சிறுமி காணாமல் போய்விட்டதாக அடையாறு அனைத்து மகளிர்போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படியில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி ரீனாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவரின் வாக்கு மூலமாக சிறுமி நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு சிறுமி ரீனாவை பத்திரமாக மீட்டனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் சதீஷ்குமார், அவரது நண்பர்கள் வினோத், ராஜா ஆகிய 3 போரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆசிரியை அடித்து 8ம் வகுப்பு மாணவனுக்கு கண் பார்வை பறிபோன பரிதாபம்- சென்னையில் நடந்த கொட...

Quick Share

சென்னையை அடுத்த மேடவாக்கம் அரசு பள்ளியில், 8-ம் வகுப்பு படித்துவரும் மாணவனை ஆசிரியை அடித்ததால் தற்போது கண் பார்வை இழந்து பரிதவித்து வருகிறார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த பள்ளிகரணையைச் சேர்ந்த தம்பதிகளான வேலு – ரேகா இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் வேலு அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்து வருகிறார் வேலுவின் மூத்த மகன் கார்த்திக் (14), இவன் மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று, மாணவன் கார்த்திக் பள்ளியில் ஏதோ சிறு தவறு செய்துள்ளார், அதற்க்கு தண்டனையாக தமிழ் ஆசிரியை இரும்பு ஸ்கேலால், கார்த்திக்கின் பின் தலையில் அடித்துள்ளார். இதில், கார்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சில மாதங்களில் கார்த்திக்கு பார்வை குறையை தொடங்கியது. இதனால், கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், கார்த்திக்கின் மூளையில் ரத்தக்கசிவு மற்றும் அவரது கண் சற்று வெளியே வந்திருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

மேலும் மருத்துவர்களின் ஆலோசனை படி, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில், எதிர்பாராதவிதமாக, மாணவர் கார்த்திக்கின் இடது கண் பார்வை பறிபோனது. அதோடு, அவரது நரம்பு மண்டல பாதிப்பு, மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவர் கார்த்திக் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், பார்வை பறிபோன மாணவனை பார்க்க பள்ளி சார்பில் இருந்து யாரும் வரவில்லை எனக் குற்றம்சாட்டிய பெற்றோர், இது தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் கண்மூடித்தனமாக தாக்கி, என் மகன் பார்வை பறிபோக காரணமான பெண் ஆசிரியையை கைது செய்ய வேண்டும் என மாணவன் கார்த்திக்கின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கரம்பிடித்த கணவரை குழந்தைகளுடன் வீதி வீதியாக தேடி அலையும் மனைவி!

Quick Share

கைவிட்டு சென்ற காதல் கணவரை, தனது இரண்டு குழந்தைகளுடன் மனைவி தேடி அலையும் சம்பவமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பபிதா (30) என்பவர் மாவு மில் ஒன்றில் வேலை பார்த்த போது, மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாதியை காரணம் காட்டி, சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு தலைமறைவாகியிருக்கிறார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பபிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சுரேஷை கண்டுபிடித்து பொலிஸார் சேர்த்து வைத்துள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சுரேஷ் மாயமானதை அடுத்து, பபிதா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மதுரை வீதிகளில் கணவரை தேடி அலைந்து வருகிறார்.

இந்த நிலையில் உடமைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டும், மகனை ஒரு கயிற்றால் முந்தானையில் முடிந்து கொண்டும் சாலையில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்துள்ளார்.இதனை பார்த்ததும் ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவர்களுக்கு உணவு வாங்கிக்கொடுத்து ஆட்சியை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

மாணவியை புகைப்படம் எடுத்த வாலிபர்.. மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!

Quick Share

கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் கையை பிடித்து இழுத்து செல்ஃபி எடுத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் அக்கா மகள் மோனிஷா(22). இவர் அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.

மோனிஷாவின் தாய்-தந்தை இருவரும் இறந்து விட்டதால் தனது தாய் மாமா சரவணன் வீட்டில் அவர் வசித்து வந்தார்.இந்த நிலையில் தான், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், மோனிஷாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மோனிஷா தினமும் கல்லூரிக்கு செல்லும் நேரத்தில், தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனை மாணவி மறுத்து வந்ததால், அந்த வாலிபர் ஒரு நாள் கையை பிடித்து இழுத்து, ஒன்றாக இருப்பது போல் போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.அதன்பிறகு தன்னை காதலிக்காவிட்டால் அந்த புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டு விடுவதாக மோனிஷாவை மிரட்டினார்.இதையடுத்து, பதறிப்போன மாணவி மனமுடைந்து வாலிபரின் தொல்லைகள் குறித்து கடிதம் எழுதிவிட்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.இதுபற்றி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கணவர் கண்ணெதிரே இளைஞருடன் மனைவி உல்லாசம்… வேதனையில் தீக்குளித்த கணவன் .

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (40). இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு 10 வயதில் மகன் உள்ளார். வினோத்குமார் அடிக்கடி குடித்துவிட்டு கொடுமைப்படுத்தியதால் மனைவி ரேவதி பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், தனியாக வாழ்ந்து வந்த போது ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலமாக மாறியது. இதனையடுத்து, வெளியூரில் மனைவி குடித்தனம் நடத்தி வந்த ரேவதி. சில ஆண்டுகளுக்கு முன் வினோத்குமாரின் வீட்டின் அருகே வாடகை குடியிருந்து வருகின்றனர். தனது வீட்டின் அருகே மனைவி இன்னொருவருடன் குடும்பம் நடத்துவதை கண்டு வினோத்குமார் விரக்தியடைந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு வினோத்குமார் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாய வேலைக்கு வேனில் சென்ற பெண்கள்..! கார் மோதி பரிதாப பலி..!

Quick Share

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே இருக்கிறது தண்டியனேந்தல் கிராமம். இக்கிராமத்தில் இருக்கும் மக்கள் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அருகே இருக்கும் கிராமங்களுக்கு சென்று விவசாய பணிகள் செய்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது தொழிலாளர்கள் அனைவரும் ஒரு சரக்கு வேனில் சென்று வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல பக்கத்து கிராமமான பந்தல்குடிக்கு வேலைக்கு கிளம்பியுள்ளனர். அதற்காக ஒரு சரக்கு வேனில் 18 பெண்கள் உள்பட 23 பேர் பயணம் செய்தனர். வாகனத்தை தண்டியனேந்தலைச் சேர்ந்த தங்கையா(35) என்கிற ஓட்டுநர் ஓட்டியுள்ளார்.

பாலையம்பட்டி அருகே இருக்கும் ரெயில்வே மேம்பாலம் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் கார் ஒன்று பின்னால் வந்துள்ளது. அதிவேகத்தில் வந்த கார் எதிர்பாராத விதமாக வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு வேன் சாலையின் மறுபுறம் பாய்ந்து கவிழ்ந்து, அதில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். பலத்தகாயமடைந்த தொழிலாளர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயமடைந்து மாரி (55), பழனியம்மாள் (28), விஜயலட்சுமி (32) ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்த 11 பேர் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் கார் டிரைவர் பூவலிங்கம் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகள்களுக்கு திருமணமான பிறகும்’… “நீடித்த தாயின் தகாத உறவு..வாளால் வெட்டி கொலை செய்த கணவ...

Quick Share

கர்நாடக மாநிலத்தின் பகல்கோட் நகரை சேர்ந்த ஷரனப்பா பாலப்பா மனைவி மஞ்சுள, தம்பதிக்கு நான்கு பெண்கள் உள்ள நிலையில் முதல் பெண்ணுக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில், கடந்தா வருடம் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி பாலப்பாவின் மகள்கள் அவர்களின் பாட்டி வீட்டுக்கு சென்றனர். அந்த சமயத்தில் பாலப்பாவுக்கு, மஞ்சுளாவுடன் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஏற்கனவே மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக அவர் நடத்தையின் மீது பாலப்பாவுக்கு சந்தேகம் இருந்தது.

இதையடுத்து ஆத்திரமடைந்த பாலப்பா, மஞ்சுளாவை வாளால் அறுத்து கொன்றார். இதன் பின் அவர்களின் மகள்கள் வீட்டுக்கு வந்த போது மஞ்சுளா இரத்த வெள்ளத்தில் கொடூரமாக இறந்து சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு வந்து மஞ்சுளாவின் சடலத்தை மீட்டதோடு, பாலப்பாவையும் கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்த சமயத்தில் நேற்று பாலப்பா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி குற்றவாளி பாலப்பாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.பத்தாயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாழ வழியில்லாமல் நிற்கும் தம்பதியின் 3 பெண் பிள்ளைகளும் பாட்டி வீட்டில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவியை செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை கற்பழித்த மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவன்.

Quick Share

 நாட்டில் சிறுமிகள் ஆபாச படங்களை பார்க்கவோ, பகிரவோ கூடாதென குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு அதிரடியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்படி அதை மீறுபவர்கள், போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் ஆபாச படங்களை பார்த்து பகிர்ந்து வந்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தீவிர படுத்திய போலீசார் அதன் முதற்கட்டமாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் வலையப்படியில் பத்து வயது சிறுமி ஆபாச படம் எடுத்த கல்லூரி மாணவர் சண்முகபாலன் என்பவனை பொலிசார் கைது செய்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார். அதை தனது செல் போனில் வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்கரையில் இரவு குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த தாய்! காலையில் அவருக்கு காத்திருந்த ...

Quick Share

சென்னை கடற்கரையில் படுத்துறங்கிய பெண்ணின் 8 மாத குழந்தை கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியை பூர்விகமாக கொண்டவர் சினேகா. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர், கணவரைப் பிரிந்து தனது 8 மாத குழந்தை ராஜேஸ்வரியுடன் சென்னைக்கு வந்துள்ளார்.அங்கு ஊசிமணி, மாலைகள், பலூன்கள் விற்று வந்த சினேகா, கடற்கரை சாலையோர நடைபாதையில் நரிக்குறவர் மக்களுடன் வசித்து வந்துள்ளார்.

சினேகா கடந்த வியாழக்கிழமை அன்று இரவு வழக்கம்போல, தனது குழந்தையுடன் தூங்கிய நிலையில் காலையில் எழுந்து பார்த்துபோது குழந்தை அருகில் இல்லாமல் பாய் மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.எங்கு தேடியும் கிடைக்காததால், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.




You cannot copy content of this Website