வயது வந்த பெண் இருக்கும் இடத்தில் கள்ளக்காதல் எதற்கு என்று கேட்ட கணவனை கொன்று , மகள் மீ...
கணவரை கொலை செய்துவிட்டு அந்த கொலை பழியை 16 வயது மகள் மீது போட்டதால் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி படவெட்டி என்பவருக்கு நளா என்ற மனைவியும் 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் படவெட்டியின் மனைவிக்கு கள்ளக்காதலன் ஒருவர் இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த படவெட்டி தனது மனைவியை கண்டித்துள்ளார். வயது வந்த பெண் இருக்கும் இடத்தில் கள்ளக்காதல் எதற்கு என்று அவர் தனது மனைவியைக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளாத நளா தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் போதையில் ஒருநாள் படவெட்டி தனது மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த போது ஆத்திரம் அடைந்த நளா அவரை அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்து விட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நளாவும் அவரது கள்ளக்காதலனும் முடிவு செய்து 16 வயது மகள் மீது பழியை போட்டுள்ளனர்.
போலீசாரின் விசாரணையின் போது தனது கணவர் தனது மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், இதனை அடுத்து தனது மகள் தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டதாகவும் கூறினார். தனது தாயை காப்பற்ற அவரது மகளும் இதனை ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது
ஆனால் இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தபோது நளாவுக்கு கள்ளக் காதலன் இருந்தது தெரிய வந்தது. இதனை எடுத்து நளா மற்றும் கள்ளக்காதலனை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்த போது இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டனர் இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்