பாட்டியை தேடி வந்த சிறுமியை அடைத்து வைத்து கர்பமாக்கி 6 மாதமாக கொடுமைப்படுத்திய ரயில்வே...
சென்னையில் ரயில்வே உதவியாளராக பணியாற்றிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் ராவ். இந்த நிலையில் அவர் கடந்த அக்டோபர் மாதம் தனது உறவினர்களை சந்திப்பதற்காக விசாகப்பட்டினம் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நள்ளிரவு சென்னைக்கு புறப்பட்ட அவர் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தனியாக நின்றுகொண்டிருப்பதை கண்டார்.
அந்த சிறுமியுடன் பேசி தன் வீட்டிற்கு அழைத்து கொண்டு செல்வதாக கூறி, சாப்பிடுவதற்கு சாப்பாடை வாங்கி கொடுத்து சென்னைக்கு தன்னுடன் அழைத்து வந்துள்ளார். பின்னர் திருவொற்றியூரில் தான் வசிக்கும் ரயில்வே குடியிருப்பில் சிறுமியை கூட்டிக்கொண்டு சென்றார். 6 மாதமாக சிறுமியை அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார் சங்கர் ராவ். சங்கர் ராவ் வீட்டிலிருந்து தப்பிய வெளியே சிறுமி, தனது பாட்டியை தொடர்பு கொண்டு தான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதை தெரிவித்தார்.
இவர் ரயில்நிலையத்தில் சுற்றிக்கொண்டிருப்பதை கண்ட போலீசார் அவரை மீட்டு பெரவள்ளூர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைத்தனர். மேலும் அவருக்கு நடத்திய மருத்துவ சோதனையில் சிறுமி 4 மாத கர்பமாக இருப்பதும் தெரிந்தது. இதுகுறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் சங்கர் ராவின் சேட்டைகள் வெளிச்சத்துக்கு வந்தன. விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த சிறுமியின் பாட்டி புகார் அளித்ததின் பேரில் திருவொற்றியூர் போலீசார் சங்கர் ராவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.