கிரைம்

தாயின் சேலையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்த மகன், மனம் உடைந்த தாய் !!

Quick Share

சென்னையில் உள்ள வளசரவாக்கம் கைகான் குப்பம் பகுதியை சேர்ந்த மோகனா (வயது 40) என்பவர், கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். திரைப்பட படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் சமையல் பாத்திரங்களை தூய்மை படுத்தும் பணிகளை செய்து வருகிறார்.

மோகனாவின் மகன் சீனிவாசன் (வயது 17) குன்றத்தூரில் ஒரு விடுதியில் தங்கி, அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொங்கல் விடுமுறை என்பதால் வீட்டிற்கு வந்தார் சீனிவாசன், தனது விருப்பம் போல் அதிகமாக ஸ்டைலாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டுள்ளார். விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்வதால் முடியை வெட்ட சொல்லி மகனை விருப்பத்திற்கு மாறாக அடித்து சலூன் கடைக்கு அழைத்து சென்று முடியை வெட்ட சொல்லி அதன் படி வெட்டியுள்ளார். தாய் அடித்ததால் மனம் உடைந்தார் சீனிவாசன்.

அதன் பிறகு வேளைக்கு சென்ற மோகனா, மகனை அடித்ததால் மகன் சாப்பிட்டானா என்ற ஏக்கத்தில் பக்கத்துக்கு வீட்டாரான அமுதாவை போனில் சீனிவாசன் சாப்பிட்டானா என கேட்க சொன்னார். அப்போது உள்ளே சென்று பார்த்த அமுதா, தன் தாயின் சேலையிலேயே சீனிவாசன் தூக்கிட்டு கொண்டதை பார்த்து அதிச்சியடைத்தார். இதை கேட்ட தாய் மோகனா பதறி அடித்து வீட்டிற்கு வந்து மகனை பார்த்து கதறி அழுதார். தகவலறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவரை பிரிந்து, தற்போது மகனையும் இழந்து நிற்கும் மோகனா நிலையை கண்ட அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

டிக்-டாக் பழக்கத்தால் கர்பம் அடைந்த மாணவி தற்கொலை !! டிக் டாக்-ஐ தடை செய்ய வேண்டிக்கொண்...

Quick Share

டிக் டாக் செயலிக்கு பலர் அடிமையாகியுள்ளனர். ஆண் பெண் என பெரும்பாலானோர் ஆபாசமாக வீடியோவில் ஆடுவது பேசுவது போல் நடித்து பதிவிட்டு வருகின்றனர். லைக் காக ஏங்கும் இவர்கள் அட்டகாசம் இன்னும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. டிக் டாக் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டார். இதனால் சமுதாயத்தில் எவ்வளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிப்படுகிறது.

சமீபத்தில் திருப்பூர் கொடுவாய் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவிக்கும், பல்லடத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற வாலிபரும் டிக்-டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் மாணவியை காதல் வலையில் சிக்க செய்த வேல்முருகன், அவரிடம் நெருக்கம் ஏற்பட்டு மாணவி கர்ப்பம் அடைந்தார். 2 மாதம் கர்பம் அடைந்த மாணவி மனவேதனையால் கடந்த மாதம் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். டிக்-டாக் மூலம் வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், டிக்-டாக் செயலியை தடை செய்ய கோரி மாணவியின் பெற்றோர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.

நடிகைக்கு ஆபாச மெசேஜ் செய்த இன்ஸ்டாகிராம் இளைஞர்!! அதிரடி பதிலடி கொடுத்த ‘நம்ம கு...

Quick Share

தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் தினேஷ் நடிப்பில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா சுவேதா. அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் போன்றபடங்கள் இவருக்கு கைகொடுத்தது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தில் ‘குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ என்று விஜய் சேதுபதி நந்திதாவை குறிப்பிடும் வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. அதன் பிறகு வெளிவந்த படங்கள் அவ்வளவு வெற்றியை பெறவில்லை எனினும் எப்போதும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் .தனியாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் தான் படப்பிடிப்பின் போது செய்யும் சேட்டைகளை பதிவிட்டுவருகிறார். அதுமட்டுமல்லாது அடிக்கடி தனது அசத்தல் புகைப்படங்களையும், டிக்டாக் விடீயோக்களையும் பதிவிட்டுவருகிறார்.

இதுபோல யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டீவிட்டர் என அனைத்திலும் கலக்கிவரும் நந்திதாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் ‘வஞ்சி செழியன்’ என்ற இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச மெசேஜ்களை அனுப்பியுள்ளார் என நந்திதா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபாசமாக பேச ஆரம்பித்த அந்த இளைஞர், ஒருகட்டத்தில் படுமோசமாக பேசியுள்ளார். ஆத்திரமடைந்த நந்திதா அந்த மெசேஜ்களை ஸ்கீரின் ஷாட் டுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த இளைஞரின் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். மேலும் அதில் வஞ்சி செழியன் போன்ற இளைஞர்களை என்ன செய்வது அவர்களுக்கு குடும்பங்கள் ஏதும் இல்லையா? என கோவத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆபாசமாக பேசிய அந்த இளைஞருக்கு நந்திதா, அவரின் புகைப்படத்துடன் அவர் செய்த குறுந்தகவல்களையும் பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் பரப்பி சரியான பதிலடியை கொடுத்துள்ளார்.

செட்டில் செய்வதாக கூறி 10 பேரிடம் மோசடி செய்தபெண் !! விமான நிறுவனத்தில் வேலை தருவதாக மோ...

Quick Share

வேலைவாங்கி தருவதாக 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை டிம்பிள் என்ற இளம்பெண் மோசடி செய்த இந்த பெண்ணால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் காரில் கடத்திவிட்டதாக, டிம்பிளின் தாய் கொடுத்த புகாரால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சையை மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகள் டிம்பிள் (24). சென்னையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பல நபர்களிடம், தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் தனியார் விமான நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.

சேலம், நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த நிறைய இளைஞர்கள் லட்சக்கணக்கில் டிம்பிளிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பணம் கொடுத்த இளைஞர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை. டிம்பிள் பணத்தையும் அவர்களுக்கு திருப்பி தரவில்லை. தொடந்து டிம்பிளிடம் ஏமாந்துபோன இளைஞர்கள் பணம் கேட்டு கொண்டு இருந்தனர். பொறுமை இழந்த அவர்கள், நேற்று சேலம் இரும்பாலை பகுதியில் தனக்கு சொந்தக்காரர் இருப்பதாகவும், அங்கு வைத்து எல்லாருக்கும் பணத்தை செட்டில் செய்துவிடுவதாகவும் டிம்பிள் சொல்லி உள்ளார். அதன்படி இளைஞர்கள் சேலம் வந்தனர்..

டிம்பிளும் அவரது குடும்பத்தினரும் வந்தனர். அப்போது திடீரென டிம்பிள், தஞ்சாவூரில்தான் பணத்தை எடுத்து வரவேண்டும் என கூறியுள்ளார். உடனே இளைஞர்கள் நாங்கள் கூட்டி செல்கிறோம் என்று டிம்பிளையும், அவரது தந்தையையும், காரில் ஏற்றி கொண்டு கிளம்பியதாக கூறப்படுகிறது. இதனிடையே டிம்பிளின் தாயார், இரும்பாலை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது கணவர், மகளை இளைஞர்கள் சில பேர் காரில் கடத்தி சென்றதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விஷயம் இளைஞர்களுக்கு தெரியவந்தது. இதனால் நள்ளிரவில் சேலம் கமிஷனர் அலுவலகத்துக்கு அந்த பெண்ணை இளைஞர்களே அழைத்து வந்துவிட்டனர். அவர்களிடம் இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தினர்.

டிம்பிள் மற்றும் அவருடைய பெற்றோரிடமும் விசாரணை நடந்து வருகிறது. “பணம் தஞ்சாவூரில் இருப்பதாக சொன்னதால்தான் காரில் கூட்டிட்டு சென்றோம் நாங்கள் கடத்தவில்லை. புகார் தந்தது தெரிந்ததும் கூட்டிவந்து விட்டுவிட்டோம். எங்களுடைய பணத்தை திருப்பி தர வேண்டும்” என்று இளைஞர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அனைத்தையும் மறுத்து, டிம்பிள் பகிரங்கமாக தான் பணமே வாங்கவில்லை. வேலை விஷயமாக தெரிந்தவர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தேன். அவர் வேண்டுமானால் பணம் வாங்கியிருக்கலாம். நான் வாங்கவே இல்லை” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து யார் சொல்வது உண்மை என்பதை போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கொடூரம்..!! ”7-ம் வகுப்பு மாணவி கை,கால்களை கட்டி”..பதறவைக்கும் செய்தி ..!!

Quick Share

கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை ..கிருஷ்ணகிரி மாவட்டம் ஐபிகானபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(36) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.இந்தநிலையில் னது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.இவரது வீட்டின் அருகே ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்…அங்கிருக்கும் ஒரு பள்ளியில் ரேவதி ஏழாம் வகுப்பு படிக்கின்றார்.ஒரே பகுதியில் வீடுகள் அமைந்திருப்பதால் சிறுமியுடன் அடிக்கடி சுப்பிரமணி பேசி வந்திருக்கிறார்.இதனிடையே சுப்பிரமணி தனக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாக சிறுமி ரேவதி தனது பள்ளி தோழியிடம் திடுக்கிடும் தகவலை கூறியது தற்போது வெளி வந்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்ரமணியின் வீட்டில் வைத்து தனது கை,கால்களை கட்டிப்போட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறியுள்ளார்.

Mexico 175 children sexullay abused by 34 prie
Mexico 175 children sexullay abused by 34 prie


அதை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக கத்தியை காட்டி சுப்ரமணி மிரட்டி உள்ளார்.மேலும் அதே போல பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி சிறுமி அழுதுள்ளார். வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டியதால் பயந்து போன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் தனது பள்ளி தோழியிடம் விபரத்தை கூறியுள்ளார்.இது உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் கிருஷ்ணகிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதை அறிந்ததும் சுப்பிரமணி தலைமறைவாகி இருக்கிறார்.போக்சோவில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் சுப்ரமணியை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

பெட்டிக்கடையில் சிகிரெட் வாங்க காசு கேட்ட கடைக்காரருக்கு கத்தி குத்து – 2 பேருக்க...

Quick Share

வட சென்னை தண்டையார்பேட்டை அருகில் உள்ள பட்டேல் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 35) அவர் வசிக்கும் பகுதியிலேயே ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதே தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சையத் (28) மற்றும் அவரது நண்பர் அருண்குமார் (27) ஆகியோர் நாராயணனின் கடைக்கு வந்து, சிகரெட் வாங்கியுள்ளனர்.

சிகிரெட் வாங்கினதற்கான பணத்தை நாராயணன் கேட்டபோது, இருவரும் தர மறுத்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், சையத் மறைத்து வைத்திருந்த கத்தியால், நாராயணனின் மார்பின் இடது பக்கத்தில் குத்தினார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். நாராயணனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

‘தீயில் கருகிய குடும்பம்’ கள்ளகாதலால் நேர்ந்த விபரீதம் !!

Quick Share

கர்நாடகாவில், கணவர் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், குடும்பமே தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் தலவட்டி கிராமத்தில் அருண்குமார்-லதா தம்பதியினர் வசித்துவந்தனர். அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் இருந்தார். அருண்குமாருக்கும் அவரது மனைவி லதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அருண்குமார் என்பவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதமாக தொடர்ந்து வந்த இந்த பிரச்சனை, பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. கணவன் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், தகராரே வேண்டாம். தற்கொலை செய்துகொள்ளலாம் என கணவனும் மனைவியும் முடிவு செய்துள்ளனர். பின்னர் தனது 12 வயது மகளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்திவிட்டுவிட்டு, தாங்களும் எரித்துக்கொண்டனர்.

பற்றி எறிந்த தீயில் கதறிய 3பேரின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு சென்று பார்த்தபோது மூவரும் தீயில் எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தீயை அனைத்து அவர்கள் மூவரையும் அருகில் உள்ள இரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அடுத்தகட்ட சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அருண்குமாரும், அவரது மனைவி, மகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவம் அறிந்துவந்த போலீசார் அருண்குமாரின் வீட்டிலும், மருத்துவமனையிலும் சென்று விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

“மோசடி மோனிஷா, கஞ்சா சந்தியா” பைக் திருடி கைவரிசை கட்ட முயன்றபோது, CCTV கேம...

Quick Share

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தயார் சாஹிப் தெருவில் வசிப்பவர் அராபாத் அரபாத். தனது டியோ ஸ்கூட்டர் வீட்டில் வீட்டின் வெளியில் விட்டுவிட்டு சாப்பிட சென்றுள்ளார். அப்போது மோனிஷா மற்றும் சந்தியா ஆகிய இருவரும் அப்பகுதியை நோட்டமிட்டு வந்தனர். அதில் மோனிஷா என்பவர் அருகில் இருந்த வீட்டின் படிக்கட்டில் உட்கார்தார், சந்தியாவிடம் கள்ள சாவியை கொடுத்து அந்த டியோ ஸ்கூட்டர்ரை திருட முயன்றார். அப்போது வீட்டில் இருந்த CCTV கமெராவில் பதிவானது.

இவர்கள் திருட முயன்றபோது CCTV கட்சியை பார்த்ததும் வெயியே வந்த யாசர் அராபாத் அவர்களை துரத்தி பொதுமக்கள் உதவியோடு ஒருவரை மட்டும் வழிமரத்து சிறை பிடித்தனர். அது 19 வயது கஞ்சா வியாபாரி சந்தியா என்பது தெரியவந்தது. மேலும் சந்தியா பொதுமக்களை மிரட்டும் அளவுக்கு பேசினர். தன்னை வீடியோ எடுக்கவேண்டாம் என கத்தினார் சந்தியா. தகவல் அறிந்த பின்பு வந்த அண்ணா சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்பு இந்த சம்பவத்திலிருந்து தப்பி சென்ற மோசடி மோனிஷாவை காவல் துறை வலை வீசி தேடிவருகின்றனர். காசு இல்லை என்பதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டதாக சந்தியா கூறினார்.

கணவன் இல்லாமல் தனிமையில் இருந்த பெண்ணிடம் தவறாக நடந்த வாலிபர் !! போனில் வந்த புகாரை அட...

Quick Share

சென்னையில் புத்தாண்டு இரவில் சுமார் 12 மணி அளவில் ஒரு பெண் பதற்றத்தோடு ஒருவர் என் வீட்டில் நுழைந்து என்னிடம் தவறாக நடந்து கொண்டதாக, பாலியல் தொல்லை கொடுத்ததாக, காவல் துறை கட்டு பட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். புகார் வந்த போன் நம்பரை போலீஸ் விசாரித்தபோது அது ஆவடியில் உள்ள எம்ஜிஆர் தெருவில் இருந்து வந்தது என கண்டறிந்தனர்.

காவல் கட்டுப்பாடு அறையிலிருந்து ஆவடி பகுதியில் உள்ள முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு செய்தி அனுப்பினார். பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். புகார் அளித்த பெண்ணிடம் விசாரித்த போது தன் கணவர் 10 வருடத்திற்கு முன்பே இறந்துவிட்டார் மேலும் முகேஷ் என்பவர் குடித்துவிட்டு புத்தாண்டு இரவு அன்று வீட்டில் நுழைந்து தவறாக நடந்து கொண்டார் என கூறினார். அதே பகுதியில் வசிக்கும் முகேஷை பிடித்து விசாரித்தபோது தான் பாலியல் தொல்லை தரவில்லை என கூறினார்.

காவல் துறைக்கு போலீஸ் கொண்டு சென்று நடத்திய விசாரணையில், குடித்துவிட்டு சென்று முகேஷ் அந்த பெண்ணை வீட்டில் அத்துமீறி நுழைத்திருக்கிறார் இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டிருக்கிறார் அதோடு காவல் நிலையத்திற்கும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் காவல் துறையினர் காவலன் செயலி பற்றி விலகி கூறினார்கள்.

RAPIDO பைக் டாக்ஸி ஓட்டுனர்கள் ஆபாச வார்த்தை பேசி, அதட்டும் கொடூரம் !! பயணியின் பகீர் ப...

Quick Share

ராபிடோ (rapido) என்பது சென்னையில் செயல் பட்டுவரும் ‘பைக் டாக்சி ‘ஆகும். ராபிடோ எனும் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இந்த சேவை மக்களுக்கு அளிக்கப்பட்டுவருகிறது. ராபிடோ செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து இதனை பயன்படுத்தலாம். நாம் பயணத்திற்கு புக்கிங் செய்யும் போது அதற்க்கான கட்டண விவரம், ராபிடோ கேப்டன் (ஓட்டுநர்) விவரம் வந்துவிடும். இந்த ராபிடோ சேவையில் பெரும்பாலும் இளைஞர்கள் தான் இருக்கிறார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாகவும், படித்த வேலைக்கு தகுந்த வேலை இல்லாமலும் இருக்கும் இளம் ஆண், பெண் என இருபாலரும் இதில் உள்ளனர். ஆனால் இதில் சில அடாவடி இளைஞர்களால் இந்த நிறுவனத்தின் மொத்த பேரும் தற்போது காற்றில் பறக்கவிடபட்டுள்ளது.

இந்த செயலி மூலம் வாகனத்தில் பயணம் செய்த ஒரு இளைஞர் கெவின் என்பவர் இது குறித்த புகாரை அளித்துள்ளார். அதில் ராபிடோவில் பணியாற்றும் இளைஞர்கள் சிலர் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று, நடுவழியில் அவர்களை இறக்கி, அவர்களை மிரட்டி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு அதிகமாக கட்டணம் கேட்பதாகவும், அப்படி கொடுக்கவில்லை என்றால் அவரை மட்டுமல்லாது அவரது குடும்பத்தையே ஆபாச வார்த்தைகளால் திட்டி பணம் பறிப்பதாக புகார் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பயணத்தை ரத்து செய்தவர்களில் போன் நம்பர்களை அதிலிருந்து எடுத்து, இன்னும் ஒரு 10 நண்பர்களிடம் கொடுத்து ஏன் பயணத்தை ரத்து செய்தீர்கள் என கூட்டாக சேர்ந்து மிரட்டியும், கலாய்த்தும் வருகின்றனர். இதற்க்கான ஆடியோவையும் தற்போது பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார்.

கெவின் கொடுத்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும் ராபிடோ கேப்டன் ஆனந்த் மற்றும் அவரின் நண்பர்களை பிடித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த ராபிடோ சேவை மூலம் இளம் பெண்களும் செல்கிறார்கள் அவர்களின் பாதுகாப்புக்கு பெரும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

ப்ளஸ்-1 மாணவியை நாசம் செய்த இன்ஸ்டாகிராம் காதலன் கைது !!

Quick Share

மதுரை மாவட்டத்தில் உள்ள காளவாசல் எனும் பகுதியில் வசித்துவரும் 16 வயதான மாணவி ஒருவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் எனும் ஆப்-ஐ உபயோகித்து வரும் அவர் கடந்த ஆண்டு, மதுரையில் உள்ள தெப்பக்குளம் நியூ பங்கஜம் காலனியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவற்றின் 20 வயது மகனான அல்அசன் என்பவருடன் ‘இன்ஸ்டாகிராமில்’ அறிமுகமாகியுள்ளார். முதலில் தெரியதா நபர்களாக அறிமுகமாகிய இவர்கள் நட்பாக பழகியுள்ளனர். நாள் செல்ல செல்ல அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. காதல் என்ற பெயரில் அடுத்தகட்டமாக அந்த வாலிபன் மாணவியின் அந்தரங்க படங்களை கேட்கவும் இவரும் அனுப்பியுள்ளார். இந்த புகைப்படங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அல் அசன், மாணவியை அந்த புகைப்படங்களை காட்டி சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துவிடுவேன் என மிரட்டி தன்னுடன் உறவுகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளான்.

இதனையடுத்து அந்த மாணவியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி நாமக்கல் அழைத்துள்ளான். பின்னர் அங்குள்ள லாட்ஜிற்கு அழைத்து சென்று பாலியல்பலாத்காரம் செய்துள்ளான். , இதை போன்றே அவர் தொடர்ந்து மிரட்டவே மனமுடைந்து போனாள். அந்த மனைவி கர்பம் ஆகியுள்ளார் என விஷயம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு மதுரை தெற்கு மகளிர் போலீசிடம் நிலையத்தில் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அல்அசனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

“சீமானுக்கு கொலை மிரட்டல்” கத்தியை காட்டிய 5 பேர் கைது !!

Quick Share

சீமானுக்கு டிக்டாக் மூலம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் .

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக , சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த, மணி, சுரேஷ், கிஷோர், அஜித், நிஷாந்த் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சேர்ந்து 5 பேரும் சேர்ந்து கானா பாடல்கள் மூலம் பல அரசியல்வாதிகளை விமர்ச்சிக்கும் விதமாக வீடியோக்களை டிக் டாக்கில் பதிவிறக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் ஒரு வீடியோவில் ‘ கூட்டுனு வாங்கடா உங்க சீமான ” என ஆரம்பிக்கும் கானா பாடலை பாடி டிக் டாக் செய்துள்ளனர். குறிப்பாக அதில் கையில் கத்தியுடன் இருந்த்துள்ளனர்.

இந்த பாடல் வைரலானதை தொடர்ந்து இந்த வீடியோ தாம்பரத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி கண்ணில் பட்டுள்ளது. கையில் கத்தியுடன் ஒரு அரசியல் பிரமுகரை மிரட்டும் விதமாக அந்த வீடியோ இருந்ததால், அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை மிரட்டல் கொடுக்கும் அளவுக்கு என்ன பின்னணி என தீவிரமாக அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த 5 பேர்கள் மீது பல கஞ்சா மற்றும் கிரிமினல் வழக்குகள் அவர்கள் போட்ட டிக் டாக் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டுஉள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

https://twitter.com/mahajournalist/status/1209804127397535744



You cannot copy content of this Website