ஒரே வீட்டில், இரு சகோதரர்கள் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை அதீத பாசத்தால் நேர்ந்த விப...
தம்பியின் மீது கொண்ட பாசத்தால், தம்பி தற்கொலை செய்து கொண்டு இறந்த செய்தியை கேட்ட அண்ணனும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். ஒரே வீட்டில் இருந்த 2 மகன்களையும் இழந்த குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
சென்னை காசிமேடு பகுதியில் உள்ள காசிமாநகர் 2 வது தெருவில் வசித்து வருபவர்கள் அலெக்ஸ்சாண்டர்- ஜோஸ்வின் மேரி தம்பதியினர். அவர்களுக்கு அனிஷ் என்கிற இருதய ராஜ் (29), ஆரோக்கிய ஆகாஷ் (24) என்ற இரு மகன்கள் உள்ளனர். அனிஷ் B.TECH முடித்துவிட்டு பிரபல IT நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரின் தம்பி ஆரோக்கிய ஆகாஷ் இன்ஜீஇனியரிங் படித்து விட்டு வீட்டில் இருக்கிறார். இருவரும் வெறும் அண்ணன் தம்பி உறவாக மட்டும் அல்லாமல் நண்பர்களை போல இருந்துள்ளார்கள். அண்ணனுக்கு தம்பி மேல் அவ்வளவு பாசமாம். இந்நிலையில், ஆரோக்கிய ஆகாஷ் ஒருநாள் தன்னுடைய நண்பர் ஒருவரின் செல்போனிற்கு ஒரு வாட்ஸப் மெசேஜை அனுப்பியுள்ளார். அதில், ஹாய் பிரெண்ட்ஸ், நான் இந்த உலகத்தைவிட்டு செல்கிறேன் என் குடும்பத்தை நீதாண்டா பாத்துக்கணும்” என அனுப்பியுள்ளார்.
இதை கண்ட நண்பர் ஆரோக்கிய ஆகாஷின் செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார் ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது. உடனே அவர் ஆகாஷின் சகோதரர் அனிஷ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே வீட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே வீட்டில் இருந்தவர்கள் ஆரோக்கிய ஆகாஷ் இருந்த அறைக்கு சென்று பார்த்தனர், அறை உள்ப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனால் கதவை உடைத்து சென்றனர். அங்கு பார்த்தால் ஆரோக்கிய ஆகாஷ் தனது அறையில் உள்ள மின்விசிறியில் துக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ,அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த தகவலை மருத்துவமனைக்கு வந்த அண்ணன் அனிஷால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மருத்துவமனையிலேயே கதறி கதறி அழுதார். பின்னர் அங்கிருந்து வேகமாக வீட்டிற்கு திரும்பினார். ஆகாஷின் சடலம் பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
மனமுடைந்து வீட்டிற்கு சென்ற அனிஷ் தம்பி தற்கொலை செய்து கொண்ட அதே அறையில், அதே மின்விசிறியில், அதே துணியை கொண்டது தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு சென்ற அனிஷை தேடிச்சென்ற குடும்பத்தினருக்கு, மற்றொமொரு அதிர்ச்சியாய் அனிஷும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு துயரத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து தகவலளித்த போலீசார், ஆரோக்கிய ஆகாஷ் இன்ஜீனியரிங் படித்தும் வேலையில்லாத காரணத்தால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, போதைக்கு அடிமையாகி உள்ளார் ஆரோக்கிய ஆகாஷ். அதனால் தற்கொலை செய்துள்ளார். தம்பியின் இறந்த செய்தியை தாங்கமுடியாத அண்ணனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவரின் உடலையும் பிரேதபரிசோதனை முடித்த பின் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தோம் என்றனர். படித்த இளைஞர்களின் இந்த விபரீத செயல் அந்த பகுதி மக்களையும், அந்த குடும்பத்தாரையும் பெரும் துயரத்திற்கு தள்ளியுள்ளது.