கிரைம்

கொடூரம் ! ‘வெறியான மருமகள்’ தலையுடன் 6 தையலுடன் மாமியார்..

Quick Share

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மின் நகர் பகுதியில் நாகேஸ்வரி என்ற 62 வயதான குடும்பத்தலைவி இருந்தார். இவருக்கு ஓர் ஆண்மகன் இருந்துள்ளார். அவர் பெயர் சரவணகுமார் 38 வயதானவர் இவர். கடந்த 13 வருடங்களாக சின்னாப்பாளையத்தில் உள்ள கல்பனா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. மேலும் திருமணம் ஆகிய பிறகும் குடிப்பழக்கம் விடவிலை. இதனால் அடிக்கடி அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி இடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சகித்துகொள்ள முடியாமல்போனதால் கல்பனா நீண்ட தகராறிலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் சரவணகுமார் தன் தயார் வீட்டுற்கு மின் நகர்க்கு வந்துவிட்டார்.

பிறகு மாமியார் வீட்டுற்கு வந்து தகராறில் ஈட்பட்டுள்ளார் கல்பனா. கடந்த ஜனவரி மாதம் அன்று மாமியார் மருமகள் பிரச்சனை தொடங்கியது. இதனால் மாமியனரான நாகேஸ்வரி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை வாபஸ் செய்யுமாறு கல்பனா மிரட்டியுள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கடந்த சனிகிழமை அன்று வழக்கம்போல் மாமியார் மருமகள் தகராறு தொடங்கியுள்ளது. இதில் கல்பனா தன் மாமியாரை தாக்கி பல்லால் தலையைக்கடித்து காயப்படுத்தினர். மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லபட்ட அவர்க்கு 6 தையல் போடப்பட்டது என மருத்துவர் தெரிவித்தார். இதனை அறிந்தஎ பொலிசார் கல்பனாவை கைதுசெய்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது .

நள்ளிரவில் வயக்காட்டில் இளம்பெண் சடலம்!! கொலையா ? தற்கொலையா ? பரபரப்பான சேலம் !!

Quick Share

சேலம் ஆத்தூர் அருகே வயக்காட்டில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். இது கொலையா தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள ஊரண்டி வலசு காட்டுக்கொட்டகை கிராமத்தை சேர்ந்த குப்புசாமி-சசிரேகா தம்பதிகளுக்கு 23 வயதில் கவுசிகா என்ற மகள் இருந்துள்ளார். 3 வருடத்திற்கு முன்பு இவர் சின்ன சேலத்தை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்ததால் பெற்றோர்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். சந்தோசமாக ஆரம்பித்த திருமண வாழ்க்கையில் அவர்களுக்கு 1 வயதில் பூசிகா என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். சரவணன் அலுமினிய கதவுகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுவந்தார். அதே பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் கவுசிகா வேலைபார்த்து வந்துள்ளார்.

திருமணமாகி ஆகி 3 வருடங்கள் கடந்தாலும் சந்தோசமாக ஆரம்பித்த அவர்களது வாழ்க்கையில் அடிக்கடி சண்டைகள் நடந்ததக கூறப்படுகிறது. அந்த சண்டைகளை கவுசிகாவும் தனது வீட்டில் அடிக்கடி சொல்லிவந்துள்ளார். அண்மையில் மீண்டும் தம்பதிகளுக்குள் தகராறு வரவே கவுசிகா கோபித்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். சில நாட்களாகவே அம்மா வீட்டில் இருந்துவந்த கவுசிகா நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் வெகுநேரம் ஆகியும் திரும்பி வராததால் பதறி போய் பெண்ணை தேடி பெற்றோர்கள் அவரை தேடினார்கள். அப்போது ஒரு வயக்காட்டில் மயங்கிய நிலையில் கிடைத்துள்ள கவுசிகாவை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக வாழப்பாடி தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவலால் அதிர்ந்த பெற்றோர்கள் தங்கள் பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளது, யாரோ அடித்து கொலை செய்து உள்ளார்கள், முகம், கால்களில் காயங்கள் உள்ளது என போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். தக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இது தற்கொலையா, அல்லது கொலையா, கவுசிகாவேலைபார்த்த பியூட்டி பார்லரில் பிரச்சனையா, அல்லது கணவரிடம் பிரச்சனையா என மல்லியக்கரை போலீசாரும் ஆத்தூர் உதவி ஆட்சியாளரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

“போலீஸ்காரங்களே திருட சொல்ராங்க என் சாவுக்கு அவங்கதான் காரணம்” திடுக்கிடும்...

Quick Share

செங்கல்பட்டுவை சேர்ந்த பிரபு எனும் பிரபல ரவுடி தான் சாக போவதாக கூறி அரளிவிதையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு என் சாவுக்கு காரணம் போலிஸ் தான் என சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

செங்கல்பட்டுவை சேர்ந்த பிரபல ரவுடி வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ, அதில் பேசியுள்ள அவர், என் மீது பல வழக்குகள் உள்ளது. நான் தவறாமல் நீதிமன்றம் சென்றுகொண்டு இருக்கிறேன். எனக்கும் எனது தம்பிக்கும் பிரச்சனை வந்ததால் அவனை அடிச்சு துரத்திட்டேன். என்னுடைய பெரிய பொண்ணு எந்த பிரச்சனைக்கும் போகவேணான்னு சொன்னதால, நான் இப்போ திருந்திட்டேன். திடீர்னு போலீஸ்காரங்க வீட்டுக்கு வந்து குமார் எஸ்.ஐ கூப்பிடுறாருனு சொன்னதும், என்பொண்டாட்டி சண்டைபோடுரா சாகப்போறன்னு சொன்னா. இப்படி திடீர்னு வந்து கூப்பிட்டா நான் என்ன பண்ணுவேன்.என்ன போலீஸ் மணல் கடத்த சொல்ராங்க என்ன மிரட்டுறாங்க, முடியாதுன்னு சொன்ன காசு கேக்குறாங்க. நான் இப்போ இந்த அரளிவிதையை சாப்டுட்டு செத்துப்போக போறேன் என் சாவுக்கு அந்த 4 போலீஸ்தான் காரணம் என வீடியோவில் பரபரப்பாக பேசியுள்ளார் .

இது குறித்து காவல் துறையிடம் விசாரிக்கும் போது, செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பகுதியை சேர்ந்த பிரபு-பிரேம்குமார் இருவரும் பிரபல ரவுடிகள் இருவர் மீதும் கொலை, கடத்தல் போன்ற பல வழக்குகள் உள்ளன. இவர்கள் பாலாற்றில் மணல் கடத்துவதாக வந்த புகாரின் பெயரில் இவர்களை அவர்கள் வீட்டில் வைத்து கைது செய்து இருசக்கர வாகனத்தில் அழைத்து வரும் போது காவலரை தள்ளி விட்டுவிட்டு, இருவரும் தப்பி ஓடினர். காயமடைந்த எஸ்.ஐ குமாருக்கு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் பிரபு அரளிவிதையை சாப்பிட்டு சாவதாக பாவனை செய்து வருகிறான். இவன் ஏற்கனவே ஒரு தடவை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக குறி சிகிச்சையளிக்க வேண்டுமென ஒரு மருத்துவமனையில் கட்டாயப் படுத்தியுள்ளான். ஆனால் இது போலீஸ் கேஸ், என மருத்துவர்கள் மறுக்கவே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் போய் பிரச்சனை செய்தான் அங்கேயும் மறுத்ததால் அவன் தப்பி சென்று விட்டான். ஆனால் இப்போது போலீஸ் மீது குற்றம் சாட்டிக்கொண்டு சுற்றிவருகின்றான் என கூறினார்.

‘ஆபாச படம்’ சிக்கியது முதல் ஆடு, தமிழ்நாட்டில்..?? எங்கு தெரியுமா .?

Quick Share

பதற்றத்தில் இளையோர்கள் , சிக்கியது முதல் ஆடு .
திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் தொடர்பான படங்களை உள்ளார் .அதோடு அதை பேஸ் புக் மெஸ்சேன்ஜ்ர் மூலமாக அதிகமாக ஷேர் செய்துள்ளார் .நிலவன் ஆதவன் என்ற கணக்கு மூலம் விடீயோக்களை பகிந்ததாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது .

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆபாச படம் பார்ப்பவர்கள் , கைது நடவடிக்கைக்கு பயப்படத்தேவையில்லை என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார் .ஏற்கனவேய பட்டியலில் உள்ள பல பெயர்கள் அறிவிக்க பட்ட நிலையில் கைது நடவடிக்கையில் இதுவே முதல் முறை என்பதால் மிக பதற்றத்தில் இளையோர்கள் .

இறந்தவரை உயிரோடு வரவழைத்து நூதனமாக ரூ 1.5 கோடி நிலம் அபேஸ் – போலீசிடம் சிக்கிய கு...

Quick Share

சென்னையில் இறந்து போன ஒருவரை உயிரோடு இருப்பதாக கூறி ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த மோசடி கும்பலை கைது செய்தனர் நில அபகரிப்பு போலீசார்.

சென்னையில் 2009ம் ஆண்டு இறந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான 1035 சதுர அடி நிலம் நந்தம்பாக்கத்தில் உள்ளது. இந்தநிலத்தை விற்பதற்காக இறந்துபோன பெருமாள் என்பவர் உயிரோடு தான் உள்ளதாக, வேறு ஒரு நபரை அழைத்து வந்து இவர்தான் பெருமாள் என கூறி ஆள்மாறாட்டம் செய்து ரவிக்குமார் என்பவர் 2013ல் பெருமாளின் நிலத்தை வாங்கியது போல போலி ஆவணங்களை தயார் செய்து வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். அதுமட்டுமல்லாது அந்த நிலத்தை தனது மனைவி ஜெயக்குமாரியின் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்த தகவல் நிலத்தின் உரிமையாளரான பெருமாள் என்பவரின் மகன் கோபிக்கு தெரிய வரவே போலீசில் அவர் புகாரளித்துள்ளார்.

இந்த புகாரில் பேரில் மத்திய குற்றப்பிரிவின் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த மோசடியில் ஈடுபட்ட ரவிக்குமார், அவரது மனைவி ஜெயக்குமாரி மற்றும் உடந்தையாக இருந்த போத்திராஜ் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவான சரவணன் எனும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொடைக்கானலில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 57 வயது முதியவர் கைது !

Quick Share

மதுரை திருமங்கலத்தை சேர்த்தவர் பாண்டி (வயது 57). இவருடைய மகள் வசந்தி கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா நகரில் குடியிருக்கிறார். கர்ப்பமாய் இருக்கும் தனது மகள் வசந்தியின் வளைகாப்பிற்கு வந்த பாண்டி. வசந்தியின் வீட்டில் அருகே வசிக்கும் அக்கம் பக்கத்தினர் வளைகாப்பிற்கு வருகை தந்துள்ளனர். இதில் பக்கத்துக்கு வேட்டை சேர்ந்த 4 வயது சிறுமியை வீட்டில் உள்ள தனி அறையில் கொண்டு சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

அறையில் துன்புறுத்தலுக்கு உள்ளன சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதால். கதவை திறந்து அருகில் இருந்தவர்கள் கையும் களவுமாக பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வந்த புகாரின் பேரில், ஆய்வாளர் பாண்டி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.

‘ஆமா,பிரா ஸ்ட்ராப்’ தெரியுது,அப்டிதா காட்டுவேன், ஏன்னா இது Rs .2000 ‘...

Quick Share

பாரதி நீ கண்ட புதுமை பெண்ணா இது .??? என்று வாய் பிளக்கும் அளவுக்கு இருக்கிறது இந்த பதிவு.
சமீபத்தில் வெளியான கல்லூரி மாணவியின் வீடியோ ஒன்று டிக் டாக் ‘ல் காட்டு தீயை போல பரவி வருகின்றது . உடலை மறைக்கத்தான் ஆடை என்றாலும் உடல் முழுவதும் சுற்றி கொள்ள மட்டும் இல்லை ஆடை .அதிலும் ஒரு அழகியல் உண்டு ,அதற்காக அங்கங்கள் தெரியும் அளவிற்கு ஆடை அணிய கூடாது . ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவர் . இப்படி உடை அணிவதில் பல விஷியங்கள் இருப்பினும் இன்னும் மாறவில்லை இந்த பெண்ணின் முட்டாள் தனமான பதிவு .

திமிர் பிடித்த இவர் ,ஆணினத்தை கடுமையாக சாடுகின்றாள் , நம்மில் சக நட்பு வட்டாரத்தில் இருக்கும் பெண்கள் யாராவது இப்படி யாராவது பண்ணி இருந்தால் செருப்பால் அடிக்கவேண்டும் என்று கூறுகின்ற அளவிற்கு பேசியுள்ளாள். ”நான் அப்டி தாண்ட டிரஸ் பண்ணுவேன் ,பிரா தெரியற மாதிரி ,உனக்கு பிடிச்ச பாரு இல்ல போடா , நயன்தாரா ‘பிகினி ட்ரெஸ்’ மட்டும் போட்ட வாய் பொளந்து பாக்குற லா, ஏன் நான் போட்ட என்ன பாக்கமாட்டாயா.? என்று மிக கடுமையாக சாடுகிறாள். இந்நிலையில் , பதிவை பார்த்த நெட்டிஸின்கள் தாறுமாறாக கழுவி ஊத்துகின்றனர்.

வீடியோ உள்ளே……

https://youtu.be/4rg_9YQOSnQ

பள்ளி சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த உறவினர் , வற்புறுத்தி பாலியல் தொழிலில் விழ செய்த ...

Quick Share

சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த அவரின் உறவுப்பெண், அதனை வைத்து மிரட்டி, அச்சிறுமியை பாலியல் தொழிலில் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே 17 வயது சிறுமி, கடந்த நவம்பர் 9ம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.அதற்கு அடுத்தநாள் திருவனந்தபுரம் பகுதியில் தவித்ததாக உறவினர் ஒருவர்,சிறுமியை அழைத்து பெற்றோரிடம் ஒப்படைத்தார். அதன்பின் சில நாட்களாக சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் கவுன்சிலிங் அழைத்து சென்றனர். அங்கு சிறுமி கூறியதை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டில் சிறுமி குளித்துக்கொண்டிருந்த போது, 30 வயதுள்ள லினட் என்ற உறவுப்பெண் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். அதனை சிறுமியிடம் காண்பித்து, இணையதளத்தில் பதிவேற்றுவதாக மிரட்டியுள்ளார். இதில் பயந்த சிறுமியை கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள லாட்ஜ்களுக்கு கூட்டிச்சென்ற லினட், வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.சிறுமியின் நிலையை கேட்டு அதிர்ந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் லினட் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவிலில் +2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி !!

Quick Share

நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பள்ளி குழதைகள் வேலை செய்யும் பெண்கள் என பலபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி சந்திக்கும் நபர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஞாயிற்றுகிழமை அன்று நாகர்கோவிலில் உள்ள இடலாக்குடியில் அரசு பள்ளியில் +2 படிக்கும் மாணவி ஒருவரை, விடுமுறை தினத்திலும் ஸ்பெஷல் கிளாஸ் வரும்படி தற்காலிக அரசு பள்ளி ஆசிரியரான சுரேஷ் அழைத்திருக்கிறார்.

+2 பொது தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் நேரம் என்பதால், தனது வீட்டில் ஸ்பெஷல் கிளாஸ் செல்வதாக கூறி பள்ளிக்கு சென்றார். ஆசிரியர் சுரேஷ் அந்த மாணவியை தனியாக அழைத்து சென்று வகுப்பறையில் வலுக்கட்டாயமாக பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். மாணவி அலறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடியுள்ளார். மாணவி அழுது கொண்டு ஓடுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி சுரேஷ்-ஐ போலீஸிடம் ஒப்படைத்தனர். அப்போது கூடியிருந்த மக்கள் சரமாரியாக போலீஸ் முன்பு சுரேஷ் தாக்கப்பட்டார். பின்னர் இருசக்கர வாகனத்தில் காவல் நிலாயத்திற்கு கொண்டுசென்றனர். பொதுமக்கள் ஆசிரியர் சுரேஷை தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“தனியாக வீட்டில் இருந்த சிறுமியிடம் இளைஞர் சில்மிஷம்” பாய்ந்தது போக்சோ!! கே...

Quick Share

கேரளாவில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த இளைஞனின் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை.

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் கஞ்ஜிசிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது வீட்டில் உள்ளவர்கள் வேலை விஷயமாக அனைவரும் வெளியில் சென்றுள்ளார்கள். அந்த சமயத்தில் சிறுமியின் வீட்டிற்கு அவளின் அண்ணனின் நண்பன் என கூறிக்கொண்டு அருண் சுரேஷ் எனும் 25 வயது நபர் வந்துள்ளான். அப்போது சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட அவன், தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணீர் தருமாறு சிறுமியிடம் கேட்டுள்ளான். தனது அண்ணனின் நண்பர் என கூறியதால் சிறுமியும் அவனை நம்பி தண்ணீர் கொண்டு வர உள்ளே சென்றிருக்கிறாள்.

இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞன், சிறுமியின் பின்னாடியே வீட்டிற்குள் சென்றுள்ளான். பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யவும், சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும், அந்த இளைஞன் பயந்து ஓடியுள்ளான். அதன்பின் சிறுமி தனது பெற்றோருக்கு தகவலை கூறவும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். தகவலறிந்த போலீசார் புகாரின் பேரில் சுரேஷுக்கு வலை வீசி தேடியுள்ளனர். இந்நிலையில் கோட்டயத்தில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ஒளிந்திருந்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து போலீசார் அவனை கையும் களவுமாக பிடித்தனர். 13 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக நாசம் செய்த அந்த கொடூரன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

கோவாவில் அதிர்ச்சி தகவல் !! “நான் தான் என் மனைவியை உயிருடன் புதைத்தேன் ” ...

Quick Share

சிகிசைக்கு பணமில்லாத காரணத்தினால் தனது மனைவியை உயிருடன் புதைத்த கணவர் .

கோவாவில் துக்காராம் என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார் .துக்காராம் ஒரு கூலித்தொழிலாலளி மிகவும் ஏழ்மையான குடும்பம் . அவரது மனைவிக்கு நீண்ட நாட்களாக உடல் நலம் சரி இல்லாமல் இருந்துள்ளது இவரும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளதால் மருத்துவ செலவுகளுக்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார் . இந்நிலையில் கடந்த சில நாட்களாக துக்காராமின் வீட்டில் அவரது மனைவி இல்லாததை அக்கம்பக்கத்தினர் கவனித்துள்ளனர் . இந்த தகவலை அவர்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர் . தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துக்காராமை விசாரித்துள்ளனர் .

அப்போது அவர் , எனது மனைவிக்கு பல நாட்களாக உடல்நிலை சரியில்லை ,அவரது மருத்துவ செலவுகளுக்கு என்னிடம் போதைய  பணம் இல்லாத காரணத்தால்  ,எனது மனைவியை நீர்ப்பாசன கால்வாயின் அருகில் உயிருடன் புதைத்து விட்டேன் என வாக்கு மூலம் அளித்துள்ளார் .ஏழ்மை காரணமாக தனது மனைவியையே உயிருடன் புதைத்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ” வீட்டில் பட்டப்பகலில் ஏற்பட்ட சோகம் விழுப...

Quick Share

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டப்பகலில் தனியாக இருந்த பெண் மர்ம நபர்களால் எரித்து கொல்லப்பட்டு கிடந்தார் . கொலையாளிகளுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர் .

விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகர் கரிகாலன் தெருவில் நடராஜன் -இந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நடராஜன் திருக்கோவிலூர் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . இவர்களுக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாத காரணத்தால் நடராஜன் திருக்கோவிலூரை சேர்ந்த லீலா என்பவரை 2 வது திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு வேலாயுதம் எனும் 23 வயது மகன் உள்ளான் . இவர் தனி வீட்டில் வசித்து வந்துருகிறார் . இந்திரா சுதாகர் நகர் பகுதியில் உள்ள காய்கறி கடை வைத்தும் , பணத்தை வட்டிக்கு கொடுத்ததும் சம்பாதித்து வருகிறார் .

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 7மணியளவில் லீலாவை பார்பதற்க்காக நடராஜன் திருக்கோவிலூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் . அப்போது வீட்டில் எரிந்து கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார் இந்திரா . அதிர்ச்சியடைந்த நடராஜன் உடனே விழுப்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் . விரைந்து வந்த போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர் . ஆய்வில் இந்திராவின் பின்பக்க தலையில் பலத்த அடிபட்டு ரத்த காயம் இருந்தது தெரியவந்தது . இதன் அடிப்படையில் அவரை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கி பின்னர் அங்கிருந்த துணிகளை அவர்மேல் எரித்துள்ளதை போலீசார் உறுதிப்படுத்தினார் .

பின்னர் இந்திராவின் உடலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் . இந்திராவின் கொலையை பற்றி விசாரித்து வருகின்றனர் .முன்விரோதம் காரணமாகவா அல்லது வட்டிக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் ஏதேனும் தகராறா என்ற பாணியில் விசாரணை நடந்து கொண்டுவருகிறது .




You cannot copy content of this Website