கிரைம்

தேவைக்காகப் பழகும் கார்ப்பரேட் பெண்கள். ( Corporate girls ) சம்பவம் முடிந்தவுடன் ”...

Quick Share

உண்மை முற்றிலும் உண்மை , சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி நிரூபணம் செய்யப்பட்டது .பெண்கள் இல்லாத உலகம் நல்லா இருக்கும் என்று கேட்டால் அது சாத்தியமா என்றால் இல்லை. மேலும் எப்படி ஆண்களைப் பிடிக்காத பெண்கள் இருக்கிறார்களோ அதேப்போல பெண்களைப் பிடிக்காத ஆண்களும் இருக்கிறார்கள்.ஆண், பெண், திருநங்கை, திரு நம்பிகள் என்ற பாலினங்கள் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அதிலும் சில காரணங்களால் பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்கள். பெண்களுக்கு ஆண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே போல் ஆண்களும் பெண்களிடம் எதிர்பார்ப்பார்கள்.ஆண்களுக்கு முன்னுரிமை தராத பெண்களை ஆண்களுக்குப் பிடிக்காது. அது காதலானாக இருந்தாலும் கணவனாக இருந்தாலும், நண்பனாக இருந்தாலும் யாரா இருந்தாலும் சரிதான்.

பெண்கள் இந்த ஆண்களே இப்படிதான் என்ற சொல் ஆண்களை மிகவும் கோபமாக்க செய்யும்.ஆணாதிக்க கொண்ட ஆண்களுக்கு பெண்ணியம் பேசும் பெண்களை சுத்தமாகப் பிடிக்காது. ஏன் என்றால் அவர்கள் எதுக்கு எடுத்தாலும் எல்லா விஷயத்திலும் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.மேலும் பெண்கள் தங்களுக்குக் கீழ்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.சந்தேகம் படும் பெண்களை சுத்தமாக எந்த ஆண்களுக்கும் பிடிக்காது. கணவன் மனைவி உறவில் அதிகமாக வரும் விவாகரத்து வழக்குகளில் அதிக வழக்குகள் சந்தேகம் கொள்வது முதல் காரணமாகக் கூறப்படுகிறது. சந்தேகம் என்பது ஒருவித மனநோய். இது ஆண்களுக்கும், பெண்களுக்கு பிடிக்காத பொதுவான விஷயம் ஆகும் .அதிகமாக பேசும் பெண்கள்,வளவளவென பேசும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது. கணவன் மனைவிக்குள்ளே இது தினமும் நடக்கும் விஷயம்தான். தங்களுடைய தேவைக்காகப் பழகும் பெண்களை ஆண்கள் ஈஸியாக கண்டுபிடித்து விடுவார்கள். அந்த பெண்ணிடம் இருந்து தள்ளியே இருப்பார்கள். அந்த பெண்ணிடம் இருந்து ஆண்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது.

“ஷூவுக்குள் இருந்த விஷம்” எதிர்பாராத விதமாக நடந்த சோகம் உயிரைவிட்ட இளம்பெண்...

Quick Share

ஷூவுக்குள் இருந்த பாம்பை கவனிக்காமல் தொட்ட  பெண் உடல் முழுவதும் விஷம் ஏறி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை கே.கே.நகரில் பழனி – சுமித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். பழனி தச்சு வேலை செய்து வந்துள்ளார். சுமித்ராவிற்கு 35 வயதாகிறது. நேற்று முன்தினம் சுமித்திரா வழக்கம் போல வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது அங்கிருந்த ஷூவை சுத்தம் செய்வதர்காக கையை ஷூவுக்குள் விட்டுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஷூவுக்குள் பதுங்கி இருந்த 2 அடி நீள பாம்பு சுமித்ராவை கடித்துவிட்டது. எதிர்பாக்காத நேரத்தில் பாம்பு கடித்தவுடன் வலியை தாங்கமுடியாமல் சுமித்ரா கதறி அழுதுள்ளார். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது, இருப்பினும் அவர் சிகிக்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், சுமித்ராவிற்கு பாம்பு கடித்த உடனே உடம்பெல்லாம் விஷம் எறியுள்ளது. இதனால் விஷம் அவரது நரம்புமண்டலத்தை பாதித்துள்ளது. அதனால் தான் சிகிச்சை பலனளிக்கவில்லை. பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட ரத்தம் 20  நிமிடங்களை கடந்தும் உறையவில்லை. இந்த சமயத்தில் மூச்சுதிணறல் ஏற்பட்டதால் சுமித்ரா உயிரிழந்தார் என  தெரிவித்தனர்.

இளம்பெண் உடம்பெல்லாம் விஷம் ஏறி எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் மாஸ் என்கவுன்ட்டர்!! தப்பிக்க முயன்ற நால்வரையும் நாயை போல ஓட விட்டு… ம...

Quick Share

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலைவழக்கில் கைதான 4 பேரும் அதே இடத்தில்
, அதே நேரத்தில் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர் .

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி என்பவர் கடந்த 27ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சத்தனப்பள்ளி டோல்கேட் அருகே கொடூரமாக எரித்து கொல்லப்பட்டியிருந்தார் .இந்த பயங்கர சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற கூட்டத்திலும் பெரும் சர்சையாக பேசப்பட்டது. இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஓட்டுநர், கிளீனர் உள்பட 4 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர் . முகமது ஆரிப் 20,ஜொள்ளுசிவா 20, ஜொள்ளுநவீன் 20, சிண்டகுண்டா சென்னை கேஷ்வேலு 20, என்ற 4பெரும் பெண் மருத்துவரை முன்கூட்டியே திட்டமிட்டு நாட்களாக நோட்டமிட்டு இந்த பயங்கர சம்பவத்தை செய்துள்ளனர் .

இந்நிலையில் பொலிஸாரால் கைது செய்ய பட்ட 4வரையும் நேற்று இரவு ப்ரியங்கா ரெட்டி கொலை செய்ய பட்ட இடத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர். நேற்று இரவு முழுக்க 4 குற்றவாளிகளையும் தூங்கவிடாமல் போலீசார் தீவிரமான ட்ரீட்மெண்ட் அளித்து விசாரணை செய்துள்ளனர் . சைபராபாத் கமிஷனர் சஜ்னார் உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் இவர்களை விசாரித்தனர் . பின்னர் அதிகாலை 3:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு 4 பேரையும் அழைத்து சென்று எவ்வாறு குற்றம் செய்தீர்கள் ? என்பதை சொல்லி காட்டுமாறு போலீசார் கேட்டுள்ளனர். முதலில் குற்றத்தை விளக்கிய 4 பேர் பின்னர் வேகமாக அருகில் உள்ள புதருக்குள் சென்று தப்பிக்க முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்தனர் . இதனால் அங்கிருந்த போலீசார் அந்த 4 பேரையும் ஓட ஓட என்கவுண்டரில் சுட்டுள்ளனர் .

இந்த என்கவுண்டரில் முக்கிய குற்றவாளியான முகமது ஆரிப் கடைசியாக சுட்டிக்கொள்ளப்பட்டுள்ளார் . குற்றவாளி 4 பேரையும் நெற்றிப்பொட்டில் அடிவயிற்று பகுதியிலும் சுட்டு கொன்றுள்ளனர் . குற்றவாளிகள் தப்பியோட முயன்றதால் சுட்டுக்கொன்றோம் என போலீசார் தெரிவித்துள்ளனர் . இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டிருக்கியது என்பது குறிப்பிடத்தக்கது .இது குறித்து பிரியங்கா ரெட்டி அவரின் தந்தை , 10 நாட்களில் தனது மகளுக்கு நீதிகிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது .அதே இடத்தில் அதே நேரத்தில் என்னுடைய பெண் அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்துள்ளது .இப்போது எனது மகளின் ஆன்மா சாந்தியடையும் என கூறியுள்ளார் . போலீசாரின் இந்த என்கவுண்டர் சம்பவத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் .

பெண்களை கவர்ச்சியாக பேச வைத்து போன் காலில் ”லோன்” . ஜொள்ளுவிடும் ஆண்களை நேர...

Quick Share

மீனா என்ற பெண் சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் வசித்து வந்தவர். இவர் பேங்க் லோன் வாங்கி தருவதாக சொல்லி ஆன்லைனில் தம் தொலைபேசி நம்பரை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த பலர் இவரிடம் வந்துள்ளனர். இவருக்கு உறுதுணையாக சங்கர் என்பவர் இருந்து இருக்கிறார். இவர் பாரிமுனையைச் சேர்ந்தவர் ஆகும்.

நம்பரை தொடர்ப்புக்கொண்டு மீனாவிடம் பேசிய பலர் மணடி அலுவலகத்திற்கு உரிய பொருட்களை எடுத்துகொண்டு வருமாறு கூறியுள்ளார். பிறகு லோன் கேட்டு வந்தவர்களிடம் ஆதார் கார்ட் ,பான் கார்ட் ,ரேஷன் கார்ட் போன்ற அடையாள அட்டையை பெற்று ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளார்.பிறகு லோன் வருவதற்கு ஒரு சில மாதம் ஆகும் என்று கூறி வந்துள்ளனர். பிறகு வாங்கி தருவதற்காக சில ஆயிர ரூபாய்க்களை வாங்கியுள்ளனர்.

சந்துரு, பிரவின்குமார், பெளசியா பேகம் ஆகியோர் பலர் மீனாவிடம் லோன் கேட்டு வந்தவர்கள் ஆகும். சில நாட்கள் கழித்து டிவி ,ஏசி, பிரிட்ஜ் போன்ற மூன்று பொருட்களுக்கு இ.எம்.ஐ கட்டுமாறு மெசேஜ் ஒன்று இந்த மூன்று நபருக்கும் சென்றுள்ளது. இதனை கண்ட மூவர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனை விசாரித்த போலீசார் இவர்கள் வீட்டுற்கு தேவையான உபயோக பொருட்களை தவனை முறையில் பெறப்பட்டதாக தகவலை தெரிவித்தனர். பிறகு போலீசார் மீனாவையும் சங்கரையும் பிடித்து சிறையில் அடைத்தனர்.

பெற்ற பிள்ளையின் கண்முன்னே தரம்கெட்ட செயல் ”பெட் ரூமில்” ..? “அப்பா.....

Quick Share

எனக்கும் இவருக்கும் நீண்ட நாட்கள் தவறான உறவு இருந்தது ,வாக்குமூலத்தில் ஒப்பு கொண்ட கள்ளக்காதலன் .கர்நாடக மாநிலம் சின்னயனாபால்யா கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தேவராஜ், இவருக்கு சுமலதா என்ற மனைவியும் ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளான். இந்நிலையில் சுமலதா கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், ஒருவேளை மாரடைப்பில் இறந்து இருப்பார் என்று இறுதி அடக்கம் செய்தனர் .இரண்டு மாதம் கழித்து அவர் மாரடைப்பில் இறக்கவில்லை என்ற தகவல் வெளியானது .
அப்படி என்ன தான் நடந்தது என்று விசாரணையில் இறங்கிய போலீசார் ,மகனின் பகீர் வாக்குமூலம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் .

“அப்பா… வெங்கடேஷ் மாமா வீட்டுக்கு வந்தார் , அம்மாவை கீழே தள்ளினார், புடவையால் அம்மாவின் கழுத்தை கழுத்தை நெரித்தார், அம்மா கீழே விழுந்து விட்டார்,” என கூறியுள்ளான் அதேகேட்டு அதிர்ந்த தேவராஜ் மகனை கையோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார் .
போலீசாரிடம் குழந்தை அதே போன்று சொல்ல அது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வெங்கடேஷ் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.விசாரணைக்கு பிறகு உண்மையை ஒப்பு கொண்ட வெங்கடேஷ் எனக்கும் இவருக்கும் பல நாட்களாக கள்ள உறவு உள்ளது ,வீட்டில் அவரது கணவர் இல்லாத நேரத்தில் உல்லாசம் அனுபவித்தோம் ,இதற்கிடையில் சமீபத்தில் எங்களுக்குள்ளே ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் சுமலதா உறவை முறித்துக் கொள்வதாக கூறினார்.
அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை, சுமலதாவை பிரியவும் எனக்கு மனமில்லை, ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். இதுவே கொலைக்கு காரணம் என்று ஒப்பு கொண்டனர்.

“டியூசனுக்கு வராததால் ஆசிரியர் செய்த மட்டமான செயல் ” 10ம் வகுப்பு மாணவனுக்...

Quick Share

உசிலம்பட்டியில் தனது டியூசனுக்கு வராமல் வேறொரு டியூசனுக்கு சென்றதால் மாணவனை டார்ச்சர் செய்த ஆசிரியர், மனமுடைந்த மாணவன் தற்கொலை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொட்டப்பநாயக்கன் எனும் ஊரை சேர்ந்த சிங்கம் மற்றும் அமுதா தம்பதியினருக்கு பாலாஜி எனும் மகன் உள்ளார். இவர் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்துவந்துள்ளார். இவரது பள்ளி கணித ஆசிரியர் தனியாக டியூசன் சென்டர் வைத்து நடத்திவந்துள்ளார் .கணித ஆசிரியரான ரவி என்பவரிடம் பாலாஜி 9ம் வகுப்பு படிக்கும் போது டியூசன் சென்று படித்துள்ளார். பின்னர் 10 ம் வகுப்பு சென்றவுடன் அவருடைய டியூசன் சென்டருக்கு செல்லாமல் மற்றொரு டியூசன் சென்டருக்கு சென்று படித்துள்ளான் .

இதனால் மாணவன் பாலாஜி மீது ஆசிரியர் கடும் கோபத்தில் இருந்ததாகவும் ,இதனைக் காரணம் காட்டி மாணவனை அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தை கூறி அடித்து துன்புறுத்தியதாகவும் அவனை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்புவோம் எனவும் பாலாஜியின் பெற்றோர் தெரிவித்தனர் . இதேபோல கடந்த 6 மாதங்களாக பிரச்சனை பள்ளியில் தொடர்ந்துகொண்டே இருந்துள்ளது . இந்நிலையில் சனிக்கிழமை அன்று வழக்கம் போல பாலாஜி பள்ளிக்கு சென்றுள்ளான் . அன்றும் ஆசிரியர் ரவி வகுப்பறையில் பாலாஜியை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளி மடிந்து வீட்டிற்கு வந்ததும் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் தோட்டத்திற்கு சென்றுள்ளனர் . எனவே வீட்டில் தனியாக இருந்த பாலாஜி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான் .மகனின் சடலத்தை கண்ட பெற்றோர்கள் மனமுடைந்துள்ளனர் .

தகவலறிந்து வந்த போலீசார் மாணவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர் .மேலும் பாலாஜி எழுதிவைத்திருந்த ஒரு கடிதத்தையும் கண்டுபிடித்தனர் .அந்த கடிதத்தில் “தன்னுடைய சாவுக்கு ஆசிரியர் ரவிதான் காரணம், அவன் கொடுமை தாங்காமல் தான் இம்முடிவை எடுத்தேன். அவனுக்கு தண்டனை வாங்கி தரவேண்டும் .அனைவருக்கும் இறுதிவணக்கம் ” என குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர் . இதன்பேரில் மாணவன் படித்த பள்ளியை தொடர்புகொண்ட போது பள்ளி நிர்வாகம் பேச மறுத்துள்ளது . அதனால் டியூசன் ஆசிரியர் ரவியை போலீசார் தேடிவருகின்றனர் .மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியரால், இந்த மாணவனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது மிகவும் வேதனையளிக்கிறது.

காதலியை பழிவாங்க அவள் நிர்வாண வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்!!

Quick Share

அஜித்குமார் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வசித்து வருபவர். இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி மாணவி ஒருவருடன் நட்புடன் பழகியுள்ளார் பின்னர் நட்பு காதலாக மாறி இருவரும் அடிக்கடி வெளியில் சந்திப்பதும், செல்போன் வீடியோ காலில் பேசுவதுமாக இருந்துள்ளனர். அஜித் வற்புறுத்தியதால் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை அப்பெண் அஜித்துக்கு அனுப்பியுள்ளார்.

இவர்கள் காதலில் விரிசல் விழ, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட அஜித்துடன் பேசுவதை அப்பெண் நிறுத்திவிட்டார். பின்பு அவரை சந்திப்பதையும் நிறுத்தி விட்டார். இதில் ஆத்திரமடைந்த அஜித் பழிவாங்கும் நோக்குடன் அப்பெண்ணின் நிர்வாண வீடியோக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். இதன் பின் அப்பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நிர்பயா வழக்கில் கைதான குற்றவாளிகளின் கருணை மனு தள்ளுபடி!

Quick Share

ஓடும் பேருந்தில் கடந்த 2012ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை இந்தியாவையே கலங்கடித்தது. ஆறு பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணை சீரழித்து, கொலை செய்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக் ஷய் தாக்குர் ஆகிய ஐந்து பேரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும், டில்லி போலீசார் கைது செய்தனர். இவர்களில் ராம்சிங், திகார் சிறையில், 2013-ல், தற்கொலை செய்து கொண்டார். சிறுவனுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி, சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மற்ற நான்கு பேருக்கும், 2013, செப்டம்பரில், விரைவு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது, இந்த தீர்ப்பை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், உறுதி செய்தன.

இவ்வழக்கில் கைதான குற்றவாளிகளில் ஒருவர் வினை சர்மா நான்கு பேர் சார்பாக தண்டனையை குறைக்க கோரி டில்லி துணை நிலை கவர்னருக்கு கருணை மனு அளிக்கப்பட்டது. கவர்னர் அனில் பைஜால், கருணை மனுவை தள்ளுபடி செய்தார். தள்ளுபடி செய்யப்பட்ட மனு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மீண்டும் பொள்ளாச்சியை போலவே, கோவையில் அரங்கேறிய கூட்டு பாலியல் வன்கொடுமை!! 17 வயது சிறு...

Quick Share

17 வயது சிறுமி தன் காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் 6 பேரால் பலவந்தமாக கூட்டு பாலியல் செய்யப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அருகே 11ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி சீரங்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் தனது பிறந்தநாள் என்பதால் அப்பகுதியில் உள்ள பூங்காவில் தனது காதலனை சந்திக்க சென்றுள்ளார். அங்கு சந்தித்த இருவரும் இரவு 9 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் பூங்காவில் யாரும்மில்லை எனபதை கண்டு கொண்டு, காதலனின் வற்புறுத்தலுக்கு இணங்கி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

சிறுமி பூங்காவிற்கு வருவதற்கு முன்பே தனது 6 நண்பர்களுடன் பூங்காவில் இருந்தது சிறுமிக்கு தெரியாது. உல்லாசம் அனுபவித்ததை அவரின் நண்பர்கள் 6 பேர் மறைந்திருந்து வீடியோ எடுத்தனர். அதன்பின் அதையே காரணமாக காட்டி காதலன் தனது நண்பர்களை அழைத்து சிறுமியை விருந்தாக்கியுள்ளான்.
அதன்பின் மற்ற நண்பர்களும் சிறுமியை பார்க் பின்பக்கம் இருந்த காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று நாசம் செய்துள்ளனர்.

ஒருவர் பெண்ணை சீரழிக்க, இன்னொருவர் வீடியோ எடுக்க, மற்றவர்கள் யாராவது வருகிறார்களா என காவல் காக்க.. என்று படுபாதக செயல் அந்த பார்க்கில் அரங்கேறி உள்ளது. இதனால் சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டார். வீட்டிற்கு சென்றதும் இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினார். இதுகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலன் உட்பட 7 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

பிரியங்காவுக்கு நடந்த கொடூரம்.. இந்தியாவுக்கு வர பயம்.. பிரிட்டன் இளம்பெண் காட்டம்..

Quick Share

பிரியங்கா ரெட்டிக்கு நடந்த கொடூரத்தை பார்த்தால் இந்தியாவுக்கு வரவே பயமாக உள்ளது என ஸ்காட்லாந்து பெண் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் #RIPpriyankareddy #Justicefor priyankareddy போன்ற ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் உலகம் முழுவதும் டிரண்டானது.

இதன் காரணமாக பல்வேறு நாட்டு மக்களும் பிரியங்கா ரெட்டி குறித்த செய்தியை படித்துவிட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆசிய கலாச்சாரத்தின் மீது ஈடுபாடு கொண்ட ஸ்காட்லாந்தை சேர்ந்த இளம்பெண் பிரியங்கா ரெட்டி கொலை தொடர்பில் டுவிட்டரில் கோபமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவுகளில், பிரியங்கா ரெட்டிக்கு நடந்த கொடூரத்தை பார்க்கும் போது இந்தியாவுக்கு வர பயமாக உள்ளது.

ஏனெனில் மீண்டும் உயிரோடு சொந்த நாட்டுக்கு நான் திரும்பாமலும் போகலாம்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உயிரோடு எரிக்க வேண்டும் என்று தம்முடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

மீண்டும் ஒரு கொடூர சம்பவம் ! பள்ளிக்கு சென்ற 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து க...

Quick Share

ராஜஸ்தானில் 6 வயது சிறுமியை வன்புணர்வு செய்து, அவள் அணிந்திருந்த பெல்ட்டை வைத்தே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.

ராஜஸ்தானில் டாங்க் மாவட்டம் அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்துவருகிறார். வழக்கம் போல சனிக்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவி மாலை வீடுதிரும்பவில்லை. சிறுமி காணாமல் போனதால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிறகு பள்ளிக்கு அருகே உள்ள புதர்களுக்கு இடையே சிறுமி ரத்த வெள்ளத்தில் உள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். அவருடைய சீருடை பெல்ட்டினால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்தோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமியின் உடலை அருகில் உள்ள சாதத் மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பியதில், சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் மதுபாட்டில்கள், தின்பண்டங்கள், இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, சிறுமி அணிந்திருந்த பெல்ட்டாலேயே கொன்றிருப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஹைதராபாத் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற சம்பவத்தின் சோகம் மறைவதற்குள், ராஜஸ்தான் நிகழ்வு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.




You cannot copy content of this Website