ப்ரியங்காரெட்டியை கற்பழித்த கொலையாளிகள் கல்லடி வாங்கிய காட்சி, கொலையாளிகள் மீது நடுரோட்...
தற்போதுவரை ஐதராபாத் மாநிலம் முழுவதும் கடும் பதற்றம் நிலவி வருகிறது …??
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த 27 வயது பெண் பிரியங்கா ரெட்டி கடந்த வியாழக்கிழமை அன்று இரவு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சாத்நகர் பகுதியில் அமைந்துள்ள சுங்க சாவடி அருகே ப்ரியங்காவின் இருசக்கர வாகனம் பழுதானது. அப்போது உதவுவது போல நடித்த இளைஞர்கள் அவரை பாலியல் கூட்டுவன்கொடுமை செய்ததுடன் எரித்து படுகொலையும் செய்தனர்.
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வாங்கி வந்த அவர்கள் பாலத்திற்கு கீழே வைத்து போர்வையில் சுற்றி அவரை எரித்து கொலை செய்தனர் இதனை அறிந்து விசாரணையில் இறங்கிய சாத்நகர் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் நான்கு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் லாரி ஓட்டுநர்களான முகமத் ஆரிப், சென்னகேசவ் மற்றும் கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மீண்டும் சிறை சாலைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்து காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுடன் 20-ற்கும் மேற்பட்ட வாகனங்களில் குற்றவாளிகளை பாதுகாப்புடன் அழைத்து செல்ல முடிவெடுத்தனர்.
முக்கிய சாலை ஒன்றின் வழியே குற்றவாளிகள் வருவதை அறிந்த இளைஞர்கள் ஒன்றுகூடி வாகனத்தை நோக்கி சரமாரியாக தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்தனர், ஒருகட்டத்தில் காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தியிருந்தால் குற்றவாளிகளுக்கு அங்கேயே தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் இரண்டு குற்றவாளிகளுக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டது.
தற்போதுவரை ஐதராபாத் மாநிலம் முழுவதும் கடும் பதற்றம் நிலவி வருகிறது தெலுங்கான மாநில ஆளுநர் தமிழிசை மாநில அரசிடம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.