சென்னையில் பரவும் ப்ளூ வைரஸ் காய்ச்சல்!! பெற்றோர்களே குழந்தைகளை பத்திரமாக பாத்துக்கோங்க...
வைரஸ் காய்ச்சல்களில் ப்ளு வகை வைரஸ் காய்ச்சல் பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகளவு பரவுவது உண்டு. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாலும், முகக் கவசம் அணிந்ததாலும் இத்தகைய வைரஸ்கள் தாக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் விலகி உள்ள நிலையில் முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பொது மக்கள் கைவிட்டு இருப்பதால் மீண்டும் வைரஸ் காய்ச்சல்கள் தலையெடுக்கத் தொடங்கி உள்ளன.
அந்த வகையில் தற்போது சென்னையில் ப்ளு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக இந்த காய்ச்சலுக்கு பாதிக்கப்படும் சிறுவர்கள், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இருமல், காய்ச்சல் பிரச்சினைகளுடன் அரசு மருத்துவ மனைகளுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
பொதுவாக ப்ளு வைரஸ் காய்ச்சல் குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கும். ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை ப்ளு வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாகும். இதற்கு ஏற்கனவே தடுப்பூசி உள்ளது. என்றாலும், ப்ளு வைரஸ் பாதிக்கும் பட்சத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் அது சுவாச மண்டலத்தைதான் அதிகமாக தாக்கும். இதனால் இருமல் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக உடல் வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி ஏற்படுதல், வயிற்று வலி போன்றவையும் ஏற்படக் கூடும்.

ப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சளி தொல்லை இருந்து கொண்டே இருக்கும். எனவே காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் பக்கத்தில் செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு சென்றால் ப்ளு வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.