சென்னை: ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீஸ் ஆசிர்வா நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது ரயில் புறப்படும் நேரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் பெண்கள் பெட்டியில் ஏற முயன்றுள்ளார். அவரை ஆசிர்வா கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்ந்த கத்தியை எடுத்து பெண் போலீசின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்தி தப்பி ஓடி விட்டார். பயணிகள் அளித்த தகவலின் பேரில் பெண் போலீஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியின் போது அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த வீரர் கேசவ் முடேல் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார். சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் அருணாச்சல பிரதேச மாநில வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள பிரபல ஆயில் விற்பனை கடையான ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அதிகாரி சதிஷ்குமார் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
கடையில் சோதனை செய்த போதுபூமிக்கடியில் தனியாக தொட்டி ஒன்று கட்டி அதில் உணவு சமைக்கும் எண்ணெயை சேமித்து விற்பனை செய்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதிஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது
மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸில் கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சோதனைக்கு சென்றபோது தொட்டி போன்று அமைத்து அதில் சன் பிளவர் மற்றும் பாமாயிலை அவர்கள் கலந்து வைத்து விற்பனை செய்து உள்ளனர்.
அங்கிருந்து சன் பிளவர் எண்ணெய் ஆயிரம் லிட்டர், பாமாயில் முவாயிரத்து 400 லிட்டர் என மொத்தம் 4,400 கெட்டுப்போன எண்ணெயை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடை முறையான அனுமதியின்றி நடத்தப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் இதுபோன்ற தவறை செய்ய வேண்டாம்” என்று இவ்வாறு கூறினார்.
அதோடு சென்னையில் உள்ள உணவகங்கள், ஜூஸ் பார்லர்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் 94440 42322 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ, புகைப்பட ஆதாரங்களை அனுப்பி தகவல் தெரிவிக்கலாம் என்று சதீஷ்குமார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இறப்பதற்கு முன் விஜய் எழுதிய கடிதத்தில் அம்மா நான் உன்ன மிஸ் பண்றேன் என எழுதப்பட்டிருந்தது
சென்னையில் இளைஞர் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் விஜய். இவர் வீட்டின் அருகே உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் விஜய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது தாய் கலா தனது மகன் தூக்கில் தொங்கியதைப் பார்த்து கதறி அழுதுள்ளார்.
அதன் பின்னர் அக்கப்பக்கத்தினர் உதவியுடன் விஜய்யை அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் விஜய்யின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டில் சோதனையிட்ட பொலிசார் கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அதில் அம்மா நான் உன்ன மிஸ் பண்றேன் என விஜய் எழுதியிருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடிக்கும் ஹிந்து கல்லூரிக்கும் இடையே உள்ள ரயில் பாதையில் ரயில்வே ஊழியர்கள் வழக்கம்போல நேற்று வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, இளம்பெண் ஒருவர் காயங்களுடன் தண்டவாளம் அருகே சடலமாக கிடந்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை ஆய்வு செய்தபோது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பெண் அருகே விழுந்து கிடந்த ஐடி கார்டை பார்த்தபோது அவர் பெயர் மேகா ஸ்ரீ (30) என்பதும் அவர் டெல்லியில் பி எச்.டி முடித்துவிட்டு சென்னை ஐஐடி-யில் மூன்று மாத ஆராய்ச்சி படிப்பிற்காக வந்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆவடி ரயில்வே போலீசார், ஓடும் ரயிலில் இருந்து மாணவி தவறி விழுந்து உயிரை விட்டாரா அல்லது கொலையா என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவியின் தலையில் அதிக காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோரை தொடர்புகொள்ள போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சென்னை ஐஐடி நிர்வாகத்திடம் மாணவி குறித்த தகவலை சேகரித்து வருகின்றனர். டெல்லியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள மாணவி ரயில் தண்டவாளம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 வயது சிறுமியின் பையில் தோட்டாக்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரின் மகளின் பையில் இருந்து தோட்டாக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த அதிகாரி பெங்களூரு செல்ல குடும்பத்துடன் வந்திருந்தார். சோதனையின் போது அலாரம் அடித்த போது அதிகாரிகள் குடும்பத்தினரை நிறுத்தி ஐந்து வயது சிறுமியின் பையை சோதனை செய்தபோது துப்பாக்கி தோட்டாகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களுக்கு பயண அனுமதி மறுக்கப்பட்டு விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தாங்கள் இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்றதாகவும், கடற்கரையில் கிடந்த இந்த தோட்டாக்களை குழந்தைக்கு விளையாடக் கொடுத்ததாகவும் அந்த அதிகாரி பதில் அளித்துள்ளார்.
இந்த தோட்டா வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும், பெரிய துப்பாக்கிகளில் ‘9 மிமீ’ பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் எச்சரித்து, கூடுதல் விசாரணை நடத்துகின்றனர்.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை. மேலாளரை கட்டிப்போட்டு வங்கி லாக்கரில் உள்ள அனைத்து நகைகளையும் வங்கி ஊழியரே கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
சென்னை விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று வந்துள்ளது. அதை விமானநிலைய அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்தனர்.
அப்போது அதில், ராஜநாகங்கள், குரங்குகள், மலைப்பாம்புகள் போன்ற விலங்குகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவற்றை அதே விமானத்தில் மீண்டும் பாங்காக்கிற்கே திருப்பி அனுப்பி உள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசேன்பாட்ஷாவின் 13 வயது மகள் பாத்திமா. இவர்கள் வீட்டில் கரையான் தொல்லை இருந்ததால், அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என அசேன்பாட்ஷா நினைத்துள்ளார். இதையடுத்து தீ வைத்து கரையானை அழித்துவிடலாம் என அவர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 31ம் தேதி பெயின்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது திடீரென வீடு முழுவதும் தீ பிடித்துள்ளது. இதில் அசன்பாட்ஷா, அவரது மனைவி, மகள் பாத்திமா ஆகிய மூன்று பேரும் தீயில் சிக்கியுள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இதில் சிறுமி பாத்திமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் லேசான தீக்காயத்துடன் அசன்பாட்ஷா அவரது மனைவி உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரையானை அழிக்க வைக்கப்பட்ட தீயில் 13 வயது சிறுமி ஒருவர் தீ பிடித்து எரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடியவரை இளம்பெண்ணுடன் போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர்(40) இவரது தம்பி ராஜேஸ்(37) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது தாயாருடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஸ்விட் கடை உள்ளது. மேலும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்த அவர் பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை பார்த்த போது அது மாயமாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து மேலும் ராஜேஷ் தனது சோதனை செய்த போது தனது மனைவி மற்றும் அம்மாவின் சுமார் 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து இச்சம்பவம் குறித்து ராஜேஷ் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது தோழியான இளம்பெண்ணிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சேகரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்களாம். மேலும் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக தோழி ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஸ்வாதிக்கு காரும் வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை திருடிய சேகர் மற்றும் அவரது தோழி ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்து ஸ்வாதியிடமிருந்து கார் பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை எங்கே வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து மேற்க்கொண்டு வருகின்றனர்
சென்னையில் வர்த்தக ரீதியாக மிகவும் புகழ்பெற்று விளங்கும் பகுதி பாரிஸ் கார்னர். இது பெருமாள் முதலி தெரு, ஆண்டர்சன் தெரு, மின்ட் தெரு உள்ளிட்ட 25 சிறிய வீதிகளை கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தெருவிலும் ஒரு குறிப்பிட்ட பொருட்களை கொண்ட கடைகள் மட்டும் இருக்கும். அதாவது ஆடைகள், நகைகள், பாத்திரம், வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, உணவு என அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும்.
இவற்றை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்க முடியும். எந்நேரமும் கூட்டம் நிரம்பி காணப்படும் இப்பகுதி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மிகவும் பழமையான பகுதியாகும். இந்நிலையில் பாரிஸ் கார்னரில் உள்ள டிவிகள், டிவிடி பிளேயர்கள், திரைப்பட சிடிக்கள், ஸ்பீக்கர்கள், லைட்கள் உள்ளிட்டவற்றை விற்கும் 256 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
256 கடைகளுக்கு சீல்
ஏனெனில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்துள்ளனர். இதன்மூலம் மாநகராட்சிக்கு 58 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கடைகள் அனைத்தும் நார்த் பீச் ரோட்டில் உள்ள பர்மா பஸார் எக்ஸ்டன்ஷனில் இருக்கின்றன. இதுபற்றி சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி ஜி.தமிழ்செல்வன் கூறுகையில், பர்மா பஸார் எக்ஸ்டன்ஷனில் உள்ள 272 கடைகளில் 256 கடைகள் வாடகை செலுத்துவதே இல்லை.
வாடகை என்னாச்சு?
ஒவ்வொரு மாதமும் வெறும் 400 ரூபாய் மட்டும் வாடகையாக செலுத்த வேண்டும். அதைக் கூட அவர்கள் செலுத்தவில்லை. இவர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விளக்கம் கேட்டோம். வாடகையை தவறாமல் செலுத்துமாறு அறிவுறுத்தினோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த சூழலில் கடைகள் சீல் வைக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதன் உரிமையாளர்கள் பலரும் வந்து DD-கள் மூலம் வாடகை பாக்கியை செலுத்த முன் வந்தனர்.
ஏன் இவ்வளவு லேட்?
மாநகராட்சிக்கு பணம் வந்து சேர்ந்த உடன், கடைகளை திறக்க அனுமதி அளிப்போம் என்றார். மேலும் பேசுகையில், பர்மா பஸார் பகுதியில் இருந்த ஏராளமான ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன எனக் கூறினார். அதேசமயம் சமூக ஆர்வலர் டேவிட் மனோகர் கூறுகையில், 7 ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. ஏன் இவ்வளவு தாமதமாக தற்போது நடவடிக்கை எடுக்கிறார்கள்.
அதிகாரிகளுக்கு செக்
மாநகராட்சி அதிகாரிகளுக்கு தற்போது தான் தெரிந்ததா? குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு மட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். ஒருவேளை அரசியல் அழுத்தம் கூட காரணமாக இருக்கலாம். இத்தனை ஆண்டுகள் வரி வசூலிக்காமல் இருந்த அதிகாரிகளை முதலில் விரட்டி அடிக்க வேண்டும். உரிய நேரத்தில் வரி வசூலிக்கப்பட்டால் உள்கட்டமைப்பு வசதிகளை சரியாக மேம்படுத்த முடியும்.
வங்கிகளில் செலுத்தினால் போதிய வட்டியும் கிடைக்கும் என்று அறிவுறுத்தினார். இதற்கிடையில் எழும்பூரில் உள்ள பாந்தியோன் லேன் பகுதியில் நீதிமன்றம் உத்தரவு இருந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்களா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
சென்னை அடுத்து வளசரவாக்கம், பழனியப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணராவ். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி (25), பட்டப்படிப்பு முடித்த இவர் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் அரிதா ராஜேஷ்வரி உடலை கைப்பைற்றி விசாரணை நடத்தினர். இதில், அரிதா ராஜேஸ்வரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மதுமோகன் என்பவரிடம் நண்பராகப் பழகி வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக அரிதா ராஜேஸ்வரியுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன மிகுந்த மன உளைச்சலிலிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலைக்கு முன்பு அரிதா ராஜேஷ்வரி எழுதிய தற்கொலை கடிதமும் போலிஸாருக்கு கிடைத்துள்ளது.