சென்னை

10-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை கதறும் பெற்றோர்….

Quick Share

சென்னை கோடம்பாக்கம், அசோக் நகர் அம்பேத்கர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பு. இவரது வீடு அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது தளத்தில் உள்ளது. 

இவர் ரெயில்வே துறையில் கூடுதல் பொது மேலாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். தற்போது மெட்ரோ ரெயில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். மூத்த மகளுக்கு திருமணம் அகிவிட்டது. 

இவரது இளைய மகள் நித்யஸ்ரீ (வயது 22). இவர் சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். 

தற்கொலை

இந்தநிலையில், நேற்று காலை 9 மணியளவில் தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடி படிக்கட்டு ஜன்னல் வழியாக குதித்து நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதை கண்ட பெற்றோர்கள் அழுது ஒப்பாரி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக் நகர் உதவி போலீஸ் கமிஷனர் தனசெல்வன், இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீஸ் படையினர் நித்யஸ்ரீயின் உடலை மீட்டு ஓமந்தூரார் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

துண்டு சீட்டு

இந்தநிலையில், நித்யஸ்ரீ அறையில் இருந்து துண்டு சீட்டில் எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘இது நானே எடுத்த முடிவு. எனக்கு கிடைத்த அப்பா அம்மா மிகவும் நல்லவர்கள். என்னை நன்றாக படிக்க வைத்து என்னை நல்லபடியாக கவனித்துக்கொண்டார்கள்’ என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நேற்று தேர்வு இருந்ததாகவும், தேர்வு குறித்த பயத்தினால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் அசோக் நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

இதனிடையே நித்யஸ்ரீயின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அவருடைய தோழிகளிடமும் விசாரித்து வருகிறார்கள். அசோக் நகரில் மாணவி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில்.. பயங்கர பிளான்…800 கோடி மோசடி செய்த மூன்று பெண்கள்!!அதிர்ச்சி தகவல்

Quick Share

தமிழக தலைநகர் சென்னையில் 10,000 பேரை ஏமாற்றி 800 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அதிக வட்டி 

சென்னையில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் இயங்கி வந்தது. தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும், மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்தது. 

அதனை நம்பிய பலரும் உடனடியாக முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இவ்வாறாக சுமார் 10,000 பேர் அந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூறியபடி வட்டியை கொடுத்ததாக அந்த நிறுவனம், அசல் தொகையையும் திருப்பி தரவில்லை.

800 கோடி மோசடி 

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர்களில் 1,500 பேர் பொலிஸில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், மூன்று பெண்களை கைது செய்தனர்

மேலும் சிலரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சுமார் 10,000 பேரிடம் 800 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.   

சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Quick Share

சென்னை ஐஐடியில் படித்து வந்த ஸ்டீவன் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு மாணவர் மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டீவன் என்ற உயிரிழந்த மாணவர் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். மன உளைச்சல் காரணமாக கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகன் கவனிக்கவில்லை என்ற வருத்தத்தில் தூக்கில் தொங்கிய வயதான பெற்றோர் …

Quick Share

வயதான தங்களை மகன் சரியாக கவனிக்கவில்லை என்ற வருத்தத்தில் மணிமங்கலம் அருகே வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை யைச் சேர்ந்த தம்பதிகள் சுப்புராம் (87), காமாட்சி (84). இவர்களுக்கு மகனும் மகளும் உள்ளனர். மகன் மதுப்பழக்கத் துக்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் அவர் பெற்றோருடன் அடிக்கடி தகராறுசெய்து அவர்களை கவனிக் காமல் இருந்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து தம்பதியர் இருவரும் மாடம்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக தங்கி இருந்தனர். இந்த நிலையில் மகளும் மருமகனும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். பெற்றோர் அறையில் தூங்குவதாக நினைத்துவீட்டு மகள் வீட்டு வேலைகளை செய்துள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்துஅக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்துள்ளனர். உள்ளே தம்பதியர் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக மணி மங்கலம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில் வயதானதம்பதி இருவரும் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும் மகன் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி சரியாக அவர்களை கவனிக்காததாலும் இந்த முடிவை தம்பதியர் எடுத்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த 133ஏக்கர் நிலம் தேவைப்படுகிறதாம்…

Quick Share
சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 133 ஏக்கர் நிலமும், சாலை இணைப்புக்காக கூடுதலாக 60 ஏக்கர் நிலமும் தேவை என இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) கூறியுள்ளதாக விமான நிலைய இயக்குநர் டாக்டர் ஷரத் குமார் தெரிவித்தார்.தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) முன்மொழிவு, கிடைக்கப்பெறும் நிலங்களை கூட்டாக ஆய்வு செய்த பிறகு, முன்மொழியப்பட்டதாக அவர் கூறினார். மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம், புது தில்லி மற்றும் மும்பைக்குப் பிறகு சென்னையை சிவில் விமானப் போக்குவரத்தின் மையமாக மாற்ற 200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததை அடுத்து இது வந்துள்ளது.ஆரம்பத்தில், AAI மற்றும் TIDCO ஆகியவை ஆண்டுக்கு 55 மில்லியன் பயணிகளின் கோரிக்கைகளை (MPPA) பூர்த்தி செய்வதற்காக, சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக ஆறு நிலப்பரப்புகளை கூட்டாக ஆய்வு செய்தன. சர்வதேச முனையம் மற்றும் சரக்கு முனையம் அமைக்க 306 ஏக்கரை கையகப்படுத்த தமிழக அரசுக்கு AAI கோரிக்கை விடுத்துள்ளது.
 அடையாறு ஆற்றின் மறுபக்கம்.இருப்பினும், நிலத்தின் விலை அதிகம் என்பதாலும், ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதாலும் கையகப்படுத்துவது சாத்தியமில்லை என டிட்கோ அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 138 ஏக்கருக்கான திருத்தப்பட்ட கருத்துரு அனுப்பப்பட்டது. மாநில அரசு இந்த முன்மொழிவை ஆய்வு செய்து, சிறந்த முறையில் என்ன செய்ய முடியும் என்பதற்கான தீர்வுகளை உருவாக்கி வருவதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான நிலைய விரிவாக்கத்திற்காக அரசு நிலம் தவிர தனியார் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் டிசம்பர் 2024 க்குள் முடிவடையும். இது 35 மில்லியன் பயணிகளின் திறனை அதிகரிக்கும். 55 மில்லியன் பயணிகளைக் கையாள விமான நிலையத்திற்கு கூடுதல் ஏப்ரான் விரிகுடாக்கள் தேவை. தற்போது, ​​இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையம் 1,317 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது, இது இந்தியாவின் மற்ற பெரிய விமான நிலையங்களுடன் ஒப்பிடும் போது மிகச்சிறியதாகும்.
 இதற்கிடையில், TIDCO இரண்டாவது முறையாக பாரந்தூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசகர்களுக்கு ஏலங்களை சமர்பிப்பதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 27 வரை நீட்டித்துள்ளது. இது மேலும் பிப்ரவரி 6 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்தியாவிலே சென்னை விமான நிலையம்தான்ரூ.189.85 கோடி அதிக நஷ்டத்தை சந்தித்தது…

Quick Share

2021-22 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள பொது விமான நிலையங்களிலேயே சென்னை விமான நிலையம் தான் அதிக இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மாநிலங்களவையில் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த பதிலில் இந்திய விமான நிலைய ஆணையத்தால் (AAI) நடத்தப்பட்ட 124 விமான நிலையங்கள், கடந்த மூன்று நிதியாண்டுகளில் அவை அடைந்த லாபம் அல்லது நஷ்ட விவரங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட தரவுகளின்படி, சென்னை சர்வதேச விமான நிலையம் அதிகபட்சமாக ரூ.189.85 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது, அதைத் தொடர்ந்து டேராடூன் (ரூ. 98.02 கோடி இழப்பு) மற்றும் அகர்தலா விமான நிலையங்கள் (ரூ. 80.67 கோடி)
ராஜஸ்தானின் ராஜ்யசபா எம்பி நீரஜ் டாங்கி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. அவர் மூன்று கேள்விகளை எழுப்பியிருந்தார்: மாநிலம்/யூனியன் பிரதேசம் வாரியாக நாட்டில் உள்ள நஷ்டத்தில் உள்ள விமான நிலையங்களின் விவரங்கள் மற்றும் அத்தகைய இழப்புகளுக்கான காரணங்களும்; கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த விமான நிலையங்கள் சந்தித்த இழப்புகளின் விவரங்கள்; மற்றும் இந்த விமான நிலையங்களை லாபகரமாக மாற்ற அரசு எடுத்த அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள். இதற்குப் பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், வருமானம் குறைந்ததால்தான் இழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இதனால் அந்தந்த விமான நிலையங்களின் பராமரிப்பு செலவு உட்பட மொத்த செலவினங்களை விமான நிலையங்கள் பூர்த்தி செய்வதில் தடை ஏற்பட்டது. “COVID-19 தொற்றுநோய் 2020-21 நிதியாண்டு மற்றும் 2021-22 நிதியாண்டில் விமான நிலையங்களின் வருவாயையும் மோசமாக பாதித்துள்ளது,” என்று அவர் கூறினார்.இந்த விமான நிலையங்களை லாபகரமாக மாற்ற ஏஏஐ நடவடிக்கை எடுத்து வருவதாகவும், “மாஸ்டர் கான்செஷனர்கள் மூலம் ஒப்பந்தங்களை வழங்குவதன் மூலம் வானூர்தி அல்லாத வருவாயை அதிகரிப்பதன் மூலம், வருவாய் மேம்பாட்டிற்கான வணிக இடத்தை உகந்த முறையில் பயன்படுத்துதல், நகரத்தின் பக்க மேம்பாடு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வருவாய் பங்கு மாதிரி வணிக ஒப்பந்தங்கள் மற்றும் எல்இடி மாற்றுதல், சோலார் பேனல் நிறுவுதல் போன்ற பயன்பாட்டுச் செலவு மேம்படுத்தல். AAI பெரிய விமான நிலையங்கள் அல்லாத விமான நிலையங்களில் விமான நிலையக் கட்டணங்கள் அதிகரிப்பு வடிவில் வானூர்தி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கொசுக்களின் வாழ்நாள் அதிகரிப்பு ..வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்-சென்னை மக்களுக்கு மருத்...

Quick Share

கடும் குளிர் காரணமாக கொசுக்களின் வாழ்நாள் அதிகரிப்பு ..வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.சென்னையில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் குளிர் காரணமாக கொசுக்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. இதனால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .தட்பவெப்பநிலை மாற்றத்தால் கொசுக்களின் மூலம் வேகமாக வைரஸ் காய்ச்சல்,டெங்கு,எலி காய்ச்சல் ,சளி,தொண்டை வலி ,போன்றவை பரவி கொண்டிருக்கிறது. கொசுக்களை கட்டுப்படுத்த டோர்ன் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டுவருகிறது .எனவே குழந்தைகள் ,பெரியவ்ர்கள் ,இணை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் .மேலும் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் .தாமாக சென்று மருந்தகங்களில் பாராசிட்டாமல் மாத்திரைகளை போடா கூடாது .சென்னை மற்றும் புறநகர் பகுதில் உள்ள மக்கள் பாதிப்புகள் இருந்தால் சுய தனிமை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும் .மக்கள் ஆரோக்கியமான காய்கறிகள்,பழங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்.தூய்மையான தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் .

சென்னை பொதுப் போக்குவரத்து- ‘லைட் மெட்ரோ’ விரைவில் அறிமுகம்…

Quick Share

சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் ‘லைட் மெட்ரோ’ விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்.

சென்னையில் லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்க சாத்தியக்கூறு மதிப்பீட்டை நடத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) திட்டமிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ, CUMTA சட்டம், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), மெட்ரோலைட், இலகு ரயில் போக்குவரத்து அமைப்பு (LRTS), சென்னை மெட்ரோலைட், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA)

பரோட்டோ சாப்பிட்ட சென்னை இளைஞர் பலி!!அதிர்ச்சி

Quick Share

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் பரோட்டா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியை அடுத்த சர்மா நகர் 2-ஆவது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ரவிச்சந்திரன் மகன் கார்த்திக் (வயது 27). இவர் கொளத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று கார்த்திக்கின் குடும்பத்தினர் அனைவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு கார்த்திக்கிற்கு பரோட்டா வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தனர். கார்த்திக்கும் அந்த பரோட்டாவை உண்டு விட்டு உறங்க சென்றுள்ளார்.

அப்போது, இரவு 11 மணியளவில் கார்த்திக்கிற்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிய குடும்பத்தினர் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று கூறி அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

மயக்க நிலையில் இருந்த கார்த்திக்கை ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உயிர் முன்னதாகவே பிரிந்துவிட்டது என்று கூறினர். இச்செய்தியை கேட்ட அக்குடும்பத்தினர் கதறி அழுதனர் .

மேலும், இதைத்தொடர்ந்து நேற்று இரவு கார்த்திக் பரோட்டா உண்ட பிறகு பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜூஸ் ஒன்றை பருகியுள்ளார். பிறகு ,ஏதும் உண்ணவில்லை என்று தெரியவருகிறது. ஆனால், குடும்பத்தினர் அனைவரும் பரோட்டா உண்டபிறகு உறங்க சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, மற்றவர்களுக்கு எந்த ஒரு உடல்நிலை பாதிப்பும் ஏற்படாதா நிலையில் கார்த்திக்கின் உயிர் பிரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து வியாசர்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் பிரபலமான கோழி பிராண்டானா popeyes -முதன் முதலாக சென்னையில் அறிமுகம்!!

Quick Share

ஜனவரி 2022 இல் பெங்களூருவில் அதன் முதல் உணவகத்தைத் திறந்து, ஒரு வருடத்திற்குள் நகரம் முழுவதும் 12 உணவகங்களுக்கு விரைவான விரிவாக்கத்துடன் போபியேஸின் நுழைவு இந்தியாவில் குறிக்கப்பட்டது.

ஃபுட் சர்வீஸ் பிளேயர் ஜூபிலண்ட் ஃபுட் ஒர்க்ஸ் லிமிடெட், ஜனவரி 17 புதன்கிழமை அன்று, அமெரிக்க ஃப்ரைடு சிக்கன் பிராண்டான Popeyes இன் முதல் உணவகத்தை சென்னையில் தொடங்குவதாக அறிவித்தது. இந்த பிராண்ட் அதன் தைரியமான மற்றும் பிரபலமான லூசியானா-ஸ்டைல் ​​ஃப்ரைடு சிக்கன் மற்றும் அதன் கையொப்பம் கொண்ட சிக்கன் சாண்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பிரபலமானது, இது அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் ஒரு நிகழ்வாக மாறியது.

பெங்களூருவில் அதன் முதல் உணவகத்தைத் திறந்து, ஒரு வருடத்திற்குள் நகரம் முழுவதும் 12 உணவகங்களுக்கு விரைவான விரிவாக்கத்துடன் போபியேஸின் முதன்மை நுழைவு இந்தியாவில் குறிக்கப்பட்டது. இந்த பிராண்ட் தனது விருந்தினர்கள் அனைவரையும் சென்னையில் உள்ள முதல் உணவகத்தில் ஜனவரி 20 முதல் பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மாலில் வரவேற்கும். ஆகஸ்ட் 2019 இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட விரைவு சேவை உணவக வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றான இந்த பிராண்டின் சிக்னேச்சர் சிக்கன் சாண்ட்விச் போன்ற உலகப் புகழ்பெற்ற தயாரிப்புகளை சென்னையில் உள்ள விருந்தினர்கள் விரைவில் ரசிக்கக் காத்திருக்கலாம்.

கஜுன் சுவையூட்டிகளில் 12 மணிநேரம், உள்நாட்டில் கிடைக்கும் மற்றும் புதிய கோழியை கையால் ரொட்டி, வடை செய்தல் மற்றும் மரைனேட் செய்தல் போன்ற பாரம்பரிய முறைக்கு போபியேஸின் வெற்றி வரவு வைக்கப்பட்டுள்ளது

பிரீ பயர்(free fire game) ஆன்லைன் விளையாட்டு மோகம் -18 வயது வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Quick Share

பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் அரவிந்தா நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பாலகுமார்(வயது 18). இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த பாலகுமார் எந்நேரமும் செல்போனில் பிரீ பயர் என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இதனை பார்த்த அவரது தாய் அம்பிகா அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த பாலகுமார் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டின் ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். சாவு இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாத்தா வெள்ளையன் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் பாலகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பாலகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பிரீ பயர் விளையாடியதை அவரது குடும்பத்தினர் கண்டித்ததால் தூக்குப்போட்டுக்கொண்ட பாலகுமாரை அவரது குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வந்த சேகுவேராவின்மகள் -இயக்குநர் ராஜு முருகன் சந்திப்பு…

Quick Share

புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராவும், பேத்தி எஸ்டெஃபானியாவும் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ‘மானுட சமூக விடுதலைக்கான உண்மையான புரட்சியின் அடையாளம், என்றைக்குமான எமது ஆதர்ஷ பெருந்தோழன் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராவையும், பேத்தி எஸ்டெஃபானியா குவேராவையும் சந்தித்த இத்தருணம் வாழ்வின் மிக முக்கியமானது’ என திரைப்பட இயக்குநர் ராஜு முருகன் ட்வீட் செய்துள்ளார்.




You cannot copy content of this Website