சென்னை

மக்களே உஷார் !!சளி மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பரிதாப பலி!

Quick Share

சளிக்கு மாத்திரை சாப்பிட்ட மாணவன் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொளத்தூர் பகவதி அம்மன் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஜெயப்பிரதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தீபக் 1),  பெரியார் நகர் பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். 

நேற்று முன்தினம் சிறுவனுக்கு இரவு லேசான சளி இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று  பாதி மாத்திரையை ராஜ்குமார் சிறுவனுக்கு கொடுத்துள்ளார். சிறிது நேரத்திலே சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

தனது ஆட்டோவில் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றார். செல்லும் வழியில் சிறுவன் மயக்கம் அடைந்தான். பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுவனை காண்பித்தபோது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

சளி பிரச்னைக்கு மாத்திரை சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பரபரப்பு.. வாடகை தாய்களை அடைத்து வைத்துகொடுமை- அதிர்ச்சி!

Quick Share

நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் வீடுகளில் பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயன்படுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து கருமுட்டை தானமாக பெறுவதாகவும் புகார் எழுந்தது. அங்குள்ள பெண்களிடம் இது குறித்து விசாரித்த போது பரபரப்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவர்கள் சி.எப்.சி. மருத்துவமனையின் நோயாளிகள் என்று தெரிவித்தனர். குஜராத், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் வங்காளதேசம், நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். 

அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதில் பலருக்கு திருமணமே ஆகவில்லை. குடும்ப வறுமையை பயன்படுத்தி இந்த செயலில் அவர்களை ஈடுபட வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு கொடுக்காமலும் சித்ரவதை செய்துள்ளனர். அவர்கள் பகலில் வெளியில் வர அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் டாக்டர்கள் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த குழுவினர் நேற்று சூளைமேட்டில் உள்ள சி.எப்.சி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சோதனை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். 

கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை – இளைஞர் தப்பியோட்டம்!சென்னையில...

Quick Share

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தனியார் கல்லூரியில் படிக்கும் சத்யா (20), என்ற மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்ற இளைஞர் தப்பி ஓடினார். ரயில் நிலையத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு வந்துகொண்டிருந்த மின்சார ரயிலின் முன்பு, சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார். 

இதனை அடுத்து, தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் உயிருக்கு எமனான விசில்!!கதறும் பெற்றோர் …

Quick Share

சென்னை பூந்தமல்லி லட்சுமிபுரம் ரோடு பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(38), காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா. இவர்களுக்கு தர்சன்(3), என்ற மகனும், கயல்விழி என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் குழந்தை வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்து விசிலை எடுத்து விழுங்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை கயல்விழி மயங்கியது. இதனை கண்டு பெற்றோர் அலறி அடித்து கொண்டு குழந்தை தூக்கிய போது குழந்தை மூச்சு திணறலால் மயங்கியது. இதையடுத்து குழந்தையின் முதுகில் தட்டியபோது வாயிலிருந்து விசில் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அப்போதுதான் குழந்தை விசிலை விழுங்கியது தெரியவந்தது. இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன குழந்தை கயல்விழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். விளையாடும் போது விசிலை விழுங்கிய குழந்தை இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு!பரபரப்பு சம்பவம் ..

Quick Share

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டம் உதவி மையம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அந்த நபர் தீக்குளித்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தீக்குளித்த நபர் படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பதும் தெரியவந்துள்ளது.

சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்; 5 பேர் அதிரடி கைது!

Quick Share

சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனடிப்படையில், அந்த நபர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கையில் இறங்கியது. இதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸ், சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பெண் காவலர்கள் வீட்டில் சோதனைகள் மேற்கொண்டனர். அதில் அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய மதுரையை சேர்ந்த கார்த்திக்கேயன்(46),திருநெல்வேலியை சேர்ந்த பெனடிக் நெல்சன்(53) ஆகிய இருவரை கைது செய்தனர். 

அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த ஒரு பெண் மீட்கப்பட்டார். மேலும் அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், திருவேங்கடசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் இதேபோன்று விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதனடிப்படையில், நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய அதே பகுதியை சேர்ந்த சாந்தி(50), ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த தேவி(38),நெசப்பாகம் பகுதியை சேர்ந்த சீதாதேவி(34) ஆகிய 3 பெண்களை கைது செய்தனர்

விபரீதமான விளையாட்டு- தூக்கு போடுவது போல் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு..

Quick Share

சென்னை புழல் அடுத்த காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் இளையமகன் கார்த்திக் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இரவு கார்த்திக்கும் அவரது அண்ணனும் இணைந்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தூக்குபோட்டு விளையாடுவது போல் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு விளையாடிய போது அவரது அண்ணன் வெளியே நின்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார்த்திக் தூக்கு கயிறில் சிக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார். பின்னர் இதனைக்கண்ட அவரது அண்ணன் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள் வந்து போலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளனர். அதன் படி அங்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் தொடரும் தற்கொலை ….ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை!!

Quick Share

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் லதா. இவருடைய மகள் ஹரிணி (வயது 16). இவர் பல்லாவரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 21-ந் தேதி பள்ளியில் நடந்த தேர்வில் மாணவி ஹரிணி காப்பி அடித்து பிடிபட்டதாகவும், இதனால் மாணவியை ஆசிரியை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

நேற்று முன்தினம் இரவு பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவி உடலை வாங்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் மாணவி ஹரிணி படித்த பள்ளி நிர்வாகத்தின் மீதும், மாணவியை திட்டிய ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க கோரி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மதியம் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

பல்லாவரம் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். பின்னர் மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னைப் பெண்ணுக்கு ஜேர்மனியின் உயரிய விருது…

Quick Share

இந்தியப்பெண் ஒருவர் ஜேர்மனியின் உயரிய இலக்கிய விருதொன்றிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்தவர் ஆவார்.

சமூக ஆர்வலர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்திறன் கொண்ட இந்தியப்பெண் ஒருவருக்கு ஜேர்மனியின் உயரிய விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாட்டில், சென்னையில் பிறந்தவர் மீனா கந்தசாமி.

சமூக ஆர்வலர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்திறன் கொண்ட மீனாவுக்கு ஜேர்மனியின் இலக்கியத்திற்கான உயரிய விருதான Hermann Kesten என்னும் விருது வழங்கப்பட உள்ளது.

துன்புறுத்தப்படும் எழுத்தாளர்களுக்கு ஆதரவளிக்க தன்னிகரில்லாத வகையில் உழைப்போருக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான Hermann Kesten விருதுக்காக மீனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மீனா, 1984ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். முன்பு ‘The Dalit’ என்னும் பத்திரிகையில் பணியாற்றிய அவர், பின்னர் முழு நேர எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரானார்.

மீனாவுக்கு சமீபத்தில் Fellow of the Royal Society of Literature என்னும் கௌரவமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

மதுபோதையில் கார் ஒட்டிய இளைஞரால் பலியான இளம்பெண்கள்!!23 வயதில் பரிதாபமாக பறிபோன உயிர்கள...

Quick Share

இளம்பெண்கள்

இரவு பணி முடித்துவிட்டு திரும்பிய தோழிகள் ஒன்றாக உயிரிழந்த பரிதாபம்   

சென்னையில் இரவில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இளம்பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் அக்காததாரா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி (23), ஆந்திராவின் ரெட்டிகாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த லாவண்யா (23) ஆகிய இருவரும் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர்.

நெருங்கிய தோழிகளான இருவரும் கடந்த 14ஆம் திகதி இரவுநேர பணியை முடித்துவிட்டு, அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் இளம்பெண்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனை நேரில் பார்த்தவர்கள் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஸ்ரீலட்சுமி, லாவண்யா இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு ஸ்ரீலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்ற லாவண்யாவும் இறந்துவிட்டார். 

இதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரை பொதுமக்கள் பிடித்து, அதன் ஓட்டுநரான இளைஞரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் மோத்தீஷ்குமார் (20) என்பதும், மதுபோதையில் காரை வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.  

“சோறு போடும் மக்களை கூறு போட பார்ப்பதா?” ஏரிகளை அழித்து ஏர்போர்ட்டா?..போராட...

Quick Share

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய இருக்கிறது. இதற்கான இடத்தை மாநில அரசு தேர்வு செய்து பரிந்துரைத்தது. அதனை ஏற்று மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இங்கு தான் சிக்கலே ஆரம்பித்தது. அதாவது, விமான நிலையம் அமைக்கக் கூடாது என்று பரந்தூர் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஒன்றல்ல, இரண்டல்ல. வாரக்கணக்கில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பகலில் மட்டுமே போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் திடீரென இரவிலும் கண் விழிக்க தொடங்கினர். குடியிருப்புகள், விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்கக் கூடாது என்று அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள் நாள்தோறும் தங்களது பணிகளை முடித்துவிட்டு இரவு நேரங்களில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர். இதையடுத்து போதிய ஆலோசனை நடத்தி விட்டு சுமார் 1 மணி நேரம் இரவு நேர அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 50வது நாள் இரவாக நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் பள்ளி சீருடைகளில் சிறுவர்களும், பெண்கள் தங்களது கண்களை கருப்பு துணியினால் கட்டிக் கொண்டும் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். அதில் ”விவசாய நிலத்தை அழிக்காதே”, “விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே” போன்ற பதாகைகளை ஏந்தினர்.

இதுதவிர கருப்பு கொடிகளை தங்களது கைகளில் ஏந்திவாறு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அப்போது “காப்போம் காப்போம் விவசாயத்தை காப்போம்”, “சோறு போடும் மக்களை கூறு போட பார்ப்பதா?” என கோஷங்களை எழுப்பினர். விவசாயத்தை அழித்து புதிய விமான நிலையம் அமைக்க வேண்டாம் என்று குரல் கொடுத்தனர்.

வரதட்சனை நகைகளை அடகு வைத்த கணவன் -தற்கொலை செய்த கர்ப்பிணி பெண்

Quick Share

சென்னை போரூர் மதனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி (30) . இவர் போரூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசித்ரா தேவி (25) எம்.காம் பட்டதாரி. இந்நிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், சீர்வரிசையாக பெண் வீட்டார் 25 பவுன் நகை மற்றும் கார் உள்ளிட்டவற்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்வரிசையாக கொடுத்த நகையிலிருந்து 10 பவுன் நகையை மனைவி சசித்ரா தேவிக்கு தெரியாமல் சேதுபதி எடுத்து அடமானம் வைத்துள்ளார். இதையடுத்து பீரோவில் வைத்திருந்த நகை மாயமானது குறித்து சசித்ராதேவி கேட்டபோது, சேதுபதி நகையை அடகுவைத்ததாக கூறியதையடுத்து, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக இருவீட்டாரும் சேர்ந்து தம்பதியை சமரசம் செய்து வைத்தனர். தற்போது 7 மாத கர்ப்பிணியாக சசித்ராதேவி உள்ள நிலையில், வளைகாப்பு நடைபெறுவதற்கு முன்னதாக 10 பவுன் நகையை மீட்டு விடுகிறேன் என்று சேதுபதி உறுதியளித்துள்ளார். 

இதையடுத்து நேற்று முன்தினம் காலை சேதுபதி, சசித்ரா தேவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆவடி சிரஞ்சீவி நகர் முதல் குறுக்குத்தெருவில் வசிக்கும் மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர், தாய் வீட்டுக்கு வந்த சசித்ரா தேவி தனியறையில் உறங்கினார். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் அவரது தாயார் கமலா எழுந்து பார்த்தபோது, சசித்ராதேவி மின்விசிறியில் புடவையால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.




You cannot copy content of this Website