திருமணமான 20 நாளில் நேர்ந்த சோகம்.., 20 வயதில் கணவனை பறிகொடுத்த மனைவி
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய பிரபாகரன் (வயது 26). அவருடைய மனைவி கிறிஸ்டின் வனஜா மேரி (20). கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் விஜயபிரபாகரன், அவருடைய உறவினர்கள் லியோ அமலஜோசப் (25), லாரன்ஸ் (25) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மாரியாயிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற மினி லொறி, மோட்டார் சைக்கிள் மீதுநேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
“இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை விஜயபிரபாகரன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த லியோ அமலா ஜோசப், லாரன்ஸ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே லியோ அமலஜோசப் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் லாரன்ஸ், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதுமாப்பிள்ளை இறந்த தகவலை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் கதறி அழுதனர்.
லியோவின் குடும்பத்தாரும் அழுதார்கள். இந்த காட்சிகள் காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.