மாவட்ட செய்திகள்

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை…அதிர்ச்சி தரும் ஒரு கிராம் தங்கத்தின் விலை!

Quick Share

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.6,710-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை இன்று மாற்றம் ஏதும் இன்றி ஒரு கிராம் ரூ.92-க்கும், ஒரு கிலோ ரூ.92,000-க்கும் விற்கப்படுகிறது. சில நாட்களாக தங்கம் விலை குறைந்து ஆறுதல் அளித்த நிலையில், மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது.

“வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…” – சென்னை போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு!

Quick Share

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்தது. இத்தகைய சூழலில் சென்னையில் இன்று (18.08.2024 கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.

இந்நிலையில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், வாலாஜா சாலை, அண்ணாசாலை மற்றும் கலைவானர் அரங்கம் விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயணத்தினை திட்டமிட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மற்ற மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக கலைவானர் அரங்கம் விழா நடைபெறும் இடத்தை அடையலாம்.

கலைவானர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியைத் தேர்வு செய்துசெல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல்வேறு மாவட்ட கனரக வாகனங்களில் இருந்து (பேருந்துகள் மற்றும் மாக்சிகேப்) பிற கட்சி வாகனங்கள் அண்ணா சிலை வழியாகப் பெரியார் சிலை, தீவுத்திடல் மைதானம், பொதுப்பணித்துறை (PWD) மைதானம் வழியாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கிச் செல்லுமாறு அனுமதிக்கப்படுவார்கள்.

பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாவை, எம்எல்ஏ விடுதி சாலை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அனைத்து இலகுரக வாகனம் மற்றும் தன்னார்வலர்களின் மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலை. காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிப் பணியாளர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் வணிக வாகனங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தைப் பொதுமக்களுக்கு இடையூறாகவும் மற்றும் விவிஐபிகள் வரும் வழித்தடத்திலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

தொண்டர்கள் மற்றும் கட்சியினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் காமராஜர் சாலை மற்றும் வாலாஜாசாலை முழுவதும் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்’ – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Quick Share

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 3ஆம் தேதி (03.08.2024) முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை (14.08.2024) சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டன். இதனால் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 02.30 மணி வரையும், இரவு 10.00 மணி முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றத்தை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்திருந்த ரயில் சேவை மாற்றம் நாளை மறுநாளுடன் (14.08.2024) முடிவடைய உள்ள நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி (18.08.2024) வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடையாததால் ரயில் சேவை மாற்றம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி 55 புறநகர் ரயில்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு புதுச்சேரி – சென்னை எழும்பூர், எழும்பூர் – புதுச்சேரி, சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் விழுப்புரம் – தாம்பரம், விழுப்புரம் – மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம்!!சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்!!

Quick Share

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை 3-வது முனையமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரெயில்களுக்காக 4 நடைமேடைகளும், விரைவு ரயிலுக்காக 4 நடைமேடைகளும் உள்ளது. கூடுதலாக நடைமேடை 9 மற்றும் 10 ஆகிய புதிய 2 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது

சென்னையை அடுத்த பகுதி என்று சொல்லப்பட்ட தாம்பரம் கடந்த 20 ஆண்டுகளில் சென்னையின் மையப்பகுதியாக வளர்ந்துள்ளது. தெற்கே செங்கல்பட்டு வரையிலும், மேற்கே ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், வடக்கே பொன்னேரி வரையிலும் சென்னை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கிழக்கில் மகாபலிபுரம் வரையிலும் சென்னை வளர்ந்துவிட்டது. சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வளர்ந்துள்ள சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு தாம்பரம் உருவெடுத்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையமே தாம்பரத்தின் புறநகர் பகுதியான வண்டலூரை ஒட்டித்தான் இருக்கிறது. தாம்பரத்தில் இருந்து வெறும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் அதிகளவில் உருவெடுத்துள்ளன. தென் சென்னை மக்களின் முக்கிய ரயில் நிலையமாக உருவெடுத்துள்ளது.

சென்னை எழும்பூரில் போதிய இடம் இல்லாத காரணத்தால் எழும்பூர் மற்றும் சென்ட்ரலுக்கு பதில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் உள்பட தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் தற்போது தாம்பரத்தில் இருந்துதான் புறப்படுகின்றன.

இது தவிர ஆந்திரா வழியாக வடமாநிலம் செல்லும் ரயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்பட தொடங்கி உள்ளன. இனி தென் மாவட்டங்களுக்கு ரயில் அறிவிக்கப்பட்டால், எழும்பூருக்கு பதில் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு தாம்பரம் ரயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.

ஆனால் தாம்பரம் ரயில் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் போல் மிகப்பெரிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ள ரயில் நிலையமாக இல்லை. மேலும் 3வது முனையமாக மாற்றும் பணியும் இதுவரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு 1000 கோடி செலவில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள போகிறது. ரயில் நிலையங்களில் அதிநவீன கழிவறைகள், டிஜிட்டல் பலகைகள், எஸ்கலேட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட சேர்கள், வேளச்சேரி சாலை, ஜிஎஸ்டி சாலை என இருப்பகமும் உள்ள முகப்புகள், வாகனங்கள் வந்து செல்லும் வழி, நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் வசதிகள், விளக்குகள், பிளாட்பார்ம்கள் என எல்லாமே மாற்றப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக தாம்பரம் ரயில் நிலையத்தை முழுமையாக 3வது முனையமாக மாற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விரைவு ரயில் வழித்தடத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் ஆரம்பித்தது. தண்டவாளத்தில் தற்போது உள்ள 220 கிலோ எடையுள்ள சிலிப்பர் கற்களை அகற்றிவிட்டு, புதிதாக 300 கிலோ எடை கொண்ட சிலிப்பர் கற்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அதில் ஏற்கனவே உள்ள ஜல்லி கற்கள் மாற்றப்பட்டுள்ளது. அதில் புதிய ஜல்லி கற்களை கொட்டி, அதன் மீது சிலிப்பர் கற்களை வைத்து தண்டவாளங்கள் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.

அதேபோல் இன்னும் சில வாரங்களில் நடைமேடை 10-ல் தண்டவாளம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறிய அதிகாரிகள், கூடுதலாக 2 விரைவு ரயில் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் சிரமம் குறையும். முழுயைமாக தாம்பரம் 3வது முனையாக மாறும் எனறும் அதிகாரிகள் கூறினார்கள்.

குளிர்சாதன பெட்டியை திறந்த 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

Quick Share

சென்னை ஆவடியில் குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 8 மணி வரை பரவலாக மழைக்கான வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், திருவல்லிக்கேணி, வடபழனி, மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் குளிர்சாதன பெட்டியை திறந்த போது மின்சாரம் தாக்கி ஐந்து வயது குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நந்தவனம் மேட்டூர் பகுதியை சேர்ந்த கௌதம் என்பவரது குழந்தை ரூபாவதி (5 வயது) குளிர்சாதன பெட்டியைத் திறந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மிகப் பெரிய ஆபத்து!! சில ஆண்டுகளில் கடலில் மூழ்கப்போகும் சென்னை – ஆய்வில் வெளியான...

Quick Share

கடல் மட்டம் உயர்வதால் சென்னையின் பல பகுதி நீரில் மூழ்கும் என அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) தெரிவித்துள்ளது.

கடலில் மூழ்கப்போகும் சென்னை

இன்னும் சில ஆண்டுகளில் கடல் மட்டம் உயர்வதால், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூரு, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, ஹல்டியா, பனாஜி, பூரி, உடுப்பி, பரதீப், யானம் போனடற 15 முக்கிய நகரங்களில் பாதிக்கப்படும் என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடல் மட்டம் உயர்வதால் 2040ம் ஆண்டுக்குள் சென்னையின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 7% மூழ்கிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2040 ஆம் ஆண்டில் சென்னை பெருநகரப் பகுதியில் 7.29% (86.6 சதுர கிமீ) வெள்ளம் பெருகும் என்றும், 2060 ஆம் ஆண்டில் 9.65% (114.31 சதுர கிமீ) ஆகவும், 15.11% (159.28 சதுர கிமீ) மற்றும் 2000 சதுர கிமீ 8 ஆகவும் உயரும் என்று அறிக்கை கணித்துள்ளது. 

1987 முதல் 2021 வரை சென்னையில் 0.679 செ.மீ கடல் மட்டம் உயர்ந்துள்ளது என்றும், ஆண்டுக்கு 0.066 செ.மீ உயரும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்ச கடல் மட்ட உயர்வு ஆண்டுக்கு 4.44 செ.மீ முதல் 0.31 செ.மீ வரை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அதிகரித்து வரும் நகரமயமாக்கல் போக்கு, குறிப்பாக கடற்கரையோரம், காலநிலை மாற்ற இயக்கிகள் காரணமாக ஏற்படும் பாதிப்புடன் இது தொடர்புக் கொண்டுள்ளது. 

தாழ்வான கரையோர நகரங்கள் இப்போது கடல் மட்ட உயர்வினால் பாதிக்கப்படக்கூடியவை என்று அறிக்கை கூறுகிறது. 

 

சென்னையில் பயங்கர தீ விபத்து!

Quick Share

சென்னை மேடவாக்கம் பெரும்பாக்கத்தில் சதுப்புநிலப் பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சதுப்புநிலத்திற்கு நடுவே சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் பற்றி எரியும் தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தீ மளமளவெனப் பற்றி எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதே சமயம் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து அரிய வகை பறவையினங்கள் இப்பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். எனவே இந்த தீ விபத்தில் சிக்கி ஏராளமான பறவைகள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இப்பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல வழி இல்லாததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. சதுப்புநிலப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த தீ விபத்தானது அதிக வெயில் காரணமாக தீப்பிடித்ததா அல்லது உயர் அழுத்த மின் கம்பி உரசி தீப்பிடித்ததா என விசாரணை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் அதிர்ச்சி..!சென்னையில் பரபரப்பு … கைகள் கட்டப்பட்ட நிலையில் கடலில் மிதந்த...

Quick Share

சென்னையில் துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனும் சிறுமியும் கடலில் சடலமாக மிகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாதவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீசாந்த் மற்றும் சந்தியா சிறுவர் சிறுமியான இவர்கள் அண்மையில் காணாமல் போனதாக இரு வீட்டாரின் பெற்றோர்களும் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இருவர் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் இருவரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவனின் சடலமும், சிறுமி ஒருவரின் சடலமும் இருந்தது. விசாரணையில் அது காணாமல் போன ஸ்ரீசாந்த் மற்றும் சந்தியா என்பது தெரிய வந்தது. இந்தத் தகவல் குறிப்பிட்ட சிறுவன், சிறுமியின் பெற்றோருக்குச் சொல்லப்பட்ட நிலையில் அவர்கள் பதறி அடித்துக்கொண்டு கதறியபடி ஓடிவந்து சடலங்களைப் பார்த்து அழுதது அங்கிருப்போரை கண்கலங்க வைத்தது. இருவரின் உடலையும் போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று தொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மக்களே உஷார்! சிக்கன் பிரியாணி என்ற பெயரில் பூனை பிரியாணி..

Quick Share

சென்னை எழும்பூரை சேர்ந்த ஜோஷ்வா என்ற விலங்கு நல ஆர்வலர் பகீர் குற்றசாட்டு ஒன்றை கூறியுள்ளார். ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளித்து வரும் இவரின் வீட்டின் அருகே நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் வந்து தெருவில் இருக்கும் பூனைகளை பிடித்து மூட்டையில் கட்டிக்கொண்டு சென்றதாக கூறியுள்ளார். மேலும் அவரை விரட்டி பிடித்து விசாரித்தபோது 100 ரூபாய் கொடுத்தால் பூனையை தருகிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் அவர் ஒருவர் மட்டும் சாப்பிடுவார் என்றல் ஒரு பூனை போதும் எதற்கு இத்தனை பூனையை பிடிக்க வேண்டும்? இதனை உணவகங்களில் விற்று பணம் சம்பாதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வணக்கம் சென்னை.. கேலோ இந்தியா விழாவில் மோடி

Quick Share

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகைபுரிந்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த அவர் சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்தது போலவே இருக்கிறது என மேடையில் பேசியுள்ளார். மேலும் விளையாட்டு துறையில் சம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது என கூறியுள்ளார். விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன் எனவும் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது என அவர் கூறியுள்ளார்.

நீரில் தத்தளித்த மாணவி: காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Quick Share

தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் கண்மாயில் குளிக்க சென்ற இளம்பெண்கள் இருவர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மேல மருதூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மேனகா. இவர் 9ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கல்லூரி மாணவி கனிச்செல்வி மற்றும் இளம் பெண் கலைச்செல்வி ஆகியோருடன் கண்மாயில் குளிக்க சென்றார்.

அங்கு மேனகா குளிக்கும்போது நீரில் மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது. அதனைப் பார்த்து பெண்கள் இருவரும் மேனகாவை காப்பாற்ற நீரில் இறங்கியுள்ளனர்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாணவியை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அத்துடன் கலைச்செல்வியும் அவருடன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் ஒருவழியாக கனிச்செல்வியை காப்பற்றினர். மேலும் பொலிஸார் தகவல் அளித்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த பெண்களின் உடல்களைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவியை காப்பாற்றும் முயற்சியில் பெண்ணொருவர் அவருடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Swiggy Instamart -ல் ஒரே நாளில் அதிக பொருட்களை வாங்கி குவித்த சென்னை நபர்

Quick Share

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் (Swiggy Instamart) சென்னையை சேர்ந்தவர் ஒரே நாளில் அதிகபட்சமான பொருட்களை வாங்கியுள்ளார். 

ஒன்லைன் ஆர்டர்

தற்போதைய காலங்களில் வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கி வருகிறோம். ஒருவரின் கையில் மொபைல் இருந்தாலே போதும். தங்களுக்கு தேவையான பொருள்களில் ஒன்லைன் தளங்கள் மூலமாக ஆர்டர் செய்கிறோம்.உணவு முதல் ஐபோன் வரை ஒரே இடத்தில் இருந்தபடியே பெறுகிறோம். குறிப்பாக உணவு செயலிகளில் இருந்து தங்களுக்கு விருப்பமான உணவுகளை தேர்வு செய்வது இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்

அந்தவகையில், ஒன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, 2023 -ம் ஆண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் ஜூஸ், பிஸ்கட், சிப்ஸ் உள்ளிட்டவற்றை ரூ.31748 -க்கு வாங்கி குவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் (Swiggy Instamart) வெங்காயம், ஆணுறை, வாழைப்பழம், சிப்ஸ் ஆகிய பொருட்கள் அதிகமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்டுள்ளது.   




You cannot copy content of this Website