மாவட்ட செய்திகள்

சென்னை உட்பட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

Quick Share

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள மாலத்தீவுப் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்குச் சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும்.இதன்காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, புதுச்சேரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழைபெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.

இதன் காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

சென்னையின் அவலநிலை- 25 லிட்டர் கேன் தண்ணீர் ரூ.250-க்கு விற்பனை..

Quick Share

மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துள்ள போதிலும், சென்னையில் ஏற்பட்டுள்ள அவல நிலை மாறவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், 25 லிட்டர் கேன் தண்ணீர் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீரால் சூழ்ந்துள்ளன. குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் பல இடங்களில் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மினி லாரிகளில் சென்று சிலர் குடிநீர் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, 25 லிட்டர் கேன் ஒன்று ரூ.250-க்கு விற்பனை செய்கின்றனர். வீடுகளில் இருந்து காலி கேன்களை கொண்டு வருபவர்களுக்கு, ரூ.150-க்கு குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மக்களுக்கு டேவிட் வார்னர் ஆதரவு: அனைவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என பதிவு

Quick Share

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கருத்து பதிவிட்டுள்ளார்.

இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு உள்ளாகியுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரும் பாதித்துள்ளது.மிக்ஜாம் புயலானது தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து விட்டதால், சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களின் மழை பொழிவு குறைய தொடங்கியுள்ளது.

அதே சமயம் அரசும், இயல்பு நிலைக்கு மக்கள் திரும்ப மீட்பு பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டு வருகிறது.

டேவிட் வார்னர் ஆறுதல்

இந்நிலையில் சென்னையின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் மேடான பகுதிக்கு செல்லுங்கள், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதே முக்கியம் என அறிவுரையும் வழங்கியுள்ளார்.அத்துடன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மீட்பு பணிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கும் உங்கள் முடிந்த உதவிகளை செய்யுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

பெரும் அவதியில் சென்னை மக்கள்!! மிக்ஜாம் புயல்: மண்ணுக்குள் புதைந்த அடுக்குமாடி கட்டிடம்

Quick Share

மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்து வரும் சூழலில் சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டிடம் மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிறன்று காலை புயலாக வலுப்பெற்றது.

மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னைக்கு அருகே சுமார் 110 கிமீ தொலைவில் இருக்கிறது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.இன்று முற்பகலுக்குள் மிக்ஜாம் புயல் தீவிரப்புயலாக வலுப்பெறும் என்றும், இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே 40 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதுடன், பெட்ரோல் நிலை மேற்கூரை சரிந்து விழுந்தது.

இதில் சிக்கிய 5 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர், இதற்கிடையே வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டிடம் மண்ணுக்குள் இறங்கியது.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே 40 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதுடன், பெட்ரோல் நிலை மேற்கூரை சரிந்து விழுந்தது.

இதில் சிக்கிய 5 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர், இதற்கிடையே வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டிடம் மண்ணுக்குள் இறங்கியது.

சென்னை மக்களே ஜாக்கிரதை!! தீவிர புயலாக வலுப்பெறுகிறது மிக்ஜாம்! அரசின் முக்கிய எச்சரிக்கை

Quick Share

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் இன்று முற்பகலுக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிறன்று காலை புயலாக வலுப்பெற்றது.

மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னைக்கு அருகே சுமார் 110 கிமீ தொலைவில் இருக்கிறது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இன்று முற்பகலுக்குள் மிக்ஜாம் புயல் தீவிரப்புயலாக வலுப்பெறும் என்றும், இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொதுமக்கள் பத்திரமாக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், முக்கியமான ஆவணங்களை பத்திரமாக வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு மாநில அவசரக்கால செயல்பாட்டு மைய எண் -1070, வாட்ஸ் அப் எண் 94458 69848, மாவட்ட அவசரக்கால செயல்பாட்டு மைய எண் -1077 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மிக்ஜாம் புயல்: சென்னையை புரட்டியெடுக்கும் கனமழை!

Quick Share

மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 150 கி.மீ தொலைவில் நிலை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள புயல், தற்போது சென்னையில் இருந்து 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் தற்போது 13 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று மாலை 5 மணியளவில் இந்த மிக்ஜாம் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட தமிழகத்தின் அருகே புயல் மையம் கொண்டு இருப்பதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணி வரை மிதமான கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

130 கி.மீ அப்பால் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல்: சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை

Quick Share

மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள புயல், தற்போது சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் தற்போது 14 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று மாலை 5 மணியளவில் இந்த மிக்ஜாம் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட தமிழகத்தின் அருகே புயல் மையம் கொண்டு இருப்பதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணி வரை மிதமான கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் சாலையை கடந்த பெரிய முதலை: விடிய விடிய கொட்டும் மழையால் மக்கள் அவதி

Quick Share

சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே பெரிய முதலை சாலையை கடந்து செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டி தீர்க்கும் கனமழை

சென்னை மற்றும் வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

சென்னைக்கு 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று மாலை 5 மணியளவில் ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சென்னை திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

சாலையை கடந்த முதலை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டி வரும் நிலையில், பெருங்களத்தூர் – நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளிக்கு அருகே பெரிய முதலை ஒன்று சாலையை கடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில் சென்னையில் பெரிய முதலை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நாளைக்கு லீவு !!டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள்…

Quick Share

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை (டிச.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை தீவிர புயலாக மாறி, நாளை மறுதினம் (டிச. 5) நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வங்கக்கடலில் நிலைக்கொண்டிருப்பதன் காரணமாக தற்போது வட தமிழக பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவிடுமுறை என்றால் பள்ளி – கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை ஆகும்.

இந்நிலையில், நாளை மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் யாரையும் வெளியே போக வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, மதுப்பிரியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அவசர அவசரமாக படையெடுத்து வருகின்றனர்.

‘மிக்ஜாம்’ புயல்: சென்னையில் கடற்கரைக்கு செல்ல தடை!

Quick Share

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயலின் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரை நுழைவு வாயிலுக்கான பாதைகள் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். புயல் காரணமாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலாங்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அக்கரை கடற்கரை, புளூ கடற்கரை, நீலாங்கரை கடற்கரை, பாலவாக்கம் கடற்கரை, கொட்டிவாக்கம் கடற்கரை ஆகிய கடற்கரைகளுக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

80km வேகத்தில் புயல் காற்று.. சென்னைக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Quick Share

வங்கக்கடலில் உருவாக உள்ள மிக்ஜாம் புயலால் சென்னையில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காற்று

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

மேலும் நாளை(டிச.2) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (டிச.3) வங்கக்கடலில் புயலாக வலுப்பெற உள்ளது.மேலும் தெற்கு ஆந்திரம் – வடதமிழகத்தின் அருகே வரும் டிச4-ம் தேதி புயல் வந்தடைகிறது.

தையடுத்து, ஆந்திரத்தின் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிச5-ம் தேதி காலை புயல் கரையைக் கடக்கிறது.

முன்னதாக வடதமிழகம்-மசூலிப்பட்டினத்திற்கு இடையே டிச.4-ம் தேதி மாலை கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 4ம் தேதி மாலை, 60-70km வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் என்றும், அவ்வபோது, 80 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் காரணமாக தமிழகத்தில் டிச 5-ம் தேதி வரை கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று ந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்களே எச்சரிக்கை!!கனமழையில் செல்போன் பேசியபடி சென்ற இளைஞர் மரணம்!

Quick Share

தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் செல்போன் பேசியபடி சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

கனமழை 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைப்பொழிவு உள்ள நிலையில், சென்னையில் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.நேற்று முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.இந்த நிலையில் பெருங்களத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவர் செல்போன் பேசியபடி சென்றபோது உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விசாரணை 

மணிகண்டன் என்ற இளைஞர் பெருங்களத்தூர் ஏரிக்கரை அருகே சாலையில் குடைபிடித்தபடி சென்றுள்ளார். செல்போன் பேசியபடி சென்ற அவர் கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.அவரது செல்போன் லேசாக கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     




You cannot copy content of this Website