மாவட்ட செய்திகள்

சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Quick Share

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாக உள்ள மோக்கா புயல், 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில், தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

குறிப்பாக, புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். அந்தவகையில் 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. 

தற்போது, மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் பத்திரமாக நிறுத்தி வைக்கும்படி மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டதோடு, கடற்கரை பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டு உள்ளது. 1-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம். இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், சற்றே பலமாக காற்று வீசுவதை அறிவிக்கவே இந்த 1-ம் எண் கொண்ட எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது என்று சென்னை துறைமுக அதிகாரிகள் கூறினர். 

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஆழ்கடல் பகுதியில் காற்றின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

செல்போனில் பேசிய டீ மாஸ்டர் பலி இனிமே நீங்களும் இப்படி பண்ணாதீங்க….

Quick Share
சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய டீ மாஸ்டர் பலி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கெனால் தெரு பகுதியில் வசித்து வரும் டீ மாஸ்டர் காமராஜ்(22). இவர் நேற்று பணி முடித்து இரவு வீட்டிற்கு வந்ததும், சார்ஜரில் மாட்டியபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென காமராஜ் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த வண்ணாரபேட்டை போலீசார் காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

உலக சுகாதார அமைப்பு அறிக்கை கொரோனா??

Quick Share

சீனாவின் வூஹான் மாகணாத்திலிருந்து பரவிய கொரோனா தொற்று, கடந்த மூன்று ஆண்டுகளாக உலக மக்களை வாட்டி வதைத்தது. தற்போது இந்த தொற்றிலிருந்து அனைத்து நாடுகளும் முழுமையாக மீண்டு வருகின்றன. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் கோவிட் குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கோவிட்-19 இனி உலகளாவிய பேரழிவு அல்ல என்று அறிவித்துள்ளது. அதன் தாக்கம் குறைந்துள்ளதால், அதனை உலகளாவிய பேரழிவாகக் கருத வேண்டியது இல்லை. இருப்பினும், கொரோனா தொற்று முற்றிலும் நீங்கவில்லை என்பதால், இன்னும் உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை

கனமழை! இன்று தமிழகத்தில்

Quick Share

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகியுள்ளக்து. மேலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது

பயங்கர விபத்து.. சிறுமி உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலி!

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து சென்றுள்ளது. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் போது எதிரே சென்னை நோக்கி வந்த ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில், 2 பெண் குழந்தைகள் 3 பெண்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் விபரீதமுடிவு – உருக்கமான கடிதம்!

Quick Share

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 39) என்ஜினியரான இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

இவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி இருந்தார். 

இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்தார். நிதி நிறுவனம் மூடப்பட்ட பிறகு இவருக்கு பணம் கிடைக்கவில்லை. 

இதனால் பிரசாத்துக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர ஆரம்பித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு பிரசாத் வந்தார். 

இன்று காலை கடன் தொல்லையால் மனமுடைந்த பிரசாத் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குடியாத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக பிரசாத் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் நான் தனியார் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி பணம் செலுத்தினேன். 

நான் பணம் செலுத்திய ஏஜெண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். கடன் நெருக்கடி காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். 

என் சாவுக்கு தனியார் நிறுவனம் நிதி நிறுவனம் தான் காரணம். இதன் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

கிரிக்கெட் விளையாடும்போது திடீர் மாரடைப்பு ..வாலிபர் பலி!

Quick Share

தமிழகத்தின் சென்னையில் இளைஞர் ஒருவர், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வங்கி ஊழியர் 

சென்னையை அடுத்த மாதவரத்தில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஸ்ரீராம்(30). தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேளையில், ஸ்ரீராம் தனது நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். 

திடீர் மாரடைப்பு 

அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனால் பதறிப் போன ஸ்ரீராமின் நண்பர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு ஸ்ரீராமை சோதித்த மருத்துவர்கள் அவர் அங்கேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் ஸ்ரீராம் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.   

குழந்தைகளுடன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தவர் 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் த...

Quick Share

சென்னையை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அமெரிக்காவில் கோவில் ஒன்றில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜஸ்வர்யா (வயது 33). இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மகனும், 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். ஜஸ்வர்யா குழந்தைகளுடன் சென்னையிலும் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக ஜஸ்வர்யா மன அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஜஸ்வர்யா தனது 2 குழந்தைகளுடன் விமான நிலையத்தில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க வந்தார். திரையரங்கில் குழந்தைகளை அமர செய்து விட்டு கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

இதற்கிடையில் வெளியே வந்த ஜஸ்வர்யா உள்நாட்டு முனைய நடைபாதை வழியாக பன்னாட்டு முனையம் அருகே உள்ள அடுக்கு மாடி கார் பார்க்கிங் பகுதிக்கு ஒடி சென்றார். திடீரென 4-வது மாடிக்கு ஒடிச்சென்ற ஜஸ்வர்யாவை கண்ட அங்குள்ள கார் டிரைவர்கள் சத்தம் போட்டு தடுக்க முயன்றனர். அப்போது ஜஸ்வர்யா திடீரென 4-வது மாடி தடுப்பு சுவரில் ஏறி குதித்தார். கீழே விழுந்த ஜஸ்வர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் திரையரங்கில் இருந்த குழந்தைகள் மற்றும் உறவினர்களை அழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக அதிகமான மன அழுத்தத்தில் இருந்த ஜஸ்வர்யா சினிமா பார்க்க குழந்தைகளை அழைத்து திரையரங்கில் விட்டு கார் பார்க்கிங் பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோடை மழையா எங்க தமிழகத்திலா மே வரை யா…

Quick Share

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. வங்காள விரிகுடா பகுதியில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் மேற்கு வங்கத்தில் மே 3ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

தாறு மாறாக ஓடிய லாரி தலை நசுங்கி பலி ….

Quick Share

திருப்பூரில் குமரன் சாலையில் மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரியானது கட்டுப்பாடை இழந்து அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். லாரியில் அதிக எடை ஏற்றியதே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை…அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவு!

Quick Share

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர். பிரபல ரவுடியான இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராகவும் பாஜகவில் எஸ் சி,எஸ் டி,மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில் காரில் சென்னையில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த அவரை வழி மறித்த மர்ம கும்பல் காரின் மீது நாட்டு வெடி குண்டு வீசியுள்ளனர். இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரத்தில் நின்றது

பின்னர் காரில் இருந்து வெளியேறிய பிபிஜி சங்கர் சாலையில் ஓடியுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் பிபிஜி சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேர பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மக்கள் அதிகம் கூடும் பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலையால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது

மேலும் பாஜக பிரமுகர் பிபிஜி சங்கர் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 9 தனிப்படை அமைத்து கொலைக்கார கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

“வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர் அவர்கள், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

.

சென்னையில் அதிர்ச்சி!! பெண்களை கொன்று, நகைகளை கொள்ளையடித்த ‘சைக்கோ’ கொள்ளையன்!

Quick Share

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களை கொலை செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்த ‘சைக்கோ’ கொள்ளையன், ”கத்தி இன்றி, ரத்தம் இன்றி, வலி இல்லாமல் அவர்களை தீர்த்துக்கட்டியதாக” பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான். 

தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- சென்னை ஆதம்பாக்கம், தில்லை கங்காநகர், 12-வது தெருவில் வசித்த சிவகாமிசுந்தரி என்ற 81 வயது பெண் வீட்டில் தனியாக இருந்த போது, பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.

அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த 45 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த 21-ந்தேதி நடந்த இந்த கொலை வழக்கில் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், 48 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ய தீர்மானித்தோம். 

நான், இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, துணை கமிஷனர் தீபக் சிவாச் ஆகியோருடன் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டேன். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை.

வீட்டு கதவு உள்பக்கம் பூட்டப்பட்ட நிலையில் கொலை நடந்துள்ளது. மேலும் நகை-பணமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொலையாளி வீட்டுக்குள் எப்படி நுழைந்தான் என்பது புரியாத புதிராக இருந்தது. கொஞ்சம் சவாலான வழக்காக இருந்தது.

இந்த வழக்கில் துப்பு துலக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா எங்களுக்கு இந்த வழக்கில் துப்பு துலக்க ஏதுவாக இருந்தது. 

கண்காணிப்பு கேமராவில் நீலகலர் சட்டை அணிந்த ஒருநபர், முகத்தில் நீலகலர் முககவசம் அணிந்த நிலையில், நீலகலர் குடை பிடித்துக்கொண்டு, அந்த பகுதியில் தொடர்ந்து 4 நாட்கள் சுற்றிக்கொண்டிருந்தது பதிவாகி இருந்தது. 

அந்த நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணிடம் பேசும் காட்சியும் கேமராவில் காணப்பட்டது. அதே நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீடு, வேலைக்காரி செல்வதற்காக திறக்கப்பட்ட போது, நைசாக வீட்டுக்குள் செல்லும் காட்சியையும் கேமரா காட்டியது.

ஆக அந்த நீலகலர் சட்டைகாரன்தான் கொலைகாரன் என்பதை ஓரளவு புரிந்து கொண்டோம். ஆனால் அந்த கொலைகாரன் பழைய குற்றவாளி இல்லை. அவரது கைரேகையை வைத்து அவர் யார், என்று கண்டறிய முடியவில்லை. 

மேலும் கேமராவில் பதிவான அவரது படத்தை வைத்தும், அவர் யார், என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது படத்தை காட்டி அவர் யார், என்று தெரிகிறதா, என்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் மற்றும் மருமகளிடம் கேட்டால், அவரை இதுவரை பார்த்ததே இல்லை என்றார்கள். 

மீண்டும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தோம். நீலகலர் சட்டைக்காரன் கொலையை முடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து, சற்று தூரம் நடந்து, பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்கிறான். 

அந்த ஆட்டோ நம்பரை குறித்துக்கொண்டு, அந்த ஆட்டோ டிரைவரை பிடித்தும் விசாரித்தோம். மேலும் நீலகலர் சட்டைக்காரனின் கேமரா பதிவு படத்தை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி பகுதி ஆட்டோக்காரர்களிடம் காட்டி விசாரித்தோம். அப்போதுதான் கொலையாளி யார் என்றும் அவரது வீட்டையும் கண்டுபிடித்தோம்.

கொலையாளியின் பெயர் சக்திவேல் (வயது 45) என்று தெரியவந்தது. சக்திவேல், கொலையை செய்து விட்டு, தனது செல்போனை பயன்படுத்தாமல் ஆப் செய்து வீட்டில் போட்டு விட்டார். 

அவர் வீட்டில் இருக்கிறாரா, என்பதை முதலில் நைசாக விசாரித்தோம். அவர் முதலில் வீட்டில் இல்லை. பின்னர் அவர் வீட்டுக்கு வரும் வரை காத்திருந்து மடக்கிப்பிடித்தோம். நாங்கள் தீர்மானித்தபடி, சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் கொலையாளிசக்திவேல் கைது செய்யப்பட்டார். 

அவர் வாடகை வீட்டில் வசித்தார். வீட்டு உரிமையாளருக்கு ரூ.70 ஆயிரம் வாடகை பாக்கி இருந்தது. மேலும் அவரது மாமியாரிடம் வாங்கிய கடன் ரூ.25 ஆயிரம் போன்ற கடனை அடைப்பதற்காக, ஈவு இரக்கம் இல்லாமல் ஒரு பெண்ணை கொலை செய்து, கொள்ளையடித்துள்ளார். 

கொள்ளையடித்த ரூ.2 லட்சம் பணத்தின் மூலம் வீட்டு உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய கடன் உள்ளிட்ட கடன்களை அடைத்துள்ளார்.

கொள்ளையடித்த 45 பவுன் நகையை தியாகராயநகரில் அடமானம் வைத்துள்ளார். அந்த நகையை அப்படியே மீட்டோம். கொள்ளையடித்த பணத்தில் ரூ.1 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

கொலையாளி சக்திவேலிடம் விசாரித்தபோது, அவர் ஏற்கனவே இதுபோல இன்னொரு பெண்ணையும், கொலை செய்து நகையை கொள்ளையடித்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. 

கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி கொலையாளி சக்திவேல் வசித்த கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் சீதாலட்சுமி (வயது 79) என்ற பெண் இதேபோல் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அவரும் வீட்டில் தனியாக இருந்தார். 

அவரது மகள் புவனேஷ்வரி துபாயில் உள்ளார். மகன் சிவகுமார் அடையாறில் குடும்பத்துடன் வாழ்கிறார். சீதாலட்சுமியின் தனிமையை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார். அவரும் உடலில் காயம் இல்லாமல் கொலை செய்யப்பட்டிருந்தார். 

வாயை, மூக்கை பொத்தி மூச்சு திணற வைத்து இரண்டு பெண்களையும், சக்திவேல் தீர்த்துக்கட்டி இருக்கிறார். சீதாலட்சுமி வீட்டில் 19 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளார். அதிலும் 15 பவுன் நகைகளை மீட்டு விட்டோம். சீதாலட்சுமி கொலை வழக்கில் போலீசிடம் சிக்காமல் தப்பியதால், அடுத்து சிவகாமிசுந்தரியையும் கொலை செய்ய சக்திவேல் துணிந்து விட்டார். 

சக்திவேல் ஒரு சைக்கோ மனம் படைத்தவர். வயதான பெண்களை கொலை செய்து, கொள்ளையடிக்க வேண்டும், என்று முதலிலேயே திட்டமிட்டு செயல்பட்டுள்ளார். கேமராவில் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் முககவசம், குடையால் முகத்தை மறைத்தபடி செயல்பட்டுள்ளார். 

கொள்ளை மட்டும் அடித்தால், பாதிக்கப்பட்டவர்கள் தன்னை அடையாளம் காட்டி விடுவார்கள் என்பதற்காக கொடூரமாக கொலை செய்துள்ளார். சக்திவேலை போன்ற கொடூர மனம் படைத்தவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். அவர் மீது விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும்.

அவர் வேறு ஏதாவது இதுபோல் கொலை குற்றத்தில் ஈடுபட்டுள்ளாரா, என்று விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் துப்பு துலக்கிய தனிப்படை பிரிவை சேர்ந்த உதவி கமிஷனர் பிராங்க்ளின் ரூபன், இன்ஸ்பெக்டர் அம்மு உள்ளிட்ட தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பரிசு வழங்கி பாராட்டினார். 

மீட்கப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கப்பணம் கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா அவற்றை பார்வையிட்டார்




You cannot copy content of this Website