மாவட்ட செய்திகள்

வெல்டிங் தொழிலாளி wedding சோகத்தின் முடிந்த பரிதாபம்

Quick Share

தமிழகத்தில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் வெல்டிங் வேலை செய்துவருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் ராஜ்குமார் திருமணம் செய்துகொண்டார்.

வீட்டில் தனிக்குடித்தனம் போவது குறித்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த நிலையில் இருந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. மறுநாள் காலை ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில் பின்புறம் வாசலில் இறந்த நிலையில் கிடந்தார்.

தகவலறிந்த ஆழ்வார் குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான், தனிக்குடினத்தனம் செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜ்குமார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. திருமணமான 2 மாதத்தில் இப்படி இளைஞர் செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்துக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் மானத்தை வாங்குவோம் !! மெசேஜ் வெளியே சென்றதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழையனூர் சாலை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் (27) என்ற ரங்கநாதன். இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் லோடுமேன் ஆக பணிபுரிந்து வருகிறார்.
விவேக தன்னுடைய தந்தையின் மருத்துவ செலவுக்காக. தனியார் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கி உள்ளார்.

ஆன்லைன் ஆப் மூலம் 4000 ரூபாய் கடன் பெற்றுள்ளார் ஆனால் இந்த கடனை செலுத்த காலதாமதம் ஆகி இருக்கிறது. கடன் கொடுத்த அந்த நிறுவனம் கஸ்டமர் கேர் மூலம் இவரை தொடர்பு கொண்டு நீங்கள் கடனை செலுத்தவில்லை என்றால் உங்களை பற்றி அவதூறாக குறுஞ்செய்தியாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் மானத்தை வாங்கி விடுவோம் என எச்சரித்துள்ளார்கள்.

இந்த ஆன்லைன் நிறுவனம் குறுஞ்செய்தியை இவருடைய நண்பர்களுக்கு செய்தியாக அனுப்பியுள்ளனர் இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் விவேக்கிற்கு போன் செய்து விசாரித்துள்ளனர் இதனால் மனமுடைந்த விவேக் பழையனூர் சாலை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவமானம் தாங்கமுடியாமல் இளைஞர் தற்கொலையோ செய்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

போதை தலைக்கேறி கூலி தொழிலாளியை உயிரோடு எரித்துக்கொன்ற சிறுவர்கள்!

Quick Share

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரன் (வயது 60). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக மனைவி மற்றும் மகனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி, தனது சொந்த உழைப்பில் கிடைக்கும் வேலையை செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை முதியவர் சந்திரன் உடல் கருகிய நிலையில், நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் இறந்து கிடந்துள்ளார். இவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதன்போது, அதிகாலை நேரத்தில் அவ்வழியாக சென்ற ஐந்து சிறுவர்கள், சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த சந்திரனை எழுப்பி வேட்டியில் தீ வைத்துவிட்டு சென்றது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையில், இருளப்பபுரம் பழைய பிளாஸ்டிக் கடைத்தெருவில் தங்கியிருந்து பணியாற்றிவரும் மதுரையை சேர்ந்த 5 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதில், பாலாஜி என்பவனின் காதலி அவனுடன் செல்போனில் பேசாமல் இருந்ததால், விரக்தியில் காணப்பட்டுள்ளான். நண்பனின் சோகத்தை தீர்க்கும் பொருட்டு அவனுடன் இருந்த பிற 4 பேர் மது வாங்கிக்கொடுத்து, அனைவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர், போதை தலைக்கேறிய நிலையில், நள்ளிரவு நேரத்தில் வழிநெடுகிலும் இருந்த கார்கள் மீது கல்லெறிந்த வண்ணம் வந்துள்ளனர்.

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த சந்திரனிடம் சென்று தீப்பெட்டி கேட்ட நிலையில், அவர் தன்னிடம் லைட்டர் தான் இருக்கிறது என்று லைட்டரை கொடுத்துள்ளார். லைட்டரை வாங்கியதும் வேட்டியில் தீவைத்துவிட்டு எந்தவிதமான பயமும் இல்லாமல் சுள்ளான்கள் சென்றுள்ளனர். இதனையடுத்து 15 வயது சிறுவன், பாலாஜி, லட்சுமணன், வாலேஸ்வரன், இலங்கேஸ்வரன் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமியாரை வெளியே துரத்திவிட்டு.., தன் கோபத்தை மனைவி மீது காட்டிய கணவர்

Quick Share

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஹரி (40) இவர் மனைவி கோமதி (35) இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். ஹரி ஒரு எலக்டிரிஷியன். வேலைக்கு ஒழுங்காக போக தினமும்
குடித்துவிட்டு மனைவியை அடித்துள்ளார். கோமதி மீது சந்தேகப்படுவாராம்.. தினமும் சண்டையும்
நடக்குமாம்.”

கோமதிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை கார்ப்பரேஷனில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை தற்காலிகமாக கிடைத்துள்ளது.. ஏற்கனவே ஹரியை சந்தேகப்பேய் ஆட்டிப்படைக்க, கோமதி வேலைக்கு போகவும் சந்தேகம் அதிகமாகிவிட்டது. கோமதியை போதையில் கண்மூடித்தனமாக அடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் கோமதி விருகம்பாக்கத்தில் உள்ள தன் அம்மாவுக்கு போன் செய்து பிரச்சனையை கூறுவார் அம்மாவும் நீலாங்கரைக்கு வந்து இருவரையும் சமாதானம் செய்துவைத்து விட்டு போவாராம்.

ஒரு நாள் பிள்ளைகள் வெளியே விளையாடி கொண்டிருக்க, தம்பதி இருவரும் வீட்டிற்குள் சண்டை போட்டு கொண்டிருந்திருக்கிறார்கள். கோபம் இதை தட்டிக் கேட்டபோது, மாமியாரை வீட்டை விட்டு வெளியே போகும்படி கோபத்தில் ஹரி சத்தம் போட்டுள்ளார். இதனால் வெளியே வந்து நின்று கொண்டுள்ளார் கோமதியின் அம்மா.
ஆனால், அவர் விருகம்பாக்கத்துக்கு சென்றுவிட்டதாக நினைத்து, ஹரி கோமதியை சரமாரியாக தாக்கி உள்ளார்.. திடீரென அலறல் கேட்கவும் வெளியே நின்று கொண்டிருந்த அம்மா, பதறியடித்துக் கொண்டு உள்ளே போனால், தரையில் கோமதியை படுக்க வைத்து அவரது கழுத்தை கரகரவென ஹரி அறுத்து கொண்டிருந்தார்.

அலறி துடித்த தாய், மகளின் உடலை மீட்டு கொண்டு போய் ஆஸ்பத்திரியில் அனுமதித்தும், உயிர் ஏற்கனவே போய்விட்டது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து நீலாங்கரை போலீஸார், கோமதி சடலத்தை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அதற்குள் போலீஸ் ஸ்டேஷனில் ஹரி
சரணடைந்தார். 2 குழந்தைகள் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது.

கல்யாணம் செய்துகொண்ட Homosex காதலன்.., வெறியில் முதியவரை செய்த இளைஞர் !!

Quick Share

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான முதியவர் பொன்ராம். இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். வீட்டில் இறந்த நிலையில் அவரது ஆடை கலைந்திருந்ததால் சந்தேகமடைந்த மகள் மாரியம்மாள், தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் முதியவரின் உடல் தேனி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில் முதியவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் முதியவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வோர் பற்றி போலீசார் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்
தொழிலாளி 26 வயதான அருண்குமார் சிக்கினார்.

போலீசார் விசாரித்தபோது தான்தான் முதியவரைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். அருண்குமாரும் அவரது நண்பர் ஒருவரும் தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் முதியவரின் வீட்டருகில் அடிக்கடி தனிமையில் இருப்பது வழக்கம். நண்பருக்குத் திருமணமான நிலையில் அருண்குமார் தவித்து
வந்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு இரவில் மதுபோதையில், முதியவர் வீட்டுப் பக்கம் சென்ற அருண்குமார், முதியவரிடம் தவறாக நடக்க முயன்றார். முதியவர் பொன்ராம் அப்போது சத்தம்போட்டுள்ளார். பயத்தில் அவரது கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொலை செய்துள்ளார் அருண்குமார். இதையடுத்து அருண்குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்படி ஓரின சேர்க்கைகளின் கொடூர கொலைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

youtube பார்த்து கள்ள நோட்டு அடிப்பது எப்படி ? அம்புட்டும் 2,000 நோட்டா அடிச்சுருக்கான் !!

Quick Share

சென்னையில் கள்ள நோட்டு அடித்த விவகாரத்தில் சிக்கிய நபர், யூ ட்யுபை பார்த்து அச்சடித்து மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சனிக்கிழமை மாலை வளசரவாக்கத்தில் உள்ள கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்கள் வாங்கய மர்ம நபர் மீது சந்தேகம் கொண்டு சிலர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

ரூபாய் நோட்டை சரிபார்த்ததில் கொடுத்தவை கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. அதனையடுத்து அந்த நபரின் அங்க அடையாளங்களைக் கொண்டும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் பின் தொடர்ந்து சென்ற போலீசார் பரணிபுத்தூர் பகுதியில் மடக்கினர்.

புளியந்தோப்பைச் சேர்ந்த இலியாஸ் என்ற அந்த நபர், யூடியூபைப் பார்த்து கள்ள நோட்டு அடிக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறான்.முன்னதாக நூறு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து 40 ஆயிரம் ரூபாய்க்கு மாற்றியதாகவும், அப்போது மாட்டிக்கொள்ளாததால் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகவும் இலியாஸ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

போனை பிடிங்கி கூவம் பாலத்தில் பாய்ந்த திருடன்..!!

Quick Share

சென்னையில் மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (63 வயது). சென்னை எத்திராஜ் கல்லூரி அருகேயுள்ள மேம்பாலம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம இளைஞர் முதியவரை பின் தொடர்ந்து வந்து கத்தி முனையில் முதியவர் ரவிக்குமார்ரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சென்னை காவல் ஆணையரின் உதவியாளராக பணிபுரிந்து வரும் காவலர் கவின் முதியவரிடம் செல்போன் பரித்து சென்ற சம்பவத்தை கண்டு விரட்டியுள்ளார்.”
போலீஸ் பின்தொடர்வதை கண்ட அந்த இளைஞர், வேகமாக ஓடி, அருகிலிருந்த கூவத்தில் குதித்துள்ளார்.

காவலர் தன்னை இனி பின் தொடர முடியாது என திரும்பி பார்க்கையில், காவலர் கவின் தீபக்கும் கூவத்தில்
குதித்துள்ளார். இதை பார்த்த பொதுமக்களில் சிலர் எழும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து கூடுதல் காவலர்களை அழைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் போலீசார், அந்த இளைஞரை பிடித்து எழும்பூர் காவல் நிலையத்திற்கு
கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் கொள்ளையன் கண்ணகி நகரை சேர்ந்த சேகர் என்ற சிந்துபாய் என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கெனவே பல செல்போன் பறிப்பு வழக்குகளும் நிலுவையில்
உள்ளதும் தெரிய வந்துள்ளது.”

காவலர் கவினின் தைரியமான செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

பேசியே குடும்ப பெண்களை கவிழ்க்கும் தம்பதி.., 3 கோடி வரை சுருட்டியது எப்படி ?

Quick Share

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாணிக்கம்-கயல்விழி தம்பதியினர். அப்பகுதி மக்களிடம் வங்கியில் பணிபுரிவதாக கூறி வந்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து குறைந்து விலைக்கு தங்கக்கட்டி
வாங்கி வந்த அதை பாதி விலைக்கு தருவதாகக் கூறி அப்பகுதி பெண்களிடம் சுமார் 3 கோடி ரூபாய் பணம் வசூல் செய்துள்ளனர். தங்களிடம் பணம் இல்லாதவர்கள் நகையாக கொடுக்கலாம் எனக் கூறி அடகுக்கடை
வைத்திருந்த தங்களது கூட்டாளி அகில் என்பவரிடம் கொடுக்க சொல்லியுள்ளனர்.

இவர்கள் பேச்சை நம்பி பல குடும்ப பெண்கள் சுமார் 500 பவுன் நகைகள் வரை அகிலிடம் கொடுத்துள்ளனர்.
அதற்கு உத்தரவாதமாக பத்திரமும் எழுதிக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் திடீரென ஒரு நாள் மாணிக்கம், கயல்விழி மற்றும் அகில் மதுரைக்கு தப்பியுள்ளனர். இதேபோல பலரை ஏமாற்றியுள்ளனர். மதுரையிலும் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் கொடுத்ததால், அங்கிருந்தும் தப்பிச் சென்றுள்ளனர்.

7 மாதங்களுக்கு முன்பு காரைக்குடி காவல் நிலையத்தில் இவர்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காரைக்குடி டிஎஸ்பி அருண் தலைமையிலான தனிப்படையினர் மூவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மாணிக்கம் மற்றும் அவரது மனைவி கயல்விழி கோவையில் பதுங்கியிருப்பதாக
போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தலைமறைவாக இருந்த ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் தலைமைறைவாக உள்ள அவர்களது கூட்டாளி அகிலை போலீசார் தேடி வருகின்றனர்.

14 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய மளிகை கடைக்காரர் கைது.

Quick Share

திருச்செந்தூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய மளிகை கடை உரிமையாளரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பழையகாயல், காந்தி நகரைச் சேர்ந்தவர் நயினார் மகன் பட்டுராஜன் (42), இவர் அந்த ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு வந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 
இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்த விபரம் தெரியவரவே அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பட்டுராஜனை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்

ஆண்டிகளை தேர்ந்தெடுத்து குறிவைக்கும் காம கொடூரன்..,

Quick Share

தருமபுரியை அடுத்துள்ள நூலஅள்ளி பகுதியை சேர்ந்த ரவி என்பவர் தனது செல்போனில் தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுவதாகவும், ராங் நெம்பர் என கட் செய்தாலும், மீண்டும் மீண்டும் போன் செய்தும் வாட்சப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியும் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

ரவியின் தொல்லையால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் தெரிந்த நண்பர்கள் உதவியுடன் ரவியின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். அவனுடைய செல்போனை பறித்து அதை ஆய்வு செய்து பார்த்த போது, ரவியும் அவனுடைய நண்பர் நரசிம்மனும் என்பவரும் சேர்ந்து பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் ஏராளமாக இருந்தன.

வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் தருமபுரியை சேர்ந்த திருமணமான பெண்களின் புகைப்படம் இருந்ததால், அதிலுள்ள
தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு இருவரும் வலை வீசிசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அவர்களுக்கு உடன்படும் பெண்களின் போன் உரையாடல்கள் மற்றும் போட்டோக்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து ஆசைக்கு இணங்க மிரட்டி வந்திருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவி மற்றும் அவரின் நண்பன் நரசிம்மனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இவர்களது தொல்லையால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண், தருமபுரி நகர் காவல் நிலையத்தில் கடந்த 12 ஆம் தேதி புகார் அளித்ததின் பெயரில் காவல் துறை அதிகாரி ஒருவர் ரவியிடம் செல்போனில் விசாரித்துள்ளார். அப்போது, தான் வேலூரை சேர்ந்த விஜய் எனவும், தோழி சிம்ரனுக்கு போன் செய்தேன் என்றும் அப்பாவியை போல கெஞ்சி நடித்து தப்பியதும் தெரியவந்துள்ளது.

22 வயது பெண்ணை அனுபவித்து கழட்டி விட நினைத்த சென்னை இளைஞர்… காத்திருந்த அதிர்ச்சி

Quick Share

சென்னையில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவ்விங் டு கெதர் கலச்சாரம் அதிகமாகி வருகிறது.

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம்(24), இவர் வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீராமின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை பார்த்து கொள்ள காதலியை வீட்டிற்கு அழைத்து தங்க வைத்துள்ளார்.

உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஸ்ரீராமின் தாயாருக்கு அந்த பெண் உதவியாக இருந்து வந்த போது, இரண்டு மாதங்கள் ஸ்ரீராம் வீட்டில் வசித்துள்ளார். அப்போது ஸ்ரீராம் நாம் திருமணம் செய்து கொள்ளபோகிறோம் என ஆசை வார்த்தை கூறி கட்டாயமாக உடலுறவு கொண்டதாகவும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மயக்கியுள்ளார்.

தாலி கட்டாமலேயே இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஸ்ரீராமின் மோகம் முடிந்த பிறகு ஒருகட்டத்தில் ஸ்ரீராம் , தன் காதலியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார் தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் வற்புறுத்தியும் ஸ்ரீராம் மனதை மாற்றிக்கொள்ளவில்லை.

இதனால் அவரது காதலி சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஸ்ரீராம் மீது பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவனுக்கு சாகும் வரை தூக்கு

Quick Share

தேனி மாவட்டம், சின்னமனூரை அடுத்துள்ள காந்திநகர் காலனியை சேர்ந்த மாரிமுத்து என்வரின் மகன் சுரேஷ் என்பவர் கற்பகவள்ளி (19) கற்பகவள்ளிக்கு 14 வயதானபோதே சுரேஷ் இவரை திருமணம் செய்தார், சுரேஷ் கற்பகவள்ளி தம்பதிக்கு திவ்யசுந்தரி, மற்றும் சுந்தரி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், 2015ல் சம்பவம் நடந்த போது கற்பகவள்ளி மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார், கற்பகவள்ளி மீது சந்தேகப்பட்ட சுரேஷ் அவருக்கு பல கொடுமைகளை செய்து வந்துள்ளார், இதை தொடர்ந்து கடந்த 2015 ஜூன் 21ஆம் தேதி சுரேஷ் கற்பகவள்ளியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார்.

இதையடுத்து அவரை கடுமையாக தாக்கிய சுரேஷ் கற்பகவள்ளியின் தாலியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார், அதன் பின்பு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கற்பகவள்ளி தற்கொலைக்கு முயன்றதாக நாடகமாடியுள்ளார், கற்பகவள்ளி இறந்ததை உறுதி செய்த மருத்தவர்கள் பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், பிரோத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கற்பகவள்ளியின் வயிற்று பகுதியில் பலமாக அடித்தில் அவரின் கருவும் கலைந்தது. இதை தொடர்ந்து சுரேஷின் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு தேனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிருபணமாகியது, வழக்கு விசாரனை முடிவடைந்த நிலையில் நீதிபதி அப்துல் காதர் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கினார், அதில் சுரேஷுக்கு இந்திய தண்டனைச் சட்டங்கள் 302 மற்றும் 316-ன் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது,. 302-வது சட்டப்பிரிவின் கீழ் சாகும் வரை தூக்கிலிடட வேண்டும். 316 சட்டப்பிரிவின் கீழ் 10 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.




You cannot copy content of this Website